Wednesday, November 15, 2023

TAMIL MOVIES FOLK SONGS

 TAMIL MOVIES FOLK SONGS

கிராமிய மணம் கொண்ட பாடல்கள்

இந்தத்தொடரில் நான் எம் எஸ் வி அவர்களின் ஆக்கங்களைக்கொண்டே பல இசை வகைகளை என் சிற்றறிவுக்கு புரிந்த வகையில் எழுதி வருகிறேன். சரி  கிராமிய மணம தமிழ்ப்பட இசை  வரலாற்றுடன் பின்னிப்  பிணைந்த ஒன்று தான். ஒரு காலகட்டத்திற்குப்பின்னர் தான் அவை தமிழ் சினிமாவில் இடம் பெற்றதாக ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. உண்மை என்ன வெனில் தேவைப்பட்டால் மட்டுமே அவற்றை அவ்வப்போது வழங்கி வந்தனர். ஒரு கட்டத்தில் கோட் சூட் அணிந்து FRANKFURT விமான நிலையத்தில் வருபவனைப்பார்த்து ஒரு பெண் ராசாவே என்றும் ஆண் ரோசாவே என்றும் தப்பட்டை ஒலிக்க பாடுவது படமாக்கப்பட்டு அதுவே யதார்த்தம் ஆனது. அந்த வகைப்பாடல்களில் தாளக்கருவிகள் களப்படுத்திய."மண் மணம்" மேலோங்கி இருந்தது.. அது ஒரு வகை பாடல் அமைப்பு. அதற்கு முந்தைய கால கட்டத்தில் வந்த கிராமீய பாடல்களில் அமைக்கப்பட்டிருந்த இசைக்கோலங்கள் வேறு வடிவானவை.    அவற்றில் சிலவற்றை காண்போம்

1 தாழையாம் பூ முடிச்சு [பாகப்பிரிவினை -1959] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி, குரல்கள் எம் எஸ் வி , டி எம் எஸ், பி லீலா.

பாடலின் துவக்கம் ஒரு கிராமத்து மனிதன் தனக்கே உரிய உயர் தொனியில் தன்னான தானே  தானானே தாலேலோ என்று துவங்கிப்பாட, அதன் பீடிப்பில் நாயகன் பல்லவியை துவங்க, நாயகி பதிலிறுத்துப்பாடுகிறாள், குறிப்பாக பல்லவியின் இறுதிச்சொல்லை மீண்டும் அடுத்தவர் பாட,  பாடல் பயணிக்கிறது    உதாரணம் பொன்னம்மா , நடை நடந்து, என்னம்மா என்னய்யா  என்ற சொற்களை அடுத்தவரும்  பாடுவதாக அமைக்கப்பட்டுள்ளது. எம் எஸ் வி யே கிராமத்து நடையில் உச்ச ஸ்தாயியில் தன்னான தானே  தானானே என பாடலைத்துவங்க, சிவாஜி கணேசன்  அந்த உந்துதலில் துள்ளிக்குதித்து பாடுவது நல்ல துவக்கம் .

நாயகிக்கு குரல் கொடுத்துள்ள பி. லீலா சில சொற்களை வித்தியாசமாகப் பாடி ஒரு தாக்கம் விளைவிக்கிறார் . "பாளை போல் சிர் ரிப்பிற் ருக்கி, பக்குவமாய் குணமிற்ரிக்கு. ஆளழகும் ச்சேர்ந்தீர்றிக்கி என்று அழுத்திப்பாடுவது திட்டமிட்ட அமைப்பென்றே தோன்றுகிறது. பிறிதொரு இடத்தில் [ஏழைகளுக்கென்ன வேணும் "ச்சொல்லைய்யா", கண்ணிலே களங்கமுண்டோ ச்சொல்லை—ய்யா] என்று ஓரு அழுத்தம்   கேட்க நன்றாக ஒலிக்கிறது --- தாயாரின் சீதனமும் தம்பிமார் தரும் பொருளும் என்று பாடி ஓஓ  ஓ என்று இழுத்து டி எம் எஸ் சிறப்பாக பாடியுள்ளார். வெறும் குழல் , துந்தனா தபாலாவில் சுத்தியலால் அழுத்தி,விரலால் தட்டி  டுங் டு டுங் டுங் டு  டுங் என ஒலி  எழுப்பி  பாடல் முழுவதும் தொடர அருமையான கிராமீய வகைப்பாடல் . கேட்டு ரசிக்கஇணைப்பு https://www.bing.com/videos/riverview/relatedvideo?q=YOU%20TUBE%20THAZHAIYAM%20POO%20MUDICHI%20VIDEO%2 THAAZHAIYAM POO MUDICHU 1959

