Thursday, November 23, 2023

DIRECTOR SRIDHAR

 இயக்குனர் ஸ்ரீதர்

ஒரு பெரும் ஆளுமை இந்த ஸ்ரீதர் என்று என் போன்றோர் ஏற்றுக்கொண்டதற்கு பல காரணங்கள் உண்டு.        பின் வரும் சம்பவம் எனது பார்வையை திசை மாற்றி முற்றிலும் சீர்தூக்கும் வகை மற்றும் பிறரிடமிருந்து மாறுபட்டு திரைப்படம் பார்ப்பது என்ற அடிப்படை மாற்றங்களை என்னுள் விதைத்தது. அன்பர்கள் இன்றளவும் நான் பேசும் /எழுதும் அமைப்பு மறுபட்டிருப்பதாக உணர்ந்தால், அதற்கான அஸ்திவாரம்  இந்த நிகழ்ச்சி என்னை திசை மாற்றிக்கொள்ள உதவியது என்பது தான்,     

ஏனோ தானோ என்று சினிமாபார்த்த அந்த வயதில் ஸ்ரீதர் படங்களில் ஏதோ ஒரு வித்யாசம் இருப்பதாக தோன்றியது. அது என்ன என்று தானாக விளங்கிக்கொள்ளவோ , விளக்கி சொல்லவோ வழியோ ஆசானோ இல்லை. அந்த சூழலில், எனக்கு வாய்த்த ஆசான் திரு கனகசபை என்ற வகுப்பு தோழன். அந்த வயதிலேயே அவன் சினிமா குறித்து ஆழ்ந்து விவாதிப்பான். விட்டால், அவனே சினிமா எடுத்துவிடுவான் அவ்வளவு தன்னம்பிக்கை. நான் சினிமா விஷயங்களில் ஞான சூன்யம் தெரிந்துக்கொண்டானோ இல்லையோ அன்றிலிருந்து அவன் என்னை " முண்டம்" என்று தான் அழைப்பான். அவன் இழித்து கூப்பிடுகிறான் என்று கூட தெரியாத முண்டமாகவே தான் நான் இருந்திருக்கிறேன், பல வகுப்புத்தோழர்கள், அவனோடு பேச மாட்டார்கள் - அவன் சினிமாவைப்பற்றிப்பேசுவான் என்பதால். ஆனால், எனது பார்வை வேறாக இருந்தது ஏனெனில் கனகசபை வெளிப்படையானவன் எதையும் மூடி மறைத்து வேஷம் போட மாட்டான்.   இன்னொரு கிளாஸ் மேட் கல்யாணசுந்தரம் அவன் வகுப்புக்கே வர மாட்டான். ஒரு நாள் ஆசிரியர் அட்டெண்டன்ஸ் பதிவு செய்த பின் "what about Kalyaanasundaram? " என்றார்                                                                                                                                                     கனகசபை பெஞ்சின் கீழே குனிந்துகொண்டு   Kalyaanasundaram RIGHT ABOUT TURN என்றான். “என்ன என்ன?”  என்றார் ஆசிரியர்.  சார், 43 பேர்ல, 41 பேர் வந்திருக்கோம் , எங்களப்பத்தி கவலைப்படாம கல்யாணசுந்தரமெங்கே " அதுவும் இங்கிலீஸ்ல --வாட் அபௌட் னு தேடுறீங்களே வந்தவனை கண்டுக்க மாட்டீங்க என்று முழங்க வாத்தியார் வெலவெலத்துப்போனார்.இது போல வெடிகுண்டுகளை அனாயாசமாக வீசுவான் - வெளிப்படையானவன். அவன் தான் சினிமாவை எப்படி பார்க்க வேண்டும் என்று அழகாக எனக்கு போதித்த போதிசத்துவன் அவன் . பிறிதொரு தருணத்தில், அந்த போதி சத்வனை மீண்டும் காண்போம்.

அவன் கடம், மிருதங்கம் தாளம் பிசகாமல் வாசிப்பான், வாயினால் மோர்சிங் ஒலியில்  "ட்ரிய ட்ற்றிய டொய்ங் டொய்ங்" என்று முழுப்பாடலையும் வாசித்து அசத்துவான் ஒருமுறை ஆசிரியர் அவனை கழுத கழுத தடிக்கழுதை என்று வசைபாட , அவன் எழுந்து நின்று உரத்த குரலில்  ங் ங் கீங் கீங் கி கீ ங்  ப் ர் ர் ர் என்று கத்த ஆசிரியர் மிரண்டு போய் இது  என்ன இது என்ன என்று மிரள , இவன் நீங்க என்ன கழுதேனு கூப்பிட்டீங்கல்ல,  பதில் சொல்ல ஆரம்பித்தேன் என்று மீண்டும் ப் ர் ர் ர் என்றான். என்னடா  ப் ர் ர் ர்? என்றார் ஆசிரியர்.

