Tuesday, February 20, 2024

GRATIFICATION- CRIPPLING WORK -2

 GRATIFICATION- CRIPPLING WORK -2  Feb 21

லஞ்சம்/ வேலை நிறுத்தம்  -2

சென்ற பதிவில்...

இப்போது வக்கிரத்தின் தொடக்கப்புள்ளி குறித்து ஓரளவேனும் புரிந்திருக்குமே. 

சரி இதை பற்றி நாம் அறிந்த எவரிடமேனும் பேசிப்பாருங்கள் , மிக அழகாக தேன் சொட்ட பேசுவார்கள். ."இந்த தடவை இவன் இருந்தான், அடுத்தமுறைஅவனுக்கு ஒரு சான்ஸ் கொடுப்போமே என்பார்.

அவர்கள் பேச்சிலேயே, முற்றும் கற்றுணர்ந்த தெளிவு "சான்ஸ் கொடுப்போமே" என்ற சொற்றொடரில் ஒளிந்துகொண்டுள்ளதை கவனித்தீர்களா.? சான்ஸ் கொடுப்பது என்பது ஊழலுக்கு வாய்ப்பு கொடுப்பது என்ற பூடக வாக்கு மூலமே என்று நான் புரிந்து கொள்கிறேன். நம்மில் பலரும் காரியவாதிகள்; பேசும் போது வாய் .மட்டுமே தன்னை வெளிப்படுத்தும். தெரிந்த உண்மைகளை சாமர்த்தியமாக மறைத்து, கதைக்கொவ்வாத நியாயங்களை கற்பித்து   -'நம்மால் என்ன செய்ய முடியும்" என்று ராஜரிஷி போல் கண்ணீர் உகுப்பார்கள்.

தவறான நபர்களுக்கு வாக்களித்து பின்னர் தோன்றும் அவலலங்களை தெரிந்தே செய்துவிட்டு, அதையே மீண்டும் மீண்டும் செய்வதற்கு அடித்தளம் அமைப்பதே 'நம்மால் என்ன செய்ய முடியும்என்றவசனம். இந்த வசனம் பேசி    அசோகவனத்து சீதை போல் கவலை தோய்ந்த முகம் காட்டி அற்புதமாக ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் திறன் வெளிப்பட பேசுவார்கள். நன்றாக கவனியுங்கள் இதே நபர்கள் ஏதாவது அரசியல் ஆக்டொபஸ் கூட்டத்தில் 'வாக்கு சேகரிக்கும் குழுவினருடன்' வீடு வீடாகப்போய் மறந்துடாதீங்க "அண்ணனுக்கு ஓட்டு போட்டுறுங்க " என்று மரணதண்டனை கைதி நீதி அரசரை வண ங்குவது போல் 'கை கூப்பி ' நிற்பார். இப்படித்தான், cannibalistic game,  இந்த திருநாட்டில் விமரிசையாக தவறாமல் நடக்கிறது.

நீ என்ன ஏதோ லஞ்சம், வேலை நிறுத்தம் என்றாய் இப்போது வேறு ஏதோ பேசுகிறாயே என்கிறீர்களா?                                             

எல்லாம் ஒன்றுக்கொன்றுதொடர்புடைய சங்கிலிப்பிணைப்புகள்,எதையும் மேலோட்டமாகப்பார்த்தல் நம்மிடம் வேரூன்றிவிட்ட ஒரு மலட்டுத்தன்மை.

இதற்கு மருந்து அவனவன்/அவளவள் தீர்மானமாக சிந்திப்பதுஒன்றே.

அந்த  நிலையை எட்டும் வரை தொடர்ந்து ஏமாந்து கொண்டே "இந்த தடவை" மக்கள் தெளிவாக இருக்காங்க என்று ஒரு புதிய ஏற்பாடு செய்து விட்டு தெரு முனைகளில் பேசிக்கொண்டிருப்பர் வீட்டில் உணவு தயாராகும் வரை.

இவர்களில் பலரும் அலுவலகப்பணியாளர்கள் -DA % ஆர்டர் வந்தாச்சா ? என்பதே அவர்களின் இப்போதைய .இலக்கு. அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நான் நம்பவில்லை அவர்களில் பலருக்கும் ஒளித்துவைக்கப்பட்ட செயல் திட்டம் [HIDDEN AGENDA] தனித்தனியே உண்டு என்பதே எனது புரிதல். .

இதே போன்ற நிலைப்பாடு கொண்டவர்கள் தான் இன்றைய சமுதாயத்தில் உறுப்பினர்கள். இதே நிலை தான் லஞ்சம் மற்றும் வேலை நிறுத்தம் இரண்டிலும் கடைபிடிப்பார்கள். லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றும் அது சமூக நோய் என்று பேசும் போது கவனியுங்கள் -லஞ்சத்தை ஒளிக்கவேண்டும் வேண்டும் என்று கைதட்டல் நோக்கில் பேசும் போதே உச்சரிப்பில் பிழை வைத்து "லஞ்சத்தை ஒளிக்கவேண்டும்" என்ற உண்மையை [அதாவது வாங்கிய லஞ்சத்தை வெளியே தெரியாமல் ஒளித்துவைக்க வேண்டும்என்ற கோட்பாட்டினை வெளிப்படுத்துவார் ] ஆஹா எவ்வளவு தெளிவான பார்வை என்று லஞ்சத்தை  ஒழிக்க  அறைகூவல் விடுக்கிறார் என்றெண்ணி அவரையே அலுவலக சங்கத்தின் பொருளாளராக தேர்வு செய்து -லஞ்சத்தை ஒளிக்க அனைத்து [BOX , Cupboard, ALMIRAH ] வசதிகளையும்   ஏற்படுத்து வது யார் ? நாம் தானே?. மாறு வேஷத்திற்கு ஒப்பனை வேண்டும். ஒப்பனை இன்றி வேஷமிடும் கலை அறிந்தோர்  நமது சமகாலத்தவர். இவர் தேர்வு செய்யும் பிரதிநிதி பிரதி தினமும் நிதி குவிக்காமல் -நீதியையா பின்பற்றுவார்? மற்றும் வே. நி இரண்டையும் நியாயப்படுத்த ஏராளமான வார்த்தை ஜாலங்களை கையாள்வார்கள் . அவை குறித்து பின்னர் விரிவாக அலசுவோம்

தொடரும்

அன்பன் ராமன்   

1 comment:

  1. நிதி பெருக்கத்துக்குத்தான் அரசியல. வாதிகள் தேர்தலில் பங்கேற்கின்றனர். இவர்களுக்கும் நீதிக்கும் தொடர்பே இல்லை.
    For getting paltry sum many people vote for thugs.

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...