Wednesday, February 7, 2024

Seerkazhi GOVINDARAJAN

Seerkazhi GOVINDARAJAN

சீர்காழி

பெரும்பாலும் ஊரைச்சொன்னாலே இவர் பெயரை அறிவார்கள் எனவே அதையே தலைப்பாக வைத்துள்ளேன்இவர் அண்ணாமலை பல்கலையில் இசை பயின்றவர் சைவ முறை வாழ்வியல் கொண்டவர் .கணீரென்ற குரல் வெண்கல மணியென ஒலிக்கும்  உச்சஸ்தாயி யில்  மிக எளிதில் சஞ்சரிக்கும் .உச்சரிப்பில் அப்பழுக்குஇல்லாத மொழியாடல். ஹீரோவுக்கும் பொருந்தும் காமெடியன்களுக்கும் பொருந்தும் அதிலும் திரு தங்கவேலுவுக்கு சிறப்பாக பொருந்தும். கிட்டத்தட்ட எல்லாவகைப்பாடல்களையும் பாடி உள்ளார்.  குரலைக்க்கேட்டதும் குழந்தை கூட சொல்லிவிடும் இது 'சீர்காழி'யின் குரல்  என்று.  சிறப்பாகப்பாடி நெடுங்காலம் சினிமாத்துறையில் பயணித்தவர் ;இவருக்கு நிழல் காலம் என்ற ஒன்று இருந்ததா என்று யோசிக்கிறேன். நான் அறிந்த வரை இல்லை என்று தான் எண்ணுகிறேன் முறையான சங்கீதம் பயின்றதால் கர்நாடக வகை ராகங்களை ஸ்வரம் பிறழாமல் பாடுவார் .

 இவர் ஒரு சகாப்தம்-- எண்ணற்ற முத்திரைப்பாடல்கள் தந்தவர்.

1 பட்டணம் தான் போகலாமடி "எங்கள் வீட்டு மஹாலக்ஷ்மி [1957] -பாடல்   உடுமலை நாராயண கவி   இசை வேணு    குரல் கள்  சீர்காழி/ பி சுசீலா 

கிராமத்து ஆள் சென்னைக்கு போக மனைவியை அழைக்க அவள் சென்னையின் துயரங்களை சொல்லி இவனை புரியவைப்பதாக வந்த பாடல். சாதாரண சொற்களில் கருத்துகள் தெறித்து விழுவதை ரசிக இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=o6gUEDDaFzM pattananthaan engaveettu mahalakshmi1957 PS S G udumalai narayanakavi music: master venu

2 'அமுதும் தேனும் எதற்கு ' தை பிறந்தால் வழி பிறக்கும் [195 ] பாடல் சுரதா , இசை :கே வி மஹாதேவன் ,குரல் சீர்காழி கோவிந்தராஜன்

அழகான வர்ணனையும் ஒப்பீடும் கலந்த பாடல் , மிக இயல்பான ஓட்டம் கே வி எம் இசையும் கருவிகளும் குரலும் இனைந்து பயணித்து வெற்றி ஈட்டிய அந்நாளைய புகழ்மிக்க பாடல்

https://www.youtube.com/watch?v=pOyGvSA0GDc suradhaa kvm ,

3 "வட்ட வட்ட ப்பாறையிலே" பழனி 1965 கண்ணதாசன் , வி-ரா , சீர்காழி, பி சுசீலா

கவிஞரின் சொல்லாடலில் ஊடலும் ஐயமும் ஊடாடும் விந்தையை கவனியுங்கள். எவனோ ஒருவன் புடவை தந்து தன காதலியை கைப்பற்ற நினைக்கிறானோ என்று ஐயம் கொண்டு துவங்கும் பல்லவி. இறுதிவரை உண்மையை சொல்லாமல் அவனை தவிக்க விடும் பெண் [தேவிகா]. அருமையான இசைப்பயணம் விஸ்வநாதன் -ராமமூர்த்தி. சுசீலா உரிய உச்சரிப்பில் கொடிகட்டி பறக்கிறார  [வாங்கித்தந்த சேலை இது என்று முடிக்கும் போதும் , இறுதியில் மாமா உன் பெயர் எப்படிச்சொல்ல என்ற வரியில் 'மாமா ' என்ற சொல்லை எவ்வளவவு நேர்த்தியாக பாடியுள்ளார். அன்றைய மரபுப்படி சுற்றிலும் மருந்துக்குக்கூட மனிதர் இல்லாத பகுதியில் காதல்  நடப்பது கௌரவமான படப்பதிவு. கேட்டு மகிழ

https://www.google.com/search?q=you+tube+tamil+song+vatta+vatta+paaraiyile+video+song&oq=you+tube+tamil+song++vatta+vatta+paaraiyile+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIGCA

