Thursday, January 25, 2024

FEAR IS ENEMY NO. 1

 FEAR  IS ENEMY NO. 1

அச்சமே முதல் எதிரி

அனைத்து முன்னெடுப்புகளுக்கும் தடைக்கல்லாக நம் எதிரே வியாபித்து நிற்பதுஅச்சம்/ அது சார்ந்த தயக்கம் ,குழப்பம் மற்றும் பிறர் என்ன சொல்வாரோ போன்ற கற்பனை கட்டுப்பாடுகள். இப்போது ஒரு கேள்வி -பிறர் செய்யும் எந்த செயலிலும் [உங்களுக்கு ஏற்போ/ இல்லையோ]] நீங்கள் அவர்களுடன் உடன்பட்டதோ மாறுபட்டதோ உண்டா ? எனில் ஏன் ? நமக்கென்ன என்று விலகிச்செல்வது நமது நட்புகளை இழக்காமல் பயணிக்க உதவும். அவ்வாறிருக்க,  அவர் என்ன நினைப்பார் இவர் என்ன நினைப்பார் என்று நாம் தான் பிறர் மதிப்பீடுகளுக்கு அளவற்ற முக்கியத்துவம் தருகிறோம் என்பது தெரிகிறதல்லவா.

வாழ்வில்/ வாழ்வியலில் எப்போதும் முன்னிறுத்திக்கொள்ள வேண்டிய ஒரே கோட்பாடு -அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்ற முதுவாக்கு மாத்திரமே. நாமாக அச்சம் கொள்ளுதல் தேவையற்ற பேதைமை என்று தான் நினைக்கத்தோன்றுகிறது . இவ்வனைத்திற்கும் அடிப்படை -ஒவ்வொருவரின் வளர் பருவத்திலும் விதைக்கப்பட்ட 'FEAR FOR PUBLIC OPINION / SENTIMENT ' என்ற நிபந்தனை எல்லை [CONDITIONING FRAMEWORK ]. அது விளைவித்தது என்ன எனில் -நான் கௌரவமாக வாழ்ந்தேன் என்று நம்மை நாமே பாராட்டிக்கொள்ளும் நிலைப்பாடு [வேறு எவன் பாராட்டுவான்? என்றொரு குமுறல் ஒலிக்கிறதே? ]. இந்த மன நிபந்தனை, ஒவ்வொரு திறமையானையும் சரித்து சாய்த்தது என்னவோ சாதித்ததை விட மிக மிக அதிகம்.

ஆம்- எந்த அரங்கிலும் முன்னணிக்கு வந்து திறனை நிறுவாமல் பதுங்கி வாழ்ந்து ஓய்வுபெற்ற மனிதர் ஏராளம். அவர் கண் முன்னேயே அவரிலும் பாதி அளவுக்கு கூட திறன் அற்றோர் போற்றிப்புகழப்பட்டு விரைவில் உயரம் எட்டுவது என்ன வகையான கொடுமை? .இதை ஈடேற்ற எவருக்கும் தயக்கம் இல்லை ஏனெனில் போட்டிக்களம் அமைந்து விட்டால் 'தன்னால் எதுவும் இயலாது'   என்று உணர்ந்தவர் போட்டி இல்லாம;ல் களம் அமைத்துக்கொள்வதில் சூரர்கள்.

மேலதிகாரிகளோ இவர்களை தாங்கிப்பிடித்து என்னுடைய காலத்தில் இதெல்லாம் நடந்தது என்று வாய்ப்பந்தல் இட்டு தனக்கு தானே பட்டயமும் கேடயமும் வாங்கிக்கொண்டு ஓய்வுக்குப்பின்னரும் வீட்டுக்கே போகாமல் அந்த கமிட்டி இந்த கமிட்டி தூதுக்குழு, சூதுக்குழு என்று பலவற்றிலும் இடம் பெற்று "வெட்கம் வாழைக்காய் கறியாகுமா ?" என்ற தென் தமிழ்நாட்டு பழமொழிக்கேற்ப வாழ்வது அன்றாட நிகழ்வு.           நீ என்ன ஏதோ கதை அளக்கிறாய் என்று இருவர் கொந்தளிக்கின்றனர். அமை தி அமைதி -நான் சொல்வதில் இருந்து இம்மியும் விலகவில்லை அது சிலருக்கு விளங்கவில்லை. போகட்டும் .

