PLEASE-AVOID COMPARISON
ஒப்பீடு தவிர்ப்பீர்
இது யாருக்கு--
இந்த
போதனை?
‘ஆ’
எனக்கு
தெரியாதா
என்று
குமுறாவோ
குதிக்கவோ
வேண்டாம்
பயிலும்
நிலை
சிறாருக்கு
அச்சம்
எவ்வளவு
தயக்கத்தையும்
பின்னடைவையும்
தருமோ
அதற்க்கு
இணையான
அல்லது
மேலான
பின்னடைவை
ஒப்பீடு
ஏற்படுத்தும்.
ஒப்பீடு தவிர்த்தல்
என்பது,
பெரியோர்க்கும்,
பயில்வோர்க்கும்
பொருந்தும்.
இதை
ஏன்
வலியுறுத்துகிறேன்
என்றால்
ஒப்பீடு
செய்தல்
நான்
அவரை
விட
/இவரை
விட
எவ்வளவோ
பரவாயில்லை
என்று
தங்களுக்கு
தாங்களே
சான்றிதழ்
வழங்கிக்கொள்ளும்
பெரியவர்கள்
தங்களைவிட
உயர் நிலையில்[கல்வி
பதவி,
செல்வம்
உள்ளிட்ட
அளவில்]
இருக்கும்
உற்றார்
உறவினருடன்
சுயஒப்பீடு
செய்வது
உண்டா?
பெரும்பாலும்
இல்லை
.ஆனால்
ஒரு
சில
பெண்மணிகள் தத்தம் கணவன்களை”அவனைப்பார் கீழ் பதவியில்
இருந்து
கொண்டு
7 ஆண்டுகளில்
2 வீடு
, 30 பவுன்
நகை
வாங்கி
விட்டான்
நீயும்
இருக்கிறாயே” என்று ஒப்பீடு
செய்து
அவனையும்
குறுக்கு
வழியில்
பொருளீட்ட
தூண்டுவது
, பின்னர்
லஞ்ச
ஒழிப்பு
பிரிவில்
சிக்கிக்கொண்டு
கணவனை
கம்பி
எண்ண
வைத்த
குலமங்கைகள்
செய்த
சாதனை
குடும்ப
மானத்தை
கப்பலேற்றிய
பராக்கிரமம்
தான்.
ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ள
மறுத்த
கணவன்
அடி
மேல்
அடி அடித்தால் அம்மியும்
நகரும்
.என்பது
போல்
திடீரென்று
சிந்தை
பிறழ்ந்து
நிலை
குலைகிறான்.
இதைப்பற்றி உனக்கென்ன? என்ற குரல்,
எனக்குள்ளேயே
ஒலிக்கிறது.
இதில் நான்
கொள்ளும்
விசனம்
- குழந்தைகள்
வழி
பிறழும்
போது,
அவர்களை
நல்வழிப்படுத்த
இயலாமல்
அவனும்/
அவளும்
[உங்கள்
வாரிசுகள்
தான்]
குறுக்குவழியில் விரைந்து முன்னேற
, பொய்
பேசுதல்,
புறம்
சொல்லல்,
தேர்வில்
காபி
அடித்தல்
என்று
அனைத்து
வித்தைகளையும்
7 ம்
வகுப்பிலேயே
செம்மையாக
அரங்கேற்றி
பின்னாளில்
பஞ்சமாபாதக
செயல்களுக்கு
அஞ்சாமல்
தறி
கெட்டு
அலையும்
நிலையை
அடைவதை
பல
இடங்களில்
பார்க்கிறோம்.
அப்போது பெற்றோர்
பேசும்
வசனம்
ஆகா
ஆஸ்கர்
விருதுக்கு
உகந்த
உன்னதமாகத்தோன்றும்.
தவறை
கண்டிக்க
இருக்கும்
உரிமை பெற்றோருக்கு வேண்டும்
--
இதைத்தான்
தார்மீக
உரிமை
என்ற
ஒற்றை
சொல்லில்
நீதி
நூல்கள்
உணர்த்துகின்றன.
தவறு
மேல்
தவறு
செய்து
வாழ்வோர்
எவரையும்
எதற்கும்
நல்வழிப்படுத்தும் .யோக்யதை அற்றவர்களாக
அம்மணப்பட்டு
நிற்கிறார்கள்.
வறுமையிலும் நேர்மை
என்று
வாழ்வோருக்கு
இருக்கும்
வீரமும்
கௌரவமும்
செருக்கும்
ஒருநாளும்
குறுக்கு
வழி
வித்தகனால்
அடைய
முடியாது..
இதற்கும் கல்விக்கும்
என்ன
தொடர்பு
என்கிறீர்களா?
கண்டிப்பாக
உண்டு.
ஒரு
குடும்பத்தின்
மானத்தை
அடகு
வைக்க
நெய்
ஊற்றி
பற்றவைத்த
நெருப்பு
-"ஒப்பீடு"
என்ற
தேவையற்ற
கணக்குகள்
தானே?
