Monday, November 13, 2023

SEENU IYENGAR IN CINEMA SHOOTING

 SEENU IYENGAR IN CINEMA SHOOTING

சினிமா ஷூட்டிங்கில் சீனு ஐயங்கார்

தே    ழகு ஏந்துழு  ஏந்துழு  என்று ரகுவை  ஷீனு காலை 5. 50 க்கு தொல்லை தந்தார். வெளிச்சம் வந்தாச்சு தா ஏந்துழு என்று எழுப்பினார் சென்னை--  அதான் மெட் டாஷ் கிழக்கு பகுதியில் இருப்பதால், காலையில் சீக்கிரம் சூரியன் உதிக்கும். ஸீனுக்கு சினிமா ஷூத்திங் [ஷூட்டிங்] பார்க்கணும். இந்த களேபரத்தில்  .பெரியம்மா காபி கொண்டுவந்தார் . ஷீனு -- இதென்ன காபி ? "நித்யானந்தா வா? . பெரியம்மா அதிர்ந்து ஐயோ இல்ல இது விவேகானந்தா காபி என்றார். ஸீனுக்கு ஏதோ ஒரு ஆனந்தா காபி ; இப்ப அவரே ஒரே குஷியானந்தாவா குதூகலிக்கிறார். இதற்குள் ரகு காபிக்கு தயாராகி வந்திருக்கிறார். பெரியம்மா இன்னொரு காபி கொண்டு             வந்தார்.ழே ழகு ஷூத்திங் எங்க? எப்ப என்று பேசிக்கொண்டே பையை குடைந்து கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டார் அப்படியே ஒயிலாக மண்டையை திருப்பி கண்ணாடியில் தனது profile பார்த்தார் அசப்பில் எஸ் எஸ் வாசன் போல் தோன்றியது. ஆஹா இப்ப தான் ஜோர் அஷல் சினிமாக்காரனாட்டம் இருக்கேன் ஐயா ஐயா என்று அக மகிழ்ந்தார். 

ரகு சொன்னார் "ஷூட்டிங் 10.00 மணிக்கு திருவான்மியூர் தெப்பக்குளம் பக்கத்துல - சந்திரன் சொன்னான்"

தே நீ எமகாதகன் தா, எல்லாம் ரெடி யா வெச்சுண்டிக்கியே -நீ பொகு சமத்துதா என்று அவன் கன்னத்தை கிள்ளினார். ஷீக்கரம் குலி [குளி] என்று தொணப்பினார் . மணி 6.22. ரகு ஒரு-- முறை முறைத்தான். ஸீனு திடீரென்று ஜன்னல் வழியே இயற்கை காட்சிகளை ரசிக்க ஆரம்பித்தார் ரகுவின் கோபப்பார்வையில் இருந்து தப்பிக்க.

சரி என்று,  தானே குளிக்க கிளம்பினார். மைசூர் சாண்டல் சோப்பை குழைத்து குழைத்து வீடே நறுமணம் கமழ குளித்தார்.. பெரியம்மா "சினிமா ஷூட்டிங் பாக்க போறேளா, நடிக்க போறேளா - அசல் ஹீரோவாட்டம் இருக்கேள். என் கண்ணே பட்டுடும் போல இருக்கு என்று தூபம் போட்டாள்.  சீனு இப்ப இருக்கும் நிலையில் கல்யாணத்துக்கு பெண் பார்க்கலாமா என்றால் என்று தலை அசைப்பார் அவ்வளவு குதூகலம்.இனிமேல் கிழம் இப்போதைக்கு ஓயாது என்று ரகுவுக்கு தெரியும். அவனும் விரைந்து தயாரானான். தே போலாந்தா. இப்பவே வா ? ரகு . வழில ராயர் மெஸ்ஸுல போளி + இட்லி சாப்புத்துத்து போலாந்தா. -ஸீனு

அங்கே எதுக்கு போணும் ? ரகு   SEENU  பின்ன திதுவான்மியூதுக்கு  எப்பிதி போவ?”.   "ஏன் கிண்டி வழியா போலாமே" -ரகு . ஐயோ வேணாந்தா என்று தை தை என குதித்தார்.