அச்சம் ஏன் பிடிக்கிறது / பீடிக்கிறது.? முதலில் பிடித்து பின்னர் பீடிக்கும். சிறு வயதில் பள்ளி ஆசிரியர் ஆசிரியை ஹெட்மாஸ்டர் என்போர் பேய் =பிசாசு போல் உருவகப்படுத்தப்பட்டு அவர் வகுப்பில் நுழைந்ததுமே நரசிம்மாவதாரம் வாயில் வழியே நுழைததென்றோ [பாவம் அவர் மாளய  பட்ஷம் காரணமாக பிளேடைத்தொட்டு 10 நாள் ஆயிற்று -எளிதில் நரசிம்மாவதாரம் பெற்றார் ];   பிறிதோர் ஆசிரியை மூக்கில் கட்டி வந்து பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டு வர -ஐயோ சூர்ப்பனகை வந்து விட்டாள் என்று சிறுவர் சிறுமியர் காப்பியங்களில் தோன்றும் அவதாரங்களை நினைவு கூர்ந்து -பாடம் என்ன என்பதை தாண்டி   இந்த அவதாரங்களை படம் வரைந்து பாகம் குறித்து "இவன் தான் -- அல்லது இவள் தான் -- கர்ணகொடூரமாக மூக்கு வாய் என சித்தரித்து வகுப்பில் விளையாடுவது நமக்கு தெரியாத என்ன?

இப்படி அச்சம் கொண்ட மனம் தேவையற்ற கவனச்சிதறல்களை வளர்த்துக்கொண்டு மேலும் பயம் அதிகரிக்க கல்வியில் நாட்டமின்றி , மனச்சுமையை விளக்கி வைக்க ஆளில்லாமல் , அதையும் அச்சத்தையும் விலக்கி வைக்காமல், மென்மேலும் வளர்த்து ஒவ்வொன்றாக ஒவ்வொரு பாடம் குறித்த பழைய புரிதலும் தகர்ந்து , இனி என்ன படித்தாலும் புரியாது என்ற இழி நிலையை அடைய கருவாய் அமைந்ததே சிறு வயதில் பள்ளி./ஆசிரியர்/ ஆசிரியை எல்லாம் அச்சுறுத்தும் உருவங்களாக மனதில் விதைக்கப்பட்ட தவறான கண்ணோட்டம்.

இதை அகற்ற யாரவது முயன்றதுண்டா? ஏனெனில், நமது தவறு நமக்கே தெரியாதே? தெரிந்தால் இப்படி ஒரு NEGATIVE THOUGHT மனதில் இடம் பிடிக்க அனுமதிப்போமா? எதுவும் காலப்போக்கில்விஸ்வரூபம் கொள்ளும்  ;எனில் கல்வி சார்ந்த அச்சம் விலகுமா என்ன? விலகாது. அச்சம் விலகாது ஆனால் கல்வி விலகி விடைபெறும் எல்லை நோக்கி விரையும். சும்மாவா சொன்னார்கள் அச்சம் தவிர் என்று? இது போன்ற உள்மன கறைகளை அகற்றாமல் கல்வி பயில்வதும் கழுவாத பாத்திரத்தில் பால் வைப்பதும் ஒன்றே இரண்டும் திரிந்து கெடும். பயம் என்ற மனக்கறையை அகற்ற என்ன செய்ய வேண்டும்? யோசியுங்கள்

அடுத்த பதிவில் காண்போம்

நன்றி

அன்பன் ராமன்                                                                                               

3 comments:

  1. அச்சம் தவிர்
    அச்சம் என்பது மடமையடா
    அச்சமுடையார்க்கு அரண் இல்லை

    ReplyDelete
  2. சிறு வயதிலேயே, இந்த பள்ளிக்கூடம் என்ற சொல் அச்சம் என்ற உணர்வை விதைத்து விடுவதால், அந்த அம்சமானது நாளடைவில் கல்வியின் மீது ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தி விடுகிறது. கடைசியில் "ஏரியின் மேல் கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போனவன் கதை போன்று ஆகிவிடுகிறது. இந்த அச்ச உணர்வை சிறு பிராயத்திலேயே கிள்ளி அறுபது எவ்வாறு என்பதை நமது ப்ரொஃபஸர் இனி வரும் பதிவுகளில் விளக்குவார் என்ற ஆர்வத்தோடு காத்திருக்கிறேன். 🙂👃

    ReplyDelete
  3. அந்த அச்சமானது, கிள்ளி எறிவது

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...