Sunday, November 19, 2023

GREEN HOUSE GASES- OZONE HOLES

 GREEN HOUSE GASES- OZONE HOLES  

ஓசோன் 'ஓட்டைகள்'

STRATOSPHERE பகுதியில் அமைந்துள்ள ஒசோன் படலம்,  சூரியனில் இருந்து பூமிநோக்கி  short wave நிலையில் வரும் புற ஊதா கதிர்களை, தன்னைக்கடக்க விடாமல் தடுத்து பூமி வாழ் உயிரினங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் இயற்கை கேடயம். புற ஊதாக்கதிர்கள் பூமி மீது படிய நேர்ந்தால்  அன்றாடம் பு. கதிர்கள் உயிரினங்களின் உடலில் மெல்ல ஊடுருவி தோல் பகுதியில் இருக்கும் DNA கூறுகளை சிதைத்து தோல் கான்ஸர் தோன்ற வகை செய்யும். ஆகவே STRATOSPHERE பகுதி சீர்குலையாமல் இருப்பது தான் பூமி வாழ் ஜீவன்களுக்கு பாதுகாப்பு. எனவே ஓசோன் படலம் [குறிப்பாக STRATOSPHERE பகுதியில்] முழுமையாக இல்லாமல் ஆங்காங்கே நலிவுற்று ப்போய்  இருப்பதால் அவற்றை ஓசோன் ஓட்டைகள் என்கின்றனர். உண்மையில் அவை ஓட்டைகள் அல்ல, நலிந்த பகுதிகள்.

ஓசோன் என்பது ஒருவகை வாயு 3 ஆக்சிஜென் மூலங்களால் ஆனது ; அதாவது 2 'O' மூலங்கள் இருப்பின் அந்தவாயு ஆக்சிஜென் ; 3 'O 'மூலங்கள் இணைந்தால் அது ஓசோன்   வாயு

அதாவது ஓசோன் படலத்தில் ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பில் 300 டாப்ஸன் [Dobsun unt] அலகுகள் இருந்தால் அது இயல்பான அமைப்பு        3 மில்லிமீட்டர் கனம் உடையது. . அதுவே 220 டாப்ஸன் அலகுகளை விட குறைந்தால் அதுதான் ஓசோன் ஓட்டை எனப்படும் நலிவடைந்த பகுதி [சுமார் 2மில்லி மீட்டர் அளவிற்கு] குறைந்த கனம் கொண்டது.                                ஒரு சில ஓசோன் ஓட்டைகள் வெறும் 1 மில்லிமீட்டர் கனம் இருப்பதாக கணக்கிட்டுள்ளனர் [அந்த அளவிற்கு ஓசோன் மூலங்கள் தகர்க்கப்பட்டுள்ளன]

இது எப்படி நிகழ்சிறது?

FREONS என்ற பொது பெயரை சிலர் அறிந்திருக்கக்கூடும். FREONS என்பன குறிப்பிட்ட அமைப்புகளை குளிர்விக்க பயன்படும் [எனவே பயன்படுத்தப்பட்ட]  CFC [க்ளோரோப்ளூரோகார்பன் ] மற்றும் CFM [க்ளோரோபிளூரோமீத்தேன்]  -வாயுக்கள். வீடுகளில் பிரிட்ஜ், AC அறைகளில் உள்ள கருவி களில் நிரப்பப்பட்ட்டு வந்தவை, இவை அவ்வப்போது வெளியேறி மேல்நோக்கிப்பயணித்து STRATOSPHERE  பகுதியை  அடைந்து விடுகின்றன. அனால் இந்த பயணித்திற்கு சுமார் 30 ஆண்டு காலம் தேவைப்படும் என்று கணக்கிட்டுள்ளனர் . FREONS என்ற பொது பெயரை சிலர் அறிந்திருக்கக்கூடும். FREONS என்பன குறிப்பிட்ட அமைப்புகளை குளிர்விக்க பயன்படும் [எனவே பயன்படுத்தப்பட்ட ] CFC [க்ளோரோப்ளூரோகார்பன்] மற்றும் CFM க்ளோரோபிளூரோமீத்தேன்  -வாயுக்கள் வீடுகளில் பிரிட்ஜ், AC அறைகளில் உள்ள கருவி களில் நிரப்பப்பட்ட்டு வந்தவை, இவை அவ்வப்போது வெளியேறி மேல்நோக்கிப்பயணித்து STRATOSPHERE  பகுதியை  அடைந்து விடுகின்றன. ஆனால் இந்த பயணித்திற்கு சுமார் 30 ஆண்டு காலம் தேவைப்படும் என்று கணக்கிட்டுள்ளனர். இப்படி பயணித்தபின் 110 ஆண்டு காலம் மேலிருந்து ஓசோன் படலத்தை அழிக்கிறது என்று 1970களில் உணரப்பட்டது. ஓசோன் ஓட்டைகளை உலகறியச்செய்தவர்கள் British Antarctic Survey யை சேர்ந்த Joseph Ferman, Brian Gardiner, Jonathan Shanklin   ஆகியோரே.

