Friday, November 3, 2023

THE HOME

 THE HOME

இல்லம், இன்முகம், இன்பம் , இணக்கம்

நீ என்ன கவிதை எழுதுகிறாயா என்று அங்கலாய்க்க வேண்டாம்.  இந்த தலைப்பில் உள்ள பின்பகுதி சொற்கள் மூன்றும் முறையாக அமைய . முதல் சொல் உருவமும் ஆழமும் பெரும் . பின்னவை மூன்றும் தரும் சுவைதான் இல்லம். ஆங்கிலத்தில் house மற்றும் home என்று 2 சொற்கள் உள்ளன. முன்னது குடியிருப்பு என்றபொருளிலும், பின்னது அன்பும் அரவணைப்பும் தரும் home என்றழைக்கப்படுகிறது. பள்ளிகளில் அன்றாடம் வகுப்புகள் முடிந்ததும் ஆசிரியர்/ ஆசிரியை GO HOME என்பர் . GO TO  HOUSE .  என்று சொல்ல மாட்டார்கள். உறவுகளும் அரவணைப்பும் HOME எனும் அமைப்பையும், குடியிருக்கும் கட்டிடம் HOUSE எனும் அமைப்பையும் உணர்த்துகின்றன, அதனால் தான் OLD AGE HOME என்று பெயர். யாரும் OLD AGE HOUSE என்பதில்லை. இவ்வளவு ஆழ்ந்த உணர்புபூர்வமான அமைப்பே இல்லம் . அதுவே ஒவ்வொரு மனித மனத்தையும் சீர் படுத்தி , நற்பண்புகளை ஊட்டி , நமது வழிமுறை , நமது பாரம்பரியம் என்ற சிறப்புகளை படிப்படியாக மனதில் விதைத்து குழந்தைகளை முறையாக வளர் பாதையில்செலுத்தும் அப்படி  செலுத்தி வளர்த்த காலத்தில் ஏழ்மை ஒரு பொருட்டாகவே யார் மனத்திலும் வேரூன்றியதே இல்லை.  சொல்லப்போனால் அண்ணனின் உடைகள் தம்பிக்கு, அடுத்த தம்பிக்கு, அக்காவின் பொருட்கள் தங்கைக்கு என்று பாடப்புத்தகம் உள்பட பெருவாரியான பொருட்கள் INHERITED WITHIN THE FAMILY என்ற கோட்பாடுகளைப் பின்பற்றி முன்னேறிய சமுதாயங்கள் தமிழ்நாட்டில் எண்ணற்றவை. முன்னேற்றத்தை எண்ணி,  துயர்களையம், இடர்ப்பாடுகளையும் தாங்கிக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்த சிறார்கள் இன்று குடும்ப மற்றும் அலுவலக தலைவர்கள். அவர்களில் பலர் மதிய உணவாக உட்கொண்டது தயிர் சோறு என்ற உருமாறிய பழைய சாதம் + ஊறுகாய், அதுவே மாவடு எனில்," காக்காய் கடி" கடித்து அந்த மாவடுவை பங்குபோட்டு குதூகலித்த குழந்தைகள் என்றாவது முகம் சுளித்ததுண்டா? மாட்டார்கள் .அவர்களுக்கு தெரியும், சோற்றைப்பற்றிப்பேசினால், உன் மார்க் எவ்வளவு என்பதில் தொடங்கி பல வித லட்சார்ச்சனைகள் தம் மீது பாயும் என்று. எதையும் ஏற்றுக்கொண்டு வாழ கற்றுக்கொண்ட சிறார் அவர்கள். அதற்காக அவர்கள் சரியாகப்படிக்கவில்லை என்று தயவு செய்து யாரும் கற்பனை கொள்ள வேண்டாம். மார்க் என்பது தங்கம் போல் நிறுவை செய்து வழங்கப்பட்டு வந்த காலம்;அவ்வளவு கட்டுப்பாடு. 1980 களுக்கு முன் தமிழக வரலாற்றில் 100/100  என்று ஆகச்சிறந்த மாணவர்கள் எவரும் எந்தப்பாடத்திலும் வாங்கியதில்லை. அவ்வளவு இறுக்கமான மதிப்பீட்டு முறைகள். 60-65% என்றால் BRILLIANT என்று கல்லூரிகள் இருகரம் கூப்பி ஏற்றுக்கொண்ட காலம். சுருங்கச்சொன்னால் எதையும் அளவோடு வழங்கிய காலம். உடையோ, உணவோ, மதிப்பெண்களோ, வசதிகளோ எதையும் நினைத்தமாத்திரத்தில் பெற்றுவிட முடியாது. போராடித்தான் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இயலும். முயற்சி தோற்றதும் மூலையில் முடங்காமல்,      டடா டைன்   என்று கத்திக்கொண்டு விளையாடபோய்விடும் அன்றைய குழந்தைகள். ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வி, போராட்டம், இலக்கு அடைதல் என்று போராடி வளர்ந்தவர்கள் "ஒரு நாளும் துவண்டு மனமுடைந்து "மாடியில் இருந்து விழுந்ததில்லை. மேலும் உயரங்களை அடைந்தார்களே அன்றி துவண்டு கீழே வீழ்ந்ததில்லை. இதை நாம் ஆழ்ந்து உணர வேண்டும் .  இப்போது நினைத்தால் அவர்களல்லவோ பெருவாழ்வு வாழ்ந்தவர்கள் என்று கொண்டாடத்தோன்றுகிறது. எவ்வளவு தலைகீழ் மாற்றங்கள் நமது வாழ்நாளிலேயே?

