Saturday, February 3, 2024

BIOTECHNOLOGY- 3 — GENE THERAPY

 BIOTECHNOLOGY- 3 — GENE THERAPY

பயோடெக்னாலஜி– 3-- ஜீன் சிகிச்சை /ஜீன் வைத்தியம்

இது என்ன ஜீன் வைத்தியம் என்று தெரிந்துகொள்ளும் முன் பயோடெக்னலாஜி பயிலவிரும்புவோர், நான் எஞ்சினீரிங் படிப்பேன் இல்லையேல் பயோடெக்னலாஜி என்று நினைத்திருந்தால் தயவு செய்து ஒன்றைப்புரிந்துகொள்ளுங்கள். பயோடெக்னலாஜி ஏதோ ஒன்றுக்கு மாற்றாகப்பயிலும் கல்வி அல்ல. மேலும் எதையும் அக்கு வேறு ஆணி வேறாக அறியும் உள்ளார்ந்த ஆர்வம் கொள்ளாமல் [குறிப்பாக பயாலஜியின் இரு பிரிவுகளிலும் ஆழ்ந்த புரிதல் இல்லாமல்] பயோடெக்னலாஜி படிப்பதைவிட "கிளி ஜோதிடம்' பயின்று பிழைப்பு நடத்தலாம். கிளி யும் ஒரு உயிரின வகை [BIOLOGICAL SPECIMEN]என்ற அளவில் அதுவும் ஒருவகை பயோடெக்னலாஜி தான். நான் ஏன் இவ்வளவு நையாண்டி மேற்கொள்ளுகிறேன் என்றல், பலர் பயாலஜி என்னும் பாடத்திட்டத்தில் பயில்வதற்கு ஒன்றும் இல்லை என்று 'கரைகண்ட ஞானி போல்' பிதற்றுவதால் தான்.

புரிந்துகொள்ள முயன்றால் தான் எவ்வளவு நுட்பமும் குழப்பமும் நிறைந்தது செல் செயலியல்என்னும் அதீத நுட்பம் மிக்க [CELL PHYSIOLOGY]  துறை என விளங்கும் ..பயோடெக்னாலஜி உதவியால் செய்யப்படும் ஒவ்வொரு  அணுகுமுறையும் மனித உயிருக்கு நன்மை பயக்க வேண்டும், தனிமனித கவனக்குறைவுகளும்/ பிற சிறு தவறுகளுக்காக,. மனித உயிர் துயரத்தில் சிக்கிக்கொள்ளும். எனவே மிகத்துல்யமான புரிதலும், செயல் திட்டமும் நம் வசப்பட, பயாலஜியின் மாபெரும் நுண்அமைப்பையும், எண்ணற்ற செயல் திட்டங்களையும், பிழையும் தடங்கலும் இன்றி கற்றுணர்தல் மிக மிக அவசியம்.எனவே தான் செயல் பயிற்சி நன்கு கிடைக்கும் நிலையங்களில் பயிலுங்கள் என்று வலியுறுத்துகிறேன். குமரகு காலேஜில் பயோடெக் /பரமகுரு காலேஜில் பயோடெக் என்று பெயர்ப்பலகையைப்பார்த்து ஏமாறாதீர்கள். இதை எச்சரிக்கையாகவே சொல்கிறேன். புரிந்து கொள்ளுங்கள்

ஜீன் எனும் ஆதார அமைப்பு தரும் சங்கேதங்களைக் [signals/ code] கொண்டே  ஒவ்வொரு ப்ரொடீனும் உருவாக்கப்படப்பிடுகிறது;எனவே ஜீன்/ அதன் செயலில் நிகழும்  தவறுகள் ப்ரொட்டெனில் பிரதிபலிக்கும் . ஆகவே மரபு ரீதியிலான நோய்களுக்கு தீர்வு காண ஜீன் குறித்த தகவல்களை முற்றாக அறிந்தால் அந்தக்கோளாறை சரி செய்துவிட முடியும் என்ற நிலை நோக்கி பயணிக்க அனைத்து வழிமுறைகளையும் கண்டறிந்து வைத்திருக்கிறது செல் பயாலஜி [செல் சார்ந்த அணுகுமுறைகள்] மற்றும் உயிரின மூலக்கூறு என்னும் மாலிகுலர் பயாலஜி [molecular biology]. இவ்விரு துறைகளிலும்  நிலைப்படுத்தப்பட்டுள்ள டெக்னீக்ஸ் எனும் செயல் முறைகள்.-- இவற்றை அறிந்த /பயின்ற இளையோர் தான் எதிர்காலத்தில் மருத்துவத்துறையில் நோய் விரட்டும் இறைவன் போன்ற சர்வ வல்லமை கொண்ட புதிய தலை முறை..

சரி, துல்லியமாக இந்த ஜீன் தான் துயரத்தின் காரணி என்று இனம் காண முடியுமா? முடியும். சொல்லப்போனால், அனைத்து ஜீன்களின் ஜாதக அமைப்பை குறித்த கல்வியே ஜீனோம் study [அந்த உத்திகளை உள்ளடக்கிய  விரிவான துறை ஜீனோமிக்ஸ் [genomics]; இப்போது மிக அதிகம் பயன்படுகிறது..  

