Sunday, November 26, 2023

GRAND BIOLOGICAL ACTIVITY

 GRAND BIOLOGICAL ACTIVITY

உயிரினங்களின் பேரியக்கம்

ஐயோ இன்று திங்கள் கிழமை போலும் அதிகாலையில் கத்தியை சொருகுகிறானே என்று யாரும் பதைபதைக்க வேண்டாம். உலகமே கம்பியூட்டரிலும் , கணிதத்திலும் அதன் நீட்சியான எஞ்சினீரிங் அறிவிலும் தான் இயங்குகிறது என்று நம்புவோரே , பிறிதோர் உலகம் ஆரவாரமோ , விளம்பரமோ இல்லாமல் பல கோடி ரூபாய் பெறுமானசெயல்களை எவரும் அறியாமல் [அதென்ன எவரும் அறியாமல் ? என்று சிலர் விழிப்பது தெரிகிறது] ஆம் உங்களுக்கும் எனக்கும் கூட நமது உடலில் என்னென்ன செயல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன என்று நாம் உணரும் வகையில் சப்தமோ புகையோ கக்கிக்கொண்டு எந்த உயிரனமாவது இயங்குவதை பார்த்திருக்கிறோமா?

அவ்வளவு ஏன்-- பலகோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி செய்யும், புல் .பூண்டு, செடி, கொடி, மரம் என்றாவது ஒலி அல்லது போராட்டம் என்று அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதை கேள்விப்பட்டதுண்டா. உடனே அதற்கு வாய் இல்லை என்று கிளம்பும் மாந்தரே ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள்

.தாவரங்களுக்கும் பல விலங்குகளுக்கும் வாய் [பேச்சுத்திறன்] இல்லை ஆனால் நமக்கு வாய் மட்டும் தான் இருக்கிறது [ருசிக்க புசிக்க மற்றும் எதையும் பழிக்க]. ஒரு 5 பைசா மதிப்பிற்கு உலகநலன் பேணும், ஆக்சிஜென் /ப்ரோடீன்/ கொழுப்புப்பொருள்/ எண்ணை ஏதாவது ஒன்றையேனும் ஒரே ஒரு நாள் நம்மால் [மனிதர்களால்] உருவாக்கித் தர இயலுமா? ஏதாவது உணவில் தாவர பொருள் இன்றி நாம் தயாரிக்கவோ உண்ணவோ வழி உண்டா? நான் அசைவ உணவு மட்டுமே உண்பேன் என்று அகமகிழும்   அன்பர்களே அதற்கு வேண்டிய புளி, காரம், எண்ணை, மசாலா அனைத்தும் தாவரப்பொருட்களே.

ஆகவே, நம்மை சுற்றியும் நமது உடலின் இயக்கங்கங்களும் குறித்த, குறைந்த பட்சம் அடிப்படை உண்மைகளையாவது அறிதல் அவசியம் . இவற்றின் தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துவதுடன், நாம் மிகச்சிரிய படைப்பு என்றுணரச்செய்யும். இயற்கை என்றழைத்தாலும், இறைவன் என்று கருதினாலும் இயற்கை ஒரு மாபெரும் ஆளுமைகொண்ட வியத்தகு கட்டமைப்பு என உணருவோம்..

எனெர்ஜி/ சக்தி / ஆற்றல்

மாபெரும் ஆளுமை என்று ஏன் பேசுகிறோம் எனில் உலகின் ஒட்டுமொத்த இயக்கங்களும் எனெர்ஜி என்ற ஒற்றை விசையினால் இயங்கி நாம் அறிந்த அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைக்கிறது; இதை உணர்ந்தால், விஞ்ஞானம் வேறு, இயல்பான செயல்பாடுகள் வேறு என்று பேச முடியாது , விஞ்ஞான கோட்பாடுகள் அனைத்தையும் இம்மிபிசகாமல் செயல் படுத்துபவை உயிரினங்களே என்று செம்மையாக நிரூபணம் ஆகும் . வெப்ப இயக்கம் என்னும் [THERMODYNAMICS] தெர்மோடைனமிக்ஸ் சற்றும் தளர்வின்றி உயிரனங்கள் இடையே செயல் படுவதைக்காணலாம்.

வெப்ப இயக்கத்தின் அடிப்படை இரண்டு கோட்பாடுகளாக அறியப்படுகின்றது

1 ஆற்றல் [எனர்ஜி] என்று அறியப்படும் எனெர்ஜியை ஆக்கவோ அழிக்கவோ இயலாது [ENERGY CAN NEVER BE CREATED NOR DESTROYED]

2 எனெர்ஜியை உருமாற்றலாம் [TRANSFORMATION செய்ய முடியும்] பகிரலாம்

ENERGY TRANSFER IS ALWAYS ACCOMPANIED BY ‘HEAT LOSS’ or DISSIPATION

எந்த[ ENERGY TRANSFORMATION/ DISTRIBUTION] என்ற  ஆற்றல் பகிர்வும் 100 க்கு 100 என்ற  அளவில்  பரிமாற்றம் செய்ய இயலாது ,  பகிர்வின் போது ஆற்றலின் ஒரு பகுதி வெப்பம் எனும் வடிவில் வெளியேறும் அதாவது பயன்படாமல் DISSIPATION எனும் சிதைவு நிலையில் வெளியேறும். 100க்கு 100 பரிமாற்றம் நிகழாது என்பதே வெப்ப இயக்க விதி, இதனை உயிரினங்கள் செவ்வனே நிறைவேற்றுவதை ECOLOGY என்னும் சுற்றுச்சூழல் அடிப்படையில் மற்றும் PHYSIOLOGY என்னும் செயலியில் அடிப்படையிலும் நிகழ்வதை அறிந்து கொள்வோம்   

இந்த அடிப்படை இயற்கை விதிகளை செவ்வனே மனதில் இருத்துங்கள். பின்னாளில் வரும் அறிவியல் விளக்கங்கள், உங்களுக்கு நீங்களே   ஆணித்தரமாக விளங்கிக்கொள்ள மற்றும் பிறர்க்கு [உங்கள் குழந்தைகளுக்கு] விளக்கிட வெகுவாக பயன் படும்

தொடரும்

அன்பன் ராமன்

2 comments:

  1. Inner ecology is physiology and outer physiology is ecology
    Prof.Seshaiya

    ReplyDelete
  2. True but, inner ecology is Anatomy -related Physiology -a 3 in one KINETIC Labyrinth

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...