கிழம் ஜம்மென்று தலை வாரி பெரிய ஜிப்பா, அங்கவஸ்திரம் போல் துண்டை மடித்து தோளில் சாத்திக்கொண்டு, நெற்றியில் பளிச்சென்று திருமண் ஸ்ரீசூர்ணம் [நல்ல சிவப்பு] அணிந்து பெரிய கர்நாடக சங்கீத வித்துவான் போல என்று இஷ்டத்துக்கு ப்பாடிக்கொண்டு 8.20 க்கே கிளம்பி ஆட்டோவில் ,மைலாப்பூர் வந்தனர் .மணி 8.55 . ஸீனு அதி தீவிரமாக நோட்டம் விட்டார். மைலாப்பூரில் மாமிகளை தேடினால் எல்லாம் ஸ்கூட்டர் மாமிகள் சில சூடிதார், சில மடிசார் , பின்னால் மாமா அல்லது மகள் /மகன் என்று பறக்க சீனு statistics எடுத்து ஐயரும் சரிக்கு சரி இருக்காதா [டா] ஆனா எல்லாம் highly qualified . மதிசாரோடயே ஆபீஸ் போறாளே என்று சொல்ல ஒரு மிட் மாமி இன்னிக்கு பிரதோஷம் சார் என்று கூலிங்க்ளாஸ் வழியே பார்த்து சொல்லிவிட்டு லஸ் பகுதிக்கு விரைய, ராயர் மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு அடுத்த 50 நிமிடத்தில் சீனு-ரகு தீருவான்மியூர் குளப்பகுதியில்.

 ஒரு கேரவன், பக்கத்தில் 10-12 ரிப்லெக்டர் , ஒரு ஸ்டாண்ட் ,  காமெரா இல்லை , பல இளைஞர்கள் -டெக்னிஷியன்கள் போலும் , கயிறு கட்டி பொதுமக்கள் உள்ளே வாராத படி அமைத்திருந்தது. சிறிது நேரத்தில் ஷூட்டிங் துவங்க ஆயத்தம் ஆனது. டைரக்டர் சந்திரனை, ரகு கை  அசைக்க  , அவன் ஓடி வந்து வணக்கம் தெரிவித்தான். ஐயங்கார் அறிமுகம் ஆயிற்று . சாமி நீங்க நடிக்கிறீங்களா என்றார் சந்திரன். ஏற்கனவே உற்சாக மூடில் இருந்த சீனு - ஜாமாய்ச்சுடறேன் பாத் [பார்] என்றார். சாமி நீங்க ஒண்ணும் செய்ய வேணாம் . காமெரா உங்க நெத்தி பக்கம் க்ளோசப் வெப்போம் , அப்பா நீங்க ரெண்டு புருவத்தையும் ஏத்தி ஏத்தி இறக்கணும்  .உங்க நாமம் , புருவம் சூப்பரா இருக்கும் .

இப்ப பொண்ணுங்க ஹீரோயின சுத்தி ஆடுவாங்க அப்ப கூட்டத்துல இருந்து ஹீரோ வைப்பாத்து ஹீரோயினுக்கு காதல் .வரும் இதுதான் இன்னிக்கு ஷூட்டிங். போயா நன்னாவே இல்ல. நான் ஒரு ஐடியா சொல்றேன் அதைசெய் எல்லாரும் ரசிப்பாங்க என்றார் சீனு.  சந்திரன் அதிர்ந்தார் ஐயரு  பயங்கரமான ஆளா  இருக்காருங்க என்று அசிஸ்டன்ட் டைரக்டர்களிடம் பேசி  அய்யர் பிளான் பற்றிஅவரிடமே  பேச இப்போது சீனு  . மல்லிப்பூ வாங்கிண்டு வாங்கோ  என்றார்

சினிமா குழுவினர் திகைத்து எதுக்கு சாமி என்றனர். நீங்க வாங்கிண்டு வாங்கோ நான் ஏன் சொன்னே ன்னு புரியும். 10 நிமிடத்தில் ப்ரொடக்ஷன் மேனேஜர் ஒரு பெரிய மல்லிகை பந்தை டைரக்டரிடம் கொடுத்தார். டைரக்டர் இந்தாங்க சாமி என்றார். இப்போது ஷீனு தனது அதிரடி பிளான் பற்றி விவரித்தார். அதாவது கதாநாயகி ஆடிக்கொண்டிருக்கும் போது, ஹீரோ அவள் மீது மல்லிகைப்பூவை குறி தவறாமல்   தலையில் விழும்படி வீச, அவள் அவனைப்பார்க்க, இப்படி 4, 5 முறை பூ வீச, ஹீரோயின் அந்த ஹீரோவிடம் மயங்குகிறாள் . இப்பிடி படம் எடுய்யா. தியேட்டர் அதிரும் ஒன்ஸ் மோர் னு கத்துவாங்க. சரி சாமி இந்தப்பூவை ஒழுங்காப்போடணுமே  என்று விசனத்தில் ஆழ்ந்தார் சந்திரன். "ஏன் போட முடியாதா"? சீனு.  ஈஸியா போடலாம் என்றார் சீனு.

