Tuesday, November 14, 2023

MEMORY

 MEMORY

நினைவாற்றல்

நினைவாற்றல்/ ஞாபக சக்தி என்று அறியப்படுவது தான் என்ன? இந்தக்கேள்வி ஒவ்வொருவரையும் எப்போதாவதோ அல்லது அவ்வப்போதோ தோன்றி மின்னலென மறைவது. இந்த மின்னலுக்கு 'இடி' இல்லை ஆனாலும் முக்கியமான இடத்தில்/ நேரத்தில் இடியெனத்தாக்கி , திகைப்பை ஏற்படுத்த ஏனையோர் நம்மைப்பார்த்து 'இடிஇடியென' சிரிக்க மற்றும் நகைக்க , ஒரு கையறு நிலை யை ஏற்படுத்த வல்லதுதான் நினைவாற்றலின் தோல்வி [memory  failure]  என்ற நிலை. பரிட்சையிலும் நிஜ வாழ்விலும் நாம் எதிர்கொள்ளும் தோல்விகளுக்கே அஸ்திவாரம் தான் நினைவாற்றலின் தோல்வி.

உடனே பலரும் தரும் விளக்கம் "எனக்கு ஞாபக சக்தி' குறைவு அல்லது எனக்கு ஞாபக மறதி அதிகம் என்று வெளிப்படையாக சொல்லி பச்சாதாபம் தேட முயற்சிப்பது ஒரு தற்காப்பு உத்தி அவ்வளவே. இது என்ன அவலம் [இழவு] என்று புலம்புவோர் ஏராளம். நான் அறிந்தவரையில் நினைவாற்றல் என்பது தையற் கலைஞரின் கையில் இருக்கும் கத்தரி[க்கோல்] போன்றது. அதே கத்தரி நம் வீட்டில் நாம் எதையாவது வெட்ட முற்படும்போது கடித்துக்குதறி, ஆத்திரம் விளைவிக்கிறது ஏன்?         புழங்குவதும், அன்றாடம் பயன்படுவதும் தையற் கலைஞரின் கையில் இருக்கும் ஆயுதம், நாம் அதை ஆயுதபூஜைக்கு மட்டுமே வெளியே எடுக்கிறோம்.; சோம்பித்திரிபவன் போல பல்லைக்கடித்துக்கொண்டு செயல் பட மறுக்கிறது,

 ஓரளவு புரிகிறதா பயன்பாட்டில் இல்லாத எதுவும் , தேவைக்கு பயன் படாது என்பது? வீட்டிற்கு வந்த உறவினனைப்பார்த்து, நெற்றிப்பொட்டில், தைலம் தேய்ப்பதைப்போல விறுவென்று தேய்த்துக்கொண்டு 'உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே' என்று முனகினால், 'போடா' என்று மனம் வெதும்பி பெட்டியைதூக்கிக்கொண்டு போகாமல் என்ன செய்வான்? அல்லது ஹி ஹீ ஹீ வீடு தெரியாமல் வந்துவிட்டேன் என்று சொல்லிக்கொண்டே ஓடுவான்.

என்ன என் தம்பியை துரத்திவிட்டீரா, என்று கத்திக்கொண்டே மனைவி புடவையை வரிந்து இடுப்பில் சொருகிக்கொண்டு , கண்கள் அகல கருமாரி அம்மனாய் சீறிக்கொண்டு பாய, பீரோவுக்குப்பின்னால் ஒளிய ப்பார்க்க , காலை வேளையில் அர்ச்சனை நிச்சயம் கிடைக்கும். இப்படியெல்லாம் நடக்காது என்று சொல்லமுடியாது. நினைவு தவறுதல் எதை வேண்டுமானாலும் செய்து தலைக்குனிவை ஏற்படுத்தி விடும். ஒருவகையில் நினைவாற்றலுக்கும் கவனக்குறைவிற்கும் தொடர்பு உண்டு.

ஒரு தகவல் நம்மை வந்தடையும் போது, அதை முழு கவனத்துடன் உள் வாங்கிக்கொண்டால் , அந்த தகவல் எளிதில் நம்மை விட்டு அகலாது. ஒரே நேரத்தில், டிவி பார்த்துக்கொண்டே போன் பேச முற்படும்போது. கவனம் சிதறி, இரண்டு பணிகளையும் அரைகுறையாக செய்ய நேரிடும் ஏககாலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களில் ஈடுபட வேண்டுமானால் அதற்கென பயிற்சி செய்து வெற்றி அடையலாம். ஆனால் அது அலுவலகப்பணிகளுக்கு உதவும்,

கல்வி கற்க முயலும் வயதினருக்கு உதவி செய்யாது. இதைப்புரிந்து கொள்ளாமல் வகுப்பறையில் கவனத்தை வேறெங்கோ செலுத்திவிட்டு,   பின்னர் படிக்க முயன்றால் குழப்பம் தான் மிஞ்சும்.   . . இதனால் மாணவர்கள் புரிந்து கொள்ளாமல் மனப்பாட உத்திகளை பின் பற்றி துயர் அடைகின்றனர், மனப்பாடம் செய்பவர்களால் எந்த புதிய கருத்தையும் முறையாக பேசவோ எழுதவோ முடியாது. எனவே உயர் நிலைகளில் கற்கவோ கற்பிக்கவோ மூச்சுத்திணறி தத்தளிக்கின்றனர்.

எனவே தான் புரிந்து கொண்டு கற்க வேண்டியது மிக அவசியம்.புரிந்து கொள்ளாமல் படித்து போட்டித்தேர்வுகளில் தேர்வு எழுதினால் , வெற்றி என்பது எட்டாக்கனியே. எந்த தேர்வினையும் எதிர்கொள்ள தன்னம்பிக்கை ஆதாரம். தன்னம்பிக்கை புரிந்து படிப்பவர்களுக்கே .வசப்படும் . அதற்கான முறையான வழி முறைகள்  குறித்து பின்னர்  அறிவோம்,

அன்பன்    ராமன்   

2 comments:

  1. Repeated reading is necessary to retain certain things. Lymbic system in our brain is responsible for retaining memory.
    I have come across three people who are well known to me.
    1.Prof.K.Raman (about75)
    2.Prof.Rengarajan (92)
    Botany Prof. St.Joseph’s college
    Trichy
    3.Mr.Renganathan (92)
    My uncle in Trichy
    Of all the three Prof.Raman’s memory power is extraordinary

    ReplyDelete
  2. பேராசிரியர் ராமன் சொன்னது போன்று எந்த ஒரு செயலையும் முழு கவனுத்துடன் செய்யும் பொழுது அது நன்கு ஞாபகத்தில் தங்கி விடுகிறது. மேலும் அதைப் பயிற்சி செய்யும் பொழுது நமது அங்கமாகவே மாறிவிடுகிறது. இதற்கு சிறந்த உதாரணம் நமக்கு பிடித்த திரைப்படம் பல வருடங்கள் ஆனாலும் மறக்காமல் இருப்பது.

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...