Friday, February 2, 2024

KEEPING THE FEAR AWAY

KEEPING THE FEAR AWAY

அச்சம் விலக்கிட

பயம் என்ற மனக்கறையை அகற்ற, என்ன செய்ய வேண்டும்? அடுத்த பதிவில் காண்போம் என்று சென்ற பதிவில் தெரிவித்திருந்தேன் 

அதற்கான சில முயற்சிகள் குறித்து புரிந்துகொள்வோம்

முதல் தவறு, குழந்தைகளின் மனதில் தேவையற்ற அதைரியத்தை உருவாக்கி,  அதை அவ்வப்போது நினைவூட்டி -ஒரு மன அழுத்தத்தை நிலை நிறுத்துவது. இதற்கு, பள்ளி, ஆசிரியர் ஆசிரியை பெயர்களை சொல்லி சொல்லி பயம் உண்டாக்குவது. நாளடைவில், இந்த பிம்பம் நிலையாக மனதில் பதிந்து, ஆசிரியர்கள் கொடுமை புரிவர் என்ற கருத்து விதைக்கப்படுகிறது. இளம் வயது கருத்துகள் நன்றாக வேரூன்றி பின்னாளில் அகல மறுக்கிறது.  இது போன்ற மனப்பிரமையை உருவாக்கிஅதை ஊட்டிவளர்த்த பின்,விரட்டி வெளியேற்றுவது எளிதன்று   

மனதில் அச்சமெழாமல் இருக்க அச்சம் தரும் பெயர்கள் சம்பவங்கள் இவற்றை தவிருங்கள். ஆசிரியர் பெயர் உள்ளிட்ட எதனையும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தாமல் கடந்து செல்ல, காலப்போக்கில் அச்சம் விலகும். .இது போன்ற நிலைப்பாடு அமைதியான மன நிலைக்கு இட்டுச்செல்லும்..இதனால்,குழப்பமில்லால், படிக்க இயலும் .குழப்பமில்லமால் விரைவாக படிக்கும் நிலையில் ,ஒவ்வொரு சொல்லிற்கும் பொருள் உணர்ந்து பயிலச்சொல்லுங்கள். பொருள் உணர வேண்டியது மிக மிக அவசியம் என்பதை உணர்த்துங்கள். உணர்ந்த பொருளை வாக்கியத்தில் உள்ள பிற சொற்களோடு பொருத்திப்பார்க்க சொல்லுங்கள் . இதை ஒவ்வொரு வாக்கியத்துக்கும் செய்து பழக, பொருள் உணர்தல் மிகப்பெரிய உதவி என்பதை குழந்தைகள் தாங்களே உணர்வார்கள் . இதுதான் கல்வியில் TAKE OFF’   எனும் விரைந்துகிளம்பும் நிலை. .       

இந்த நிலை எட்டிய குழந்தை பெரியவர்களின் ஆதரவு கிடைக்குமா என்று தேடுதல் இயல்பு. அது என்ன ஆதரவு எனில், திடீரென தோன்றும் ஐயங்களை விளக்கிட பெரியவர்களின் உதவி என்பதே.  அதை யாரேனும் ஒருவர் [தாயோ தந்தையோ] ]நிறைவேற்றுவர் எனில் குழந்தை குதூகலமாக பயிலத்தொடங்கும்.. ஐயோ இது போல் அருகிலே மறந்து சொல்லித்தர வேண்டுமா என விலகி ஓடாதீர்கள். உங்களை விடுவித்துக்கொள்ள குழந்தையை ட்யூஷனில் சேர்க்க [சதி] திட்டம் திட்டாதீர்கள் இந்த கட்டம், வெண்ணை திரண்டு வரும் நிலைக்கு ஒப்பானது.

