Friday, November 24, 2023

OUR DUTY

 OUR DUTY 

நமது கடமை

சென்ற பதிவில் 'ஆரம்ப கவனமின்மை' பின்னாளில் பல அவலங்களை தோற்றுவிக்கும் என்று குறிப்பிட்டிருந்தேன். இந்த ஆரம்ப கவனமின்மை என்பது இல்லம் என்ற காப்பகம் இன்றி உள்ளம் நாடும் திசையில் இளம் சிறார்களை பயணிக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்து விட்டு பின்னர் குழந்தையின் மன நிலைகளை மாற்ற முடியாது. 1980 களில் தென் தமிழ்நாட்டில் TV என்ற உபகரணம் இல்லை. அதன் துவக்க காலத்தில் பத்திரிகையில் TV யை IDIOT BOX என்றே எழுதி வந்தனர். ஆழ்ந்து யோசித்தால் அது ஒரு BOX அதன் முன்னர் அமர்ந்து ஊண் -உறக்கம் தொலைத்து வெய்யில் கால நாய்கள் போல வாய் பிளந்து அமர்ந்திருப்போர் IDIOT அல்லாமல் வேறு யார்? இப்போது பலரால் TV பழுதாகிவிட்டால் அமைதியாக இருக்க இயலாது, ஏன் ? பழக்கம் வேரூன்றி விட்டது. நன்மை /தீமை உணரக்கூடிய வயதினர் தம்மை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் அலையும் பொது சிறுவர்களை பின்னர் சரி செய்வது என்பது பட்டப்பகல் கனவு..

[சில பெற்றோர்கள் 'பின்னர் பார்த்துக்கொள்ளலாம் 'என்று வீர வசனம் பேசி தீரா விசனத்தில் அமிழ்ந்த நிகழ்வுகள் ஏராளம் . சமூக சீர்திருத்தங்கள் சமூகம் சார்ந்தவை. உதாரணமாக 'பேச்சு சுதந்திரம் ' என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைக்கும் கையில் எடுத்துக்கொண்டால் பொது அமைதி இறுதியில் மயான அமைதி நிலைக்கு தான் இட்டுச்செல்லும். இது அனைவருக்கும் பொருந்தும்] .   இந்த பண்பாக்க நிலையில் நல்ல நடைமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு பின்னர் திருத்துவது வளர்ந்த மரத்தை வளைத்து பல்லக்கு செய்வதற்கு ஒப்பானது, மரம் முறியும், மனிதர்களின் உறவு முறியும் . உடனே "இந்தக்காலத்து " இந்தக்காலத்து என்று நொண்டிச்சாக்கு தேடாதீர்கள். இந்தக்காலத்தில் உங்கள் பெற்றோர் அறிவுரை சொன்னால் தூக்கி எரிந்து பேசுவீர்களா?உங்களுக்கே இல்லாத "இந்தக்காலம்" உங்கள் குழந்தைக்கு மட்டும் எப்படி பொருந்தும் . கட்டிப்போடாமல் வளர்த்துவிட்ட நாயை , பின்னர் கட்டிப்போடமுடியுமா ? கட்டிப்போட்டு வளர்த்த அந்த ஜீவன் மட்டும் ஏன் கட்டுப்பட்டு அமைதியாக இருக்கிறது.? எதுவுமே வளர்ப்பு முறை தான் என்பதை தாண்டி வேறு கட்டுப்பாடுகள் புதிது புதிதாக செயல் படுத்த முடியாது. இதுவே பாதுகாப்பான நடை முறை. குறிப்பிட்ட வயதிற்குமுன் சுதந்திரம் என்பது " தறி கெட்டு த்திரியும் நிலைக்கு" ஆசானாக செயல் படும். இதை மனதளவில் குழந்தைகள் ஏற்றுக்கொள்ள , இல்லம்/ பெற்றோர் அரவணைப்பு ஒரு மாமருந்து. அதை விடுத்து.  நாமே ஊர் சுற்றி நண்பர்களுடன் அளவளாவி  விட்டு    இரவு 8.00 மணிக்கு வந்தால் குழந்தை  7.50க்கு முன் வீடு திரும்பாது. நட்புவட்டம் நமக்கு தான் உண்டா ? பள்ளிச்சிறுவர்களுக்கு பெரும் நட்புவட்டம் . அதை பெருக்கிக்கொள்ள ட்யூஷன், கராத்தே .கிரிக்கெட் , இன்ன பிற அனைத்து வகுப்புகளிலும் சேர்த்தாயிற்று. குழந்தைகள், எந்தமாதிரி மனோபாவம் கொண்ட பிற குழந்தைகளின் ஈர்ப்பில் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோமா?  இவற்றை சரியாக அமைத்துக்கொள்ளாவிடில் ஏற்படும் அவலம் தான் JUVENILE DELINQUENCY என்ற குற்றபுரியும் சிறார் நிலை. 

