Monday, November 20, 2023

GUNTUR VIJAYAM

 GUNTUR VIJAYAM

குண்டூ ர் விஜயம்

யாரடா இவள்? இவளை ஏன் இங்கே அறிமுகம்செய்கிறாய்? என விமர்சனம் செய்ய முற்பட்டால்அவர்கள் அவசரக்குடுக்கைகள்.  அன்றி, 'கந்தன் புத்தி' வகையை சார்ந்தவர் என்று கருதலாம். சரி.  இந்த விஜயம் யார்? மண்டை வெடித்துவிடும் போல் இருக்கிறது என்று 5, 6 பேர்  தலையைப்பிடித்தபடி  கோபம் கொண்டு அமர்ந்துள்ளனர்

இங்கே பாருங்கள் உங்கள் கவலை உங்களுக்கு .இவள் என்னோடு படித்தாளே அவளா அல்லது எதிர்வீட்டில் ரெட்டைப்பின்னல் மண்டையுடன் பலரை கிறங்கடித்து திடீரென்று "அப்பாவுக்கு transfer ஆந்திராவுக்கு என்று சொல்லிவிட்டு [அவள்] பறந்து போனாளே 18 ஆண்டுகள் முன்னர் அவளா என்று நெஞ்சம் படபடக்க திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறீர்களே, ஏனிந்த அவசரம் ?  யார் சொன்னது இந்த விஜயம் அந்த விஜயம் தான் என்றோ, அந்த விஷயம் தான் என்றோ? அமைதி, அமைதி -இயல்பு நிலை வரும் வரை பொறுங்கள். இப்போது மீண்டும் தலைப்பை படியுங்கள்.  

குண்டூ ர் விஜயம்

ஏன்? யாரோ சிலர் திடீரென்று இப்போது குண்டூருக்கு வருகிறார்கள் என்றால் குண்டூர் விஜயம் என்று சொல்லக்கூடாதா?                            ஐயய்யோ இப்போது புஸ் என்று போய் விட்டதே, இது 'விஜயம்' இல்லையாமே -காரியத்தை க்கெடுத்தான் இந்தப் பாவி என்று சபிக்கிறீர்கள். நான் என்ன செய்யட்டும்?  சரி உங்களிடமே கேட்கிறேன், நான் சொல்லும் விஜயமும் நீங்கள் கொண்டாடும் [அதனால் இப்போது திண்டாடும் ] விஜயமும் வேறெனில் அது என் குற்றமா?  இந்தப்பறந்த உலகில் விஜயாவோ /விஜயமோ ஒருவர் தான் உண்டா?. வேறு விஜயம் எனில் ரசனை குறைகிறதே ஏன்? பொறுங்கள், இந்த விஜயம் பல பழைய எண்ணங்களை மீட்டுத்தருமா, தராதா? கண்டிப்பாகத்தரும் என்று நம்புகிறேன்.

என்னடா காலை வேளையில் இப்படிப்படுத்துகிறாய்? ஈட்டிக்காரனை விட மோசம்டா நீ என்று ஒருவர் அங்கலாய்க்கிறார். என்ன மோசம் செய்தேன்? என்று கேட்டால் 'முதலில் விஜயம் என்றாய் பின்னர் அது இல்லை என்கிறாய் ' .சிறுவயது பையன் என்றால் உன் பேச்சு "காய் " என்றுகட்டைவிரலை மேல் வரிசை பல்லுக்குப்பின்னால் வைத்து வெளியே தள்ளி உறவை முறித்திருப்பார் தாற்காலிகமாக. தலை எழுத்து வயதாகி விட்டது , இவை எதையும் வெளியே தெரியும்படி பேசினால் பேராபத்து என்பதை உணர்ந்து ஹனுமான் சாலிசா படிக்கலாமா என்று மனதை அடக்கப்பார்க்கிறார். ஏற்கனவே மனம் ஒரு குரங்கு அதனால் தான் மேற்படி 'பாராயணமோ'?. ஏதுவானால் என்ன 'விஜயம் செய்யும் முன்பே.     "விஜயம்" செய்த  விஷயம் எவ்வளவு அமைதியை குலைக்கிறது -ஒரு  சிலருக்கேனும்.

நிஜமாகவே நீ கொல்லுகிறாய் என்று பெரும் கூட்டம் அனுமன் சீடன் பின்னால் அணிவகுக்கிறது - பயங்கர பஜ்ரங் தள் போல காட்சி அளிக்கிறதே . சரி, அந்த அனுமான் அவர்களுக்கு மட்டும் தானா? எனக்கும் உதவமாட்டாரா? குறைந்த பட்சம் என் பெயரைக்கேட்டபின் "பிழைத்துப்போ" என்று விட்டுவிடுவார் என்று ஒரு அசட்டு தைரியம் தான் 3 நிமிடத்தில் பஜ்ரங் தள் உறுப்பினர்களை கூட்டி விட்டது.

ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டு 'விஜயம்' விஷயத்திற்கு வருவோம்.  

ரயில்வே தென் பகுதி யில் பணியாற்றும் நேர்மை ஊழியர்களுக்கு பாராட்டும் ஊக்கமும் தெரிவிக்கும் முகமாக இரண்டு நாள் ஊழியர் ஊக்குவிப்புக்கூட்டம் குண்டூரில் ஏற்பாடாகி அதன் நிமித்தம் குண்டூருக்கு புதிதாக சிலர் வருவதை குண்டூர் விஜயம் என்று எழுத கிளம்பினேன். ‘விஜயம் என்பது அவ்வளவு லேசுப்பட்ட ஆசாமி இல்லை என்பது நமது வாசகர் வட்டத்தின் மூத்தகுடிகள் எழுப்பிய ஆரவாரத்தில் இருந்து புரிந்து கொண்டேன். விஜயம் குறித்து நான் எழுதாமல் விட்டால் எனது 'கை, கால்களுக்கு ' உத்திரவாதம் இல்லை என்பதும் ஏடாகூடமாக ஏதாவது எழுதினால் கை , கால்களுக்கு, வாதம் ஏற்படுத்தப்பட உத்திரவாதம் உண்டு என்றும்  தோன்றுகிறது. சரி, அவ்வளவு தானே கூடிய விரைவில் 'விஜயம்' பற்றி அழகாக எழுதி விட்டால் போயிற்று அதென்ன பெரிய விஷயமா "சுபத்திரா" நமது ஆக்கம் தானே. கவலை வேண்டாம். பொறுமை அதுவே இப்போதைய தேவை.

தொடரும்

அன்பன் ராமன்

4 comments:

  1. ஓய் குண்டூருக்கு பாமா வராளாம்
    அப்போ பாமா விஜயமா?

    ReplyDelete
  2. இது நமது கழுகார் ராமசாமி சம்பந்தமாக இருப்பது போல் தெரிகிறது. ரயில்வே என்ற சொல்லும், சுபத்திரா என்றா சொல்லும் அந்த சந்தேகத்தை கிளப்புகின்றன.

    என்ன சரிதானா ஃப்ரொபஸர் சார்😆

    ReplyDelete
  3. Awed by the unbridled enthusiasm of our blog readers

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...