 எப்பிடி? என்று கோரஸாக ஒலித்தனர் அனைவரும். பூவை தன் கையில் வாங்கிக்கொண்டு 15அடி . தள்ளி போங்க என்றார். இப்ப யார் மேல போதணும்? அந்த மஞ்ச சட்டை க்கு என்றார் சந்திரன். சீனு கையை உயர்த்தாமல் இரண்டு பூக்களை சுண்டினார் சர் ர் என்று போய் சரியாக மஞ்ச சட்டை தலையில்    இப்ப அந்த வெள்ள பனியன் என்றார் டைரக்டர். அதே போல் ஒலிம்பிக் வீரன் போல கையை தூக்காமல், 2 பூக்களை சுண்டிவிட்டு அந்த பனியன் காரர் மீது அவை அமர்ந்து கொள்ள சினிமாக்குழு -சாமி நீங்க செஞ்சுப்புட்டீங்க , ஹீரோ செய்யணுமே.

என்னய்யா புரியாத ஆளா இருக்கீங்க,. கூட்டத்துல ஹீரோ பக்கத்துல என்ன நிக்க வைய்யா. ஒருத்தருக்கும் தெரியாம நான் பூவை கரெக்ட்டா தலையில் போற மாதிரி போடறேன். ஹீரோ போட்டாமாதிதி  காமிச்சுக்கய்யா .காட்சி சூப்பரா இருக்கும். அதே மாதிரி குறி தவறாமல் 7 முறை பாடல் காட்சியில் ஸீனுவின் வித்தை இடம் பெற்றது .அவ்வப்போது ஷீனுவின் நாமம் புருவ நடனம் க்ளோசப்பில் படம் பிடித்துக்கொண்டனர் .

 டைரக்டருக்கு ஏக மகிழ்ச்சி வசமான ஆளைக்கூட்டிக்கிட்டு வந்து பெரிய ஹெல்ப் பண்ணிட்டீங்க என்று      ரகுவை, கை கூப்பி ஒரு நிமிஷம் இருங்க என்று ப்ரொடக்ஷன் காதில் ஏதோ சொல்ல, ஒரு 100 ரூபாய் கட்டு வந்தது. சினிமாக்குழுவினர் --"சாமி உங்க திறமைக்கு இதெல்லாம் ரொம்பக் கொறவு, மாட்டேன்னு சொல்லாம ஏத்துக்குக்குங்க அப்பப்ப கம்பெனிக்கு வாங்க என்று பணக்கட்டை அன்புடன் கொடுத்து, டேய் சார கொண்டுபோய் வீட்டுல விட்டுட்டு வாங்கடா என்றார் டைரக்டர். வணக்கம் தெரிவித்து விடை பெற, கார் மாம்பலம் வீட்டில் அவர்களை விட்டது.

வீட்டில்   ழகு ழகு இந்தா என்று 7000/- ரூபாயை ரகுவிடம் தந்தார் ஸீனு . ரகு தயங்க, வெச்சுக்கோ, பூழாத்தையுமே குடுத்துதுப்பேன் .தீபாவளி செலவுக்கு 2000/- வெச்சுண்டுக்கேன் என்று ஒரு 1000/- ரூபாயை பெரியம்மாவிடம் தந்து நன்றி சொல்லிவிட்டு இரவு 7.00 மணி பிளைட்டில்  திருச்சி நோக்கி பயணித்தனர்.    ரகு மிரண்டு போனான்.  எவ்வளவு ஈஸியா, சினிமாக்காரர்களை வளைச்சு பிடிச்சுட்டார் அம்மாடியோவ் என்றான் உள்ளூர.

 கிழங்கள் லேசுப்பட்டவை அல்ல, என்று அந்த நாளில் பெரியப்பா சுதர்சனம் சொன்னது ரகு மனதில் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருந்தது.

அன்பன் ராமன்

1 comment:

  1. ஓய் சீனு நீர் நம்மடவா. உமக்கு சினிமாமேல ஆசை வரலாமோ. அதுவும் இந்த வயசுல.
    அப்புறம் அங்கேஉள்ள Extra மேல ஆசை வரும் .சீரழிஞ்சி போயிடுவீர்.
    ஜாக்கிரதை.

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...