இது ஏன் ? சில தவறான அணுகுமுறைகள் வீ டகளில் நுழைந்து விட்டதைக்குறிப்பிடலாம் .1. ஒப்பீடு எனும் comparison ; அவன் ஸ்கூட்டர் வாங்கி விட்டான் , பிளாட் வாங்கி விட்டான், வசதியான பெண்ணை மணந்துள்ளான் ; எனவே நானும் அப்படியே செய்வேன் என்ற நிலைப்பாடு. தன் வீட்டில் வசதி குறைவு , தங்கையை நல்ல குடும்பத்தில் மணமுடிக்க சகோதரர்கள் வாழ்ந்த நிலை மாறி, நான் வேலைக்குப்போய் விட்டேன் , இனி என்மணம் என்று சிந்திக்க பெற்றோர் , தம்பி தங்கை அவர்களை விட்டு விலகி நானே ராஜா என்ற நிலைப்பாடு[ சுய நலம்] அதிகரித்து வருகிறது. குழந்தைகளை வழி நடத்த முதியோர் இல்லை வீட்டில். எனவே குழந்தையை வாக்கிற்கும் பயிற்சி/ அனுபவம் இல்லாத பெற்றோர் கேட்டதை வாங்கி தந்து மகிழ்ச்சி கொள்கின்றனர்.ஆனால் பிடிவாத குணம் குழந்தைகளிடம் தழைத்தோங்குகிறது. சிறிய ஏமாற்றங்களைக்கூட தாங்கிக்கொள்ளும் பக்குவம் அறவே இல்லை. எனவே மிக எளிதில் தோல்வி மனப்பான்மை வேரூன்றுகிறது. எனவே போராடும் பண்பு குறைந்து "நான் வாழத்தகுதி அற்ற நபர்' என்று விரக்தியின் எல்லையை எளிதில் தொடுவதுடன், உயிரை மாய்த்துக்கொள்ளும் பலவீன மன நிலையில் உழல்கின்றனர் குழந்தைகள். சில பெற்றோர் வைக்கும் வாதம் வினோதமானது ."எனக்கு கிடைக்க வில்லை ;எனவே அவற்றை என் குழந்தைகளுக்கு எப்படியாவது வாங்கித்தருவேன் என்ற பாசப்பொழிவு - போராட்ட குணத்தை வேரோடு சாய்த்துவிடுகிறது என்பதை உணர்வோம். பாசமும் பரிவும் மனங்களை உரமேற்றுவதில்லை. மாறாக யாராவது ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிறர் கையை எதிர்பார்க்கவும் , இல்லையேல் உயிர் துறக்கும் அவலத்தை மனங்களில் விதைத்து, இறப்பின் விளைவு பலகாலத்திற்கு உற்றார் உறவினரை புரட்டிப்போடும் என்பதை அறியாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கோலம் கொள்வது என்ன மாதிரியான வளர்ச்சி ? அதனால் பலன் என்ன என்று ஆராயாமல் எதையாவது செய்துவிடுபவர்கள் படிப்பின் பலனை உணராதவர்கள். இவர்கள் வாழ்க்கையின் சூழலை எதிர் கொல்லக்கொள்ள தகுதியான தெளிந்த மனம் இல்லாமல் பொறுப்பின்றி நடந்து கொள்பவர்கள். எனவே குழந்தைகளின் வளர் நிலைகளில் தோல்வி என்பது மேலும் முயல வைக்கும் ஒரு மருந்து போன்றது என்பதை மனதில் விதைக்க, அதுவே பின்னாளில் போராடும் குணத்தை வேரூன்றச்செய்யும் 

போராடும் குணம் ஒருவரை செம்மைப்படுத்தி மேன்மையுறச்செய்யும். அனைத்திலும் வெற்றி என்று வாழ்பவர் பின்னாளில் முக்கிய இடத்தில் தோல்வி கண்டு நொறுங்கிப்போவார். எனவே ஆரம்ப சூழல்களில் தோல்வியை எதிர்கொண்டால் படிப்படியாக தன்னை கட்டமைத்துக்கொள்ள உதவும் . ஆசிரியர் கடிந்துகொண்டால் அவரை குற்றவாளியாக்க ப்பார்க்காதீர்கள். அது போன்ற நிலைப்பாடுகள் குழந்தைகளை பிடிவாத குணம் கொண்டவர்களாக வடிவமைக்கிறது. சிந்தியுங்கள்

நன்றி . அன்பன் ராமன்

 

1 comment:

  1. Go home என்று வாத்தியார் சொன்னால் நாம் அடைந்த இன்பம் நிகரற்றது.
    பழைய சோற்றுக்கு எறிச்ச கீரை தொட்டுச்சாப்பிட்டால் அடையும் இன்பமும் அலாதிதான்

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...