Friday, January 26, 2024

BIOTECHNOLOGY – DIVERSE OPTIONS

 BIOTECHNOLOGY – DIVERSE OPTIONS

பயோடெக்னாலஜி -பல பிரிவுகளில் வாய்ப்பு

நான் மீண்டும் வலியுறுத்துகிறேன் -பயோடெக் கல்வி ஏதோ போகிறபோக்கில் மனப்பாடம் செய்து தேர்வெழுதி பட்டம் பெரும் துறை அல்ல. ஆழ்ந்த புரிதலும், உயிரின இயக்கங்களில் நிகழும் மாற்றங்கள் குறிப்பாக செல்களின் செயல்பாடுகள், அவற்றை மாற்றி இயக்கும் உத்திகள் [TECHNIQUES]அடங்கிய நுண் திறன் அடங்கிய மிகத்துல்யமான பயிற்சி. அவற்றைப்பெற்றால் உலக அரங்கில் உங்களுக்கு உன்னத பதவிகள் காத்திருக்கின்றன

எனவே தெள்ளத்தெளிவான கருத்தாக்கம் [CONCEPTUAL CLARITY]  , நுணுக்கமாக மற்றும் விரைவாக இயங்கும் பயிற்சிபெற்ற கைகள் [TRAINED DEXTEROUS HANDS] இவற்றை கட்டமைத்துத்தருவதே முறையான பயோடெக்னாலஜி பயில/ பயிற்றுவிக்க தேவையானது.   தனி மனித திறன் மேம்பாடு தொடர்புடையது.

எந்த, அரசியல் தொடர்பையும் வைத்துக்கொண்டு, இது போன்ற செயல் திறன்களை 'வாங்கி' விடமுடியாது. தீவிர உழைப்பும், கற்கும் வேட்கையும் கொண்ட, இளைய தலைமுறையினர் இந்த வகை துறைகளை நோக்கி பயணித்தல் அவசியம்.

செயல் திறன் கொண்ட சயின்டிஸ்ட்-எந்தஉலக உயிரி தொழில்நுட்ப அரங்கிலும்[Any Global Biotechnology Forum]   வரவேற்பு பெரும் ஞானஸ்தன் எனில் மிகை அல்ல.. எனவே இளம் நிலையிலேயே பயாலஜி பிரிவை ஜோதிடம் பயில்வதுபோல் ஆழ்ந்து புரிந்து படியுங்கள் அதிலும் குறிப்பாக செல், ஜெனெடிக்ஸ், பயோகெமிஸ்ட்ரி , நியூக்ளியிக் அமிலங்கள், பிசியாலஜி [செயல் அமைப்பிய ல்] இவற்றை நன்கு புரிந்து கொண்டால் , மேல்விரிவாக்கமாக [HIGHER EXPANSION] பயில்வதுஎளிதில் கை கூடும்.

இதை விட்டு விட்டு, ஏதோ பயாலஜியில் நல்ல மார்க் வாங்கிவிட்டேன் என்று பயாலஜியில் கால் பதிக்க வேண்டாம். ஏனெனில், உயர் நிலைக்கு போகப்போக பயாலஜி ஒரு மாபெரும் நரகம் என்ற நிலையை உணர்வீர்கள்.

பயாலஜி யில்-- என்ன இருக்கிறதென்று வேதாந்தம் பேசும் எவருக்கும் ஒன்று சொல்கிறேன். பயாலஜி மிகமிக துல்லியமாக புரிந்துகொள்ள வேண்டிய துறை. அந்த அடிப்படையில் தான் மருத்துவக்கல்வி பயில, பயாலஜி ஒரு இன்றியமையாத்தேவையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக DNA /RNA / NUCLEASES மற்றும் இவை சார்ந்த செயல் முறைகளை புரிந்து கொண்டாலன்றி அடிப்படை பயலாஜி போதிக்கும் ஆசிரியப்பணியைக்  கூட  திறம்பட செய்ய முடியாது.

 பயாலஜியில், FORMULA க்களோ EQUATION களோ இல்லை இது என்ன படிப்பு? என்று அங்கலாய்ப்போடு நினைப்போர் கவனத்திற்கு,  எந்த FORMULA க்ககுள்ளும் அடங்கி அமராத விஸ்தாரமான மாற்றுவழிமுறைகளைக்கொண்டு இயங்குவதே செல்களின் திறன். எனவே தான் நுணுக்கமான புரிதலும் அவற்றை இயக்க  ரெகுலேட்டர் சங்கேதங்கள் [SIGNALS ] பற்றிய தெளிவும் இன்றி செயல் படுவது தற்கொலைக்கு ஒப்பானது.

