Sunday, October 29, 2023

GLOBAL WARMING

 GLOBAL WARMING

புவி வெப்பமடைதல்

சுமார் 40 ஆண்டுகளாக, பெரிதும் பேசப்பட்டு வரும் சுற்றுச்சூழல் குறித்த ஒரு கவலை தரும் நிகழ்வு என்று இதை [புவி வெப்பமடைதல்] குறிப்பிடலாம். ஆனால், பிற பல நிகழ்வு மற்றும் மாற்றங்களைப்போல இதிலும் அரசியல் உண்டு. என்ன அரசியலா என்று முனிவர்களைப்போல கேட்க வேண்டாம் -ஏனெனில் கிழக்கத்திய நாடுகள் அறியாமையிலும் ஏழ்மையிலும் உழல்பவை என்றெண்ணிக்கொண்டு .சில மேலை நாடுகள் "பெரிய அண்ணன்" BIG BROTHER " மனோ நிலையில் பேசிக்கொண்டிருந்த காலங்களில் பொருளாதாரத்தடை, , நீ கதிரியிக்க ஆராய்ச்சி செய்யக்கூடாது என்றெல்லாம் வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருக்க, அவர்களின் ஊழியர்களே ஆராய்ச்சி நுணுக்கங்களை விலைக்கு விற்றபோது பெரிய அண்ணனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சில வல்லரசு பட்டங்கள் வெறும் வெல்லரசு [வெல்லத்துக்கு விலை போகும் நிலையின] என்று வெளிப்பட்டபின் ஏற்பட்ட சூழல்கள் வேறு.

 ஆக, அரசியல் இந்த உலகை கட்டமைத்ததும் கட்டிப்போட்டதும் வரலாற்று யதார்த்தங்கள். எனவே இப்போதெல்லாம் அவன் சொன்னான் இவன் சொன்னான், ஐயோ கடன் தர மாட்டானே, தடை விதிப்பானே என்ற பூச்சாண்டிகள் முன்பு போல் இப்போது அறவே இல்லை. இந்த பூச்சாண்டி .கதைகளை, பின்னர் எப்போதாவது கவனிப்போம்.

சரி புவி வெப்பமடைதல் ஏன், எதனால் போன்ற நிலைகளை விளக்க முற்படுகிறேன், நான் அறிஞன் அல்லன், ஆசிரியன் அவ்வளவே. எனினும் அறிந்தவற்றை கோர்வையாக விளக்கி, நாம்தெளிவு அடைய முயற்சிக்கிறேன் புவி வெப்பமடைய சில முக்கிய மாற்றங்கள் அடிப்படை என கருதப்படுகின்றன. ; அவை    கார்பன் டை ஆக்ஸைட், தொழிற்சாலை மற்றும் வாகனப்புகை இவற்றால் தோன்றும் green house effect என்னும் நிலை

இவை முக்கியமாக மாசு என்னும் pollution மூலம் தோன்றுவதே என்று பல ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. அதிலும் சில முக்கிய காரணிகளாக சில வகைப்படுத்தப்பட்டுள்ளன

தொழிற்சாலைகள், தொழில்நுட்பமுன்னேற்றத்தினால் வெளிப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், புகை, காடுகள் /வனங்கள் அழிக்கப்பட்டு பசுமை தாவரங்கள் குறைந்து விட்டமை, இயற்கையில் சிதைந்து மக்காத பொருட்கள் அதிகரித்து ஏற்படும் மாசு மற்றும் பலதரப்பட்ட வாயுவகைகள் பூமியைசூழ்ந்து ஏற்படுத்தும் green house effect என இவை அனைத்தும் புவி வெப்பமடைய காரணங்கள் ஆகின்றன 

இவற்றைப்புரிந்து கொள்ள ஒளி , புகை , வெப்பம் மற்றும் ஒளி-வெப்பம் இவற்றின் இடையே உள்ள தொடர்பு சற்று விள க்கப்பட வேண்டும்

