Saturday, January 27, 2024

NEW VENTURE

NEW VENTURE 

 புதுக்கதை 

ஆஹா என்று குதூகலிக்க வேண்டாம் . சேலத்து சுந்தரி -பற்றி கேள்வி -56இல் 54 பேர் அமைதிகாக்க ஒருவர் சுப்பிரமணியன் பெரியம்மா என்றார் இன்னொருவர் , மிக சரியாக சேலத்து சுந்தரி பற்றிய விவரங்களை வார்த்தை பிசகாமல் எழுதியிருந்தார் . 

54 பேர் சேலமாவது சுந்தரியாவது -போடா என்று இருக்க நான் என்ன எழுதி என்ன -நாங்கள் படித்தால் படிப்போம் இல்லையேல் படித்தாலும் பதில் சொல்ல மாட்டோம் உன்னால் ஆனதை ப்பார் என்கின்றனர் . எனவே சுந்தரி அதுதான் சேலத்து சுந்தரி கதை முடிந்து விட்டது. வெகு விரைவில் இந்த நிலை தொடருமானால் கதைகள் எழுதுவதை நிறுத்தி வாரம் 1 நாள் ஓய்வெடுத்தால் என்ன என்று தோன்றுகிறது.இது போன்ற விட்டேத்தி வாசகர்களை பலநாளாக பார்த்து ,பலரது நேரத்தை வீணடிக்கிறேன் என்று உள்மனம் சொல்கிறது.. நடப்பு தலைப்புகள் நிறைவடைந்ததும் , எழுதுவதை நிறுத்திவிட்டால் தொடங்கியதை நிறைவு செய்த ஆத்ம திருப்தி யாவது கிட்டும் என்று எண்ணுகிறேன். இப்போது திருப்தி அல்ல திருப்பதி தான் எனது நிலை. 

.  [சேலம் சுந்தரி ] மாடசாமியின் செக்ஷனில் டைப்பிஸ்ட் , சமீபத்திய திருச்சி நிகழ்வில் சுப்பிரமணியை  அறிமுகம் செய்வித்து சேலத்துக்காரர் என்றதும் சுந்தரி நாங்களும் சேலம் தான் செவ்வாய்பேட்டை என்றதும், சுப்பிரமணி நாங்க--  குகை என்றான். , [அதோடு நம்ம பிழைப்பே குகை மாதிரிதான் இருக்கிறதென்று நினைத்துக்கொண்டான்] . 

இது ஒரு சிறிய பரிசோதனை. எதற்கு ?நாம் எதையுமே கவனத்தில் நிறுத்தாமல் படிக்கிறோம். அதனால் இது போன்ற எளிய தகவல்கள்தொடர்பாக  சேலம் சுந்தரி, நீலகண்டன், பரமேஸ்வரன் இவர்கள் யார் என்றால் தொடர்பில்லாத  ஏதாவது துகள் தகவல்களை சொல்லிப்பார்க்கிறோம்.

மிக மிக இயல்பாக மனதில் அழுத்தம் தராத கேள்விகள் கூட இது போல 'அமைதிகாக்கும்' நிலையை உருவாக்குகிறது எனில் நான் ஸயன்ஸில்/ கிராமரில் என்று கேள்வி எழுப்பினால் என்ன ஆகும்? பல வைணவர்கள் கூட வரலக்ஷ்மி நோன்பே முக்கியம் எனவே பதில் சொல்ல நேரம் இல்லை என்று நோன்பு நோக்கி திரும்புவார்கள். இது தான் நாம் சிறுவயது முதல் பின்பற்றி கவனக்குறைவாகவே செயல் படும் இயல்புக்கு அடித்தளம்.. இதே முறையில் தான் குழந்தைகளும் கல்வி பயில்கின்றனர் . இப்போது புரிகிறதா நாம் எந்த திறமையை வலுவாக கட்டமைக்க வேண்டும் என்று? புரியாமல் எந்தப்புள்ளியையும் கடந்து செல்லாதீர்கள் என்பதன் அடிப்படை நோக்கம் கூட நினைவாற்றலை அழுத்தமில்லாமல் விரிவாக்கும் பயிற்சி முறை க்கு என்னென்ன செய்தால் பலன் கிடைக்கும் என உணர்த்திடவே.

நன்றி

அன்பன் ராமன்     


5 comments:

  1. சேலத்து சுந்தரி அழகாயிருப்பாளோ மாட்டாளோ நமக்கு எதுக்கு இந்தக் கவலை என்ற எண்ணத்தில் பதில்அளிக்கவில்லை

    ReplyDelete
  2. ப்ரொபஸர் சார் கேள்வி கேக்கிறது ஈஸி. பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம்னு எங்க 56 பேருக்குத் தான் தெரியும். வேணும்னா திருவிளையாடல் தருமியைக் கேளுங்கோ.

    ReplyDelete
  3. Dear Dr K. V சுந்தரியின் அழகு பற்றி கேள்வியே வைக்கப்படவில்லை , எனவே தங்களின் விளக்கம் ???? மேலும் சேலத்து சுந்தரி யார் என்று மாத்திரமே கேட்கப்பட்டிருந்தது. நமக்கென்ன கவலை என்ற விளக்கம் தான் பலரது நிலையும் . எனவே கதை எதற்கு என்றே தோன்றுகிறது. நன்றி ராமன்

    ReplyDelete
  4. டாக்டர் ரங்கராஜன் சார்
    நான் சிவனோ, நக்கீரனோ அல்ல தருமியை கேள்வி கேட்க; பதில் சொல்லக்கூட கருமியாக இருந்தால் என்ன செய்ய முடியும் ?

    ReplyDelete
  5. நாங்க கருமி இல்லை. வெச்சுண்டா இல்லைனு சொல்றோம். அதுக்காக நீங்க ஊதற சங்க நிறுத்திடாதிங்கோ. ஊதிண்டே இருங்கோ.

    ReplyDelete

SRIRANGAPATNA

  SRIRANGAPATNA Curiously, the name has no association with either Srirangam of Tamilnadu or Patna of Bihar; in its own right –it is Srira...