Thursday, November 2, 2023

SRIDHAR –THE DIRECTOR

 SRIDHAR –THE DIRECTOR

ஸ்ரீதர் என்ற இயக்குனர்

சென்ற பதிப்பில் இயக்குனர் ஸ்ரீதரின் சில குறிப்பிட்ட தன்மைகளைப்பேசி இருந்தோம். இன்றய பதிப்பில் வெகு சில யதார்த்தங்களை அலசுவோம்..ஸ்ரீதர் இயக்குனராகும் முன்பே தமிழ்த்துறையில் வலுவாகக்கால் ஊன்றியவர். சொந்த திறமையிலும், உழைப்பிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். பிறர் தன் பணியில் குறுக்கிடமாட்டார். நேரம் தவறுபவர்களை வாய்ப்பு கிடைத்தால் மட்டம் தட்டுவார். அதற்கு சான்றாக திரைத்துறையில் பேசப்படும் சில தகவல்கள். ஒருமுறை நடிகை பத்மினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்கு கால தாமதமாக வந்ததை கண்டித்தார் ஸ்ரீதர். நடிகைக்கோ நன் பெரிய பெரிய டைரக்டர்களையே பார்த்த்துவிட்டேன் நீ என்னய்யா என்பது போல ஒரு அலட்சியம்.. [இந்த மாதிரி சம்பவங்களில் தகுதியற்றவர்கள் பதவி வகிக்கும் இடங்களில் கூழைக்கும்பிடு போட்டு ஹி ஹி ஹி நீங்க எப்பனாலும் வாங்கம்மா நாங்க அனுசரித்துக்கொள்கிறோம் என்பார்கள். தனது தொழில் திறமை மீதும் உழைப்பின் மீதும் பற்றுக்கொண்டவர்கள் ஆணவம் கொண்டவர்களை -பாடம் புகட்டாமல் விடமாட்டார்கள் .  . எந்த அலுவலகத்திலும்/ துறையிலும் எப்போதும் திறமைக்கும் ஆணவத்துக்கும் இடையே வலுவான போட்டி மூடுபனியாக இருந்து ஒருநாள் எரிமலையாக வெடிக்கும் ]. அப்படி ஒரு சம்பவம்:    குறித்த நேரம் கடந்தும் பத்மினி வரவில்லை. கோபம் கொண்ட ஸ்ரீதர், வின்சென்ட்,சுந்தரம் கோபு அனைவரையும் ஸ்டுடியோ தோட்டத்தில் செட்டுக்கு வெளியே அழைத்து வாங்கடா கோலிக்குண்டு விளையாடுவோம் என்று ஆடத்துவங்கினர். சற்று நேரத்தில் வந்த நடிகை, தான்  வந்து விட்டதை தெரிவிக்க, ஸ்ரீதர், வந்துட்டீங்களா இப்ப தானே வந்தீங்க கொஞ்சம் ஒய்வு எடுங்க நாங்க கோலி  விளையாடிட்டு   வந்துடறோம் என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்ற நடிகைக்கு நன்றாக உரைத்தது என்பார்கள். ஆள் தெரியாம விளையாடுவது, அந்த நடிகைக்கு பழக்கம் போலும். மீண்டும் ஒரு உரசல். ஒரு படக்காட்சிக்கு காமெரா கோணங்கள் ஸ்ரீதர் வின்சென்ட் சுந்தரம் மூவரும் விவாதித்துக்கொண்டிருக்க நடிகை குறுக்கிட்டு வேண்டாம் சார் கமெராவை இப்படி வையுங்க க்ளோஸப் எடுங்க என்று சொல்ல மூவரும் கடுப்பானார்களாம். அவர் சொன்ன படியே செய்து அந்த ஷாட் முடிந்தவுடன், மேடம் இப்ப எந்த ஆங்கிள் வெக்கலாம் என்று ஒவ்வொரு காட்சிக்கும் கேட்க அப்போது தான் நடிகைக்கு புரிந்ததாம் "உன் வேலையைப்பாரு எங்கள் வேலை எங்களுக்கு தெரியும்" என்று அடிக்காத குறையாக சொல்லிவிட்டார் என்பது. அந்தப்பட தயாரிப்பாளர் ஸ்ரீதர்   இல்லை, . எனவே நடிகை தப்பித்தார்.எத்துணையோ படங்களை தயாரித்து இயக்கிய ஸ்ரீதர் , பல பழைய முகங்களுக்கு வாய்ப்பு அளித்தாலும் அந்த பட்டியலில் பத்மினி இல்லை -புரிகிறதல்லவா? 

அதனால் பின்னாளில் கல்யாணபரிசு சரோஜா தேவிக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு அடிகோலியது.அதில் அவருக்கு வடிவமைக்கப்பட்ட உடைகள், ஜடை, ஜாடை மொழியாக "போய்ட்டுவரேன் "என்று சகோதரிக்கு சொல்வது போல காதலனுக்கும் சேர்த்து சொல்லிக்கொண்டே அவன் கவனிக்கிறாநா என்று ஓரக்கண்ணால் பார்த்த காட்சிகளின் ஒளிப்பதிவுக்கோணங்கள் என ஸ்ரீதர் தனது முதல் இயக்குனர் முயற்சியிலேயே தான் ஓருபெரும் ஆளுமை என்பதை சிறப்பாக வெளிப்படுத்தி தேடப்படும் இயக்குனராக பரிமளித்தார். பின்னாளில் அவர் காட்சிகளிலும் வசனங்களிலும் சிறப்பான உத்திகளை கையாண்டார். காட்சிகளில் கேமரா பேச , கலைஞர்கள் மிகவும் குறைவாகப்பேசும் உத்தியை முன்னெடுத்தார். நெஞ்சில் ஓர் ஆலயம் [1962] சோகக்கதையில் ஒரு மாஸ்டர்பீஸ். அதுவரை தேவிகா ஏற்றிராத வெயிட்டான பாத்திரத்தில் அவர் சோபிக்க ஸ்ரீதர் எடுத்த அணுகுமுறை -பல கட்டங்களில் தேவிகா விழியால் நடிக்க , மிக சிறிய ஆனால் நுண்ணிய வசனங்களை வைத்தார். அவளது முன்னாள் காதலன்இப்போது டாக்டர் , அவனிடம் தனது  கணவனுக்கு சிகிச்சை வேண்டி  வந்த இடத்தில் - டாக்டர் --சீதா உரையாடல்   

