Wednesday, November 1, 2023

CINE MUSIC -13 STRATEGIES -10 SOPHISTICATED PERCUSSION- DRUM PLAY

 CINE MUSIC -13 STRATEGIES -10 SOPHISTICATED PERCUSSION- DRUM PLAY

திரை இசை -13     உத்திகள் -10 உயர்வகை தாள அமைப்புகள் -ட்ரம் விளையாட்டு

தாளங்களில் மற்றும் தாளக்கட்டுகளில் துவங்கிய பாடல்களில் சிலவற்றை சென்ற தொகுப்பில் பார்த்த்தோம். ட்ரம் ஒரு அதிரடிக்கருவி என்று பலர் கருதுகிறார்கள்.அப்படியா எனில் இல்லை என்று எளிதாக சொல்லி விடலாம்.ஏனெனில் ட்ரம்மில் பலவகை உண்டு  

அவை பாஸ் [BASS ]டெனர் [TENOR ], டிம்பனி [TIMPANI ] ஸ்னேர் [SNARE ] எனப்படும் . இவற்றின் சில மாறுபாடுகளும் உண்டு. இவை அனைத்தும் திரை இசையில் பங்குபெறும். அவற்றின் மீது பிரஷ் கொண்டு வருடும்போது கிளரத்தொழும் ஒலி மிகுந்த வசீகரம் உடையது. அதனால் இசை அமைப்பாளர்கள் பெரும்பாலும் மிகுந்த கவனமுடன் பிரஷ் இசைக்கவேண்டுமே என்று தயங்குவதும் உண்டு. ஏனெனில் அந்த வகை நளினம் வாசிப்பில் அமையாவிட்டால் பாடல் சோபிக்காது மாறாக சொதப்பிவிடும்.

ஆனால் எம் எஸ் வி யின் குழுவில் நோயல் க்ராண்ட் [NOEL GRANT] என்றொரு வித்தகர் இருந்தார். அவரது ட்ரம் வாசிப்பு அலாதியானது. அவரை வெகுசிறப்பாக பயன் படுத்தியவர் எம் எஸ் விஸ்வநாதன். அந்த நளின ட்ரம் வாசிப்பை கேட்டு மகிழ,  சில பாடல்களை தொகுத்து தருகிறேன் கேட்டு இன்புறுங்கள். 

1 நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் [ சாந்தி - 1965] கண்ணதாசன் விஸ்வநாதன் -ராமமூர்த்தி , பி.சுசீலா  

அருமையான பாடல். காதலைச்சொல்லும் பெண். ஆமோதிக்கும் ஆண் , ஆமோதிப்பதென்னவோ விசில் ஒலி யில் [அநேகமாக எம் எஸ் ராஜு வின் விசில் ஒலியாக இருக்கவேண்டும்].பாடலின் உள்ளார்ந்த அமைப்போ ஏக்கம் பின்னிக்கிடக்கும் உள்ளக்கிடக்கை.  இதில் ஒரு பார்வையாளனாக நான் முன்  வைக்கும் வாதம் . பி.சுசீலா எப்படித்தான் ஒவ்வொரு நடிகையின் குரலிலேயே பாடிவிடுகிறார் என்ற வியப்பு இந்த பாடலில் கண்டிப்பாக எழும். சரி சிவாஜி கணேசன் விசில் அடித்தே தனது பங்கை நிறைவேற்ற   , தேவிகா வெளிப்படுத்தும் முக பாவங்களையும் , குறிப்பாக கண் அசைவுகளையும் கவனியுங்கள் [பாலில் விழுந்த பழம் போலாட என்னு மிடத்தில் மற்றும் நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும்  எனும் இடத்தில் கருவிழி மேலே நிலவு நோக்கி பார்த்து நாணத்துடன் கீழே சாய்வது இதெல்லாம் இனிமேல் தமிழ் சினிமாவில் இல்லை.] நிம்மதி ஏது , நிம்மதி எது என்று குரலை  தொடர்ந்து ட்ரம் சிகு சிகு சிக் என்று நுட்பமாக சிலிர்ப்பதையும் அதே போல் நிம்மதி வேண்டும் என்ற பகுதியிலும் ட்ரம் ஆடியுள்ள மென்மையான நடனம் மயக்கம் தரும் கவனியுங்கள்

 பாடலின் அமைப்பில் ட்ரம் தான் முதன் மை க்கருவி தாள ஜாலத்தில் .

