DIRECTOR A. BHIMSINGH
இயக்குனர் பீம்சிங்
தமிழ் சினிமாவில் 1960 களில் குடும்பப்பாங்கான கதைகளை தேர்வு செய்து பெரும் வெற்றிகண்ட இயக்குனர். இவர் பிறந்தது திருப்பதியில் . ஆயின் நெடுங்கால சென்னை வாசி . துவக்கத்தில் எடிட்டர் படிப்படியாக வளர்ந்து இயக்குனர் தயாரிப்பாளர் என பெரும் வியாபகம் பெற்றவர். கதைகள் மென்மையான யதார்த்த அமைப்பில் பயணிப்பது இவரது இயக்கு ம் திறனுக்கு சான்று.
அவர் படங்களில் பாடல்கள்நன்றாக இருக்கும் . ரகசியம் --வேறொன்றுமில்லை. எம் எஸ் வி சொன்னது -இசை அமைக்கும் பொறுப்பில் குறுக்கிடமாட்டார்
.நல்ல பாடல் உருவாக்கி கொடுங்க என்று ஒதுங்கிவிட , நாம் தான் பொறுப்பாக செயல் பட வேண்டி வரும் என்பார் எம் எஸ் வி. அதனால், எத்துணை தரமான பாடல்களை வழங்கியுள்ளனர் --கண்ணதாசன், எம் எஸ் வி, பீம்சிங் கூட்டில்.
சான்றாக சில பாடல்களை தருகிறேன் -ரசியுங்கள், ரசித்து அழுங்கள் இன்றைய தமிழ் சினிமா ஏன் இப்படி ஆகிவிட்டதென்று.
1 "தங்கத்திலலே
ஒரு
குறை
இருந்தாலும்"
[பாகப்பிரிவினை-1959]
கண்ணதாசன்
விஸ்வநாதன்
-ராமமூர்த்தி
-பி.
சுசீலா
.
ஊனம் கொண்டவனை
தேற்றி
ஊக்கப்படுத்தும்
சோபன
அறை
காட்சி.
வெகு
இயல்பான
நடிப்பு.
தெளிந்த
நீரோடை
போல்
ஓடும்
பாடல
, சொல்
நயம்
பொருள்
வலிமை
, அடக்கமான
இசை
என
பல
பெருமைகள்.
பாடல்
காட்சியில்
நான்
கண்டகுறை:
சிங்கத்தின்
கால்கள்
பழுது
பட்டாலும்
எனும்
சரண
வரியில்
சிவாஜி
கணேசன்
குடுமியை
பின்னலிட்டு
அமர்ந்துள்ளதாக
தெரிகிறது.
ஒளிப்பதிவில்
கவனக்குறைவு
ஏதோ
நிழல்
சரியாக
பிடாரிப்பகுதியில்
விழ
பின்னலிட்ட
கோலம்.
ஆனால்
கமெரா
விலகியதும்
குடுமி
மாயமாய்
மறைகிறது.
எனினும்
அருமையாந
பாடல்
இணைப்பு
இதோ:
https://www.google.com/search?q=you+tube+thangaththile+oru+kurai+irundhaalum+video+song+download&newwindow=1&sca_esv=602116154&sxsrf=ACQVn0-gQ9Z22CBTPE6BI0teddkb9GFhxA%3A17064 thangathile bagapirivinai 1959 ps kannadasan V R
2 அத்தான் என்
அத்தான்
[பாவ
மன்னிப்பு
-1961] கண்ணதாசன்,
வி
-ரா
, பி
சுசீலா
தமிழ் சினிமாவில் இது ஒரு மைல் கல். என்ன எனில் தமிழ் சினிமாவில் இசை வடிவங்களை பாவ மன்னிப்புக்கு முன், மற்றும் பாவ மன்னிப்பிக்கு பின் என்று இசை ரசிகர்கள் அலசுவது அந்நாளில் சகஜம். ஆம் இந்தப்படத்திற்குப்பிறகு திரை இசை ஒரு ஆரோக்கியமான பாதையில் திரும்பியது. அதாவது இடை இசை என்ற ஒரு ORCHESTRAL EMBELLISHMENT விஸ்வரூபம் எடுக்க துவங்கியது. இந்தப்பாடல் ஒரு மயக்கம் தரும் வடிவம் உடையது. இவ்வளவு மென்மையான இசை க்ளாரினெட், அக்கார்டியன்[ மங்கள மூர்த்தி] குழைத்து, இழைத்து உள்ளம் தொட்ட இசை . சாவித்ரி , தேவிகா கண்களே நடிப்பதைக்காணலாம் . நேர்த்தியான காட்சி கண்டு இளமையை மீட்டுக்கொள்ள: https://www.youtube.com/watch?v=J6a8_HC7gz4 aththaan paava mannippu ps kd v r 1961
3 யார்
யார் யார்
அவள் யாரோ
[பாசமலர்-1962] கண்ணதாசன், வி--ரா பிசுசீலா
, பிபி ஸ்ரீனிவாஸ்
ஒரு
ரம்யமான காதல்
பாடல் கொடைக்கானல்
பகுதிகளில் பனிப்படலத்தின்
ஊடே அவ்வப்போது
ஒளிகுறைந்து பரவசம்
ஊட்டும் சூழல்.