ஜீனோம் என்றல் என்ன?

ஒரு உயிரின வகையின் [மனிதன்/ விலங்கு/ தாவரம்/ பூஞ்சை/ பாக்டீரியம் /வைரஸ்]என்ற ஒவ்வொன்றின் உறுப்பினர்  வாழ்வுக்கு தேவையான மொத்த DNA தொகுப்பு அந்தந்த உயிரினத்தின் ஜீனோம் எனப்படுகிறது.

ஜீனோமிக்ஸ் [GENOMICS] 

ஜீன் தொடர்பான பல தகவல்களையும் அமைப்புகளையும் [அவற்றின் முப்பரிமாணம் உள்ளிட்ட தகவல்களை பற்றிய முறையான தகவல்திரட்டு ஒரு புதிய துறை அதுவே /அது குறித்த துறைசார்ந்த விவரங்கள் ஜீனோமிக்ஸ் [GENOMICS] என அழைக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட தகவல் தொகுப்பு [GENOMIC LIBRARY] ஜீனோமிக் லைப்ரரி என்று சொல்லப்படுகிறது.

இந்த தகவல்களை கொண்டு என்ன செய்ய முடியும்? பின்வருவன வற்றை கவனியுங்கள்

சில ஜீனோம்கள் சிறியவை [பாக்டீரியா /வைரஸ்]. சிலவோ, வெகு நீளமானவை [மைல் கணக்கில் நீளும் -குறிப்பாக சில தாவர ஜீன்கள்]. ஆக, ஒரு வரிசையில் இருக்கும் DNA  தொடர்= ஜீனோம். இந்தDNA உட் பிரிவுகள் தரும் சங்கேதம் ,m -RNA  , பின்னர் ப்ரோடீன் தொடரை [Protein Sequence] நிர்ணயிக்கிறது . இவற்றில், [ப்ரொடீனில்] குறைகள் இருப்பின் அவை உடல் அமைப்பிலோ, செயலிலோ ஏதேனும் தொய்வு அல்லது நோயினை தோற்றுவிக்க காரணம் ஆகலாம்.

இவையே பரம்பரை நோய்கள் என்றழைக்கப்படுவன. சமீப காலமாக கண் நீர் அழுத்தம் [Glaucoma] கூட பரம்பரை நோய் பட்டியலில் சேர்ந்துள்ளது       இவற்றை நிவர்த்திக்க [சரி செய்ய] பயன்படும் அணுகு முறை தான் ஜீன் வைத்தியம்/ஜீன் சிகிச்சை [ GENE THERAPY] எனப்படுவது . அதாவது குறைபாடுள்ள ஜீன் [ GENE]  அகற்றப்பட்டு, முறையான ஜீனை அவ்விடத்தில் நுழைத்து இணைத்தால், நோய் படிப்படியாக முற்றிலும் நிவர்த்திக்கப்படும்.இதற்கு மருந்து மாத்திரை போன்ற தாற்காலிக வைத்தியங்கள் பலன் தரா ;எனவே அடிப்படைப்பிழை எந்த ஜீனில் இருக்கிறதோ அதன் குறை நீக்கப்பட்டு புதிய [திருத்தப்பட்ட, அல்லது மாற்றப்பட்ட] ஜீன் -முறையான ப்ரொடீனை தரவல்ல அமைப்புடன் இருத்தல் வேண்டும் .

ஜீன் தெரபி

குறைபாடுள்ள ஜீன் தனை , முறையாக சீரமைத்தல் என்பதே ஜீன் தெரபி என்பது. ஜீன் தெரபியிலும், அணுகுமுறைகள் வெகுவாக மாறிவிட்டன/ மாறிக்கொண்டே வருகின்றன. முறையான விரைவுச்செயல்முறைகள் மூலம், பிறவிக்குறைகளை நீக்க முடியும் என்பது மாபெரும் முன்னேற்றம் அல்லவா? 

இதுவரை உள்ள தகவல்களை, நன்கு உள்வாங்கிக்கொள்ளுங்கள். இனி வர இருக்கும், முக்கிய தகவல்கள் நுணுக்கம் மிகுந்ந்தவை. இயன்ற அளவுக்கு தெளிவுபடுத்த முயல்கிறேன்.

மீண்டும் அடுத்த பதிவில்  

நன்றி     அன்பன் ராமன்

6 comments:

  1. நல்ல பதிவு. நல்ல விளக்கம்.
    ஆர்வம் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வும் வழிகாட்டியும்.

    ReplyDelete
  2. Is the Biology
    (not Zoology and Botany ) syllabus in CBSE is sufficent for this course?

    ReplyDelete
  3. Thanks very much for a very important and informative post in a simple language.

    ReplyDelete
  4. Dear Dr Rangarajan, the CBSE CONTENT [Biology] is sufficient to enter UG COURSE in Quality institutions. One has to ascertain the facilities therein for hi-tech hands on practical training. K.Raman

    ReplyDelete
    Replies
    1. அறிவுரைக்கு மிகவும் நன்றி, ராமன்ஜி.

      Delete
  5. Most of the colleges that offer Biotechnology do not have laboratory .
    They only teach theory.

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...