Thursday, February 22, 2024

BIOTECHNOLOGY-TISSUE CULTURE

 BIOTECHNOLOGY-TISSUE CULTURE 

பயோடெக்னாலஜி --திசு வளர்ப்பு

பயோடெக்னாலஜி -ஏதோ மருந்து மாத்திரைக்கு உதவும் துறை என்று எண்ண  வேண்டாம். மாறாக இயற்கையின் செயல் திறமைகளை மனித குல நல்வாழ்வுக்கென பயன்படுத்திக்கொள்ளுதலே பயோடெக்னாலஜி என்பது அடியேனின் புரிதல்.. இந்தப்புரிதலின் துவக்கப்புள்ளி யை நோக்கி பயணித்தால் [அது தான் அடியைப்  பிடிடா பாரத பட்டா போல] பயாலஜி என்ற ஆதார ஸ்ருதியைத்தொடும். அதனால் தான் கரடியாய் கத்துகிறேன் பயாலஜியை ஆழ்ந்து நுணுக்கமாகப்படியுங்கள் என்று. உடனே ஆ பயாலஜியில் அப்படி என்ன இருக்கிறதென்று அறைகூவல் விடுக்கவேண்டா.ம்

. அதில் என்ன இருக்கிறது, இதில் என்ன இருக்கிறதென்று ஏகடீயம் பேசுவது எளிது. அப்படிப்பேசுவோர் பாயாலஜி ஏதோ செடி, கொடி, பழம் பூ, குருவி தவளை இவற்றை படம் வரைந்து பாகங்களைக்குறிப்பது தான் என்று தவறான எண்ணம் கொண்டுள்ளீர்கள் என்பது தான் உங்களது புரிதல் என்பது எனது புரிதல். இப்படி குழப்பமான புரிதலை வைத்துக்கொண்டு சாதனை புரிதல்  என்பது பகற்கனவு --அல்ல அல்ல பஸ்ஸில் பயணிப்பவன் காணும் 10 நிமிட கனவை விட நோய்வாய்ப்பட்ட கனவு . சரி இந்த தவளை குருவி செடி கொடி இவற்றை எதற்கு படமாக வரைய வேண்டும்? என்றாவது யோசித்ததுண்டா. [அதெல்லாம் நீ உட்கார்ந்து யோசித்துக்கொண்டிரு, நான் Pythagoras  தேற்றம் படிக்கவேண்டும் என்பீர்கள்]

”In a right angled traiangle” என்று திரும்ப திரும்ப நெஞ்சு வலிக்க வலது கட்டைவிரலால் மங்கு மங்கு என்று குத்திக்கொண்டு கிளிப்பிள்ளை போல் ஒரே வாசகத்தை அரற்றிக்கொண்டிருப்போமே அன்றி -இந்தப்படம் வரைதல் ஏன் என்று யோசிக்க மாட்டோம். யோசித்தால் பயாலஜி என்ன சொல்லவருகிறது என்பது புரியும்  ஆம் பயாலஜி பயில தேவை கூரிய பார்வை -கழுகுபோல் உன்னிப்பாக கவனிப்பது, கவனித்ததை சித்திரமாக வரைதல் . அப்போது தெரியும் கண்ணும் கையும் ஒன்றை ஒன்று புரிந்துகொள்ளாமல் தத்தளிப்பதை..

Depiction  என்று சரியான பதிவிடல் பற்றி குறிப்பிடுவர். நாம் வரையும் படம் எதைக்குறிக்கிறது என்பது படத்தில் இருந்தே புரிந்துகொள்ளும் படி இருத்தல் வேண்டும். அதாவது, நீள , அகல , உயர கன பரிமாணங்கள் சரியாக வெளிப்பட வேண்டும். அதனால் தான் ஒவ்வொன்றையும் பார்த்து வரைதலை ஆரம்ப நிலை பயிற்சியாக வைத்திருக்கிறார்கள். அப்படி பழகும் போது,   எந்த உருவமும் ஆழமாக மனதில் பதியும். இப்படி பயிற்சி பெற்ற கண்கள் எந்த மாறுபாடுகளையும்  உடனடியாக கண்டுபிடித்துவிடும். இப்படி உள்ள கண்களும், மனமும் ஒருங்கிணைந்தால்  தான் மருத்துவம் பயில/ செயல் பட நல்ல மூலதனம் ஆகும்.

நோயாளியாவது பேசுவார். பிற உயிரினங்கள் ? பேசாது ஆனால்  நோய் பேசும்; அதை பார்த்து புரிந்துகொள்ள observational power என்ற ஊன்றிப்பார்க்கும் திறன் கட்டமைக்கப்பட்ட வேண்டும்.. இது இன்றி நான் பயோடெக் சேருவேன் என்பதற்கு பதிலாக Bitec வகை உடற் பயிற்சியில் ஈடுபட்டு உடலை முறுக்கேற்றலாம் .     

பயோடெக்னாலஜி துறையில் திசு வளர்ப்பு என்பது என்ன?

தாவர /விலங்கு வகை திசுக்களை அவற்றின் இருப்பிடத்திலிருந்து அகற்றி, திசுக்களை மாத்திரம் தனிமைப்படுத்தி வளர்க்கும் முறையின் பெயர் TISSUE CULTURE என்பது . இவற்றை தாவரங்களின் அல்லது விலங்கினங்களின் செல்தொகுப்புகளை INVITRO [கண்ணாடி குடுவை/ பேழை] முறையில் வளர்க்கலாம். இது குறைப்பிரசவ குழந்தை வளர்ப்பை விட மிகுந்த கவனமும் சுத்தமும், நுணுக்கமான மேற்பார்வையும் செலுத்தவேண்டிய செயல் முறை. உடலில் வளரக்கூடிய திசுவை சோதனைக்கூடத்தில் வளரச்செய்யும் செயல் முறை TISSUE CULTURE எனப்படுவது.

இவற்றில் விலங்குகளின் திசு வளர்ப்பு மிகவும் நுணுக்கமானது. ஏனெனில் விலங்கு செல்களால் எதையும் தயாரிக்க இயலாது ஆனால் உண்டு வாழும். எந்த வகை உணவு தயாரித்தலும் விலங்கு செல்களுக்கு சாத்தியம் இல்லை. ஆனால் ஒரு அளவு வளர்ச்சிக்குப்பின் தாவர செல்கள் போதுமான நீரும் காற்றும் ஒளியும் கிடைத்தால் வளர்ந்து பெருகும்.. இவற்றை எதற்கு வளர்க்க வேண்டும்?  அவ்வாறு வளர்த்தால், இவற்றுக்கு நோய் /நோய்தீர்க்கும் முறைகளைக்கண்டறிந்து மனித நலனுக்கு உதவலாம். சில தாவர வகை செல்களைக்கொண்டு நோய்தீர்க்கும் மருந்துகளை உற்பத்தி செய்யலாம் .

மேலும் வளரும்

அன்பன்  ராமன்

 

1 comment:

  1. ஒரு இலையை மரமாக்கலாம்
    ஒரு விலங்கின் நகமோ முடியோ வைத்து அவ்விலங்காக மாற்ற முடியாது்

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...