Tuesday, February 6, 2024

ATTENTION-LEARNERS

 ATTENTION-LEARNERS

பயில்வோரின் கவனத்திற்கு

 செய்ய வேண்டியது என்ன?     அடுத்த  பதிவில். என்று சென்ற பதிவில் பயில்வோருக்கான வழிமுறை குறித்து சொல்ல அடித்தளம் அமைத்திருந்தேன்.

நமது தேவை பயிலும் பாடங்களை முறையாகப்புரிந்து கொள்ளுதல். அதை வலுவாக செயல் படுத்த, எந்த தகவலும் பிழையின்றி தெளிவாக புரிந்துகொள்ள [உள்வாங்க]ப்படவேண்டும். அதுதான் பிழை பயம் இரண்டையும்      விலககி வைத்து உதவும் க ல் வி பயில.  முறையான வழி.. பயம் தோன்றினால் பிழை ஏற்படும்; பிழை ஏற்படுவது பயம் விளைவிக்கும். இவ்விரண்டையும்--- ஒன்றை ஒன்று அரவணைக்கும் தீமைகள் என்றே சொல்லலாம்.எனவே பயிலும் நிலையில் பயமின்றி இயங்க "தெளிவு' பெரும் துணை வகிக்கும்.

தெளிவு பெறுதல்

எந்த பாடப்பகுதியையும் நேரடியாக புத்தகத்தில் இருந்தே பயிலுங்கள்கற்கும்.பாடப்பகுதிகளை அதி காலை வேளைகளில் வாய் விட்டு பயில, பிழைகள் வெளிப்பட்டு பிறர் நம்மை வழிநடத்த உதவும் .உச்சரிப்பு ப்பிழைகள் குறையும். வாய்விட்டு படிக்க , நமது குரலே tape recorder போல செவி வழியே கருத்தைப்பதிவிடும் .செவி ஒரு முக்கியமான புலன் அதுவும் பயில்வோருக்கு தேர்வுகளில் ஆழ்மனதில் இருந்து கருத்துகளை எடுத்துக்கொடுக்கும். இந்த முறையில் பயில வாய்விட்டு படித்தாலும் அதிகாலை அமைதியும் பெரும் பக்கபலமாக இயங்கும். ஏராளமான தகவல்களை உள்வாங்க முடியும்.

பெற்ற தெளிவை போற்றி காக்க

காலையில் கற்றது நினைவில் தங்கியுள்ளதா என்று மாலையில் எழுதி  ப்பாருங்கள் .ஆரம்பத்தில் 40% தேறும், போகப்போக 50, 70, 80 , 90%என்று நினைவாற்றல் செம்மைப்படும். மனப்பாடம் செய்தால் குழப்பம் அதிகம்,ஆகும். ஆழ்ந்து படித்தால் குழப்பம் இன்றி தெளிவும் நினைவாற்றலும் மேம்படும்.

இதனால் பல தகவல்களை எளிதாக நினைவில் இறுத்தி . பெரும் ஆளுமை பெறலாம். இவை எளிய நடை முறைகள். சிறு வயது முதல் பின்பற்றி நமது செயல்களை வகுத்துக்கொண்டால், மனம் எளிதாகும் அச்சம் அண்டாது, இவை இல்லாதோருக்கு அண்டா நிறைய அச்சம் இருக்கும். .  

சொல்லாட்சி.

கல்வியின் அடிப்படை கட்டுமானங்கள் [புரிதல்/ நினைவாற்றல் ] வலுவடைந்ததும் நமது முயற்சி மொழி ஆளுமை நோக்கி திரும்பினால் , மொழியின் நளினம் , சொல்கட்டமைப்பு இரண்டையும் நாம் வசப்படுத்திக்கொள்ளலாம் . மொழி என்பது ஆங்கிலம் மட்டுமே அல்ல, ஏனைய மொழிகள் சார்ந்தது தான். தாய் மொழி செம்மைப்படாமல், ஆங்கிலம் ஒரு எல்லைக்கு வெளியிலேயே நிற்கும். கருத்தில் வலிமை இல்லாதவர் பேச்சில் முறையான சொற்கள் ஒருநாளும் பங்கு கொள்ளாது. ஆம் தாய் மொழியின் வலிமைக்கு ஈடான பிறமொழிச்சொற்களை தேடித்தேடி பேச, மொழி வளப்படும், வசப்படும் கேட்பவரை முற்றாக வசீகரிக்கும்..

எனவே ஆங்கிலத்தில் ஆளுமை வேண்டுவோர், தாய் மொழியை செம்மைப்படுத்துங்கள் அது உங்களின் பிறமொழி ஆளுமையை வளப்படுத்தும். ஒன்றை மறந்து விடாதீர்கள் .நமது கல்வியின் அடையாளம் நாம் பேசும்/எழுதவும் நடையிலிருந்தே பிறரால் யூகிக்க முடியும். சொல்லாட்சி குறைந்தோர் வெற்றி ஈட்ட கடுமையாகப்போராட வேண்டி வரும்.   

இவை  அனைத்தும் பயில்வோர் பின்பற்ற வேண்டிய எளிய நடை முறைகள். இவற்றை ஆரம்ப நிலையில் இருந்தே நடைமுறைப்படுத்தினால் ஒரு 4 ஆண்டுகளில் கல்வியை சிறப்பாக வசப்படுத்தி விடலாம். அதன் பின்னர் வளர்ச்சி விஸ்வரூபம் தான். நான் எந்த நிலையிலும் மார்க் குறித்து பேச வில்லை. அது நமது முயற்சிக்கு கிடைக்கவேண்டிய ஒரு அடையாளம். மார்க் மட்டுமே ஒருவரை கடைதேற்றாது. மாறாக புரிதலும் நினைவாற்றலும் எவரையும் வெற்றிகொள்ள வைக்கும் ப்ரம்மாஸ்திரங்கள். கலக்கம் வேண்டாம். முறையாக முயலுங்கள் கல்வி நிச்சயம் வசப்படும்.

  . இனிமேலும் ஏதாவது கல்வி என்று ஆரம்பித்தால் கல்வி , 1]கல்  2]வி என்று பிளவு பட்டு இரண்டாகி    ஆகி  கல் விடுவார்கள் என் மீது .

அன்பர் களுக்கு வேறு ஏதேனும் பொருள் குறித்த ஐயம் இருப்பின் WA ப்பில் தெரிவித்தா ல் முயன்று பார்க்கலாம்

நன்றி  

அன்பன் ராமன்

2 comments:

  1. பிழை திருத்தம்

    வாய் விட்டு படித்தால் பிழைகள் வெளிப்பட்டு என்ற இடத்தில் கம்ப்யூட்டர் எதையோ குளறுபடி செய்துள்ளது. அதை வெளிப்பட்டு என திருத்தி வாசிக்கவும் நன்றி ராமன்

    ReplyDelete
  2. இப்பகிர்வுகளை இளந்தளிர்கள் பின்பற்றினால் ஆல விருக்ஷமாக வளர்ந்து தானும் பயனடைவர் மற்றவர்க்கும் பயன் கொடுப்பர்
    பேராசிரியர் ராமனுக்கு நன்றி.

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...