Friday, November 17, 2023

BUILDING THE PERSONALITY

 BUILDING THE PERSONALITY

சமூக உருவை மேம்படுத்துதல்

சமூகத்தின் உருவத்தை தனி மனித முயற்சியால் மேம்படுத்த இயலாது. தனி நபர் ஒருவர் இந்த சமுதாயத்தினால் எவ்வாறு பார்க்கப்படுகிறார் [புரிந்து கொள்ளப்படுகிறார்] என்பது அவரது பெர்சனாலிட்டி [=சமூக உரு] என்பதாக குறிப்பிடுகிறேன். இதற்கு வேறு ஏதேனும் சொல் இருந்தால் அவற்றை அன்பர்கள் தெரிவித்தால்,  ஏற்றுக்கொள்ள தயக்கம் இல்லை. எனது தமிழறிவு வலிமை குன்றியதென்றே நினைக்கிறேன் அதனால், அவ்வப்போது எனது சொல்லாட்சியில் தயக்கமோ/ தடுமாற்றமோ அழையாமல் நுழைந்துவிடும். எனவே குறைகளைப்பொறுத்தருள்வீர் என்பது எனது வேண்டுகோள்.

சரி அது போல ஒருவரது பெர்சனாலிட்டி யை மேம்படுத்த முடியுமா? எனில் ஓரளவுக்கு முடியும் [பிறவிக்குணம் மாறாது என்பது உலகிற்கே தெரியும், ஏனெனில் ஜீன், ஜீன் தான் அதை மாற்ற முயற்சிப்பது வீண் தான். எனினும் அந்த ஜீன் தோற்றுவிக்கும் பண்புகளை வளர் சூழல் / வாழ் சூழல் சற்று மாற்றிவிடும் என்பது மரபியல் கோட்பாடு       [[ENVIRONMENTAL INFLUENCE on GENE EXPRESSION என்று நீண்ட நெடிய விவாதம் உயிரியல் பாடத்திட்டத்தில் ஒரு அங்கம். தாவர  இயல் பிரிவில் இந்தக்கருத்து குறிப்பாக சுற்றுச்சூழல் கல்வியில் ECOTYPE and ECADS என்று தாவரங்களின் தகவமைப்பு [Adaptation ] குறித்து ஆழ்ந்து விவாதிக்கப்படும்]

அது போன்ற கோட்பாடுகளை ஆழ்ந்து புரிந்துகொண்டால் ஒன்று தெளிவாகும்.                                             

 சட்டியில் இருப்பது அகப்பையில் வரும் என்றாலும், அந்த சட்டியே சமைக்கும் பாத்திரம் எனில் என்ன நடக்கிறது? புரியவில்லையா? இப்போது புரியும் பாருங்கள். .அதென்ன மண் பானை சமையல், கல் சட்டி குழம்பு, ஈயச்சொம்பு ரசம், கரி அடுப்பில் காய்ச்சிய பால், பெருமாள் கோயில் புளியோதரை? என்று வரிசை கட்டி அசத்துகின்றன .அனைத்து தாய்மார்களும் .ஒரே மாதிரி ingredients என்னும் மூல பொருட்களை க்கொண்டு தான் உணவு சமைக்கிறார்கள்., என்றால்   மண் பானை சமையல், கல் சட்டி குழம்பு, ஈயச்சொம்பு ரசம் இவை ஏன் சிறப்புப்பெறுகின்றன? ஜீன் [மூலப்பொருள்] ஒன்றே எனினும் வளர் சூழல் [சமைக்கும் பாத்திரத்திற்கேற்ப] வடிவைக்கப்படுவது பண்பு என்ற பெர்சனாலிட்டி-- அது [மணம்,சுவை] மாறுபடுகிறது.   ஆகவே, ஓரளவிற்கு பெர்சனாலிட்டியை மேம்படுத்த இயலும்.   அதற்கு வளர் சூழல் ஒரு இயல்பான காரணி [natural cause] என்பதால் குழந்தைகளின் நட்பு வட்டத்தை கவனிக்க வேண்டியதாகிறது. மறக்க வேண்டாம்-- அது பெர்சனாலிட்டி  தொடர்பான கட்டமைப்பு நிலை. பெரும்பாலும் பொது வெளியில் பெர்சனாலிட்டி பற்றி சில குறியீடுகளும் மதிப்பீடுகளும் அனைவரின் மீதும் வைக்கப்படுவது இயல்பு. நாம் எந்த இடங்களில் பணி .புரிகிறோமோ அதைப்பொறுத்து இந்த குறியீடுகள் சற்று வேறுபடலாம். எனினும் பொது அளவுகோல்களாக - கல்வி தகுதி, புரிந்துகொள்ளும் விரைவு, உரிய முடிவெடுத்தல், சிறுமை கண்டு சினம் கொள்ளுதல், திறமையை பாகுபாடின்றி ஊக்குவிக்கும் நேர்மை என்று பட்டியலிடலாம். இவை சிறிதும் இல்லாத சிலர் வெகுவிரைவாக முன்னேற்றம் அடைவதையும் பார்க்கிறோம்.       ஆனால் பின்னவர்கள், சந்தர்ப்ப வாதிகள்; எனவே அவ்வப்போது ஜால்ரா  , உரிய திசை நோக்கி ஒலிக்கச்செய்யவேண்டும் .

