SRIDHAR
ஸ்ரீதர்
எப்படி எனில்
போஸ்டரில்
முக்கிய
இடத்தில் ஸ்ரீதர்- வின்சென்ட்
-கங்கா பின்னர் ஒரு
நீண்ட
வரிசையில்
கண்ணதாசன்
-விஸ்வநாதன்
ராமமூர்த்தி,
என்
எம்
சங்கர்
என்று
பெயர்கள்
இடம்
பெறுவது
வழக்கம்.
இவை
ஒவ்வொன்றும்
ஒரு
துறையின்,தலைமை
என்ற
அங்கீகாரம்.
இந்த
அங்கீகாரம்,வெளிப்படையாக
தெரியச்செய்து,
மாறுபட்ட
உத்தியை
அரங்கேற்றியவர்
-ஸ்ரீதர்.
அப்படித்தான்,
என்
போன்றோர்
பல
கலைஞர்கள்
குறித்து
அறிந்து
கொண்டோம் அதனால், படத்தின்
டைட்டிலில் முழுக்கவனம் செலுத்தும் பழக்கம் எனக்குள் ஏற்பட்டது.
அதை தெரிந்து கொண்டா,ல் எண்ணற்ற சரித்திரச்சுவடுகளை நாமே
புரிந்து கொள்ளலாம். உதாரணமாக ஸ்ரீதரின் ஆரம்பகால சித்ராலயா படங்களில் டி ஏ சடகோபன்
என்று ஒரு பெயர் இடம்பெறும். ஒருகட்டத்தில் அதுவே கோபு என்றும் பின்னர் சித்ராலயா கோபு
என்றும் இன்று உலகளாவிய அங்கீகாரம் பெற்ற பெயர்.ஆகியுள்ளது. சித்ராலயா நிறுவனத்தை துவக்கிய
ஸ்ரீதர் [வெறும் ஸ்ரீதர் என்றே குறிப்பிடப்பட்டவர்; அவரது நண்பர் கோபுவுக்கு சித்ராலயா
அடை மொழி ஆகி, இப்போது கோபுவின் புதல்வர் ஸ்ரீராம் அவர்களுக்கும் சித்ராலயா ஸ்ரீராம்
என்று வந்துவிட்டது] இந்தக்கதையெல்லாம் எதற்கு என்போர் கவனிக்க: டைட்டில் பல தகவல்களை
ஒருங்கிணைக்க உதவும் இவ்வளவு தொழில் நுட்ப குறியீடுகளை முறையாக அங்கீகரித்தவர், தொழில்
நுட்பத்தை பயன்படுத்த எவ்வளவு முனைப்பு காட்டியிருப்பார். அந்த பேரார்வம் காரணமாகவே,
எப்போதும் ஆகச்சிறந்த தொழில் நுட்பக்கலைஞர்களை பயன்படுத்தி வந்தார் என்பதை, பல படங்களில்
என்னால் அடையாளம் காட்டமுடியும். அதுபோலவே, எக்ஸ்பிரிமெண்ட் எனும் சோதனைகளை தொடர்ந்து
துணிச்சலாக முன்னெடுத்தவர். உரிய கட்டங்களில் அவற்றை அடையாளம் காண்போம். சென்ற பதிவில்
ஸ்ரீதர் இயக்கத்தில் பாடல் காட்சிகள் அமைப்பை விளக்கியிருந்தேன். அவற்றில் ஒளிப்பதிவின்
முக்கியத்துவம் தெளிவுபடுத்தப்பட்டிருந்ததை அடையாளப்படுத்தியிருந்தேன். அதே போன்ற வேறொரு
பாடல் காட்சியே நமது இன்றைய விவாதப்பொருள். ஆம், "நெஞ்சம் மறப்பதில்லை" படத்தில்
இடம் பெற்ற ஒரு டூயட் பாடல் நமது பார்வைக்கு உகந்த களமாக அமைந்துள்ளது. பூர்வ ஜென்ம
நினைவுகளால் பின்னப்பட்ட படம் . அதற்குரிய வகையில் காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தன
கதைக்காலத்திற்கேற்ற குதிரை பூட்டிய ரேக்ளா வண்டியில் காதலர்களும் பாடலும் பயணித்த
சிறப்புடையது.
இது ஒரு கனவுப்பாடல் என்பதை ரேக்ளா சக்கரம் சுழல்வதாக
துவக்கி உணர்த்தியுள்ளனர். இந்தப்பாடல் ஒரு
இசை ஒளிப்பதிவு -நடிப்பு –இயக்கம் கைகோர்த்த
தொழில் ஒருங்கிணைப்பு எனில் மிகை அன்று.