2 வருசம் மாசம் தேதி பார்த்து [மணி ஓசை -1963] கண்ணதாசன் -விஸ்வநாதன் ராமமூர்த்தி எஸ். ஜானகி 

நிறைய கிராமத்து மணம் சுமந்து வந்த பாடல் ஜானகியின் குரலில் மிகத்தெளிவான உச்சரிப்பில் அச்சு அசல் கிராமத்து உச்சரிப்பாக "புருசனாக வருவன் னு சொன்னாரு " காதலும் ஊடலும் பின்னிப்பிணைந்து இயங்குவதை வெளிப்படுத்தும் தாளம் மற்றும் வயல் , ஆறு , மேடு பள்ளம் நிறைந்த கிராமப்பகுதியில் படமாக்கியுள்ள காட்சி [ஒளிப்பதிவு எம். கர்ணன் , இயக்கம் பி. மாதவன்] பாடல் இணைப்பிற்கு

https://www.google.com/search?q=be%2Bvarusam%2Bmabam%2Bthedhi%2Bmani%2Bosai%2B1963%2Bmovie%2B%2Bvideo%2Bsong%26newwindow%3D1%26sca_esv%3D582530003%26sxsrf%3DAM9HkKld&sourceid=chrome&ie=UTF-8 varusam maasam 1963 mani osai S J

3 ஒத்தையடி பாதையிலே [நிமிர்ந்து நில் -1969] வாலி, விஸ்வநாதன் குரல்கள் டி எம் எஸ் , பி சுசீலா                                     அற்புதமான மண் மண பாடல், தெம்மாங்கு என நினைக்கிறேன்.எம் எஸ் வி முத்திரை பல இடங்களில் பளிச்சிடுவதைக்காணலாம். துவக்கத்திலேயே ஆண் ஓ ஒ ஓ , ஓ ஒ ஒ என்று ஓங்கி ஒலித்துப்பாட , ஆரம்பமே சூடு பிடிக்கிறது. மேலும் சூடேற்ற நடிகை பாரதி, தலையில் கூடை சுமந்து ஒயிலாகஆற்றங்கரை மேட்டில்  முன்னே செல்ல , பாடலின் களமே,   வர இருக்கும்   அதகளம் என்ன என்பதை உணர்த்துகிறது. வாலியின் வார்த்தைகள் கிராமத்து வகை சொல்லாடலில் இளம் மனங்களில் ஊறும் சிருங்கார போதையை சுமந்து தெளிந்த நீரோடை போல் சீராக பயணிக்கிறது. சொற்களைப்பாருங்கள், ஒத்தையடி பாதையிலே, அத்த மவ போகையிலே , மாமன் வந்தான் பின்னாலே என்ற பல்லவி -பெண் பாடும் போது அம்மாடி அவன் மனசு வந்தது முன்னாலே என்று உயர்ந்த குரலில் பாட அச்சு அசல் க்ராமத்துக்காதல் , மேலும் நடன அசைவுகளில் நல்ல ஒரு தாளக்கட்டு விலகாமல் ரவிச்சந்திரன்-பாரதி துள்ளிக்குதித்து ஆடி இருக்கிறார்கள். நான் எப்போதும்  சொல்லுவது போல் இது போன்ற பாடலில் பாரதி.நாயகனை கண் அசைவிலேயே [சும்மா ஏமாத்தாத என்பது போல்] பாவம் காட்டுவார். "அந்தி வெய்யிலிலே வந்த மையலிலே என்று நாயகன் பாடுமிடத்தில் பாரதி செய்திருக்கும் முக பாவத்தை ப்பாருங்கள் ஒருமுறை கேட்டாலும் ரீங்கரிக்கும் பாடலும் நினைவில் நிழலாடும் நடனமும்,இணைப்பு இதோ::

