Friday, December 1, 2023

PLEASE LISTEN …..

 PLEASE LISTEN …..

இதையும் சற்று செவி மடுப்பீர் .

குழந்தைகளை மதிப்பீடு செய்யக்கற்றுக்கொள்வது, வயதில் மூத்த பெற்றோர்/ உறவினர்/ அன்பான நட்புவட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்றிமையாத்தேவை. நாம் வாரப்பத்திரிகைகளில் இடம் பெரும் கட்டுரைகளை நம்பி வாழ்முறைகளை வகுக்க முடியாது / கூடாது. அந்த உணவை சாப்பிடுங்கள் இந்தக்கிழங்கு உடலுக்கு நல்லது, அந்தக்கிழங்கு ஞாபக சக்தியை பெருக்கும் என்று படித்து விட்டு உடனே செயலில் இறங்குவது இயல்பாக நடக்கிறது.ஒரு சில தகவல்களில் உள்ள பிழைகள் அடுத்த பதிப்பில் பல விளம்பரங்களுக்கு நடுவில் சிறிய அளவில்"முங்கை க்கீரை என்பதற்கு பதிலாக முருங்கைக்கீரை என்று அச்சுப்பிழை நேர்ந்துவிட்டது. தவறுக்கு வருந்துகிறோம் என்று பத்திரிகை கள்   வெளியிட்டு சட்டத்தின் பிடிக்குள் சிக்காமல் தப்பித்துக்கொள்ள, இப்போது சிக்கியவர் யார்? ஆங்கிலத்தில் கிராஸ்-செக் என்றொரு நடைமுறை அவ்வப்போது களமிறங்கி உண்மைகளை தெளிவு படுத்த இது "FAKE NEWS" என்று சமூக வலைத்தளங்களில் விமரிசனம் எழுவதைப்பார்க்கிறோம் . அதனால் உண்மைத்தன்மை அறியாமல் அந்தப்பள்ளி நல்லது, இந்தப்பள்ளி சிறந்தது என்று கட்டிடக்கலையின் மாண்பில் மயங்கி குழந்தைகளை கல்வி நிலையங்களில் சேர்த்து விட்டு ஹாய்யாக அமர்ந்துவிடுகிறோம். இதுபோல் தான் ட்யூஷன் ஆசிரியர் தேர்வும் நடக்கிறது. அவரிடம் கூட்டம் குவிகிறது இவரிடம் கூட்டம் இல்லை என்பனவே அளவுகோல்கள், இவை எதுவும் செயல் திறன் சார்ந்த அளவீடுகள் அல்ல. பல கல்வி நிலையங்கள் We have experienced staffs என்கிற கோரல்களை [claims] என்று எழுதி பெற்றோரை மயக்குகிறார்கள்.. இதில் வினோதம்யாதெனில் பலர் இன்னும் bacheor நிலையில் இருப்பவர்கள். இதை வைத்துக்கொண்டு We have experienced staffs என்று ஆர்ப்பரிக்கின்றனர். இந்த We  have experienced staffs என்பதை இரு விதமாக விளக்கலாம்

1 பொதுவாக "ஆசிரியர்கள் அனுபவஸ்தர்கள்" என்பதாக 

2 இந்த வாசகம் ஒரு புலம்பல் என்பதாக.-- எப்படி ?

[இந்த] ஆசிரியர்களை வைத்துக்கொண்டு நிறைய [துயர்களை] அனுபவப்பட்டுள்ளோம் .We  have experienced -- staffs.

ஏன் our staff are experienced என்று எழுதினாலே போதுமே. staff போதுமா staffs தேவையா என்பதே இன்றளவும் விவாதப்பொருள் . அமெரிக்க வகை ஆங்கிலம் மிகவும் வசதியாக இருக்கிறது என்று சொல்பவர்கள் ஏன் பிரிட்டிஷ் சொல்லாடல் staffs என்று எழுத வேண்டும்? அது plural என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள்.  இது வெகு விரைவில் விளக்கமாக பேசப்பட வேண்டிய ஒன்று. இது போல சொல்லாடல்கள் கல்வி நிலையங்களில் புழங்கும் போது, அவர்தம் கல்வி ஆழம் [depth] ஒரு சந்தேகத்துக்குரிய பொருள் ஆகிறதல்லவா? நாம் கட்டடம் தான் கல்வி நிலையம் என்று நம்புவோர். இது போதுமே -கட்டிடத்தை வடிவமைத்து பொருள் குவிக்க. எனவே மதிப்பீ டுகள், பிழை .யினதாக இருக்க அவைதரும் தகவல் எவ்வாறு இருக்கும் .

