Sunday, February 18, 2024

BIOTECHNOLOGY

BIOTECHNOLOGY 

பயோ டெக்னாலஜி

எந்த ஒரு புதிய முயற்சியும் , சிகிச்சையோ, மருந்தோ , அறுவை முறையோ முற்றிலும் பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்படவேண்டும். இது குறைந்தபட்ச தார்மீக பொறுப்பு என்பதே உண்மை. எனவே ஒவ்வொரு மாத்திரை/மருந்து/ ஊசி/ வாக்ஸின் எதையும் சோதனை என்ற அளவில் உபயோகிக்க எவருக்கும் உரிமை இல்லை. ஆகவே பல்வேறு கட்ட நடை முறைகளுக்குப்பிறகே பல உயர்மட்டக்குழுக்களின் தீவிர கண்காணிப்புக்குப்பின்னரே எந்த மருந்தும் செயல்பாட்டிற்கு வரும் . அப்படி என்றால் இவற்றை பரீட்சார்த்த முறையில் பயன்படுத்த சில முறைகள் பின்பற்றப்படுவது மருந்தியல் துறையில் நன்கு அறிந்த வழிமுறை ஆகும். அவை பல படிநிலைகள் தாண்டி இறுதியாக மனித உடலில் clinical trial என்ற செயல் பாட்டிற்கு வரும். அதற்கு முன்னம் இரு முக்கிய நிலைகள் 1] IN -VITRO    [சோதனைக்குழாய் / கண்ணாடி குடுவை ]சோதனைகள்

அரி தினும்  அரிதாக IN -VIVO [உயிருள்ள உடலில் பயன் படுத்தப்படும் சோதனைகள் ] 2 ANIMAL STUDIES விலங்குகளின் [சீமை எலி, சில வகை குரங்குகள் , குதிரைகள், முயல்/ வாத்து போன்ற வை]உடலில் செலுத்தப்பட்டு மருத்துவ பலன்களை கண்டறிதல் வழியே மருந்து உகந்ததா என்பதை நிர்ணயித்தல்  3] இதே ஆக உயர்ந்த நிலை ஆகிய CLINICAL TRIALS என்ற மனித உடலிலேயே மருந்தை செலுத்தி பரிசோதிப்பது.இதற்கென பிரத்தியேக ஆரோக்கிய நிலைகளில் இருப்பவர்களே clinical trial சோதனைகளில் பங்கேற்க இயலும் .மேலும் அவர்கள்  வெகு தீவிர கண்காணிப்பில் இருந்து பக்க விளைவுகள், ஒவ்வாமை, நரம்பு மண்டலா இயக்கம்ரத்த அழுத்தம் தூக்க உணர்வு போன்ற பல விளைவுகள் குறித்து தீவிரமாக கண்காணிப்பதுடன், தேவைப்பட்டால் வேறு வகை மருந் துகள் கொண்டு, பக்க விளைவுகளை      கட்டுப்படுத்த /முற்றாக அடக்க தேவையான மருத்துவ அணுகுமுறைகளையும் பரிந்துரைக்க முறையான தகவலும் தொழில் நுட்பமும் தேவை. இவற்றையும் உள்ளடக்கி செய்யப்படுவதே க்ளினிக்கல் ட்ரையல் என்ற பரிசோதனை முயற்சி.

