Wednesday, November 22, 2023

UNSEEN SONGS [ EPISODE 801]

 UNSEEN SONGS    [ EPISODE  801]

காணா கானங்கள்  [EPISODE 801]

அவை GAANAA வகையினை அல்ல மாறாக காணா [] வகைப்பாடல்கள். அவற்றை பாடல் வடிவில் மாத்திரம் அறிவோம் காட்சி வடிவில் அல்ல. இதென்ன கொடுமை என்கிறீர்களா? அவற்றை பெரும் செலவில் உருவாக்கி படமாக்கி பின்னர் அகற்றிவிடுவது என்பது திருமணத்திற்கு 5ம் நாள் விவாகரத்து என்பதற்கு ஒப்பானது/. இருப்பினும் ஏதோ சந்தர்ப்ப சூழல்களின் அழுத்தம் புரட்டும் போது வேண்டாவெறுப்புடன் சில முடிவுகளை படக்குழுவினர் [தயாரிப்பாளர்/இயக்குனர்] எடுக்கின்றனர். எனினும் இந்தவகை 'கைவிடல்கள்' ஒரு பாடலின் வாய்ப்பையே குழிதோண்டி புதைத்து விட்டதா எனில் இல்லை என்று சொல்லலாம்.

 அப்படி சில பாடல்கள் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்டபின் , முறையான ஒப்புதல்களுடன் வேறு படங்களில் இடம் பெற்ற சம்பவங்களும் அன்றைய தமிழ் திரையில் நிகழ்ந்துள்ளன,. இப்போது சில கேள்விகள் எழுவது நியாயமே. உதாரணமாக இந்தப்பாடல் படத்தில் இல்லை என்று எவ்வாறு தெரியும் என்பது படம் பார்த்தவர்களுக்கும் அந்த நாட்களில் ஒவ்வொரு படத்திற்கும் பாட்டுப்புத்தகம் என்று திரை அரங்குகளில் இடைவேளை நேரத்தில் விற்பார்கள். படத்தில் இல்லாத பாடல் பாட்டு புத்தகத்தில் இடம் பெறாது.  ஒரு சிலர் அவற்றை இன்றும் லைப்ரரி /பொக்கிஷம் போல் காத்து வருகின்றனர். இவை இன்றைய தலையுறையினருக்கு அந்நியங்கள். ஆனால் திரைக்கு வந்த பின் வெட்டப்படும் பாடல்கள், பாட்டுப்புத்தகத்தில் முன்பே அச்சிடப்பட்டிருக்கும். இப்படி மோப்ப நாய் போல வேட்டையாடுவது அன்றைய மாணவர்களின் "தேடல்" வகையைச்சார்ந்தது. இவ்வாறு தான் பாடல்கள் உண்டா  இல்லையா அந்தந்த படங்களில், என தெருமுனை விவாதங்கள் சாதாரண நிகழ்வு . வீடுகளில் இவை தடை செய்யப்பட்டவை,  இவற்றைப்பேசினால் தாடை பிய்ந்துவிடும்.

அப்படி மறைந்தும் றவாத சில பாடல்களை சிறு குறிப்புடன் காண்போம் .மற்றோர் ஆதாரம் அக்காலத்திய இசை தட்டுகள். ஒவ்வொரு படத்துக்கும்  பாடல்கள் இசைத்தட்டு வடிவில் வெளியிடுவர் . ஒரு இசைத்தட்டில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பாடல்கள் பதிவேற்றியிருப்பர்.அவை SIDE  A , SIDE B என குறியிட்டு படம் , கவிஞர் , இசை அமைப்பாளர்[கள்], பாடல் , குரல்கள் , வெளியீடு ஆண்டு மற்றும் வெளியீட்டாளர் [HMV , COLUMBIA , ODEON ] இவை தெளிவாக அச்சிடப்பட்டு படம் வெளியாக 6 மாதம் முன்பே பாடல்கள் முழங்கும் , வானொலி, திருமணம், அரசியல் மேடைகள், சுப/ அசுப நிகழ்வுகள்    மைக் செட் தொழில் நிறுவனங்கள்   அனைத்திலும் ஒலித்து ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படங்களுக்கு விளம்பரமாக அமையும்.

அப்படி பாடல்கள் மறைந்தாலும் , நம் மனம் ம்றவாத சில பாடல்களை சிறு குறிப்புடன் காண்போம்

1 மகாராஜன் உலகை ஆளலாம்"

இசைக்காவியம் என்று அழியாப்புகழ் எய்திய படம் கர்ணன் - 1964  கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியோர் : பி சுசீலா டி எம் சௌந்தரராஜன் " மகாராஜன் உலகை ஆளலாம் " என்ற கம்பீரமான பாடல் . இது சிவாஜி கணேசன்/ தேவிகா பங்குகொண்ட பாடல் என்றே தோன்று கிறது .ஏனெனில் சரணத்தில் "இந்தகர்ணனுக்கு மட்டும் என்ன இதயம் இல்லையா?:"  என்றொரு வரி வருகிறது. HAUNTING MELODY என்ற அடைமொழிக்கு ஏற்ற சுகமான பயணம் கொண்ட பாடல். கவிதை நயம் , இசை அலங்காரம் , குரல் நளினம் , தாளக்கட்டின் அனாயாசம் அனைத்தையும் அள்ளி வழங்கி  விட்டு திரையில் துள்ளி விளையாடாமல் தள்ளி நின்று கொண்ட  அல்லது நிறுத்தப்பட்ட பாடல் . கேட்டு ரசிக்க  https://www.youtube.com/watch?v=DBVdIzzgwgc maharaajan 1964

2 முள்ளில் ரோஜா கள்ளூறும் ரோஜா

மற்றுமோர் இசைக்காவியம் கலைக்கோயில் 1964 திரை இசையில் எத்துணை முக்கியவகைகள் உளவோ அவை அனைத்தையும் சுமந்து வந்த படம் .