இன்னொரு அளவீடு அதிக விலை என்பதும் உயர் தரம் என்பதும், ஒன்றே என்று நம்புகிறோம். உருளைக்கிழங்கு என்ன விலை? கீரைக்கு என்ன விலை? நீங்களே மனசாட்சியோடு விடை தேடுங்கள். நன்மை வேறு விலை வேறு.                                 விலை என்பது, பலவீனத்தை பயன்படுத்திக்கொள்ளும் உத்தி [பலவீனம் என்பது நாக்கு அல்லது புறக்கவர்ச்சிக்கு அடிபணிதல்].  இதே அடிப்படையில் தான், DESSERT / கூம்பு வடிவ தோசை, ஆடைகள்/ நகைகள் அனைத்தும் விலை பெறுகின்றன. ஒரு தோசையின் விலைக்கு அதே நிறுவனத்தில் COFFEE யை விற்க முடியுமா?. இது தான் கல்வி க்கூடங்களிலும் அரங்கேறும் அலங்கார மயக்கங்கள். அந்த நிறுவனங்களை விட அவற்றிற்கு வக்காலத்து வாங்கும் பெற்றோர் பேசுவதை ப்பார்க்க வேண்டுமே - எவ்வளவு மாயையில் உழலுகிறார்கள் LKG க்கு  மாசம் 8000/- என்று சொல்லும் போது கழுத்து GIRAFFE க்கு போட்டியாக நீள்வதைப்பார்க்க வேண்டுமே ; பிறகுஏன் கல்வி வியாபாரம் ஆகாது. இன்னும் 2000/- அதிகம் வைத்து மாசம் 10, 000/- என்று சொல்லட்டும் கூட்டம் அங்கே சாயும். ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் வைத்தியம் செய்தால் அவர் பைத்தியம். கையில் பிளேடு கீறியதற்கு 3 நாள் ஊசி 17 மாத்திரைகொடுத்து -இல்லையில்லை எழுதிக்கொடுத்து 600/- ரூபாய் கறப்பவன் கெட்டிக்காரன் [ஆம், ஆனால் நாம்?] ரொம்ப நல்லா பார்க்கிறார் என்று CERTIFICATE வேறு.   நல்லா பணம் பார்க்கிறார் என்று கொள்க.

இது போன்ற முறையற்ற மதிப்பீடுகளில் மனம் மயங்கி, தடுமாற்றம் கொண்டு தவறு செய்கிறோம் .இப்படி செய்யும் தவறுகளில் தலையாயது மார்க் பற்றிய நமது பார்வை. மார்க்கும் செயல் திறனும் வெவ்வேறு என்பதே இன்றளவும் புரியாமல் நேரத்தையும் பொருளையும் வீணடிக்கிறோம் . இந்த மார்க் குறித்த மாயையை விளக்க பின் வரும் தகவல் உதவும் என்று நினைக்கிறேன். உங்களில் பலரும் அறிந்திருப்பீ ர்கள் "கோல்டு மெடலிஸ்ட்" என்று பேருவகை கொள்ளும் டாக்டர்கள், என்ஜினீயர்கள், வக்கீல் தொழிலுக்கு படித்தவர்கள் மற்றும் ஆசிரியப்பணிக்கான கல்வி பெற்றோர் என்று நீண்ட பட்டியல் உண்டு. இவர்கள் [அதாவது மெடலிஸ்ட் என்ற பெருமைக்குரியவர்கள்] தத்தம் துறையில் சாதித்தது என்ன? அதே போல் ஒவ்வொரு ஆண்டும்  +2 தேர்வில் ஒவ்வொரு பேப்பரில் [ சப்ஜெக்ட்] 200 / 200 வாங்கிக்குவித்தவர்கள்  வால்  நட்சத்திரங்களாக பிரகாசிக்க வேண்டுமே .அப்படி யாரும் தென்பட வில்லையே. ஆசிரியப்பணியில் மிகுந்த போதனா திறன் கொண்ட பலர், மார்க் அடிப்படையில் பார்த்தால் பெரும் சாதனை படைத்தவர்கள் இல்லை. ஆனால் தொழிலில் மாபெரும் ஆளுமை கொண்டவர்கள். மார்க்கும் மெடலும் தனி நபர் பெருமை அதை வைத்துக்கொண்டிருப்போர் பிறர்க்கு விளங்கிட வைக்கும் கலையில் தோற்பது ஏன்? தனக்கு தெரிந்ததை பிறர்க்கு தெரிவிக்கும் நுணுக்கம் கற்காமல் அல்லது புரியாமல் செயல்படப்போய் -தோல்வியுறுகிறார்கள். எனவே தான் ஒவ்வொரு கட்டத்திலும் புரிதல் ஒரு வலிமையான ஆயுதம் என்பதை நாம் உணர்ந்து புரிதலை நோக்கி பயணித்தால் நமது முயற்சிகள் பலன் தரும். .எனவே, நமது செயல் மேம்பாடடைய, மார்க்கை விட, செயல் திறனை வளர்த்தல் இன்றியமையாதது.

நன்றி அன்பன்  ராமன்  

3 comments:

  1. எனக்குத்தெரிந்து நெல்லையில் ஒரு 80 வயது தாத்தா ஈஸி சேரில் படுத்துக்கொண்டு ஹிண்டு பேப்பரை தன் பேரனிடம் கொடுத்து Editorial மட்டும் படிக்கச்சொல்வார் . பேரனுக்குத் தெரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லிக்கொடுப்பார்
    இதுவும்ஒருவகை குருகுலமே

    ReplyDelete
  2. It has 2 good components . 1. The child is mentally relaxed. 2.Editorial is a better section to learn usages and vocabulary along with contemporary issues.

    ReplyDelete
  3. ஒரு செயலை செய்ய முற்படும் போதோ அல்லது செய்யும் போதோ அதனை பற்றிய நல்ல புரிதலோடு செயலாற்ற வேண்டும் என்ற தெளிவை இக்கட்டுரை நமக்கு உணர்த்துகிறது. மிகவும் அருமை. நன்றிகள் பல.

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...