முன் வகையினரோ ஜால்ரா இசைப்பதோ ஊழலுக்கு இசைவதோ இன்றி கம்பீர வாழ்வு வாழ்பவர்கள் , எதற்கும் அனுசரிக்க வேண்டிய நிர்பந்தம் இன்றி அன்றும் இன்றும் என்றும் ஒரே நிலைப்பாட்டிலும்  நேர்கோட்டிலும்  பயணிப்பவர்கள். பொருள் குவிக்க மாட்டார்கள்; இறை அருளும் வாய்மையின் கொடையாக ஆரோக்கியமும் தூக்கமும் நோயில்லா வாழ்வும் அவர்கள் அடையும் செல்வம்.

இப்போது 2  பாதைகள் நாம் தேர்ந்தெடுக்க. நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை தீர்மானிப்பதே நமது பெர்சனாலிட்டி .   அந்த இரு நிலைப்பாடுகள் ஏதோ ஒரு வகை பிரிவில் அடங்கும் 1] நல்லது 2] அல்லது [bad ] முன்னதில் பாதை கடினம் ஆனால் அச்சமில்லாத பயணம்--நல்லது [virtuous]. பின்னதில் சுகம் அதிகம் ஆனால் எந்த வினாடியும் சிறை செல்ல வேண்டிய சூழலை வரவைக்கும் [அல்லது -bad]. அதன் பின்னர் தலைகுனிந்து பார்த்தவர்க்கெல்லாம் கூழைக்கும்பிடு போட வேண்டிய அவலம் ஏற்படும்.

இந்த இரண்டும் மனிதர்கள் எவ்வாறு சிறுவயதில் பண்புகளை ப்புரிந்து கொண்டனர் என்ற அடிப்படையில் அவரவர் மனதில் தோன்றுவது..இதை நட்புவட்டங்கள் எளிதில் வடிவமைப்பதை பள்ளி/ கல்லூரி மாணவரிடையே பார்க்கலாம்

சமையலில் ஆழ்ந்த கவனத்துடன் ஈடுபட்டால் விளையும் பயன் என்ன? இன்றேல் 'அடி பிடி த்துக்கொண்டது' முடி பற்றிக்கொண்டது:என்று கருகி காய்ந்த உனைவை வேண்டாவெறுப்புடன் உண்பது போல   . தவறான வடிவமைப்பில் விளைந்த பெர்சனாலிட்டி,. மென்மேலும் துயர்தரும் செயல்களில் இறங்கி பெரும் அவலங்களுக்கு வழி கோலும்.  ஒரு சில ஆரம்ப கவனமின்மைகள்,பெரும் இன்னல்களுக்கு காரணி ஆவதை பின்னர் பேசுவோம்.

தொடரும்                           அன்பன் ராமன்

4 comments:

  1. ஈயச்சொம்பில் ரசம் வைத்தால் அதன் சுவையே தனிதான். இப்பொது யார் ஈயச்சொம்பை பயன்படுத்துகிறார்கள்.
    எவர்சில்வர்வந்ததிலிருந்து ஈயமும் போச்சு பித்தளையும் போச்சு.
    கீரைக்கு மட்டும் கல்சட்டி. மண்பானையில் பிராமண அகத்தில் சமையல் என்பது அரிது.
    அமெரிக்கன் கல்லூரிக்கு எதிரில்
    50 பைசாவுக்கு மண்பானை சோறு கடையில் சாப்பிட்ட ஞாபகம்.
    சோற்றோடு ஒரு சாம்பார் ஒரு வடை
    அவ்வளவுதான். எட்டணாவுக்கு எட்டு கறியா போடுவான்!

    ReplyDelete
  2. Why this lamentation -Venkatji ?

    ReplyDelete
  3. Personality என்பதை தமிழில் ஆளுமை தன்மை என்று எடுத்துக் கொள்ளலாமா?

    ஷேக்ஸ்பியர் கூட உன் நண்பர்களை பற்றி சொல் உன்னை ப் பற்றி சொல்கிறேன் என்று கூறியதாக கேள்வி. எனவே இதை வைத்து பார்க்கும் போது ஜீன்களின் தன்மையை கொண்டு பண்புகள் அமைந்தாலும், வளர்கின்ற, வளர்வதற்கான சூழ்நிலை என்பது சிந்தனை அறிவை தூண்டி தகவமைப்பில் சில (நல்ல?)மாற்றங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...