சாவித்ரி யின்
இயல்பான முக
பாவங்கள் , பாடலுக்கு
வாயசைக்கும் பாங்கு
என பல
விவரிக்கவொண்ணாத நளினங்கள் நிறைந்தது.
கேட்டு/ பார்த்து மகிழ
இணைப்பு
https://www.google.com/search?q=youtube+tamil+yaar+yar+yaaraval+yaaro+++video+song+download&newwindow=1&sca_esv=602116154&sxsrf=ACQVn08ST3q5w8qwm1fnWRdbAlRFJQNyOA%3A170643 yaar yaar yaar aval yaaro pasamalar kd vr ps pbs
4 'அத்தை மகனே போய் வரவா' [பாத காணிக்கை] 1962 கண்ணதாசன் , வி- ரா , பி.சுசீலா
ஒரு காலத்தில் பலர் முணுமுணுத்த /முணுமுணுக்க வைத்த மெலடி இது. அதுவும் இரவின் அமைதியில் கல்;அந்த காற்றில் வியாபிக்கும் உன்னதம் இப்பாடல். சுசீலா மிகவும் வளமான குரலும் துல்லிய உச்சரிப்பும் பெற்றார் எனில் இது போன்ற ஏராளமான பாடல்களே அவருக்கு பயிற்சி அளித்து , மிகத்தூய்மையான தமிழ் ஒலி என்ற ஏகோபித்த பாராட்டுக்கு பாத்திரமானவர். அவரின் உழைப்பு இல்லாத பாடலே இல்லை என்னும் அளவிற்கு அந்நாளில் அவ்வளவு ஒத்திகைகளுக்கு பிறகே பாடல் பதிவிடப்படும். அவை இன்றளவும் ஜொலிக்க காரணம் முறையான சொற்களும் சீரான இசையும் , கருவிகளின் அடக்கமான ஒலி யும், பாவத்தின் அடிப்படையில் உணர்ச்சிகளை வெளிக்கொணரும் பிரித்துப்பாடும் உத்தியும் என ஏராளமான பங்களிப்பில் பிறந்த பாடல்கள் அல்லவா. அவ்வப்போது பாடலில் வரும் தனித்த ஒலி [வயோலா என்று நினைக்கிறன்] பாடலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியிருப்பதைக்காணலாம். கேட்டு/கண்டு மகிழ்ந்திட
https://www.google.com/search?q=youtube+tamil+song+aththai+magane+poi+varavaa+++video+song+download&newwindow=1&sca_esv=602116154&sxsrf=ACQVn09LQsFkQRWtWGsp8s4XhG2DUHP9YQ aththai magane 1962 paadha kaanikkai kd, vr ps melodious viola
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல ்்்பாசமலர் படத்தில் வரும் பாடல் மனதை உறுக்கும் பாடல்
ReplyDeleteஇது போன்ற பாடல் இனி வராது
இதனை இதனால் இவண்முடிக்கும் என்றாய்ந்து
ReplyDeleteஅதனை அவன்கண் விடல். என்ற குறளை நன்கு உணர்ந்தவர் தான் பீம்சிங் என தெரிகிறது. 🙂