நமது அடிப்படை தவறு, நாம் எதையும் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை; ஆனால் தேர்ந்த ஞானி போல் விமரிசனங்களை அள்ளி  வீசுவதற்கு தடங்குவதோ தயங்குவதோ இல்லை . இதன் காரணமாகவே பல்வேறு நல்வாய்ப்பு தரும் துறைகளை கோட்டை விட்டுவிட்டு கோட்டை வாயிலில் க்யூவில் நின்று வேலை தேடும் பட்டாளத்தில் ஒருவாறாக ஒருவனாக -அப்பா க்யூவில் இடம் பிடித்துவிட்டேன் என்று எம்பிளாய்மென்ட் EXCHANGE முன் பேருவகை கொண்டு நிற்கிறோம். எனவே தான் மீண்டும் சொல்கிறேன் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த அதே கள யதார்த்த அடிப்படையில் வேலை நோக்கில் பாடம் படிப்பதை நிறுத்துங்கள் .அதே போல பிறரைப்பார்த்து ஒரு குறிப்பிட்ட கல்லூரியில்.குறிப்பிட்ட பிரிவில் விண்ணப்பித்து மகிழ்ச்சி யுருவதை கை விடுங்கள். டூரிஸம் கல்வி வேற்று கிரக மனிதற்கு என்பதாக விலகி ஓட வேண்டாம் . நம்மில் பலருக்கும் பயாலஜி உயிர்களைக்கொன்று பயிலும் பாடத்திட்டம் என்ற அருவருப்பு இருக்கிறது. புரிந்து கொள்ளுங்கள் -அது ஒரு சில உடல் அமைப்புகளையும் நரம்பு/ரத்தநாளங்கள் குறித்த தெளிவான கருத்தை உணர்த்திட தேவையான பயிற்சி தான் என்று .

அதனுடனேயே இயைந்து பயணிக்கும் தாவர இயல் ஏதோ அறிவற்ற மூடர்களுக்கு என்று எண்ணுகிறோம். [அப்படி எனில் அதுவே நமக்கு உகந்தது என்று எண்ணுவதில்லையே -நாம் அறிவாளிகள் என்று சுயமதிப்பீட்டில் அகமகிழ்கிறோம்-எனவே Botany வேண்டாம் என்று விலக்குகிறோம் ]

பயோடெக்னாலஜியில் கண் பதிப்பவர்கள், வெகு ஆழமாக பயாலஜியின் இரு பிரிவுகளையும் தெள்ளத்தெளிவாக உணர்ந்து பயில வேண்டியது அடிப்படைத்தேவை. மனப்பாட கோஷ்டிகளுக்கு இங்கு இடம் இல்லை.  இதன் உள்ளார்ந்த பிரிவுகள் பல உள்ளன அவற்றை சில முக்கிய துறைகள் இவை

Medical biotechnology , Industrial biotechnology, Environmental biotechnology-AS SOME IMPORTANT BRANCHES.

இவை நீங்கலாக, பல்வேறு அங்கங்களாக PHYCOBIOTECH , MYCOBIOTECH , MOLECULAR MANIPULATIVE TECHNOLOGY , Drug designing ,  ஸ்டெம் செல் therapy என எண்ணற்ற உயர் பிரிவுகள் நாள் தோறும் பல்கிப்பெருகுவதைக்காண்கிறோம். இவை வெகு சிலவே . இவை தவிர நாம் அறிந்து கொள்ள இன்னும் ஏராளமான பிரிவுகள் உள்ளன.

தொடர்வோம்

நன்றி அன்பன் ராமன்

2 comments:

  1. எந்த ஒரு படிப்பையும் நாம் நண்பனாக ஆக்கிக் கொண்டு நன்கு புரிதலோடு பழகும்போது அந்த படிப்பும் நமக்கு உற்ற நண்பனாகி நம் வாழ்வில் உற்ற துணையாக நின்று பல ஏற்றங்கள் ஏற்படுத்தும்.

    ReplyDelete
  2. Many polymers are converted into plastic materials. These plastics are non biodegradables. Biopolymers like chitin, cellulose are converted into plastics that are biodegradables.
    This type of biotechnology is well accepted.
    Our college student after studying Zoology is in S.Africa and doing this type of work and is invited by Dubai Prince to convert algae into plastics.

    ReplyDelete

SRIRANGAPATNA

  SRIRANGAPATNA Curiously, the name has no association with either Srirangam of Tamilnadu or Patna of Bihar; in its own right –it is Srira...