Thursday, February 8, 2024

DIRECTOR A. BHIMSINGH-2

 DIRECTOR  A.  BHIMSINGH-2 

இயக்குனர் பீம்சிங் -2

5 காதல் சிறகை காற்றினில் விரித்து [ பாலும் பழமும் -1963] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி. சுசீலா

தொகையறாவிலேயே கவிஞனும் இசை அமைப்பாளனும் வரியா பார்ப்போம் என்பது போல் போட்டியை துவங்கியுள்ளனர்.

இதற்கு மேல் கவிதை நயம் எழுத்தில் வடிப்பது சாத்தியமா என்றே கேட்கத்தோன்று கிறது. பல்லவியே அட்சரலட்சம் பெரும் உன்னத யாப்பு 'காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா?   கண்ணில் நிறைந்த கணவன் மார்பில் கண்ணீர் கடலில் குளிக்கவா?  என்ற வினா

விஸ்வநாதன் பறக்கவா என்ற சொல்லையும், குளிக்கவா என்ற வினாவையும் எப்படி மென்மையாக உலுக்கி பாட வைத்திருக்கிறார் கூர்ந்து கவனியுங்கள்.

பிரிந்தவர் மீண்டும் சேரும் பொது அழுதால் கொஞ்சம் நிம்மதி, பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னதி -காதல் சன்னதி, பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னதி -காதல் சன்னதி என்று தொடர்ந்து 2 முறை பாடி உணர்ச்சியை பிழிந்து வடித்துள்ளனர். இவைகளில் சொல்லும் இசையும்  போட்டி போட்டு நம்மை கட்டிப்போட்டு பாடாய் படுத்துவது என்றோ நாம் இருந்த அமைதியான அந்த காலத்திற்குள் நம்மை தள்ளுவது போல் வியாபித்து மயக்குகிறது. மட்டுமா? இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இருகை கொண்டு வணங்கவா என்று இரண்டு முறை உருகப்பாடவைத்த ராட்ஷசன் அல்லவா விஸ்வநாதன்? பல கவிதை வரிகளை ஆங்காங்கே இரு முறை பாட வைத்து புதிய வகையில் சோகத்தின் வேகத்தை காட்டியிருக்கிறார் எம் எஸ் வி.இந்த இசை அசுரர்கள் இப்போது இல்லை இந்தவகை இசைக்கோலங்கள் சரித்திரத்தின் சுவடுகளில் முடங்கியுள்ளன.                                  தொலைத்துவிட்ட இளமையில் நுழைந்து இளைப்பாற இணைப்பு  https://www.google.com/search?q=youtube+tamil+song+kaadhal+siragai+kaatrinil+viriththu+++video+song+download&newwindow=1&sca_esv=602116154&sxsrf=ACQVn08fBIwia--2_IHAwz1VnakWeaAlQg kaadhal siragai 1963 paalum pazhamum  kd v r ps

6 அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்-[பச்சை விளக்கு 196  ]கண்ணதாசன், வி-ரா, பி.சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி .

தமிழ் சினிமா எங்கே தொலைத்தது இவ்வகை குறும்பு பாடல்களை?.

அந்நாளைய படங்களில் ஒருத்தியை மையப்படுத்தி பிற தோழியர் கும்மாளமிட்டுப்பாடுவது ஒரு சமூக யதார்த்தமாகவே சித்தரிக்கப்படுவது வழக்கம். அதில் கைதேர்ந்த கவிஞர்கள் உலா வந்த காலம் கேட்கவேண்டுமா யாப்பு, இசை, கும்மாளம் கிண்டல் அனைத்தையும் சுமக்கும் இசை என்ற ஆளுமைப்பட்டாளம் ரசிகர்களுக்கு படத்துக்குப்படம் விருந்து படைத்து வந்த பொற்காலம் அது.

7 அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்தப்பொல்லாத கண்ணனின் ராதை என்ற பல்லவி -அது கிளப்பிய அதீத ஆர்வம் இந்தப்படத்திற்கு ஒரு விளம்பரமாக அமைந்தது எனில் மிகை அல்ல.  இதில் ஒரு வித்தியாசம் யாது எனில் தலைவி க்கு எல் ஆர் ஈஸ்வரி குரல் கொடுக்க தோழிக்கு சுசீலாவின் குரல்.

