Tuesday, November 21, 2023

PROPER LEARNING

 PROPER  LEARNING

முறையான கற்றல்

இத்தொடரில் கல்வியின் பல தேவைகளையும் அவற்றை அடையும் முறைகளையும் அறிந்து வருகிறோம். இப்போது கற்றல் என்ற எல்லையில்லா களத்தில் எவ்வாறு கரை சேர்வது என்ற உத்திகளை கவனிப்போம் .

கற்றல் என்பது 3 இன்றியமையாத அங்கங்கள் உடையது.        அவை 1 புரிதல், 2 நிலையாக நினைவில் கொள்வது                          3 வெளிப்படுத்துவது [தேர்வில் அல்லது ஆசிரியப்பணியில் அல்லது அலுவலக பணிகளில் விடை காணும் முகமாக ] போன்ற தேவைகளை நிறைவு செய்ய. இவற்றில் மூன்றாவது [வெளிப்படுத்துவது] எழுத்திலோ அல்லது வாய் வழி மொழியின் உதவியினாலோ அமைவது. எப்படிப்பார்த்தாலும் நிர் 3 தான் 1 மற்றும் 2 இவற்றின் depth என்னும் பரிமாண அலகுகளை பரிமளிக்கச்செய்வது., எளிதாக சொல்வதெனில் ஒருவரின் கல்வியின் தரம் என்ன என்பதை மதிப்பெண் கொண்டு அறிய முயலுதல் பேதமை.. இதனை மாணவ மாணவியரும் அவர்தம் பெற்றோரும் நன்றாக உணரவேண்டும்; இல்லையேல் பின்னாளில் வேலை தேடியே பாதி ஆயுள் நிறைவடைந்து  விடும்   இவற்றை எவ்வாறு அணுகி வெற்றிபெற முயல வேண்டும் என்பதை பார்ப்போம் .  

1 புரிதல் 

இது சரிவர நிர்வகிக்கப்படாவிடில் 'அறிதல்' இல்லாத வேலையில்லா பட்டதாரி என்ற பட்டியலுக்கு ஆள் சேர்க்கும் 'தேசிய அவல நிலை' நம்மாலும் அதிகரிக்கும். ஒருசில மாணவ மாணவியர் நீங்கலாக பெரும்பாலோர் மனனம் என்ற மனப்பாட உத்தியினால் வளர்ந்து முன்னேற முடியும் என்ற "மாயை" மேலிட இருக்கிறார்கள், இதற்கான அடிப்படை புரிதல் இன்றி -question -answer பயிற்சியும், Text என்ற நிர்ணயிக்கப்பட்ட    பாடப்புத்தகத்தை படிக்காமல் 'நோட்ஸ்' என்ற சுருக்க உரையை  நம்பி  தேர்வுகளை எதிர்கொள்வதும் இரண்டு அடிப்படை தவறுகள் என்பதை அனைவரும் நன்கு உணர வேண்டும். இந்த அணுகுமுறையின் விளைவே புரிதல் இல்லாக்கல்வி மற்றும் வேலையில்லா நிலைகளுக்கு ஆசி வழங்கும் தந்தை.. இன்றளவும் இது குறித்த அனைத்து அறிவுரைகளும் 'செவிடன் காதில் பேசிய whisper என்ற ஒலியில்லா முணுமுணுப்பு நிலையிலேயே தத்தளிக்கின்றன.    புரிதலைப்புரிந்துகொண்டால் ஏனையவை ஒவ்வொன்றாக நம் வசப்படும்.

புரிதல் எங்கே துவங்குகிறது?

எந்த புரிதலுக்கும் அடிப்படை -சொற்களும் அவற்றின் இடம் சார்ந்த பொருளும் [words and their contextual meaning]. நமது, கல்வியில் அஸ்திவாரம் வலுப்பெறுவதும், பொல பொலப்பதும் இந்த ஒற்றை செயல்பாடு ஏற்படுத்தும் வலு அல்லது வலி. எனவே நாம் துவங்கவேண்டிய புள்ளி மொழி சார்ந்த தெளிவுமற்றும் அதை கைக்கொள்ளும் முறை. [ஒரு சிலர் நான் ஒன்றும் ஆங்கிலமோ தமிழோ படித்து புலவனாகப்போவதில்லை என்று ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள்.

