Saturday, January 27, 2024

K J JESUDAS

 K J JESUDAS

கே .ஜே.  ஜேசுதாஸ்

மிகவும் மென்மையான குரலுக்கு சொந்தக்காரர் அதை ஒரு வளமான மூலதனமாக ஆக்கி, கர்நாடக இசையில் கால் பதித்தவர்  

அதற்கு, குரு செம்பை வைத்தியநாத பாகவதரிடம் முறையாக இசை பயின்றவர். 1960 களில் சென்னையில் வாய்ப்புகளுக்கு முயன்றவர். கேரள மாநிலத்தவருக்கே உரிய விடாமுயற்சி விரைவிலேயே இவர் மீது வெளிச்சம் படர உதவியது. .முதன் முதலில் இவர் குரலை நிரந்தரமாக பதிவேற்றியவர் இசையில் பெரும் ஆளுமை கொண்டவராக அறியப்பட்ட திரு. எஸ். பாலசந்தர்-என்ற வீணை பாலச்சந்தர் [கே பாலசந்தர் அல்ல].    அறிமுகம்பொம்மை என்ற படத்தில் -ஒரு பிச்சைக்காரனுக்கான -நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற பாடலில் -பார்த்தா ல் எளிதாகத்தோன்றும் , கரடுமுரடான நடை கொண்ட பாடல் ,பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடல் தான் ;ஆயினும் மிக உயரத்திற்கு இவரை உயர்த்திய பாடல் காதலிக்க நேரமில்லை படத்தில் பி.சுசீலாவுடன் இணைந்து   பாடிய "என்ன பார்வை உந்தன் பார்வை " என்ற 1964 இல் அதே படத்தில் 'நெஞ்சத்தை அள்ளி "என்ற டபிள் டூயட்டிலும் பாடி வலுவான இடம் பிடித்தவர். எனினும் பின்னாளில் வந்த எஸ் பி பி எட்டிய உயரம் அலாதியானது என்பது யேனின் புரிதல்.  

1 "நீயும் பொம்மை" பொம்மை -1963 . கே ஜே யேசுதாஸ்

பிச்சைக்காரன் மடியில் பொம்மை [அது ஒரு  வெடிகுண்டு], எப்போது வெடிக்கும் என்ற திகிலைச்சுற்றியே நகரும் படம். பிச்சைக்காரனுக்கு பாடிய பாடல் இசை ; வீணை பாலச்சந்தர் . படத்திற்கு டைட்டில் கிடையாது ஆனால் இறுதியில் அனைத்து கலைஞர்களும் மனித வடிவிலேயே நேரடியாக அறிமுகம் செய்வித்த புதுமை. பாடலுக்கு இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=nanum+bommai+neeyum+bommai+song+video+song&newwindow=1&sca_esv=599751626&sxsrf=ACQVn0_9TipbDX--dVOjQU-EfMB_--8BnA%3A1705658701383&ei=TU NEEYUM BOMMAI –KJJ

2 என்ன பார்வை -காதலிக்க நேரமில்லை[1964] -கே ஜே யேசுதாஸ்- பி சுசீலா -வி-ரா இசையில் வின்சென்டின் ஒளிப்பதிவில் சென்னை மெரினா கடற்கராய் சாலையில் காதல் கீதஜம் அந்நாளைய பரபரப்பு , இன்று பார்த்தாலும் நயம் மிக்க உருவாக்கம் பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.google.com/search?q=enna+paarvai+video+song+download&newwindow=1&sca_esv=599751626&sxsrf=ACQVn0_kXtnuw4hqguPGCACtku9OhAJFaQ%3A1705659042436&ei=okqqZbCYGpHdse ENNAPARVAI KJJ PS

3 'விழியே கதை எழுது '-உரிமையக்குரல் [1974] இந்தப்பாடல் கண்ணதாசன் , எம் எஸ் வி -குரல்கள் கே ஜே ஜேசுதாஸ்/ பி சுசீலா