கனகசபை அசரவே இல்லை. சார், கலுத ஒரு சென்டென்ஸ் முடிஞ்சதும் ப் ர் ர் ர் னு சொல்லும் சார் கேட்டதில்லையா என்று ஹீ ஹீ ஹீ என்று சிரித்தான். உனக்கு ரொம்ப கழுதை பாஷை தெரியும் ஏன்னா  நீயே ஒரு  கழுதை  என்று அவனை வம்பிழுத்து தண்டிக்க வழி தேடினார். அவன் பிடிபடாமல் தப்பிப்பதில் மஹா எத்தன்.

கலுத பாஷை தெரியும் சார் என்று, ஆவலை விததைத்தான். அதற்கு முதல் பலி, அந்த ஆசிரியரே தான். பாடம் நடத்துவதை விட்டுவிட்டு, கழுதை ஆராய்ச்சி துவங்கியது. கழுதை என்ன பேசும் சொல்லு என்றார் ஆசிரியர். சார் கழுதைங்கள்ளாம் நம்மள விட பண்பு அதிகம் ரொம்பவே அதிகம்.  என்று பில்டப் கொடுத்து, மேலும் என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு வரேன் சார் என்று வெராந்தாவுக்கு ஓடி பானையில் இருந்து தண்ணார் குடித்துவிட்டு வரும் வரை ஆசிரியர் உள்பட எல்லோரும் ஆவலுடன் காத்திருக்க வைத்தான்.

திரும்பி வந்து சார் புதுசா ஒரு கலுத வந்தா,  அந்த ஏரியாவுடைய   தலைவர் கலுத ஓடிப்போய் பேர சொல்லி  வரவேற்கும்  சார். என்ன பேர் சொல்லியா? என்று அதிர்ந்தார் ஆசிரியர். சார் நம்புளுக்கே பேர் இருக்குது அப்புறம் அதுக்கு இருக்காதா சார்? என்றான். உனக்கெப்படி தெரியும்? என்று கோபமாக கேட்க,  அவன் புதுக்களுத வந்ததும் ஏரியாவுடைய   தலைவர், காதை நல்லா நீட்டிக்கிட்டு பஷீர் பஷீர் வாப்பா வாப்பா வந்தியாப்பா வாப்பா என்று வரவேற்கும் என்று விளக்கம் சொல்லி கழுதையின் கூவலுக்கு விளக்கம் சொன்னான்.  புது கழுதை எல்லாம் பஷீ ர் தானா? என்றார்ஆசிரியர் . இல்ல சார்-- ரஹீம் இருக்கு , சுஷீல் இருக்கு , ரமேஷ் , மகேஷ் ஏன் உங்க பேர் கூட இருக்கு ஆனா கடைசியில ப் ர் ர் ர்  ப் ர் ர் ர்  ப் ர் ர் ர்  னு ரெண்டு மூணு வாட்டி உண்டு சார் என்று சொல்லி அவர் ஆத்திரம் பொங்க கண் சிவக்க, சரியாக கடைசி வகுப்பு முடிப்பிற்கான நீண்ட மணி ஒலி க்க  ஒரே சிரிப்பு .

இந்த கனகசபை தான், எனக்கு சினிமாவை எப்படி பிரித்துப்பார்க்க வேண்டும் என்று உணர்த்திய ஞானகுரு. படத்தில் காமெரா கோணம் பார், பாட்டுகளை ப்பார், தாளத்தை கவனி அப்போது தெரியும் விஸ்வநாதன் ராமூர்த்தி யின் பெருமை என்றான்.

நான் அவன் யார்? என்றேன்டே லூசு அவர்தான் ம்யூசிக் போடுவார் என்றான் எனக்கு ஒன்றும் புரியவில்லை உண்மையை சொன்னால் உதைத்துவிடுவானோ என்று பயம் , அவன், காதல் காட்சி, காமெரா கோணம் , பாடல் கிளைமாக்ஸ் [கடைசி காட்சி] என்று பிரித்துப்பார் , ஸ்ரீதர் ஒரு மாறுபட்ட ஆள் என்றுபுரியும் என்று  என்னை ஸ்ரீதரை பார்க்க வைத்தான் , விஸ்வநாதன் ராமமூர்த்தி பற்றி  மணிக்கணக்காக பேசுவான் , இப்படி தான் ஸ்ரீதர்/ சினிமா/ இசை இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக என் தலையில் ஏற்றினான் . ஒருமுறை நான் அவனைத்தேட வேண்டிய சூழல் ஏற்பட்டது , அப்போது அவன் என்னிடம் ஒரு உதவிகேட்டான் இப்படி தான் பரஸ்பரம் எங்கள் குடுமி அடுத்தவர் கையில் .

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

Oh Language – a changing Scenario -6

  Oh Language – a changing Scenario -6 In the day’s episode we are to consider words with more than just one meaning. One such is ‘RUE’. ...