Monday, January 22, 2024

Singer : Dr. M.Balamuralikrishna

 Singer : Dr. M.Balamuralikrishna

பாடகர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா

இனிமையான நுணுக்கங்களால் வசீகரம் செய்யும் வித்தை அறிந்த வித்தகர். ஆந்திரமாநிலத்தவர் . ஆயினும் வாழ்வு முழுவதிலும் தமிழகத்தில், கர்னாடக இசை வித்வானாக கொடிகட்டிப்பறந்தவர். ஆயினும் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் அவர் புகழ் பரவ காரணமாக அமைந்தது கலைக்கோயில் படத்தில் அவர் பாடிய டூயட் வகை பாடல் "தங்க ரதம் வந்தது தேரினிலே" என்ற கர்னாடக- வகை இசை மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் இசை அமைப்பில் உருவான பாடல் தான்.

இங்கும் ஸ்ரீதரின் பங்களிப்பு   மின்னுகிறது.

1 அதீதமான ஸ்வரவிஸ்தாரங்கள் நிறைந்த ஆபோகி வகைப்பாடல். அவர் பாடியதில் வியப்பில்லை ஆனால் அம்மையார் பி. சுசீலா பின்னி எடுத்து பாலமுரளியுடன் அனாயாசமாக போட்டிபோட்டு சற்றும் குறையாத கம்பீரம் காட்டி உள்ளார். பாடல் பதிவு முடிந்ததும் பாலமுரளி -எம் எஸ் வி யிடம்  "இன்னொரு முறை பாடுகிறேனே - என்னைவிட சுசீலா சிறப்பாக பாடியிருப்பதாக உணருகிறேன் என்று கேட்க எம் எஸ் வி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை இருவருமே சரியான அளவில் தான் பாடி இருக்கிறீர்கள் என்றாராம்.. இதில் மற்றுமோர் சிறப்பு வீணை சிட்டிபாபுவின் நேர்த்தியான வீணை வாசிப்பு, பிற இசைக்கலைஞர்கள் வழங்கியுள்ள மயக்கும் இசை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். "தங்கரதம்" -1964, கலைக்கோயில், கண்ணதாசன் , வி, ரா, எம் பாலமுரளிகிருஷ்ணா, பி சுசீலா

இணைப்பு இதோ :

.https://www.google.com/search?q=thanga+ragam+vandhadhu+video+song&oq=thanga+ragam+vandhadhu+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgD

Use the link cofibordrajamohd for the above song

2 ‘ஒருநாள் போதுமா -திருவிளையாடல் -1965, கண்ணதாசன், கே வி மஹாதேவன், எம்.பாலமுரளிகிருஷ்ணா

மறைந்து விட்ட ஆர்ட் டைரக்டர் கங்கா  அவர்களின் அரச தர்பார் செட் அமைப்பை பாருங்கள்.

இது ஒரு ராகமாலிகை வகை இசை, மகாதேவனுக்கு இது கை வந்த இசை அல்லவா; அதியற்புதமாகப்பாடி மிரட்டியுள்ளார். காட்சியில் மிரட்டுவதென்னவோ ஹேமநாதபாகவதர் வேடத்தில் நடித்த டி எஸ் பாலையா மற்றும் அவரது இசைப்பட்டாளம் . பாலையாவிற்கு பின் இடப்பக்கம் தம்புரா மீட்டும் உசிலைமணியை ப்பாருங்கள் அசல் வித்துவான் போல பாவம் காட்டியுள்ளார்.

மிடுக்கான இசை எத்துணை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். . பாடலுக்கு இணைப்பு இதோ..   https://www.youtube.com/watch?v=bImTEkwIUBE  oru naal podhuma

3 "மௌனத்தில் விளையாடும் மனா சாட்சியே "-நூல்வேலி -  கண்ணதாசன் , கேம்ஸ் விஸ்வநாதன், எம் பாலமுரளிகிருஷ்ணா .

குற்ற உணர்வு கொண்ட மனம் படும் துயரத்தை வெகுநேர்த்தியாக விளக்கும் பாடல் , கண்ணதாசனின் சொல்விளையாட்டு பாடலுக்கு பேருதவி புரிந்துள்ளது. பல்வேறு நடிகை நடிகையர் தோன்றும் காட்சி. பாடல் "சாமா"  ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது .இரவில் கேட்க உகந்த பாடல் . பாடலுக்கு இணைப்பு இதோ https:// www.google.com/search?q=mounaththil+vilaiyaadum+manasaatchiye+video+song+video+song&newwindow=1&sca_esv=599381486&sxsrf=ACQVn094bKy8mc7ZTyOXEVsNQctlyIY-3w%3A1705559428 mounaththil vilaiyaadum 

இவரே,நவரத்தினம் படத்தில் "குருவிக்கார மச்சான் "என்றொரு பாடல் பாடியுள்ளார். அது இவருக்கு புகழ் சேர்ப்பதற்கு வழி இல்லை. அதை தவிர்த்துள்ளேன்.

நன்றி

அன்பன் ராமன் 

 

 

 

1 comment:

  1. Nice article on BMK that too the mega hits in MSV composition. He himself acknowledged in many forums that MSV was the first to make him sing in film and "Thangaratham" was a definite number for him in all kacheries he did world over !!

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...