ஒளி, வெப்பம் இரண்டும் எனர்ஜி என்னும் ஆற்றலின் இரண்டு வித வடிவங்கள் [two forms of energy ]. ஒளி கண்ணில் உணரமுடியும் [ லைட் எனர்ஜி or visible energy ] வெப்பம்[heat energy ] என்பது உணர முடியும் ஆனால் காண இயலாது .  லைட் எனர்ஜி அதிக ஆற்றல்கொண்டது எனவே கண்ணாடி வழியே ஊடுருவும். Heat energy என்னும் வெப்பம், ஒளியை விட ஆற்றல் குறைந்தது [lower in energy] எனவே கண்ணாடியை கடக்காது, எனவே, வெப்பம் கண்ணாடி அறையில் சிறைப்பட்டு நிற்கும்.   ஒளி அலையின் ஆற்றல் அதிகம் [high energy] எனில் [SW]  சிற்றலை என்றும், ஆற்றல் குறைவு எனில் [low energy ] நீள் அலை[LW] என்றும் விளக்குகிறோம் . கண்ணாடி போன்ற ஊடகத்தினை ஆற்றல் மிக்க [SW] எளி தில் கடக்கும் ஆனால் ஆற்றல் குறைந்த LW சுவற்றில் மோதிய பந்து போல் திரும்பி வரும் .இதை மனதில் நிறுத்தி மேலே தொடருங்கள்.பூமிப் பந்தை சூழ்ந்து ஒரே புகை போல ஊர்திகளின் புகை, தொழிற்சாலைகளின் வாயுக்கள் வெளியேறி ஒரு கார்பன் ஷீல்டு எனும் கார்பன்-டை ஆக்ஸைட் .மீத்தேன்,     சல்பர் , நைட்ரஜன் வாயுக்கள் அடங்கிய போர்வை போல் சூழ்ந்துள்ளன. சூரிய ஒளி ஆற்றல் கொண்ட SW கதிர்களாக, இந்த புகைப்போர்வையை ஊடுருவி பூமிக்கு ஒளியாக வந்து சேர்கிறது .

அதில் சுமார் 1 முதல் 1 1/2 % தாவரங்களின்[PHOTOSYNTHESIS] ஒளிச்சேர்க்கை மூலம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது . ஒளியுடன், நீர் மற்றும் கார்பன்டை ஆக்ஸைட் தாவரங்களால் உறிஞ்சப்பட்டு கார்போஹைடிரேட் என்னும் உணவுப்பொருள் அரிசி, கோதுமை, சோளம் .கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களாக உருவெடுக்கின்றன. சல்பர்,நைட்ரஜன் போன்றவை, பருப்புவகை ப்ரோட்டீன் களாக உருவாகின்றன.  எனவே,  நீரின்றி அமையாது உலகு என்பதைப்போலவே ஒளி இன்றி அமையாது உணவு என்ற உண்மையும் இயற்கையில் அரங்கேறுவதைப்பார்க்கிறோம்.

இப்போது சூழ்நிலை என்ன வெனில், ஏராளமான வாயுக்களை பயன்படுத்திக்கொள்ள போதிய அளவு பசும் தாவரங்கள் இல்லை; நாம் தான் ஒவ்வொரு நாளும் காடுகளை வெட்டிச்சாய்க்கிறோமே, எனவே மேலும் மேலும் வாயுக்கள் பெருகி ஒரே புகை மண்டலம்   பூமியை சுற்றி சூழ்ந்துள்ளது..

இந்த நிலையில் பூமி மீது படிந்த ஒளி, ஆங்காங்கே மீண்டும் எதிர் ஒளி யாக பிரதிபலித்து வெளியேறி வேறு ஏதேனும் பொருட்களின் மீது பாய்ந்து மீண்டும் எதிர் ஒளி யாக பிரதிபலிக்கும். இப்படி ஒவ்வொரு எதிரொளியும் வலுவிழந்து [ஆற்றல் இழந்து] வெப்பக்கதிர்களாக மீண்டும் வெளியேற எத்தனிக்கும். வெப்பக்கதிர்கள் நீள் அலை எனும் long wave radiation. அது புகைமண்டலைக்கடந்து வெளியேறும் அளவுக்கு வீரியம் கொண்டதல்ல; எனவே மீண்டும் பூமிக்கு த்திரும்பி-பிரதிபலித்துபூமிக்கும் புகைப்போர்வைக்கும் இடையே மாறி மாறி வெப்பக்கதிர்களாக டென்னிஸ் பந்துபோல் பயணித்து, வெப்பம் வெளியேறாமல் அடைபட்டு, பூமி வெப்பம் அடைகிறது என்பதே குளோபல் வார்மிங் [GLOBAL WARMING] எனப்படுகிறது . தமிழில் புவி வெப்பமடைதல் எனப்படுகிறது. இந்த நிகழ்வின் அடிப்படை தான் GREEN HOUSE EFFECTஎன்பது. அது என்ன மற்றும் ஏன் என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

நன்றி

அன்பன் ராமன்  

3 comments:

  1. Greenhouse gases like CFC and HFC play a minor role in Globalwarming

    ReplyDelete
  2. Is it minor? may be so, now. let us explore soon.

    ReplyDelete
  3. Very nicely explained in simple Tamil.

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...