Tuesday, December 5, 2023

GUNTUR VIJAYAM-3

GUNTUR VIJAYAM-3

விழா மாலை மூன்று மணிக்கு .ஆனால் காலையிலேயே வந்தும் இன்னும் தகவல் தெரிவிக்காமல் மற்றும் பதிவு செய்யாமலும் சிலர் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். மொத்தம் ஐந்து பேர் தான் பதிவு செய்துள்ளனர்..மதியஉணவுக்கு சாப்பாட்டிற்கு எத்தனை பேர் என்று சொல்லவேண்டும் என பி.கே இடம் சுப்பிரமணி கேட்டான். சுமார் 10 பேருக்கு சொல்லு போதும்.. சாப்பிட யாராவது வந்தால் பதிந்தவர்களுக்கு மட்டும் தான் உணவு என்று நோட்டீஸ் வைத்துவிடச்சொல் என்று கேட்டரருக்கு சொல்லிவிட தகவல் அனுப்பி விட்டு நீயும் கஸ்தூரிரெங்கனும் இரண்டரைக்குள் சாப்பிட்டு விட்டு விழாமேடை அருகிலேயே இருக்கவேண்டும். அதற்குள் போய் ரெஸ்ட் எடுத்து விடுங்கள் என்று சுப்பிரமணியிடம் கறாராக சொல்லி அனுப்பினார். ரூமில் க ரெங்கன் பித்துப்பிடித்தவன் போல் அமர்ந்திருக்க பி, கே சொன்னதை சொல்லிவிட்டு என்ன சார் டல் லா இருக்கீங்க ? -சுப்பிரமணி. இல்ல, ராமசாமி சார் இன்னும் கோவம் குறையாம இருக்கார் அவரை எப்படி சமாதானப்படுத்துறதுனு தான் தெரியல்ல, ஒரே குழப்பமா இருக்கு -க.ரெ

தெரியும் சார் நீங்க நல்ல சந்தர்ப்பத்தை கோட்டை விட்டுட்டு, இப்ப வந்து வழி தேடறீங்க. அவங்க அனுபவம் அளவு இல்ல சார் நம்ப வயசு. நம்மல்லாம் கௌரவம் பார்க்கக்கூடாது, நீங்க அப்பவே ஊர்லயே காலப்பிடிச்சு மன்னிப்புகேட்டிருந்தா இவ்வளவு பெரிசா வளந்திருக்காது நீங்க போனும் பேசறதில்ல. போன் வாங்கினப்ப முதல் போன் அவருக்கு தான் போட்டீங்க .நீங்க போன் இல்ல னு சொல்லி தப்பிக்க முடியாது. மேலும், உங்க அம்மா இங்க வராம அடம்பிடிச்சுக்கிட்டு அங்கேயே இருக்காங்க. அவங்களுக்கு ஒரு உதவின்னா ராமசாமி சார் தானே உங்களுக்கு வரணும். அப்பிடி இருக்கறவரை நீங்க ஏன் புறக்கணிக்கப்பாத்தீங்க, சார் இந்த அண்ணா நகர் அம்மாநகர் இதுங்கல்லாம் சில்லறை யை கறந்துகிட்டு கூலிங்க்ளாஸ் மாட்டிகிட்டு தெரியாத மாதிரி ஓடிரும் சார். உங்களுக்கு வருமானம் வருதுன்னா, அவுங்களுக்கு அவமானமே வந்தாலும் தொடச்சுபோட்டுட்டு, சிரிச்சு பேசி ஒட்டக்கறந்துட்டு ஓடிருவாங்க சார். உங்களுக்கு னு ஒருத்தி பொறந்து காத்துக்கிட்டு இருப்பா சார் அவ தான் சார் குடும்பத்துல ஒட்டுவா.  இதுங்கல்லாம் நகரத்து கிளிங்க, பசங்கள வேட்டையாட தெரியும் தனக்கு வேண்டிய சாப்பாட்டுக்கு வழி தெரியாது. இதை சொல்ல எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு நீங்க என்னை விட படிச்சவங்க, இப்பிடி தேவையில்லாம நல்ல நண்பர்களை இழப்பதா? கோவிச்சிக்காதீங்க இனிமே இப்போதைக்கு அவரை நீங்க சரிக்கட்ட முடியாது. அன்னைக்கு நீங்க சென்னைக்கு போனதை புட்டுபுட்டு வெக்கறாரே, அவரை நீங்க நெனைக்கற மாதிரி எல்லாம் ஏமாத்தமுடியாது.அவர் உங்கம்மாவைப்பத்தி கேட்டதும் நீங்க பதிலே சொல்லல, பின்ன எப்படி சார் அவர் உங்கள மதிப்பார்?. உங்களுக்கு இந்த ரைல்வேல குண்டூர், பஞ்சாபகேசன் சார் இதெல்லாம் முன்னாலே தெரியுமா? அவங்கெல்லாம் உங்களுக்கு வழிகாட்டினவங்க, அப்பிடி நம்ம பாத்து ஏமாத்தற அளவுக்கு அவங்க கிள்ளுக்கீரை இல்லை. கிளி மாதிரி பாத்துக்குறவங்கள் கிட்ட எலி மாதிரி வேலை பண்ணி மாட்டிக்கிட்டிங்களே.   உங்க நிலைமை எனக்கு புரியுது, நான் சொல்றது உங்களுக்கு புரியலையா-- இல்ல  நீ யார் ரா எனக்கு சொல்லனு நினைக்கீறீங்களோ தெரியாது.  