https://www.youtube.com/watch?v=Ovsrqo2ZFwA OTHTHAIYADI PAADHAIYILE 1969

4  வள்ளி மலை மான்குட்டி எங்கே போறே [அன்பளிப்பு -1969] கண்ணதாசன்-விஸ்வநாதன் டி எம் எஸ், பி சுசீலா

மற்றுமோர் கிராமீய வகைப்பாடல் ,  தட்டு வண்டி எனும் ரேக்ளா மாடல் வண்டியை சிறிய மாடு இழுக்கிறது. அவ்வப்போது பாய்ச்சல் காட்டி ஓட , நாயகி சற்று மிரள , சிவாஜியின் ஆதிக்க நடிப்புக்கு "காட்டுக்குருவி ஒண்ணு " என தொகையறாவில் துவங்கி , புர் என்று கூவி வண்டி பறக்க , நாயகி  சரோஜாதேவியை. நாயகன் சிவாஜி அலேக்காக தூக்கி  வண்டியில் போட்டுக்கொண்டு ஓடுவதாக அமைந்த பாடல்.                                                                       பாடல் அற்புதம், மண்ணின் மணத்துடன் அழகாக பயணிப்பதையம் கவிதையின் நளினத்தையும் ரசிப்போம் பாடல் இணைப்பிற்கு வள்ளிமலை மான்குட்டி HD | சிவாஜி கணேசன் | சரோஜா தேவி | M.S.விஸ்வநாதன் சூப்பர் ஹிட் பாடல்கள் - YouTube VALLI MALAI MAAN KUTTI ANBALIPPU 

5 மந்தார மலரே  மந்தார மலரே [ நான் அவனில்லை -1974] கண்ணதாசன் [பி.பாஸ்கரன் -மலையாள வரிகள்]  எம் எஸ் விஸ்வநாதன் , குரல்கள் : பி .ஜெயச்சந்திரன் , எல் ஆர் ஈஸ்வரி

இதுவும் ஒரு மண்ணின் மணம் வீசும் ஆக்கம், தமிழும் மலையாளமும் கலந்த நடை. பலரை காதலித்து கைவிடும் நாயகன் ஜெமினி கணேசன், ஜெயபாரதி நடிப்பில்.அற்புதமான நடையில் மலையாள மொழியின் முத்திரையாக -மந்தார மலரே என்ற துவக்கம், மிருதங்கமும் செண்டை மேளமும் பயணிக்கும் பாடல் . பாடகர்கள் பின்னி எடுத்துள்ளனர் சில சொற்கட்டுகள் மிகவும் இயல்பாக ஒலிப்பது இசை மேதைகளின் ஆதிக்க ஆளுமையை வெளிப்படுத்த காணலாம் . பாடல் இணைப்புக்கு இதோ:  

https://www.google.com/search?q=nan+avanillai+1974+songs+video+download&newwindow=1&sca_esv=581829575&sxsrf=AM9HkKmyGsgT9foFXwmeGpq0x6gL9MIrjg%3A1 MANDHAARA MALARE 1974

LYRICISTS KD ,P BHASKARAN

இன்னும் எத்துணையோ பாடல்களை களப்படுத்தலாம் . ஒரு சில மாதிரிகள் போதும் என்றெண்ணுகிறேன்.

அன்பன் ராமன்

 

3 comments:

  1. SD.Burman’s. humming is taken as base in தாழையாம் பூ முடிச்சு பாடலில்.
    எனக்குத்தெரிந்த டப்பா பாட்டு என்று கருதியது
    ஜாலிலோ ஜிம்கானா பாட்டு

    ReplyDelete
  2. yes, the 'DAPPA ' VERSION BECAME A IGH SENSATION IN 1980s as the showcasing of nativity in movie song presentation. At least a vast majority fell for the nerve-raking rhythm therein

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...