invitro முறை

 கண்ணாடி குழாய் / வட்ட வடிவ பேழை /குடுவை இவற்றில் நோயுற்ற  செல் /செல்களை வளர்த்து அவற்றி ன் மீது தேவையான gene /மருந்தை செலுத்தி நிகழும் மாற்றங்களை கண்காணிப்பர்.. விலங்குவகை உயிரின செல்களை வளர்ப்பது எளிதன்று. மிகுந்த கவனமும் தீவிர எச்சரிக்கையும் கண்காணிப்பும் இருந்தால் மட்டுமே infection என்ற பிற உயிரி த்தாக்குதலை  தவிர்க்க இயலும் மிகுந்த கவனத்துடன் அனைத்து பொருட்களும் .பரிசுத்த நிலையில் [sterile state ல்] காப்பற்றப்பட வேண்டும் .  உடல் பகுதி  களை துளையிடாமல் நோய் குறித்த பல விவரங்களை காணவும் பதிவிட்டு தொடர்ந்து சிகிச்சை  மேம்பாடுகள் பற்றிய தேவைகளை  மாற்றி அமைக்கவும் in- vitro முறை மிகவும் பயனுள்ளது. தனி மனித மருந்துகளை [அதாவது பிறவிக்குறை gene செயல்களை ஒழுங்கு படுத்த வல்ல செயல் களை கண்டறிவதில் in-vitro [கண்ணாடி குழாய்/ பேழை] சோதனைகள் பெருமளவிற்கு உதவுகின்றன. ஒரே நேரத்தில் பல சோதனை முறைகளை வெவ்வேறு பேழைகளில் செயல் படுத்தி குறுகிய காலத்தில் வெவ்வேறு தகவல்களைத்திரட்ட முடியும். எந்த நோயாளிக்கும் துன்பம் தராத செயல் முறை. 

animal studies [விலங்குகளில் சோதனை]

இவ்வகை விலங்குகள் முறையாக பராமரிக்கப்பட்டு, பிரத்தியேகமாக வளர்க்கப்படுபவை. அவற்றின் மரபியல் அமைப்புகள் நன்றாக வரையறு க்கப்பட்டவை [genetic profile -defined ]. மேலும் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள்/ பக்கவிளைவுகள் எளிதில் வெளிப்படும் எனவே கிட்டத்தட்ட மனித உடலின் மீது ஏற்பட இருக்கும் மாற்றங்களை உணர்ந்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட மருந்து/மாத்திரை/ ஊசி/வாக்ஸின் எதையும் முறையாக கட்டமைக்க [drug designing] மிகவும் உதவியாக இருக்கும் . மேலும் உடலியக்க மாற்றங்கள் [physiological  changes ] உடல் வெப்பம், ரத்த அழுத்தம், சோர்வு, ஒவ்வாமை [allergy] போன்ற பக்கவிளைவுகளை எளிதாக காண விலங்கு சோதனைகள் மிகவும் முக்கியமானவை. செல்களில் ஏற்படும் மாற்றங்களை [cellular changes] கண்டறிதல் எளிதன்று. மேலும் தனி செல் இயக்கமும் ஒரு மொத்த உடலமைப்பில்தோன்றும்  இயக்கமும்   ஒப்பானவை அல்ல. எனவே விலங்கு சோதனைகள் மருந்தியல் ஆராய்ச்சித்துறையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை கண்ணாடி குழாய் சோதனைக்கும் க்ளினிக்கல் ட்ரயல் என்ற மனிதர் மீது நடத்தப்படும் சோதனைகளுக்கும், இடைப்பட்ட நிலையில் பல்வேறு தகவல்களைத்திரட்ட பேருதவி புரிபவை. 

CLINICAL TRIALS

எந்த மருத்துவ அணுகுமுறையும் க்ளினிக்கல் ட்ரயல் இன்றி பயன்பாட்டுக்கு வராது. அதுவும் பலமுறை பலவகையான மனிதர்களின் ஏற்புடைமை [ACCEPTANCE /TOLERANCE ]முறையாக நிரூபிக்கப்பட்ட பின்னரே பொதுவான மருந்துக்கு என்ற அங்கீகாரம் பெரும். இவற்றை பல்வேறு கட்டங்களில் வடிவமைத்து, புதிய உத்திகள் வாயிலாக நிறைவேற்ற முயலுவதே பயோடெக்னாலஜி துறையின் அன்றாட செயல் பாடு. இவற்றிற்கு உறுதுணையாக வெவ்வேறு பரிட்சார்த்தமுறைகள் -திசு வளர்ப்பு [TISSUE CULTURE ], மருந்து வடிவமைப்பு DRUG DESIGNING , செலுத்தும் முறை [DRUG TARGETING ] போன்றவை.

நன்றி

அன்பன் ராமன்

1 comment:

  1. Biological materials used for good is also Biotechnology.
    For example fish scales are converted into polymers and in its turn they are converted to biodegradable plastics.

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...