இப்போது நிதானமும் கவனமும் தேவை. மேலும் மேலும் அழுத்தம் தராமல் மெல்ல அருகில் இருந்து மேற்பார்வை, மற்றும் தேவைப்பட்டால் விளக்குவது என்ற முறையைப்பின் பற்றினால், கல்வியின் மீது இயல்பான நாட்டம் படரும், வளரும், விரியும், வியாபிக்கும். இது தான் இளம் மனங்களில்'என்னால் முடியும்' என்ற  நம்பிக்கையை விதைக்கும்.

ஐயோ இவன் நம்மை சிறையில் தள்ளிவிடுவான் போலிருக்கிறதே என்று என் மீது சந்தேகம் கொள்ளவேண்டாம். 2, 3. மூன்று ஆண்டுகளில் நீங்கள் குழந்தையுடன் அமர்வதைக்குறைத்துக்கொண்டு, கூப்பிட்ட குரலுக்கு வருவது/ உதவுவது என்று பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், நம்பிக்கையும் கவனமும் சிதறாமல் குழந்தையும் கல்வியில் ஈடு பாடு கொள்ளும்.. இந்த ஈடுபாடு வளர்வது,  பள்ளியில் இந்தக்குழந்தை மீது ஆசிரியர்கள் செலுத்தும் அன்பு, கவனம் சார்ந்து நன்கு விரிவடையும்.     அவனது/ அவளது  புரிந்து   கொள்ளும் மேம்பட்ட திறனைக்கொண்டு ஆசிரியர்கள் அன்பு செலுத்துவர்.  வகுப்பு ஆசிரியர்களிடம் பேசி குழந்தையின் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.  ஆசிரியர்கள் கண்டிப்பாக உதவுவர்.         

எனவே இப்போது நீங்கள் குழந்தையின் நடைமுறைகளை மறைமுகமாக கண்காணியுங்கள். அதாவது சுமார் 12-13   வயதிற்கு மேல் இருக்கும் வயதில் நட்பு வட்டம் நிச்சயம்  கவனிக்கப்பட மற்றும் கண்காணிக்கப்படவேண்டிய ஒன்று. என் மீது கோபம்/ விமரிசனம் இவற்றை தவிர்த்து நான் சொல்லும் நடை முறைகளின் உள்ளார்ந்த பொருளை உணருங்கள். விருட்சம் போல் வளர வேண்டிய சிறார் தவறான நட்புகளால் வழி மாறிப்போய்விடாமல் ஒரு மூன்று ஆண்டுகள் கண்குத்தி பாம்பாக விழிப்புடன் கவனித்துக்கொண்டால், எதிர்காலத்தில் குழப்பங்கள் தோன்றாது..

இப்போது வைக்கப்படும் எச்சரிக்கை குறித்த அறிவுரைகள் காலத்துக்கும் குழந்தைகைளை நேர்மை விலகாமல், கல்வியில் நாட்ட ம் கொண்டு இயங்க உதவும். இதுதான் அவர்களை 'மனப்பாடம்' செய்யும் நடைமுறையை விடுத்து,    படிக்கும் போதே புரிந்து கொள்வதால் கிடைக்கும் பெரும் நன்மைகளை, உணரவும் ரசிக்கவும் ஊக்குவிக்கும்.

மேலும், குழந்தைகள் வீட்டில் இருக்கும் நேரம் அதிகரிப்பதால் குடும்பச்சூழல், பழக்க வழக்கங்கள், பாச உணர்வு இவற்றை இழக்காமல் வளர்வது கலாச்சார பாதுகாப்பையும் கற்றுக்கொடுக்கும். இவ்வளவிற்கும் உறுதுணை அரவணைப்பும், அச்சம் தவிர்க்கும் ஆரம்ப கால நிலைப்பாடும், என்பதை எளிதில் உணர முடியும்.

வாழ்த்துகள்

நன்றி

அன்பன் ராமன்                                                          

1 comment:

  1. அச்சம் தவிர்
    ஆண்மை தவறேல்
    என்ற பாரதியின் கூற்றை பின்பற்றினாலே பயம் என்ற சொல்லுக கு இடமில்லை

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...