டாக்டர்: "என்னை மறந்துட்டியா சீதா"

சீதா : "என் கணவர் உங்களப்பத்தி ரொம்ப உயர்ந்த அபிப்ராயம் வைத்திருக்கிறார்

' [ இப்போது நான் வேறொருவரின் மனைவி , பழைய கதையைகிளறாதே என்று பூடகமாக   பேசும் தோரணை 1962ல் ] ஒரே வரியில் கதை தொடர்கதை ஆகிவிடாமல் தடுத்துவிட்ட, வீரிய வசனம்]

சொன்னது நீ தானா பாடல் படமாக்கப்பட்டிருந்த விதம் இன்றும் புகைப்பட / சினி ஒளிப்பதிவாளர்கள் மத்தியில் ஒரு ஹாட் டாபிக்..

இதே பாடலில் பின்னர் வரும் சரணத்தில் "என் மனதில் உன் மனதைஇணைத்ததும் நீ தானே " என்று பாடப்படும் போது கேமரா எவ்வளவு நேர்த்தியான் கோணத்தில் இருந்து பேசியிருக்கிறது [சுந்தரம் , தலைமை வின்சென்ட்]                                       மேலும் திரையில் அந்தப்பாடல் முற்றுப்பெறும் முன்னர் ."இன்னொரு கைகளிலே யார் யார் நானா என்று கூடப்பாடமுடியால் நாயகி சித்தார் மீது சாய்ந்து விட்டதாக அதோடு பாடலை நிறுத்தியதால் சோகம் உச்சம் எட்டியது ;அதன் தாக்கம் ஆழமானது அதை ஸ்ரீதர் அற்புதமாக காட்சிப் படுத்தியிருந்தார்.

படத்தின் க்ளைமாக்ஸ் என்னும் இறுதி கட்டத்தைப்பாடலில் கொடுக்க அசாத்திய துணிச்சல் வேண்டும். அதையும் அற்புதமாக சோகத்தின் ரசமாகப்பிழிந்து, முழுப்பாடல் முடிந்த பின்னரும் திரை அரங்கில் சோகவடிவாய் நின்ற ரசிகர்கள் இன்றும் என் மனத்திரையில். இவ்விரண்டு பாடல்களையும்   கூர்ந்து பின்பற்றுங்கள் எனது புரிதல் விளங்கும் 

https://www.google.com/search?q=sonnadhu+nee+thaanaa+video+song+download&newwindow=1&sca_esv=578056430&sxsrf=AM9HkKkZUTKZO7O_fUzLm2F7ZdL8Gg6TTw  sonnadhu nee thaanaa

https://www.google.com/search?q=oruvar+vaazhum+aalayam+1962+++video+song+download&newwindow=1&sca_esv=578056430&sxsrf=AM9HkKlz8wkBQsEGKlLIDiF- oruvar vaazhum aalayam

இவ்வாறு பல சிறப்புகளை செயல் படுத்திய முன்னோடி ஸ்ரீதர்.

மேலும் தொடர்வோம் 

நன்றி அன்பன் ராமன்

 

2 comments:

  1. சொன்னது நீதானா பாடலினபோது
    வினசெனட கேமராவைமேலேயிருந்து
    கட்டிலுக்கு கீழேகொண்டுவருவதை என்னால இன்றும மறக்கமுடியாது

    ReplyDelete
  2. Dr வெ ங்கட் ராமனின் கருத்துக்கு மேலும் தகவலாக, அந்தக்காட்சியில் குறைந்தது 3 கேமராக்கள் இயங்கி முழுப்பாடலையும் தொடர்ந்து படமாக்கப்பட்டு பின்னர் நல்ல view தொகுக்கப்பட்டு திரைக்கு வந்தது என்று ஒரூ தகவல். கட்டில் காட்சியை படமாக்கியது ஒரே காமெரா இடப்பெயர்ச்சி செய்து மௌனப்புரட்சி காட்சியில்.. பாடலை நிறுத்தி நிறுத்தி காமெரா கோணங்களை மாற்றினால் சோகம் முழுமை யாக . வெளிப்படுத்தி நடிக்க முயன்றால் நடிப்பவருக்கு அழற்சி உண்டாகும் என்பதால் 3 வெவ்வேறு காமெராக்கள் மொத்தப்பாடலையும் பதிவிட்டதாக வும், அதனால் கோணங்கள் மாறினாலும் பாவங்கள் குறையாமல் தொகுக்கப்பட்டதாக P N சுந்தரம் [ஒளிப்பதி வாளர் ] ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். உழைப்பின்மகிமை க்கு வேறெதுவும் ஈடாகுமா ?

    ReplyDelete

OLD MOVIE SONGS-11

  OLD  MOVIE SONGS-11 INNOVATIVE SUBSTITUTIONS புது வகை முயற்சிகள் [கருவி இன்றி ஒலித்த மாற்று பொருட்கள் ] அது என்ன புது வகை ம...