கல்வி பயிலும்
சிறார்
பெறும்
இன்னல்கள்
யாவை.? அவனைப்பார் அவளைப்பார்
எவ்வளவு
மார்க்
வாங்குகிறான்
என்று
குழந்தை
களின்
ஆழ்
மனதில்
சிலர்
மீது
வெறுப்பை
விதைக்கிறோம்.
நட்பு
தோன்ற
வேண்டிய
வயதில்
வன்மம்,
பொறாமை,
எதிர்வினை
ஆற்றுதல்
என்று
தொடங்கி
- கிழவி
கொலை
8ம்
வகுப்பு
சிறுவன்
வெறிச்செயல்
என்று
செய்தி
வருகிறதே
எதனால்?
தேவையில்லாமல்
கிளப்பப்படும்
ஆத்திரம்
எல்லையில்லா
கொடூரங்களை
அரங்கேற்ற
தயார்
நிலையில்
இளம்
மனங்களை
ஆட்கொள்ள,
அவர்களை
ஆட்டி
வைத்து வெறியர்களாக மாற்றிவிடுகிறது.
சிறு
சிறு
தீமைகளின்
கூட்டுக்கலவையே,
பெரும்
பேராபத்திற்கு
வித்திடுகிறது.
இந்த
மன
வக்கிரங்களுக்கு
ஒப்பீடு
ஒரு
உந்து
சக்தி
என்பதை
நாம்
உணராத
வரை,
வாழ்வில்
நிம்மதி
என்பது
ஒரு
ஏக்க
உணர்வாகவே
போய்விடும்.
எவரையும் எதற்கும்
எவரோடும்
ஒப்பீடு
செய்யாதீர்கள்
ஒப்பீடுகள் ஏற்புடையனவாக இருக்க வேண்டுமெனில் , சம திறனாளிகளை மட்டுமே ஒப்பிட முடியும். மேலும் மாறுபட்ட சூழல்கள், வசதி, பயிலும் சூழல்களில் வளரும் குழந்தைகளை ஒப்பிடாதீர். பல நேரங்களில் ஒப்பீடுகள் தவறான நபர்களை காயப்படுத்துகிறது. மேலும் ஒப்பீ டுகள் காலத்தால் பொய்த்துப்போன வரலாறுகள் ஏராளம். ஒரு நிலையில் திறமை குன்றியவனாக கருதப்பட்டவர்கள் உயர் கல்வி, அலுவலக செயல் நுணுக்கங்கள், விரைந்து செயல் படுதல் போன்ற பண்புகளில் பின்னாளில் ஆகப்பெரும் ஆளுமைகளாக பரிமளிக்கிறார்களே ?நமது முந்தைய ஒப்பீடு அர்த்தமற்றது என்று புரிகிறதா?.செழித்து வளர்ந்து தழைத்து நிமிர்ந்த பல மரங்கள் காய்க்காமல் முடங்க வேறு சில மரங்கள் எண்ணற்ற கனிகள் தாங்கி நிறைவாக நிற்கின்றனவே அவை கூறும் செய்தி என்ன?
ஒப்பீடுகள் பிழையான கருத்து களின் அடிப்படையில் அமைந்தால் தவறான தகவலும் நம்பகத்தன்மை அற்ற முடிவுகளும் தோற்றுவிக்கப்படும். எந்த அடிப்படையில் ஒருவரை வாழ்த்துவதும் வேறொருவரை வீழ்த்துவதும் அறம் சார்ந்த செயலாகும்? எனவே எந்த ஒப்பீடும் செயல் திறன் மேம்பாட்டுக்கு உதவுவதில்லை -மாறாக தாழ்வு மனப்பான்மை மற்றும் ஏழ்மை குறித்த வெறுப்பு இவற்றை வலுவுறச்செய்யும், ஆனால் முன்னேற்றத்திற்கான முயற்சி என்னும் வாயிலை மூடிவிடும். எனவே ஒப்பீடு தவிர்க்கப்படல் வேண்டும். எனவே செயல் திறன் மேம்பாடு நோக்கி பயணிக்க மன ஊக்கமும் ஆதரவும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத்தேவைகள். அவை செயல் பட நேர்மையும் வாய்மையும் உதவும் அளவிற்கு செல்வமும் சிபாரிசும் உதவுவது இல்லை. எந்த வளர்ச்சியும், சொந்த உழைப்பில் கிடைக்கும் போது ஒருவர் பெறும் அங்கீகாரம் மகத்தானது. அதை அடைய முயல்வது நன்மை பயக்கும் . ஒப்பீடுகள் தேவை இல்லை.
நன்றி அன்பன்
ராமன்
ஒப்பீடு செய்யாத பெற்றோர்கள்
ReplyDeleteஅடுத்த வீட்டை சுட்டிக்காட்டும் மனைவிமார்கள் இல்லாத வாழ்க்கை ஏது?
இது ஒறு மறு பதிவோ? ஆயினும் மற்றொரு பயனுள்ள பதிவு.
ReplyDeleteIt is not a 'repeat'. Exclusively pinpointing the need to avoid comparison.
ReplyDeleteநன்றி.
Delete