பாடலும் குதிரையும் நில்லாமல் பயணிக்க சளைக்காமல் காமெராவும் அற்புதமாக இயங்கி
இருக்கிறது. மேலும் ஓடும் ரேக்ளாவை வெவ்வேறு கோணங்களில் பதிவிட்டு கடும் உழைப்பை காட்டியுள்ளனர்
வின்சென்ட்- சுந்தரம் . முதலில் வண்டியில் நாமே அமர்ந்து பயணிக்கும் உணர்வு தோன்றும்
வகையில் , குதிரையின் முதுகு வழியே கமெரா வெளியே பார்க்க சீரான ஓட்டம் ,, அடுத்த சில
வினாடிகள் சற்று விலகி நின்று வண்டியின் பயணம் சீராகப்பதிவிடப்பட்டு மீண்டும் நாம்
களத்தில் இருப்பதைப்போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஒரு வினாடி கூட வண்டி, பாடல், காமெரா
எதுவும் நிற்காமல் பயணித்து செல்ல அவ்வப்போது கோணங்கள் மட்டும் மாறுவது காட்சியில்
இருந்து நம்மை விலகவொட்டாமல் கட்டிப்போடுவதை
கவனியுங்கள். இது தான் இயக்குனர் -ஒளிப்பதிவாளர் புரிதலின் ஆழ்ந்த வெளிப்பாடு.
ஓடிக்கொண்டு வரும் வண்டியில் பாடிக்கொண்டு வரும் காதலர்கள். அவ்வப்போது காதலர்கள் முகபாவங்கள்
துல்லியமாக காமெராவில் சீராகப்படதிவு செய்துள்ள நேர்த்தி ஒரு தேர்ந்த வித்தகர்கள் செயல்பாடு என்பதாக உணருகிறேன்.
நாயகி பாடலை துவங்க நாயகன் தொடர்கிறார் .பல்லவியில் இரவுக்கும்
பகலிடம் கோபமில்லை என்ற இடத்தில் தேவிகா விலா பகுதியில் கல்யாணகுமார் லேசாக இடிக்க
தேவிகா தரும் ரியாக்ஷன் சிறப்பாக அமைந்துள்ளது. இது போல தோன்றி மறையும் முக மாற்றங்கள்
தான் ரொமான்ஸ் வகை ப்பாடல்களுக்கு உயிர் நாடி. இந்தப்பாடலில் ஒரு நான்கு இடங்களில்
காமெரா உணர்வுகளை துல்லியமாக பதிவு செய்து 1963 லேயே தேர்ந்த ஆளுமையை இந்தக்குழுவினர்
களப்படுத்தியுள்ளனர். அவர்கள் கிட்டத்தட்டஅனைவருமே இறைவனடி சேர்ந்துவிட்டனர். எம் எஸ்
வி அவர்களின் தாரக மந்திரம் MORTAL MEN IMMORTAL SONGS [இறக்கும் மனிதர்கள் இறவாப்பாடல்கள்]
என் மனதில் நிழலாட , MORTAL MEN IMMORTAL STAMP OF SKILL என்று சொல்லத்தோன்றுகிறது.
இந்தப்பாடல் ஜானகி, P B ஸ்ரீனிவாஸ் குரலில் மெல்லிசை மன்னர்கள் இசையில் உருவானது. இப்பாடலில்
-காட்சியில் ஒளி, இருள் நிழலாடும் பாதைகள் என அனைத்தும் ஆங்கிலப்படங்களுக்கு இணையாக
பதிவிடப்பட்டுள்ளதை இப்போதும் பெரும் வியப்புடன் பார்க்கிறேன். அதிகப்படியான ஸ்டூடியோ லைட்
இல்லாமல், இயற்கையான ஒளியில் B &W படப்பிடிப்பு மிகச்சிறந்த தொழில் திறமை என்பதை
நன்றாக வெளிப்படுத்தி உள்ளது .HATS OFF --SRIDHAR என்று சொன்னால் தவறில்லை.
பாடலை ஆழ்ந்து கவனியுங்கள் ஸ்ரீதர் குழுவினரை ஓரளவேனும் புரிந்துகொள்ளலாம்.
இரு இணைப்புகள் உள்ளன, இரண்டையும் பாருங்கள் மேலும் சிறப்புகள்
வெளிப்படும்
https://www.youtube.com/watch?v=CKjswAPy0_k AZHAGUKKUM MALARUKKUM [AV PN S]
https://www.youtube.com/watch?v=id2Ea2Y_MgQ azhagukkum malarukkum jaadhi QFR
நன்றி
அன்பன் ராமன்
காதலிக்க நேரமில்லை
ReplyDeleteஇப்படம் போல் இனி ஒரு படம் வருமா?
ஶ்ரீதர் மறு ஜெனம்ம் எடுத்துவந்தால்
நடக்கலாம்.
QFR comparissnum சேர்த்து குடுத்து ஒரு புதுமையான உத்தியைக் அறிமுகப்படுத்தியது அழகான மலரில் அளவான வாசனை திரவியம் (scent) சேர்த்து கொடுத்ததை போன்று அமைந்துள்ளது. அருமை ப்ரொஃபஸர் சார் அருமை.
ReplyDeleteஸ்ரீதர் பெயர் உபயோகிக்கும் போதே யுக்தி களும் தானாக தோன்றும்? 🤔🤔