இவர்கள் இளம் குற்றவாளிகள்[JUVENILE OFFENDERS]  என்று அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

  எல்லா      சிறார்களும்  இந்த நிலைக்கு தான்  போவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அவர்கள் திசை மாறும் அபாயம் உண்டு என எச்சரிக்க வேண்டிய கடப்பாடு என்போன்ற ஆசிரியனுக்கு உண்டு. அதுவே, என்னை இதுபோன்ற சூழல்களை விவரிக்க உந்துகிறது. எவரையும் இழிவுபடுத்தும் நோக்கமோ பார்வையோ எனக்கில்லை.               எனினும் நல்ல குழந்தைகள் கவனிப்பார் அற்று அல்லலுறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அந்த ஆதங்கத்தில் எழும் அங்கலாய்ப்பே இது போன்ற கட்டுரைகள்.

இதுவரை நாம் கண் பதித்த ஆபத்துகளுக்கு மேலும் உரம் ஏற்றுவது இக்காலத்திய LIBERAL POCKET MONEY கலாச்சாரம் . முன்பெல்லாம் சில பொருளாதார கீழ்த்தட்டு வீட்டு குழந்தைகள் தான் பள்ளிக்கு 4 அணா 8 அணா என்று கொண்டுவந்து எதையாவது மிட்டாய் , ஐஸ் போன்ற பொருட்களை வாங்கி உண்பர். அது இப்போது அனைத்து மட்டத்திலும் வியாபித்து கணிசமான தொகையை வைத்துக்கொண்டு சர்வ சுதந்திரமாக அலையும் நிலையை பார்க்கிறோம். இந்த பணப்புழக்கம் , ஒரு வித தெம்பை விதைத்து பரீட்சார்த்த செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். இவை வயதுக்கு மீறிய பரிட்சார்த்தங்களை செய்து பார்க்க ஊக்கம் தரும் என்பதை ஏன் உணர மறுக்கிறோம்? எனக்கு புரிய வில்லை..அவற்றிற்கு அணை போடாமல், தூபம் போடுவதற்கு ஒவ்வொருவர்  கையிலும் ANDROID வகை போன்கள்.

 

இது நிச்சயம் எல்லை மீறும் பரிட்சார்த்தங்களை முயற்சிக்க உந்துகோலாக வினையாற்றும். நான் முன்னரே குறிப்பிட்ட உணவுகளும் உடலில் ஹார்மோன் வெள்ளத்தை ஊற்றடுக்க வைக்க, குழந்தைகள் எல்லை மீறி தொல்லை நோக்கி பயணிக்கிறார்கள். இவற்றில்  எதுவும் மேலான பெர்சனாலிட்டி   என்ற ஆளுமைத்திறனுக்கு வழிவகுக்காது. மாறாக அடல்ட் [ADULT ]வகை முயற்சிகளுக்கு  வடிகால் ஏற்படுத்திவிட அதனால்  கல்வியும் உயர் பண்புகளும் குலைந்து பணம் படுத்தும் பாடு என்பதை காலம் கடந்து உணரச்செய்து, அவமான உணர்வினால் உறவினர் தொடர்புகளை  குறைத்துக்கொண்டு ஒதுங்கி வாழும் நிலையை பெற்றோருக்கு ஏற்படுத்தும்.

எனவே தான் ஆரம்ப கவனக்குறைவு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது.                           என் குழந்தையை குறை சொல்லாதே என்பவர்கள் நேரடி கண்கணிப்பை பற்றி பேச மறுப்பது ஏன்? முடிந்தால் விளக்குங்கள் சிந்தனை திறன் குறைந்த என் போன்றோர் உணர்ந்து கொள்ள உதவும். இவை அனைத்தும் சிந்தனைக்குரியவை. அமைதியாக சிந்தியுங்கள்.

நன்றி

அன்பன் ராமன் .

3 comments:

  1. சந்தில கிழிசல் உள்ள drawer ல் ஒட்டுப்போட்டும் , pocket இல்லா சட்டையும் உடுத்திக் கொண்டு சாக்குப்பையில் புத்தகங்களை தூக்கிக் கொண்டு மைல் தொலைவிலுள்ள பள்ளிக்கு நடந்து சென்ற காலம்
    பையில்லாத சட்டைக்குப் பாக்கெட் மணியா?
    துணிகளை iron பண்ணிப்போட்டதெல்லாம் இப்போதுதான்.
    பழைய சோற்றை சாப்பிட்ட காலம் அது
    பெற்றோர்கள் பேச்சைக்கேட்காவிட்டால்
    உதைதான் .
    இப்போது அதெல்லாம் நடக்குமா?

    ReplyDelete
  2. படித்து முன்னேறிய காலம் போய் [ஆள் ]பிடித்து முன்னேறும் காலம். பெற்றோருக்கு எதை கண்டுக்க/ கண்டிக்க வேண்டும் என்ற தெளிவு உண்டா? ஆசிரியரை தாக்குவதற்கு அணி திரள்வோர் தன் குழந்தை சத்தியத்தின் மொத்த உரு என்று எந்தக்கோயிலிலும் சூடம் அணைத்து சத்தியம் செய்யும் உத்தமர்கள். ஆசிரியனக்கு, நையாண்டியும் , நையப்புடைக்கப்படுவதுமே வெகுமதிகள். பழைய சோறு கிழிந்த கால் சட்டை அண்ணன் அணிந்து இரண்டாவது தம்பிக்கு இயன்ற அளவிற்கு மானம் காத்தது. இப்போதோ 10 ம் வகுப்பில் புல்லெட் டில் பயணம் - என் பையன் என்ற வீண் பெருமையே எமனாக வருவதில் வியப்பென்ன?

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...