Thursday, February 22, 2024

NO COST ENTERTAINMENT -3

 NO COST ENTERTAINMENT -3

விலையில்லா பொழுது போக்கு-3    

பத்து பரமேஷ்-3

அடுத்த நாள் காலை மணி 7.00 பரமேஷ் ஒரு வைராக்யம் கொண்டான். இனிமேல் இந்த ராஜம் / புஜம் யாரிடமும் கோபி என்று கேட்கப்போவதில்லை. இந்த இரண்டு பெரும் பெண்மணிகளும் என்ன தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் -ஒரு கை பார்த்துவிட வேண்டியது தான் என்று முடிவெடுத்தார் .

இந்தாங்கோ கோப்பி என்றாள் ராஜம் [7.20 ] கோப்பியோ ஆர்க்கு வேணம்  எனிக்கு வேண்டே என்று கோப்பியை முற்றாக நிராகரித்தார் பரமேஷ்

உடனே ராஜம் அந்தகாபியை வாய்க்கு நேரே கொண்டுபோக,  எனிக்கு இல்லா த்த கோப்பி நினிக்கும் வேண்டே கேட்டோ அதாணு  ஏகதேசம் சமமாய பதி-பார்யை ஜீவிதம் என்று கோபியில் மண் அள்ளிப்போட்டார்    பரமேஷ்;

நேக்கு படபடன்னு வரது, கோப்பி கழிக்கணம் என்றாள் ராஜம். தாழ உக்கார்ந்துட்டு ராம நாம ஜபம் செய்யூ -ஏது கொழப்பம் ண்டாகுல்லா   . -பெரிய பிராயத்து குட்டிகளு போல் திரேகம் பெலக்க இரிக்கும் -கோப்பி வேண்டே என்று மொத்தமாக கோபிக்கு வேட்டு வைத்தார்.

 முதல் முதலாக ராஜம் கடி வாங்கினால் எப்படி இருக்கும் என்று உணர்ந்தாள். இருந்தாலும் கெத்தாக      ச் சாப்பாடு என்ன செய்யட்டம் என்றாள் ?

எந்து? ச்சாப்பாடோ? அதாற்கு  வேணம்? எனிக்கு வெரிதே தயிர் சாதம் மதி வேறொன்னு வேண்டே என்று தெருவில் இறங்கி நடந்தார்.பரமேஷ் குரங்குப்பிடி போட ஆரம்பித்துவிட்டார் -இனிமேல் இந்தமனுஷனை ஒன்னும் செய்ய முடியாது என்று தீவிரத்தை கண்டு நடுங்கினாள்.

லலிதா சஹஸ்ரநாமம் படிக்க அமர்ந்தாள் நற நற  வென்று பல்லைக்கடிக்கும் ரமேஷ் தான் புத்தகத்தில் நடுவில் புகை மூட்டமாக தெரிந்தார். [சினிமா பார்த்த ஞாபகம் ]. பரமேஷ் புலி போல் பாய்ந்து விடுவானோ என்று நடுநடுங்கி புத்தகத்தை.இப்போது   மூடினாள். இப்போது கண்ணுக்குள் பரமேஷ் நறநறத்தான்.

ஐயய்யோ வசமாக மாட்டிக்கொண்டேனே - வடக்குநாதா காப்பாற்று என்று நெக்குருக வேண்டினாள் .வடக்குநாதனுக்கு இவளைகாப்பாற்றுவதுதான் வேலையா என்ன? எல்லாநாதனும் நன்றாக இழுத்தடித்தபின் தான் என்ன என்று கேட்பார்.   கை பிடித்த நாதனோ இரண்டாம் நாளே கை காலை உதறிவிட்டு கண் திறக்கிறான் அதுவும் நெற்றிக்கண்ணை . இது தான் உலகில் அறியவேண்டிய பாடம்.. தொடர்ந்து கரப்பான் பூச்சியை க்கூட விரட்டிக்கொண்டு இருந்தால், திடீரென்று விரட்டினவன் மேலேயே பாய்ந்து மூக்கின்  மீது அமரும், அருவருப்பு தாங்காமல் விளக்குமாற்றை போட்டுவிட்டு ஓடும் தைரிய சாலிகள் தான் மனிதர்கள்.         

 3, 4 முறை ஏதாவது சாக்கு சொல்லிக்கொண்டு கோப்பியில் மண்ணை போட்ட ராஜம் இப்போது தான் பரமேஸ்வரன் ஆடும் ருத்ர தாண்டவத்தை நேரடியாக சந்திக்கிறாள். இந்தபரமேஸ்வரன் அன்பானவன், சற்று நாக்குக்கு அடிமைப்பட்டவன் -அதுவும் கோப்பி தான் அவனுக்கு வேண்டும் சாரி-- வேணம்  , மற்றபடி இந்த அம்மணி பட்சணம் செய்யாமல் இருந்தாலும் அடுத்தவீட்டில் போய் அவளுக்கு முன்ன மாதிரி ஹெல்த் இல்லை எண்ணை அலர்ஜி ண்டாக்கும் என்று பரிந்து பேசி முடிந்தவரை காலம் தள்ளுபவன்

அவனைப்போய் ஏதோ பிச்சைக்கு வந்தவனைப்போல இன்று போய் அடுத்தவாரம் வா என்று கோலோச்சி குதூகலித்தவள் -செய்வதறியாமல் திகைக்கிறாள்.

 தொடரும்

அன்பன்  ராமன

2 comments:

  1. நமச்சிவாய வாழ்க வடக்குதாதன் தாள் வாழ்க

    ReplyDelete
  2. "பட்டால் தெரியும் பாப்பாத்திக்கு"

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...