Sunday, December 3, 2023

FUNCTIONS/ ENERGY

 FUNCTIONS/ ENERGY  

இயக்கங்கள் / ஆற்றல்

 எந்த ஒரு இயக்கமும் ஆற்றல் [energy ] இல்லாமல் நடை பெறுவதில்லை. எந்த இயக்கமும் வெப்பத்தை வெளிவிடும் துணை நிகழ்வு இன்றி நிறைவடைவதில்லை. வெப்ப வெளியேற்றம் என்பது முதன்மை நிகழ்வு அல்ல , மாறாக அது இரண்டாம் [செகண்டரி] சம்பவம் எனலாம்.. எனவே உயிரின இயக்கங்கள் குறித்து முறையாக புரிந்து கொள்ள 2 தகவல்கள் நன்றாக மனதில் பதிய வேண்டும். அவை 1. எனர்ஜி என்ற ஆற்றல் துவங்கும் இடம்  2. எனர்ஜி அழியாது ஆனால் உருமாற்றம் பெறலாம் என்ற கோட்பாடு உயிரினங்களின்   இயக்கத்தில் எங்கெங்கே நிகழ்கிறது என்ற அடிப்படை செயல் பாடுபற்றியது.

இவ்விரண்டையும் தொடர்புடன் உணர்ந்துகொள்ள , சில முக்கிய சொற்கள் பயன் படும், கலங்காதீர்கள் எந்த உயர் தகவலும் மொழியின் பங்களிப்பின்றி, பிழையின்றி விளக்க இயலாது. ஆகவே, energy என்ற சொல் பல விதடிங்கள் பூண்டு, நம்மை சற்று கலக்கமடையச்செய்யும்.                                                                          கவலை வேண்டாம் எளிதாக புரிந்து கொள்ளலாம் .  

energy யின் அடிப்படை வடிவங்கள் POTENTIAL [சேர்த்து வைக்கப்பட்ட /தேக்கிவைக்கப்பட்டுள்ளசேமிப்பு எனர்ஜி]  மற்றும் KINETIC கைனெடிக் வகைENERGY என்பது  செயல் பட்டுக்கொண்டிருக்கும் ஆற்றல்] என்று புரிந்து கொள்ளலாம். சேமிப்பிலும் எனர்ஜி வகைகள் உள்ளன -- எலக்ட்ரிகல் [ பேட்டரி போன்றவை] , காற்று எனும் WIND எனர்ஜி , கடல் அலைகள் தரும் WAVE எனர்ஜி மற்றும் வெப்ப வடிவில் இயங்கும் HEAT எனர்ஜி ; இவற்றைப்போலவே FOOD எனர்ஜி யும் ஒரு சேமிப்பு வகைதான்.

ஆனால் FOOD ENERGY, தாவரங்கள் / விலங்குகளின் உள்ளியக்கங்களால் உருப்பெறுபவை. எனவே, சூரியவெப்பம் [அதாவது ஒளி எனும் LIGHT ENERGY] முதன்மையான ஆரம்பப்புள்ளி. அதன் துணை கொண்டு உருவாவதே தாவர உணவு [கார்போஹைடிரேட் / ப்ரோடீன், கொழுப்பு / எண்ணைகள்]. இவற்றைஉட்கொண்டு மானிடர் /விலங்குகள் உயிர் வாழ்கின்றன.  எனவே ஒளி யின்றி  உயிர் இல்லை. நீரின்றி அமையாது உலகு என்பதற்கு சற்றும் குறையாத உண்மையே ஒளியின்றி உலவாது உயிரினம் என்ற உண்மை . அப்படியானால், உயிரினங்களே நேரடியாக சூரிய ஒளியை ஏற்றுக்கொண்டு இயங்க முடியாதா என்றால்  - முடியாது. சூரிய ஒளியை ஏற்று பயன் படுத்தி பல வகை உணவுப்பொருட்களை தோற்று விக்கும் திறன் தாவரங்களுக்கு அதிலும் குறிப்பாக பசுமை நிறத்தாவரங்களுக்கு மட்டும் இயல்பாகவே அமைந்துள்ளது. எனவே பிற உயிரனங்கள் தாவரங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சார்ந்து வாழும் நிலை இயற்கையாகவே தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

சரி, இந்த உணவுப்பொருளை பசுந்தாவரங்கள் எவ்வாறு உருவாக்குகின்றன என்ற கேள்விக்கு உரிய விடை  PHOTOSYNTHESIS  எனும் ஒளி ச்சேர்க்கை ஆகும்.