அது மட்டுமா?  ட்ரம் பாடும் போது மட்டுமே ஒலிக்கிறது இடை இசையில் வேறு கருவிகள்.    கண்கள் இரண்டில் நிம்மதி எது என்னும் பாடல் வரியை துரத்தி வரும் ட்ரம் சிலிர்ப்பதை கவனியுங்கள். இவற்றை தொலைத்துவிட்டு என்ன பாட்டு கேட்க முடியும்? இணைப்பு இதோ:

https://www.google.com/search?q=nenjaththile+nee+netru+vandhaai+video+song+download&newwindow=1&sca_esv=574791026&sxsrf=AM9HkKn6cDefVCPdWTrzpZr nenjaththile nee netru

2 நினைத்தால் சிரிப்பு வரும் [பாமா விஜயம் -1967] கண்ணதாசன் எம் எஸ் விஸ்வநாதன் , பி.சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி , சதன்

இந்தப்பாடல் ஒரு வித்தியாசமான பாடல் . பக்கத்து வீட்டு சினிமா நடிகை பாமவைப்பார்த்து மத்திய தர குடும்பத்தினர் தன நிலை மறந்து படாடோபம் காட்டி வாழ முயல என்னவெல்லாம்செய்கிறார்கள். கணவன் எங்கேயாவது பாமா விடம் வீழ்ந்து விடுவானோ என்று அச்சம் கொண்டு ஒவொருத்தியும் வீட்டினுள் ஆடும் ஆடலும் பாடலும் . கவி அரசர் சொல்லுக்கு செவி அரசர் தொடுத்த இசை ;அதற்கு விறுவிறுப்பு சேர்க்க டிரம், மற்றும் போங்கோவின் துடிப்பான இயக்கம் .பூரிப்பில் வெடிக்கும் சிரிப்பு மற்றும்  வினோத ஸ்வர ஆலாபனை என்று மிமிக்ரி கலைஞன் சதன் அரங்கேற்றிய குரல் வகைகள். எவ்வளவு அதீத கற்பனை ! பார்த்து ரசியுங்கள .   பாடலுக்கு இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=ninaiththaal+sirippu+varum+video+song+download&newwindow=1&sca_esv=578371612&sxsrf=AM9HkKlrP4KHROvP0oEoggvKR9mCGeZing ninaiththaal sirippu varum

3 வெள்ளிக்கிண்ணந்தான் [உயர்ந்தமனிதன் -1967] கண்ணதாசன் எம் எஸ் விஸ்வநாதன், டி எம் எஸ் பி.சுசீலா

இப்பாடலில், சுசீலாவுக்கு ஹம்மிங் மட்டுமே .ஆனால் ஜமாய்த்திருக்கிறார் .ஆமாம் பல்லவி யிலேயே ஹம்மிங். வெளிப்புறக்காட்சி துவங்கியதும் ஒரு இந்த நெடிய ஆலாபனை ஆ அ  ஆஆ என்று விஸ்தார பயணம் ஹம்மிங்கில் ;இது போன்ற கற்பனைகளுக்கு எம் எஸ் வி தான் புகலிடம்... சரி, இந்த பாடலே இரண்டு வித நடையில் பயணிப்பதைக்காணலாம். பல்லவி கடந்த பின் சரணம் மெல்லப்போய்க்கொண்டு ஓரிடத்தில் வேகமெடுத்துப்பாய பின்னர் அமைதியுற்று மென்பயணம் மேற்கொள்ள ஒரு அதீத கற்பனை இந்தப்பாடல்.  . பொதுவாக விரைந்த பகுதிகளில் ட்ரம்ஸும், மெல்ல பயணிக்கும் பகுதிகளில் தபலாவும் என்ற இலக்கணத்தை ஒதுக்கிவிட்டு மெல்ல இயங்கும் பகுதிகளில் ட்ரம்ஸ் வேகமாக இயங்கி, ஒரு புல்லரிப்பை கொடுக்க, பாடல் முடியும் போது ஹம்மிங் முழு வீச்சில் ஓட ட்ரம்பெட்    [TRUMPET] பேசுகிறது  [TRUMPET-  DAS  இசைத்தது ] பாடல் வார்த்தையை ட்ரம்பெட் கிளியாய் பேசுவது மற்றுமோர் சிறப்பு. அப்போது ட்ரம்ஸ் விரைந்து ஆனால் மென்மையாக  அதிர  -என்ன தவம் செய்தனை என்று கேட்க தோன்றுகிறது. இந்தப்பாடல் ஒரு ட்ரம்ஸ் விருந்து..