[அன்புடையீர் "நான் ஒன்றும் புலவனாகப்போவதில்லை என்று அறிவிக்க வேண்டாம் ; நீர் என்றும் புலவன் ஆக முடியாது என்று இந்த உலகம் சொல்லும்'. எனவே பொருளற்ற வாதம் தவிர்த்து 'தேவை' குறித்த  முயற்சிகளை முன்னெடுப்பதே விவேகம்/ ஆகவே மொழியின் தேவை என்பது பேசி வாழும் மனித குலம் உள்ளளவும் பிரிக்கவொண்ணா வாழ்வாதாரம் ; இதை வேண்டாம் என்று வீர வசனம் பேசி இளமைக்காலத்தில் மொழியை துச்சமாக நினைத்தால் பின்னாளில் கூழைக்கும்பிடு போட்டு பிழைக்க நேரிடும் என்பது யதார்த்தம். ]  

சரி-- மொழி என்பது ஆங்கிலமும் தமிழும் என்று   நினைப்பதே தவறு. நீவிர் எந்தக்கல்வி முறையில் கால் பதித்தாலும்  [எஞ்சினீரிங், மெடிக்கல் சயன்ஸ், அக்ரிகல்சர், ஏனைய சயன்ஸ் வகைகள் , சட்டம், பொருளாதாரம், வணிகம், தணிக்கை [auditing] என எங்கு போனாலும் அவற்றுக்கோர் உலகளாவிய technical language இயங்குகிறது. அந்த மொழியின் ஊடே இணைப்பு சொற்களாக .பிற மொழி சொற்களே இயங்குவதைப்பார்க்கலாம்.

பின் வரும் வாசகங்களை ஆழ்ந்து படியுங்கள் 

The bill may be deemed to have been passed   mutatis mutandis.                                                    This august body can not, by any stretch of imagination-- be a mute witness to this act of fait accompli

இவற்றில் italics சொற்கள் தவி,ர ஏனையவை ஆங்கிலச்சொற்கள் . இவற்றின் சரியான பொருளை புரிந்து கொள்ள, முறையான சொல் புரிதல் இன்றியமையாதது என்பதே எனது நிலைப்பாடு -அப்புறம் உங்கள் பாடு என்று விலகி ஓடுவது எனக்கு எளிதுதான்.

எனவே, முறையான கற்றலுக்கு சரியான புரிதல் என்பது சொல்லும்-பொருளும் என்ற தொடர்பிலிருந்தே துவங்குகிறது. ஓட்டப்பந்தய வீரன் சரியான கோணத்தில் உடலை 'பாலன்ஸ் ' நிலையில் வைத்துக்கொள்ளாமல் ஓடத்துவங்கினால், பாலன்ஸை  மீட்டுக்கொள்ளவே நேரமும் முயற்சியும் செலவிட்டு அதனால் இலக்கு அடைவதில் தாமதம் நிகழ்ந்து 2ம் 3ம் நிலையோடு அடங்கிவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம். ஓட்டப்பந்தயம், சிலம்பம் இவற்றுக்கெல்லாம் பயிற்சி உண்டு ட்யூஷன் கிடையாது.எனவே சொந்தமுயற்சியை ட்யூஷன் வைத்து ஈடேற்றிக்கொள்ள முடியாது . எனவே அருகில் இருந்து மொழிகளைக்கற்றுக்கொடுத்தால், எந்தக்குழந்தையும் மொழி அச்சம் இன்றி முன்னேற்றப்பாதைக்கு எளிதாக செல்லும்.

தொடரும்

அன்பன் ராமன்  

3 comments:

  1. பயாலஜியில் லத்தின் சொற்கள் கண்டு அந்தப்பாடமே வேண்டாம் என்று பயந்து ஓடியவர்கள் ஏராளம்

    ReplyDelete
  2. லத்தின் ,கிரேக்க சொற்கள் போலவே க்ரோனோபயாலஜி யில் ஜெர்மன் சொற்கள் அணிவகுக்கும். மொழி கண்டு அஞ்சினால் எந்த உயர் கல்விக்குள்ளும் கால் பதிக்க முடியாது.

    ReplyDelete
  3. In earlier days the terms like
    Fait Accompli, Mutatis Muntandis , Suo Moto etc. were really "Greek and Latin".
    Now, thanks to our PUBLIC ADMINISTRTORS, those terms are common through social media and judiciary

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...