இப்ப   என்ன சார் செய்ய முடியும் ? உங்கம்மாவாவது அவங்களோட நல்ல நட்பா ருந்தா நம்ம ஏதாவது சொல்லச்சொல்லி கேட்கலாம். அவங்க நீங்க இங்க வராதீங்க என்ற அளவுக்கு பேசிஇருப்பா ங்க போல இருக்கு.  அதுனால இப்போதைக்கு அனுமார் கதி னு பல்லைக்கடிச்சுக்குட்டு காலம் தள்ளுங்க . கொஞ்சநாள் கழிச்சு கல்யாணம் பேச ராமசாமி சார் உதவியை நாடலாம். உங்க அம்மாவை நம்பி கல்யாணம் பேசாதீங்க அவங்க தேவை இல்லாமா பேசி பிரச்சினை வந்துரப்போவுது. அதுனால இப்ப சாப்புட்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு 2.20க்கு செஷன் நடக்கிற மேடைகிட்ட போவோம்.

இப்ப கவனத்தை விடாம குடுத்த வேலையை பார்ப்போம் இல்லைனா அப்புறம் பி.கே சார்கிட்ட, அடி வாங்க வேண்டி வரும். அவர்        அறைஞ்சார்னா டெங்கு காய்ச்சல் வந்த மாதிரி ஆயிரும். அதுக்கு பேசாம கடவுள் மேல பாரத்தப்போட்டு, நம்ம வேலைய பார்ப்போம். மத்ததெல்லாம் ஆண்டவன்பாத்துப்பான -நம்மளுக்கே படி அளக்கறவுனுக்கு நல்லா எல்லாம் தெரியும். வேற என்ன சொல்ல? சாமியை கும்பிட்டுட்டு சாப்பிடப்போவோம் இன்னக்கி தயிர் வடை பால் பாயசம் சிப்ஸ் எல்லாம் இருக்கு. அவசரப்பட்டு எதுவும் பேசி கோவத்தகிளறாம நம்ம வேலையைப்பார்ப்போம் என்று ஞானி போல் உரைத்தான் சுப்பிரமணி.  கஸ்தூரி ரெங்கன் தனது கவனக்குறைவை எண்ணி உள்ளூர அழுதான். நிகழ்ச்சி க்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது.

தொடரும்

அன்பன் ராமன்     


1 comment:

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...