மிகவும் பேசப்பட்ட கனவுக்காட்சிப்பாடல் , எம் ஜி யார் அரசியல் ப்ரவேசத்துக்கு தயாரான நேரம் அதுவும் மிகுந்த குழப்ப சூழலில்.       பாடல் இன்று கேட்டாலும் வசீகரம் குன்றாமல் மிளிருவதைக்காணலாம் பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.google.com/search?q=VIZHIYE+KADHAI+EZHUDHU+++video+song+download&newwindow=1&sca_esv=599751626&sxsrf=ACQVn0-n_f5u_UByIXfMaS6JTeoqycrpmw%3A1705659788591&ei=jE2 VIZHIYE KADHAI EZHUDHU KJJ PS

4  'மலரே குறிஞ்சி மலரே '[Dr .சிவா ]-1975 வாலி , எம் எஸ் வி, குரல்கள் கே ஜே ஜே /எஸ் ஜானகி

 மிகவும் பேசப்பட்ட பாடல் தலைக்காவேரியில் துவங்கும் கட்சி. ஜானகி ஜமாய் த்திருக்கிறார் , வாலி யின் கற்பனையும் பட்டொளி வீசிய பாடல் . இதன் முகத்தையாவது பார்க்க மாட்டோமா என்று அந்நாளைய புகைப்பட கலைஞர்களை ஏங்க வைத்த உலகப்புகழ் பெற்ற HASSELBLAD கேமரா சிவாஜி யின் கைகளில் என்று குடகு பகுதிகளில் படமாக்கப்பட்ட பாடல் அதீத உச்சம் எட்டிய பாடல் இது  கேட்டு மகிழ

https://www.google.com/search?q=you+tube+malare+kurinji+malare+video+song&oq=you+tube+malare+kurinji+malare+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIGCAEQRRhA0gEJNTExNTJqMG malare kjj janaki  1975 vaali msv

5இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் உயர்ந்தவர்கள் [1977]  - சங்கர் கணேஷ் இசையில் ஜேசுதாஸ் வாணிஜெயராம் குரல்கள் மீண்டும் ஒரு குருடன் பாடுவதாக அமைந்த வெற்றிப்பாடல் .அந்தக்காலத்தில் வெகு ஜன ஈர்ப்பு பெற்ற  பாடல் . இணைப்பு இதோ

https://www.google.com/search?q=IRAIVAN+IRANDU+BOMMAIGAL+SEITHAAN+video+song+download&newwindow=1&sca_esv=599751626&sxsrf=ACQVn08l6gPoJ3XqkBxaHDYr7TLvyBDLjQ%3A1705659334 IRAIVAN IRANDU BOMMAIGAL KJJ VJ

6 அந்தமானைப்பாருங்கள்  [அந்தமான் காதலி ]-1978, கண்ணதாசன், எம் எஸ் வி, குரல்கள் கே ஜே ஜேசுதாசும் வாணிஜெயராமும் .

மிகவும் ரசிக்கப்பட்ட பாடல் , நெளிவு சுளிவு மிக் பாடல் வாணி ஜெயராம்,இந்த பாடலில் ஒரு பரிமாணம்  காட்டியுள்ளார் என்பது எனது கருத்து . கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=ANDHAMAANAIPPARUNGAL++AZHAGU+++video+song+download&newwindow=1&sca_esv=599751626&sxsrf=ACQVn0_B7c5q79wRlGPeO5tFfgg5Ei28Kg%3A1705659759 ANDHA MANAI PPARUNGAL KJJ VJ   [use BAY STORE link]

சில பாடல்களை மட்டும் தந்துள்ளேன். பொருத்தருள்வீர்

நன்றி

அன்பன் ராமன்

1 comment:

  1. செம்பையின் சீடர் என்றால் சும்மாவா?சங்கீத்த்தின் நாட்டத்தால் அவர்சபரிபலைக்கு ஈர்க்கப்பட்டார்

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...