துவக்கத்தில் வரும் 'கோதை' என்ற சொல் எவ்வளவு  அதிர்வுடன் கோ ---தை  பாடப்படுகிறது மற்றும் ராதை என்று முடிக்கும் போதும் வேறு மாதிரி வேகம் இவற்றை கவனியுங்கள்

இப்பாடல் குறித்து ஊர்ஜிதம் இல்லாத சில தகவல்கள் உண்டு  . இது -கண்ணன், ராதை என்ற சொற்கள் கண்ணதாசனின் முத்திரை. எம் எஸ் வி யோ, கண்ணன் என்றால் உடனே புல்லாங்குழலை ப்ராதனப்படுத்தி, ப்ரமாதப்படுத்திவிடுவார்.

அவருக்கு வாய்த்த அற்புத கலைஞன், திரு நஞ்சப்ப ரெட்டியார்- FLUTE வித்தகர். பாடல் பதிவிற்கு தாமதாக வந்த ரெட்டியாரை வசமாக தண்டிக்க வேண்டும் என்ற கோபம் எம் எஸ் வி யை ஆட்கொள்ள -இரு உன்னை என்று எளிதில் வாசிக்க முடியாத விரைவான அடுக்கடுக்கான ஸ்வரக்கோர்வைகளை வரிசைப்படுத்தி, அந்த வரிசை பிசகாமல்   இடை இசையில் வாசிக்க சொன்னாராம் எம் எஸ் வி.

இது அல்லாமல் பாடலின் துவக்கம் தொடங்கி, பாடலிலும் இடை இடையே குழல் ஒலிக்கும் ஸ்வரக்கோர்வைகளை தந்து-- வாசி என்று கட்டளை வேறு.

எம் எஸ் வி-- இசையில் ராட்ஷசன் என்றால், ரெட்டியார்- குழலில் கிங்கரன். மிகச்சரியாக வாசித்து அனைவரையும் வியக்க வைத்தாராம் ரெட்டியார். அந்தக்குழல் பயணிக்கும் வேகம் கேட்டால், நமக்கே மூச்சுத்திணறும். என்ன வகை திறமைசாலிகள் இசைத்துறையை அலங்கரித்திருந்தனர் என்ற ஏக்கம் பெருமூச்சாக வெளிப்படுகிறது. குழலுக்கு ஒரு பாடல் சொல் என்றால் நான் இந்தப்பாடலை சற்றும் தயங்காமல் தேர்வு செய்வேன். இம்மி இம்மியாக ரசிக்க இணைப்பு  

https://www.google.com/search?q=aval+mella+siriththaal+ondru+solla+ninaithaal+video+song+download&newwindow=1&sca_esv=69d6b260c606375d&biw=1600&bih=773&sxsrf=ACQVn0_bzMnYWLjNK_jiQrv2 aval mella siriththaal \1964 pachchai vilakku kd vr ps nanjappa reddiyar 

8 இதே படத்தில் அமைந்த மற்றுமோர் சுசீலா -ஈஸ்வரி குரல்களில் அமைந்த தோழியர் கும்மாளப்பாடல்தூது சொல்ல ஒரு தோழி இல்லையென என்ற கவி அரசரின் யாப்பு, எம் எஸ் வியின் குதூகல இசை .நான் விவரிக்கப்போவதில்லை கேட்டு மகிழ்வீர் .இணைப்பு இதோ :                   தூது சொல்ல ஒரு தோழி இல்லையென

https://www.google.com/search?q=thoodhu+solla+oru+thozhi+video+song+download&newwindow=1&sca_esv=69d6b260c606375d&biw=1600&bih=773&sxsrf=ACQVn09pvhFYPuYgjD_jkF7gXsWZuTnM7g%

பாடல்களில் பீம்சிங் தலையிடாமல் இருந்து, பல அற்புதமான பாடல்களை அறுவடைசெய்து விட்டார் என்பது இப்போது புரிந்திருக்குமே.  

நன்றி

அன்பன்   ராமன்

2 comments:

  1. தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும
    தாழையாம்பூமுடிச்சி
    மலர்ந்தும்மலராத பாதி மலர்
    போன்பாற பாடல்டகளை இனி கேட்பதறிது

    ReplyDelete
  2. பாடல், இசை, இயக்கம், நடிப்பு மற்றும் பகிர்வு அனைத்தும் ப்ரமாதம்.

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...