Thursday, January 25, 2024

C V RAJENDRAN - 2

 C V RAJENDRAN-2

சி வி ராஜேந்திரன் -2

சென்ற பதிவின் தொடர்ச்சி

வீட்டுக்கு வீடு  ஒரு நகைச்சுவை படம் பல முன்னணி கலைஞர்கள் இடம் பெற்ற படம் அதில் ஜெய்சங்கர்- லட்சுமி ஜோடி . இவர்கள் பாடும் பாடல்

1“அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம்" S P பாலசுப்ரமணியன், எல் ஆர் ஈஸ்வரி இனைந்து எம் எஸ் வி யின் இசையில் பாடல் -கண்ணதாசன்.  படம்: வீட்டுக்கு வீடு  --  1970

இதில் ஏன் பட நாயகிக்கு எல் ஆர் ஈஸ்வரியை தேர்ந்தெடுத்தார் எம் எஸ் வி எனில், இப்பாடலில் மிகவும் தைரியசாலியான பெண் பாத்திரம்; பாடலில் காதலை முன்னெடுப்பதே பெண் தான் .அதற்கேற்ற ஆளுமை செலுத்த செய்யப்பட தேர்வு தான் இது. .வீடியோவில் பார்த்தால் நான் சொல்வது புரியும். மிகுந்த உற்சாகமான பாடல் ,நல்ல கோர்வையாக இசை என்ற பல நுணுக்கமான இசைத்  துகள்களை  உள்ளடக்கியது . கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=andhappakkam+%5Bveettukku+veedu%5D++video+song+english+download&newwindow=1&sca_esv=598493926&sxsrf=ACQVn0-07vF25_Gc4H8TQXVwJzX8NY8RtA%3A1705 ANGAM PUDHU VIDHAM  SPB LRE  KANNADASAN 

Angam Puthuvitham-Veetuku Veedu (youtube.com)

2 "அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ"

குரல் சாய்பாபா பாடல் கண்ணதாசன் இசை எம் எஸ் வி

 படம் வீட்டுக்கு வீடு  குரல் சாய்பாபா: கல்லூரிப்படிப்பு , சிறப்பான ஆங்கில உச்சரிப்புக்கு சொந்தக்காரர் நல்ல குரல் வளம் .இவர் யார்?. மறைந்த திரு டி எஸ் பாலையா வின் புதல்வர் .  சாய்பாபா.  பாடலில் மை ஸ்வீட்டி என்று பாடுவதை உன்னிப்பாக கேளுங்கள் ஆங்கில உச்சரிப்பு எவ்வளவு நேர்த்தியாக கடைப்பிடித்துள்ளார் என்பது புரியும். எம் எஸ்வி யின் குழுவில் கிட்டத்தட்ட நிரந்தர அங்கத்தினர். சில பாடல்களில் இவரது குரல் பதிவாகியுள்ளது, மேலும் இசைக்கருவிகள் கையாளும் திறனும் கொண்டவர்.. இந்தப்பாடலில் நாகேஷ் பாட்டு வாத்யார் இரவில் தந்தை உறங்க,  பக்கத்து வீட்டு பெண்ணை நினைத்து கையில் கிடாரை வைத்துக்கொண்டு படும் / பாடும் காட்சி இதில் கிட்டாரின் நரம்பை முறுக்கேற்றுவதாக ஒரு நடிப்பு வேறு, அப்பா கொர் கொர் என்று குறட்டை டுவதும் சேர்த்து தான் பாடல்  மிகவும் ரசனையுடன் படமாக்கியுள்ளார் சி வி ஆர்.பாடலை ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=andhappakkam+%5Bveettukku+veedu%5D++video+song+english+download&newwindow=1&sca_esv=598493926&sxsrf=ACQVn0-07vF25_Gc4H8TQXVwJzX8NY8RtA%3A17052  VEETTUKKU VEEDU SAIBABA 1970 KANNADASAN