இந்த ஓசோன் அழிவு என்ற அவலத்தை தோற்றுவித்த ஐரோப்பிய / அமெரிக்க பெரிய அண்ணன்கள் வளர்ந்துவரும் நாடுகள் மீது பழியைப்போட்டு தப்பிக்கப்பார்த்தன, சொல்லப்போனால் அன்றைய இந்தியாவில் AC,பிரிட்ஜ் பயன்பாடுகள் மிகமிகக்குறைவு, நமது வீடுகளில் டெலிபோன், ஏன் பலவற்றில் மின் விசிறி கூட கிடையாது. கை விசிறி   பயன் படுத்தியவன் பைத்தியக்காரன் என்று எண்ணி வளர்ந்து கொண்டிருந்த தெற்காசிய பகுதிகளை -உங்கள் உபகரணங்களைக்குறையுங்கள் என்று ஐரோப்பிய/ அமெரிக்க பெரிய அண்ணன்கள் .ஆரம்பிக்க, தெற்காசியா பொங்கி எழுந்து போங்கடா என்று சொல்லாத குறையாக பாய்ந்து குதறிவிட்டதுடன், உங்கள் பிரிட்ஜ் AC இவற்றை இங்கே விற்பனை செய்யாதீர் என்று அடிமடியில் கை வைத்ததும் பெரிய அண்ணன்கள் மிரண்டனர். இந்த காலகட்டத்தில் [1974] கலிபோர்னிய பல்கலை பேராசிரியர்கள்-ரௌலண்ட் மற்றும் மோலினா [PHYSICAL CHEMISTS] இருவரும் ஓசோன் ஓட்டைகளைக்குறித்து கட்டுரைகள் வெளியிட்டனர் அவற்றில் ப்ரீயான் வாயுக்கள் ஏற்படுத்தும் ஓசோன் பாதிப்பு குறித்து-- க்ளோரின் மூலக்கூறுதான் ஓசோனை குலைக்கிறது என்பதை அழகாக விளக்கியிருந்தனர் 

இந்த அபாயத்திலிருந்து உலகை மீட்டெடுக்க சுற்றுச்சூழல் கருத்தரங்குகள் ஏராளமாக நடந்தன. சர்வதேச முயற்சியாக Montreal ஒப்பந்தம் 1987 இல் நிறைவேறி அதன் படி ஆண்டு 2000 த்திற்குள் ப்ரீயான் பயன்பாடு அன்றைய நிலையில் இருந்து 50% க்கு கீழ் குறைத்துக்கொள்வதெனவும் உடனடியாக மாற்று [ஓசோன் படலத்தை பாதிக்காத] வழிகளை கண்டு பயன்படுத்துவதெனவும் உலக நாடுகள் ஏற்றுக்கொண்டன. க்ளோரின் மூலக்கூறுதான் ஓசோனை குலைக்கிறது என்பதால் க்ளோரின் அற்ற HFC [ஹைட்ரோப் ப்ளூ ரோ கார்பன்] / Fluoro-N -alkyl sulphonamide  வகை பொருட்கள் [1990] உபயோகித்து ஓரளவு மனிதகுலம்  பாதுகாப்பை நோக்கி 

நகர்ந்துள்ளது என்றுணரலாம். எனினும், ஊழ்வினை [NEMESIS, ப்ராரத்வம்] இன்னும் துரத்திக்கொண்டுதான் இருக்கிறது. ப்ரீயான் வாயுக்கள் 110 வயது வரை ஆயுள் கொண்டவை அல்லவா?

பச்மாஸ்வரன் கதை நமது கதையே தான்.

ஆக , GLOBAL WARMING என்ற புவி வெப்பமடைதல்  குறித்த உண்மைகள் கொடூரமானவை. வேறென்ன சொல்ல? 

இத்தொடர் நிறைவு பெற்றது.

தொடர்ந்து படித்து வந்த, உங்கள் மனம் நிறைவு அடைந்ததா என்பதை தாங்களும் இறைவனும் மட்டுமே அறிவீர்.

 

நன்றி                       அன்பன்     ராமன்   

2 comments:

  1. நம்நாட்டின் தலை நகரம் டில்லி இன்று எவ்வளவு மாசு அடைந்திருக்கிறது என்னு நமது செய்தித்தாள்கள் மூலம் அறிகிறோம் .
    இதற்குக்காரணிகளை அகற்றினால் தான்
    டில்லியில் உயிர் வாழ முடியும்

    ReplyDelete
  2. புவி வெப்பமடைதலையும் அதன் தாக்கத்தையும் எங்களைப் போன்றவர்களுக்கு பொறுமையுடன் விளக்கியமைக்கு நன்றி.

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...