பாடலுக்கு இணைப்பு இதோ    

https://www.google.com/search?q=vellikkinnanthaan+-+uyarndha+manidhan+videosong++download&newwindow=1&sca_esv=571066 vellikkinnanthaan

தேடி வரும் தெய்வசுகம் [நிமிர்ந்து நில் -1969]           எம் எஸ் விஸ்வநாதன் டி எம் எஸ், பி சுசீலா. பாடலாசிரியர் - வாலி என்று நினைக்கிறேன். எதுவாயினும், இந்தப்பாடலில் இரு மாறுபட்ட வேகங்களில் பாடல் பதிவிடப்பட்டுள்ளது. நமது தேவைக்காக விரைவு நடை தேர்ந்தெடுத்து பார்க்கிறோம்.

 இந்தப்பாடல் மிக ரம்யமான ஸ்தாயியில் டி எம் எஸ் குரலில் துவங்க பின்னர் சுசீலா தொடருகிறார்.

குரல் அடிப்படையில்            

 டி எம்  ஸ்  என்றல் சிலர் நம்ப மறுத்து சவால் விட்டு தோல்வியுற்ற நிகழ்வுகளும் உண்டு. அவ்வளவு மென்மையாக இறங்கி ப்பாடியுள்ளார்.

சுசீலா கேட்கவே வேண்டாம் அவ்வளவு அழகாக தொடர்ந்து வருகிறார் . எம் எஸ் வி முத்திரை பளிச்சிடும் பாடல். அதி அற்புதமான இசை அமைப்பு ,இடை இசையில் கிடார் குழல்களின் நர்த்தனம் . விளக்கவொண்ணா பீடு நடை.   நடிகர்கள் ரவிச்சந்திரன் -பாரதி அனாயாச நடனம், வீடு முழுவதும் ஓடி ஆடும் இளம் ஜோடி . அதிலும் பாரதி நெடிதுயர்ந்த உடலுடன் துள்ளி ஆடியுள்ளது பாடலுக்கு வலு சேர்க்கிறது. காதல் பாடல்களில் பாரதி எப்போதும் ஒரு முத்திரை பதிப்பார் அது என்ன எனில், ஆண்  ஏதாவது வர்ணித்துப்பாடும் போது [போதும் சும்மா ஏமாத்தாதே என்பது போல்] பாவம் காட்டுவார் .அது பாரதிக்கு டிரேட் மார்க் . இந்தப்பாடலில் ... அம்மம்மா தங்க உடல்........என்ற இடத்தை கவனியுங்கள்.

இவை ஒரு புறம் இருக்க , இது நோயல்   க்ராண்ட் அவர்களின் புயல் வேக     ட்ரம்  வாசிப்புக்கு விடப்பட்ட சவால் என்பது போல மிக நுணுக்கமான சங்கதிகளை அனாயாசமாக புரட்டிப்போட்டு வித்தை காட்டியுள்ளார். பாடல் முழுவதும்      நோய லி ன் ராஜ்ஜியம் தான்., பாடலின் பல்லவி இறுதிச்சுற்றில் புயல் வேக  ட்ரம்  வாசிப்பை க்கேளுங்கள்  கேட்டால் தான் உணர முடியும். ஊன்றி கவனித்து ரசிக்க இதோ இணைப்பு . .    https://www.youtube.com/watch?v=8lamMBfxAOc –thedivarum

நன்றி அன்பன் ராமன்

 

 

1 comment:

  1. பாமா விஜயத்தில். நாகேஷுக்கு ரிப்பா. ரிப்பா என்று குரல கொடுத்த சதனை பாராட்ட வேண்டும

    ReplyDelete

PATTU IYENGAR- LYRICIST

 PATTU IYENGAR- LYRICIST  பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார்   என்னது பட்டு ஐயங்காரா ?   அவர் என்ன பட்டு வ்யாபாரியா அல்லது எல்...