3 "பொட்டு வைத்த முகமோ" -சுமதி என் சுந்தரி -கண்ணதாசன் , எம் எஸ் வி, குரல்கள் எஸ் பி பாலசுப்ரமணியன், B வசந்தா [ஹம்மிங் செய்வதில் சூப்பர் ஸ்டார்] .இளமை முறுக்கேறிய பாடல் எனவே எஸ் பி பி அன்றைய ஆட்டோமேட்டிக் சாய்ஸ் என்று சொல்ல முடியும். அவர் குரலில் அவ்வளவு நளினம்;பாடல் பொருள் உணர்ந்து பாவம் காட்டும் வலிமை இவை எஸ்பி பி யின் அலங்காரத்திறமை. இந்தப்பாடல் அதி அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது ; ஒளிப்பதிவு இயக்குனர் : தம்பு . எளிமையான காட்சியே இப்பாடலுக்கு வலு சேர்க்கிறது              ஒப்பனை மற்றும் உடைகள் தேர்விலும் ஒரு நல்ல ரசனையை கவனியுங்கள். ஜெயலலிதாவின் இளமைக்கு ஏற்ப சிவாஜிகணேசன் உடைகளிலும் முறையான அணுகுமுறை.

பாடல் முழுவதும் விறுவிறுப்பான இளமை. பாடல் வெளியான காலத்தில் இந்தக்குரல்களை நேசிக்காதவர் எவரையும் நான் பார்த்ததே இல்லை. சொல்லப்போனால் இந்தப்பாடலுக்கு முறுக்கும் வசீகரமும் அள்ளி அள்ளி வழங்கியவர் யார் ? வசந்தாவா / எஸ் பி பியா என்று பட்டிமன்றமே நடத்தலாம். சொல்லே இல்லாமல், ஹம்மிங் ஒலியிலேயே சிருங்காரம் ததும்பும் வகையில் பாட வைத்த எம் எஸ் வி யை மறக்க இயலுமா.? அதுமட்டுமல்ல ஒவ்வொரு சரணமும் உச்சஸ்தாயியில் கிளம்ப எதுவாக பின்னிசை வழி அமைத்து உதவி செய்ய, இடை வெளியே இன்றி பயணிக்கும் இசையும் சொல்லும் ஒலியும், விளக்க இயலாத வறியவன் நான் -மன்னிப்பீர்.

சரணங்கள் துவங்கும் வீச்சை ப்பாருங்கள் -தரையோடு வானம்  2] மறு வீடு தேடி 3]மலைத்தோட்டப்பூவில் என்று இளம் குரல் வான் நோக்கிப்பாய பின்னர் அதே குரல் தவழ்ந்து கீழிறங்கி புன்னகை புரிந்தாள் /   என்னுடன் கலந்தாள் / நிழல் போல் மறைந்தாள் என்று ஏக்க மிகு ஒலி யில், அவ்வப்போது அடங்குவது இசை அமைப்பாளனின் அதீத ஆளுமைக்கு சான்று. ஒவ்வோரிடத்திலும் B வசந்தா அனாயாசமாக ஹம்மிங்கில் துணை நிற்கிறார். காட்சி எளிமையானாலும், இனிமை குன்றாத நளினம்.

பாடல் இணைப்புக்கு:

https://www.youtube.com/watch?v=6MT758TvZnM POTTU VAITHTHA MUGAMO SPB ,B V

https://www.google.com/search?q=YOU+TUBE+POTTU+VAITHTHA+MUGAMO+VIDEO+SONG&oq=YOU+TUBE+POTTU+VAITHTHA+MUGAMO+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIGCAEQ STAGE SONG SPB

4 "கங்கையிலே ஓடமில் லையோ ' படம் ராஜா -1972 -கண்ணதாசன் , எம் எஸ் விஸ்வநாதன் குரல் பி.சுசீலா