உருவாக்கப்பட்ட உணவை, பசுந்தாவரங்கள் உள்ளிட்ட  உயிரினங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்ற வினாவிற்குரிய விடை Respiration எனும் சுவாசித்தல் பணி. இவற்றை எனர்ஜி அடிப்படையில் விவாதித்தால் ஒளிச்சேர்க்கை [PHOTOSYNTHESIS]  என்பது உணவின் வடிவில் ஆற்றலை சேமிப்பது என்ற ஆக்கப்பணி  அல்லது BUILD UP நிகழ்வு. அதே போல சுவாசித்தல் [RESPIRATION] என்பது உணவில் இருக்கும் ஆற்றல் என்ற எனர்ஜி யை வெளிக்கொணரும் BREAK DOWN நிகழ்வு. எனவே உயிரினங்கள் RESPIRATION வாயிலாக ஆற்றலை பெற்றால் தான் செயல்படத்தேவையான திறனைப்பெற இயலும். அதை ஈடேற்ற தேவையான  உணவுப்பொருள் [கார்போஹைடிரேட் , ப்ரோடீன், எண்ணை மற்றும் கொழுப்புகள் என்றவை  தாவர வகை செயலினால் உருவாக்கப்பட்டு, அனைத்து உயிரினங்களின் respiration க்கு வேண்டிய மூலப்பொருளை வழங்குகிறது. RESPIRATION மற்றும் PHOTOSYNTHESIS இரண்டின் இயக்கமே உயிரினங்களை இப்புவியில் வாழ வைக்கிறது. இந்த 'வாழ வைத்தல்'நிகழ்வின் உந்து விசை--  எனர்ஜி  எனில் மிகை அல்ல. 

சரி இந்த அடிப்படையில் புரிந்து கொண்டால் பசுந்தாவரங்கள் நீங்கலாக ஏனைய அனைத்து வகை உயிரின ங்களும் பிற ஆதாரங்களில் இருந்தே எனர்ஜி [ஆற்றலை ] உணவின் வழியே பெறுகின்றன. அசுமை நிறம் இல்லாத நிறமற்ற தாவரங்கள் உளவா ? எனில் -ஆம் அவையும் பசுந் தாவர ஆதரங்களைக்கொண்டே மறைமுகமாக தங்களின் ஆற்றல் தேவையைப்பெறுகின்றன.

பசுந்தாவரங்கள் எனில் மரம் செடிகொடி மாத்திரம் என்று எண்ண  வேண்டாம், சிறு புல் / கீரை /குப்பையில் .வேரூன்றி வளரும் செடி  வகைகள்  , நீர் நிலைகள் , வீட்டில் நீர்புழங்கும் இடங்களில் தோன்றும் பாசி வகைகளும் இந்த பட்டியலில் அடங்கும். இனி நமது பார்வை Photosynthesis மற்றும் Respiration, இவற்றின் சிறப்பம்சங்கள் என்னென்ன அவை இவ்வுலகிற்கு ஆற்றும் நன்மைகள் என பல்வேறு திசைகளில் பயணிக்க இருக்கிறது. எனவே அன்பர்கள் விஞ்ஞான ரீதியான புரிதலைப்பெற, இதுவரை விளக்கப்பட்டுள்ள கோட்பாடுகளக்கை தெளிவாக உள்வாங்கிக்கொண்டால் எவ்வித சிக்கலும் இன்றி இந்த விவரங்களை பிறர்க்கு - குறிப்பாக பயில்வோருக்கு நன்கு விளக்க இயலும்.

மேலும் வளரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...