Monday, November 27, 2023

GUNTUR VIJAYAM -2

 GUNTUR VIJAYAM -2

குண்டூ ர் விஜயம் -2

குறித்த நாளில் [ஒரு சனிக்கிழமை காலை] 7.20 குண்டூர் ரயில் நிலையத்திலே எக்ஸ்பிரெஸ் வந்து நிற்க, இறங்கிய பெரும் கூட்டத்தில  ஒரு 7, 8 பேர் இறங்கி வெளியே செல்லாமல் பிளாட்பாரத்தில் ராஜநடைபோட்டு என்கொய்ரி பகுதியில் 5, 6 போக இருவர் மட்டும் upper class VIP LOUNGE நோக்கி உள்ளே போக சுப்பிரமணி -ரண்டி ரண்டி என வரவேற்க , தம்பி என்று துவக்கினார் மீசை மாடசாமி, "சார் நீங்க மெட்றாசா" ?- என்று பெயர் கேட்டு தெரிந்து கொண்டான் சுப்பிரமணி.

ஓஹ் இந்த கூட்டத்துக்கு வந்திருக்கீங்களா என்று பெட்டியை வாங்கிக்கொண்டான் . வாங்க என்று பின்புறம் அமைந்த பெரிய பளபள கட்டிடத்தில் மாடிக்கு அழைத்து சென்றான். மிகச்சசிறந்த, இருவர் தங்கும் அறையில் இவர்களை தங்கவைத்து விட்டான் லெட்ஜ ரில பெயர் விலாசம் போன் நம்பர் எழுதினர் மாடசாமி, ராமசாமி -திருச்சி என்று.                             யாராவது  ஏதாவது கேட்டால் P K சார் தான் இங்கே இடம் கொடுத்தார் என்று சொல்லுங்க என்று கை  கூப்பினான் . .[ஆஹ் இதோ வாயெல்லாம் பல்லாக smile contest போல் நமது அன்பர்கள்];    

P K சார் ? என்றார் ராமசாமி [பஞ்சாபகேசன் சார் -அவர் தான் ஆர்கனைஸர் - மாடசாமி வருவாரு நல்ல இடம் குடுத்து நல்லபாத்துக்குங்க னு எனக்கும் அவரே செக்ஷன் கஸ்தூரி ரெங்கனுக்கும் கறாரா சொல்லிருக்கிறார்] இதோ ஒரு நிமிஷம் என்று ஓடி பெரிய பிளாஸ்கில் அற்புதமான FILTER COFFEE கொண்டுவந்து இரு தம்ளர்களில் தந்தான்.

ரெ எங்கே? அவர், டிபன் வாங்க மெஸ்ஸுக்கு போய்யிருக்கார். தினமும் நான் தான் போவேன். இந்த மீட்டிங்குக்கு GUEST எல்லாம் வரும்போது நான் வெளியே போகமுடியாது அதுனால அவரே போயிருக்கார் இப்ப வந்துருவர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே 'BUN' பிடித்த கன்னங்களுடன் க ரெ வந்து மா சா, ரா சா இருவரையும் சாஷ்டாங்க மாக விழுந்து வணங்க சுப்பிரமணி பெரும் ஆச்சரியமும் ஆவலும் மேலிட பார்த்துக்கொண்டிருந்தான்

எழுந்து கை கூப்பி நின்றவனை, தம்பி நல்லா இருக்கீங்களா ? . வேலை எல்லாம் நல்லா தெரிஞ்சுக்கிட்டீங்களா என்று மாடசாமி விசாரித்தார். ராமசாமி வாயே திறக்கவில்லை. கஸ்தூரிரெங்கனுக்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் எளிதாக உணர்ந்தான், இந்த அம்மா தராதரம் இல்லாம பேசி முக்கியமான ராமசாமி சார் இனிமேல் உன் விஷயத்தில் தலையிடுவதில்லை என்று அன்று சொன்னதை முற்றாக கடை பிடிக்கிறார்.

சரி, என்று க ரெ யே பேச்சை துவங்கினான். ஊர்ல எல்லாரும் சௌக்கியமா என்றான் [ராமசாமிக்கு கருடா சௌக்கியமா என்பது போல் இருந்தது]. இப்போது அவர் [ரா சா] கேட்டார் , தீபாவளிக்கு ஊருக்கு வந்தியா அம்மா இங்க இருக்காளா இல்ல அங்க இருக்காளா என்று லாவகமாக கொக்கியைப்போட்டார். ஊருக்கு மட்டும் இல்ல, எங்கையுமே போகல சார் என்றான். ராமசாமி அனல் கக்கினார்: சும்மா புளுகாத நீ மெட்றாஸ் போனது .வேகாத வெய்யில்ல தெருத்தெருவா சுத்தினது, குணசீலம் கேஸ் மாதிரி விஜி விஜினு ஏலம் போட்டு சோறு தண்ணி இல்லாம அலைஞ்சது எல்லாம் தெரியும்; சும்மா ரீல் விடாத. விஜியோ சுஜியோ, சொஜ்ஜியோ அதெல்லாம் உன் சொந்த விவகாரம்,