பாடல் கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி குரல்கள்  LR ஈஸ்வரி , PB ஸ்ரீனிவாஸ் . இரு ஒரு போதைப்பட்ட கலைஞனை மேற்கத்திய வகை ராக பயணித்தில் கர்நாடக வகை ஸ்வரம் பாட வைத்த வித்தகம்.. இப்பாடலில் மேற்கத்திய மட்டுமல்ல உலக இசையின் வடிவங்களை தொகுத்து வைத்திருக்கும்  பிரம்மாண்டம்  என்று சிலாகிக்கப்படும் நளினங்கள் கொண்டது. இசைக்கருவிகளின் முழக்கம் 1964 ல் என்பது ஆழ்ந்து உணரப்பட வேண்டிய ஆளுமையின் வெளிப்பாடு,  என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப்பாடல் முதலில் படத்தில் இருந்தது [நானே பார்த்திருக்கிறேன்] பின்னர் வெட்டப்பட்டு விட்டது -நிச்சயம் துயரம் ஏனெனில் படப்பிடிப்பு அவ்வளவு நேர்த்தியாக இருந்தது                        

 [N பாலகிருஷ்ணன் என்கிற திரு பாலு ] இசைக்கருவிகளின் வியக்கவைக்கும் வீரியம் / தாளம் இவற்றை உன்னிப்பாக  கேளுங்கள்

இணைப்பில் பல சுவாரஸ்யங்கள் , ரசியுங்கள்

Kalai Kovil 1964 -- Mullil Roja ( Audio ) - YouTube - MSV

https://www.google.com/search?q=+QFR+mullil+rojaa+song++download&newwindow=1&sca_esv=583261567&sxsrf=AM9HkKnlg7H7Wvogv0L3xNn6r3wpeTCn2Q%3A17  QFR

3 நீராடும் கண்கள் இங்கே - வெண்ணிற ஆடை 1965- கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி , குரல் பி .சுசீலா

இந்தப்பாடலின் துவக்கம் ரசிகனின் நிலையை சொல்லும் விதமாக அமைந்த விந்தை [படத்தில் 'இந்தப்பாடல் ' இல்லாது போனதே என்று நீராடும் கண்கள் ரசிகருக்கு நேர்ந்தது ] அற்புதமான பாடல் , கம்பீரமாக கௌரவமாக நாயகி தன்னிலை உணர்த்த்துவதாக புனையப்பட்ட பாடல் அக்காலத்திய எம் எஸ் வி முத்திரைகள் ஏராளம் இந்தப்பாடலில். கிட்டார் ட்ரம் நர்த்தனம் பாடல் முழுவதும்ஜொலித்து, இலங்கை வானொலியில் தினமும் ஒலித்த சோக காவியம்.

இணைப்பு: https://www.google.com/search?q=you+tube+neeraadum+kangal+inge+song+download&newwindow=1&sca_esv=583317652&sxsrf=AM9HkKmi0EiSJXwA NERAADUM KANGAL1965

4 யாரோடும் பேசக்கூடாது - ஊட்டி வரை உறவு -1967- கண்ணதாசன் எம் எஸ் விஸ்வநாதன்

குரல்கள்  PBS எல் ஆர் ஈஸ்வரி .

பாடலின் போக்கை கவனித்தால் முத்துராமன் -எல் விஜயலட்சுமி ஜோடிக்கென அமைந்துள்ளதாக தோன்றுகிறது. இருவரும் நிபந்தனை விதித்து பாடுவது , பின்னாளில் வந்த ஆரம்பம் இன்றே ஆகட்டும் பாடலுக்கு அண்ணன் போன்ற அமைப்பு, குறும்பு என்று LRE ன் அதகளம் . இசை அமைப்பு மிக மிடுக்காக இருப்பது ஆனந்தம் . கேட்டு மகிழ

https://www.youtube.com/watch?v=iAW5Fl8UyJk YAARODUM PESAKKOODAADHU 1967

இது போன்ற அழகான பாடல்களை --வேண்டாம் என்று ஏன் தவிர்த்தனர் என்று ரசிகர்கள் தவித்தனர் எனில் முற்றிலும் உண்மை .

நன்றி

அன்பன் ராமன்

 

4 comments:

  1. யாரோடும் பேசக்கூடாது
    ஆகட்டும்

    ReplyDelete
  2. அருமையான பாடல்கள் படத்திலிருந்து என்ன காரணத்துக்காகவோ நீக்கப்பட்டது அநியாயந்தான். ! இது போல நமக்குத்தெரியாத வெளியிலேயே வராதவை எத்தனையோ ?
    இதைவிடக் கொடுமை ஒவ்வொரு பாடலுக்கும் MSV போட்டு நிராகரிக்கப்பட்ட டியூன்கள் எத்தனை ஆயிரங்களோ ???

    ReplyDelete
  3. If the tunes that were 'not approved' by anyone in the composing sessions that were just open books, at least three MDs could have had a glorious living as excellent tune setters. That was the prolific out put from legendary Mellisai mannar MSV

    ReplyDelete
  4. Lovely songs with mesmerizing melodies...

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...