4 கண்ணன் வந்தான்   ராமு , 1966 ,கண்ணதாசன், விஸ்வநாதன்,                                       குரல்கள் சீர்காழி ,டி எம் எஸ்

தொகையாறா களப்படுத்தும்  உணர்வை ஓங்கி ஒலிக்க வைத்த பாங்கு அழகாக காட்டுகிறதே--  சோகத்தின் பிடியில் சிக்கிய மாந்தர்கள் இறைவனிடம் அடைக்கலம் தேடும் யதார்த்தம். சோகமும் ஆறுதலும் ஒரு சேர மிளிரும் உன்னத இசை ஜாலம்.

  என்றென்றும் மாந்தர்க்கு ஆறுதல் தரும் சொல் /இசை / உணர்ச்சிகளின் நர்த்தனம்  இப்பாடல்.

அதுவும் தெய்வம் கண்ணன் என்றால் கவியரசு விஸ்வரூபம் எடுப்பார். இதிலும் அவ்வாறே .   முதியவர் நாகையா அடி  எடுத்துப்பாட , ஏனையோர் பின் தொடர அமைந்த பக்தி வகைப்பாடல். இந்தப்பாடலின் கம்பீரம் சீர்காழியின் குரலில் துவங்கினாலும் , தொடர்ந்து வரும் இசையின் மற்றும் இசைக்கருவிகளின் தெய்வீக கோர்வையும் விளக்கவொண்ணா வசீகரம். பின்னர் சேரும் டி எம் எஸ்ஸின் குரல் வேறொரு நிலைக்குப்பாடலை சுமக்க , கேட்கவும் காணவும் பரவசமூட்டும் பாடல் , விஸ்வநாதனின் மேலாண்மை மிளிரும் பல பாடல்களில் இதுவும் ஒன்று.  இதில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கண்ணனின் மகோன்னதத்தையும், மனிதர்களுக்கு எப்போதும் ஆறுதல் தருபவன் என்பதையும் எவ்வளவு நேர்த்தியாக கவியரசர் சொல்ல, அதை மெருகேற்றி இசைத்திருக்கிறார் எம் எஸ் வி. கேட்டு ஆனந்திக்க / கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=youtube+tamil+song+kannan+vanthan+vanthan+video+song&newwindow=1&sca_esv=ea470e4985ed4d8d&hl=hi&sxsrf=ACQVn08a8xXtnLGazCcOoD1GbtVZDCVE0Q%3A1

5 நீங்க நல்லா  இருக்கணும் -இதயக்கனி [1975] பாடல் புலமைப்பித்தன் , இசை எம் எஸ் வி, குரல்கள் சீர்காழி ,  எஸ். ஜானகி ,   டி எம் எஸ், 

மிக வலிமையான தொகையறா, குடகு தலைக்காவிரி தொடங்கி , காவிரியின் பயணத்தை கம்பீரமாக பேசும் வண்ணம் அமைந்துள்ளது. சீர்காழியின் குரலும் கணீரென்று ஒலிக்க , தஞ்சையம்பதியில் நிறைவுறும் பகுதி வயிற்றைப்பிசைகிறது. அவ்வளவு தாக்கம் . அனைவருமே ஓங்கி உயர ப்பாடி கம்பீரமாக பறைசாற்றுகிறது   எம் ஜி ஆரின்  புதிய அரசியல் பயணத்தை. தோட்ட தொழிலாளர்கள் பங்கு பெறும் காட்சி . நீண்ட தாக்கம் விளைவித்த விறுவிறுப்பான சொற்களும் துடிப்பான இசையும் இப்பாடலுக்கு அணிகலன்கள். பாடலை ரசிக்க இணைப்பு  

https://www.google.com/search?q=neenga+nalla+irukkanum+video+song+download&newwindow=1&sca_esv=ea470e4985ed4d8d&hl=hi&sxsrf=ACQVn0_FbiG4x85JwYnRzEAGPYFEG3WNhA%3A1707198848

நன்றி

அன்பன் ராமன்

 

 

1 comment:

  1. கச்சேரி, திரை, பக்தி என முப்பரிமாணங்களிலும் மிளிர்ந்தவர். அனைத்து திரை மன்னர்களுக்கும் இசைமுடி சூட்டியவர். அக்கால திரையிசை மூவேந்தர்களின் முன்னோடி. அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் அன்னாள் டூரிங் கொட்டகை களிலும் இசைக்கப்படும் முதல் துதிப் பாடல் இந்த கோவிந்தனின்
    "வினை தீர்க்கும் விநாயகன்" பாடல்தான்.



    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...