நீ யாரை வேணும்னாலும்தொரத்து, இல்ல அத்தனை பேரையும் தொரத்து ஆனா எந்த ஊருக்கும் போகல்லேனு எங்கிட்டயே டகல் பாச்சாவிடப் பாத்தியே   அதுனால நான் பேசினேனே ஒழிய எனக்கு இதுல சம்பந்தம் கிடையாது என்று கராறாகப்பேசிவிட்டார். [சும்மாவா கழுகு னு பேர்வாங்கிருக்காரு ஐயோ என்று அதிர்ந்தான் கஸ்தூரி ரெங்கன்] மாடசாமியிடம் கௌரியைப்பற்றி விசாரிக்கலாமா என்று எண்ணியதும் பயம் தொற்றிக்கொண்டது எங்கே ராமசாமி சார் நீ என்ன ஆட்டக்கடிச்சு மாட்டைக்கடிச்சு இப்ப என்று குதறிவிடுவார் என்று நடு நடுங்கி  மௌனமானான்].

அம்மா எங்க இருக்கிறார்? என்ற கேள்விக்கு, பதில் சொல்லாம சமாளிக்கிறான் பார் என்று கடுப்பானார் ராமசாமி. பெரிய ப்ளேட்டில் இட்லி, வடை, தோசை அனைத்தையும், கொண்டு வந்தான் சுப்பிரமணி.  நன்றாக சாப்பிட்டனர்.

போன் நம்பரை தந்து ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க சார் நான் அட்டென்ட் பண்றேன் என்று சாமிகளிடம் சொல்லி விட்டு பாத்திரங்களை தூக்கிக்கொண்டு சுப்பிரமணி கிளம்ப, தம்பி, பஞ்சாபகேசன் சாரைப்பாக்கணும் எப்ப வருவார் என்று மாடசாமி கேட்க, சார் நானே இதோ வந்துட்டேன் என்று குரல் -சாட்சாத் பஞ்சாபகேசன் அவர்களே வந்துகொண்டிருந்தார். மாடசாமி மிகுந்த பவ்யமாக கை கூப்பி நிற்க ப. கே விரைந்து வந்து மிகுந்த வாஞ்சையுடன் மாசாவின் கை குலுக்கி விட்டு, ராமசாமிக்கு வணக்கம் சொன்னார். பையன் -ஒழுங்கா கவனிக்கிறானா என சுப்பிரமணி பற்றி கேட்க இருவரும் நல்ல பையன் பொறுப்பாக வேலை செய்கிறான் என்றனர். சேலத்துக்காரன் 14வருஷத்துக்கு

முன்ன நான் தான் இங்க கொண்டுவந்து, இப்ப இங்க இருக்கான். உங்க பையனும் நல்ல கெட்டிக்காரன் என்றார் ப கே               ஆமாமாம் ரொம்ப கெட்டிக்காரன்-- என்றார் ராமசாமி. [அவன் வேலையை, என்கிட்டயே காட்டுகிறானே என்று உள்ளூர குமைந்தார்]. ஏனெனில், இந்தக் க ரெ, வேலைக்கு சேர்ந்த பின் ராமசாமியுடன் போனில் கூட பேசுவதில்லை.

உதவி செய்துவிட்டு உதை வாங்குபவன் வலி தாங்கொணா வலியாக இருக்கும்.

சோற்றுக்கே திண்டாடிக்கொண்டிருந்தவனிடம் ராமசாமி கொண்ட அக்கறை என்ன, எப்படி எல்லாம் உதவினார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். என்னவோ தெரியவில்லை இது போன்ற உதவி பெற்றவர்கள் ஏணியை எட்டி உதைக்கவே தீவிரமாக பயிற்சி பெற்றுள்ளனரோ என்று தோன்றுகிறது. ராமசாமி வேறு எவரிடமும் இப்படி அவமானப்பட்டதில்லை; முதலில் 2400/- ரூபாய் அம்மா, இப்போது தனயன் பங்கு போலும்.. அதிலும் அவன் சென்னைக்குப்போய்விட்டு, யாருக்கு என்ன தெரியப்போகிறது என்று எண்ணிக்கொண்டு, ராமசாமியிடமே "நான் எங்கும் போக வில்லை என்று மூடி மறைத்துப்பேசியது, மற்றும், அம்மா எந்தஊரில் இருக்கிறார் என்ற கேள்வியை உதாசீனம் செய்தது என்று ராமசாமியை எரிமலை ஆக்கியது.  நமது கதையின் இந்த இடம் உளவியல் ஆய்வுக்கு ஏற்ற களம் .

தொடரும் 

அன்பன்  ராமன்

1 comment:

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...