வினோதமான கதை அமைப்பு கொண்ட படம். படம் நெடுகிலும் ஒரு வித எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் பாடல்கள் நிறைந்த ஆக்கம். க்ரிஷ்ணபக்தையாக ஜெயலலிதா பங்கேற்க . போலீஸ் இந்த சூழலிலும் சந்தேகக்கண்கொண்டு ஆய்ந்து அலைய என்று நகரும் பாடல்/ படம். முற்றிலும் தெய்வீக இசை அசைவுகளில் மிதந்து செல்வதே இப்பாடலின் தனிச்சிறப்பு; அல்லலுற்ற மனம் அமைதிகொள்ள வைக்கும் சொல்லாடல். கேட்டு மகிழ இணைப்பு இதோ  

https://www.youtube.com/watch?v=9m7Zss5NF5w gangaiyile =raajaa  1972 KANNADASAN MSV

5 "ஆகாயப்பந்தலிலே "-பொன்னூஞ்சல்- 1972 -கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதன், குரல்கள் டி எம் எஸ், பி. சுசீலா

இப்பாடலின் சிறப்பு சொற்களை வெகுநேர்த்தியாக அலைகள் போல் வளைத்து நெளித்துப்பாட வைத்திருக்கும் இசை நுணுக்கம் . ஆகா   யப்பந்தலிலே வில் தொடங்கி பயணிக்கும் நாணிலினத்தை என்னென்று சொல்ல ? நொடிப்பொழுதும் இளைப்பாறாத  குரல்கள், ஒன்றை ஒன்று துரத்தும் கருவிகளின் கம்பீரம் ,மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் கந்தர்வ ஆதிக்கம் இப்பாடலில் நர்த்தனமிடுகிறது .பல இடங்களில் சுசீலாவின் குரல் ஏற்படுத்தும் தாக்கம் விளக்கவொண்ணாத வசீகரம், "பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி , மண ச்சங்கு  கையேந்தி நாம் அங்கு போவோமா , மீனாளின்  குங்குமத்தை என்னுமிடத்தில் இசைக்கருவிகள் ஊடாடிச்செல்லும் பாங்கு எழுதி விளக்க வொண்ணாத விந்தை. மொத்தத்தில் ஒரு முறை கேட்டதும் நம்மைப்பீடிக்கும் வல்லமை இந்தப்பாடலுக்கு உண்டு. அவ்வளவு உயிர்ப்பான இசைவடிவமைப்பு எம் எஸ் வியின் தனிச்சிறப்பல்லவா, கேட்டு மகிழ

https://www.google.com/search?q=PONNOONJAL+AAGAYA+PANDHALILE++video+song+download&newwindow=1&sca_esv=5ponnoonhjal 98493926&sxsrf=ACQVn09K124poHtDolIb_gkhlcKcJ2Rduw%3A1705300243193

6 'எதற்கும் ஒரு காலம் உண்டு' 'படம் சிவகாமியின் செல்வன் [1974] கண்ணதாசன் , இசை+ குரல் எம் எஸ் விஸ்வநாதன்.

இது ஒரு அசரீரி வகைப்பாடல் வாழ்வில் அடிபட்டு நொந்தவர்க்கு ஆறுதல் தரும் சொல்லும், தேற்றும் பங்கும் காட்டும் இசை வடிவம். சொல்லும் பொருளும் நம்மை ஆட்கொள்ளும் வகையில் இருக்க இசையும் குரலும் பரிவை விதைக்க எம் எஸ் வி தன் குரலிலேயே வழங்கியுள்ள பாடல் கேட்டு ரசிக்க

https://www.google.com/search?q=etharkum+oru+kaalam+undu+video+song&newwindow=1&sca_esv=598493926&sxsrf=ACQVn0_ER80CE8ZarXIAfqZu1pOFNdD35w%3A1705300368934&ei=kNGkZZqbOIuu4-EP6 SIVAGAMIYIN SELVAN EDHARKUM ORU KAALAM UNDU –VAALI , MSV

இவ்வாறு தனது ஆளுமையை பல படங்களில் திறமையாக வெளிப்படுத்திய இயக்குனர்  சி வி ராஜேந்திரன்        இவரும் மறைந்துவிட்டார்.

நன்றி

அன்பன் ராமன்  

1 comment:

  1. நல்லவர்கள் வாழ்வதில்லை

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...