P. JEYACHANDRAN
பி ஜெயச்சந்திரன்
கேரளா மாநிலம் இரிஞ்ஞாலக்குடா பகுதியில் குடியேறியவர். கேரளத்து குறுநில மன்னர் வகையினர் வழி வந்தவர் பட்டதாரி. 1965 வாக்கில் சென்னைக்கு வந்தவர். அற்புதமான குரலுக்கு சொந்தக்காரர். அசப்பில் ஜேசுதாஸ் குரலை ஒத்து இருப்பதால் இவர் கடின முயற்சிக்குப்பின்னரே திரை இசையில் கால் பதித்தார். இவரது திரை இசை பயணமும் எம் எஸ் வி தொடங்கிவைத்ததுதான். 1967 மணிப்பயல் படத்தில் தான் அறிமுகம். நன்றாக பாடும் திறனும் உச்சரிப்பு அழுத்தமும் சிறப்பு. . சொதப்பல் இல்லாமல் பாடும் திறமை., ,, ஸ்வரங்களையம் நேர்த்தியாகப்பாடும் திறமை சாலி .
1
"தங்கச்சிமிழ் போல்" மணிப்பயல் [1967] கண்ணதாசன் , விஸ்வநாதன்
ஜெயச்சந்திரன்
நல்ல விறுவிறுப்பான பாடல் , மிகவும் இயல்பாகப்பாடி
, முதல் பாடலிலேயே
பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தவர்..கேட்டு மகிழ இணைப்பு இதோ.
2
'பொன்னென்ன பூவென்ன கண்ணே '-
அலைகள் [1973] கண்ணதாசன் எம் எஸ் வி, குரல் ஜெயச்சந்திரன்
மிகவும் மென்மையான மெலடி வகைப்பாடல் ;கேட்க ரம்யம் ,எளிதாகத்தோன்றும் கடினமான பாடல் அனாயாசமாக பாடியுள்ளார். படம்
மிகவும் வித்தியாசமான படைப்பு. கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் -சந்திரகலா நடித்த
அலைகள் படத்திலிருந்து . இணைப்பு இதோ
https://www.google.com/search?q=ponnenna+poovenna+kanne+video+song&newwindow=1&sca_esv=3a628dd368b03a2a&sxsrf=ACQVn08o7EPNdjG1ThGWUX8EVHFjFDH1oA%3A1707902181777&ei=5YTM alaigal 1973 KD MSV, P J
3 ‘ஆடி வெள்ளி தேடி உன்னை 'மூன்று முடிச்சு'[1973] கண்ணதாசன் -எம்
எஸ் வி, ஜெயச்சந்திரன்
வாணி ஜெயராம்
காணாதாசனின் "அந்தாதி வகை ' பாடல்-- சினிமாவில். முதல் வரியின் அந்தம் அடுத்த வரியின் ஆதி
என்று தொடர்வதே அந்தாதி.. இப்பாடல் முழுவதும் அந்தாதி ஒலிக்க க்கேட்கலாம் . அற்புதமான கவிதைக்கு அழுத்தமான இசை இருவர்
குரலும் எளிதாக பயணிக்க கேட்கவே நளினம் . பாடலுக்கு இணைப்பு
4
'அழகி ஒருத்தி இளநி விக்கிறா '
பைலட் பிரேம்நாத்-1978
வாலி -விஸ்வநாதன்
-ஜெயச்சந்திரன் எல் ஆர் ஈஸ்வரி
இந்தப்படம் இந்திய இலங்கை கூட்டு தயாரிப்பு.
இலங்கை பைலா வகையில் இசை அமைக்கப்பட்ட
பாடல் . அந்தநாளில் புகழ் பெற்ற பாடல். பாடலின் சொல்லாடல் வித்தியாசமானது. அதேபோல
இசை கட்டுகளும் மாறுபட்டவை. இந்நாளில் குத்துப்பாடல் என்று சொல்லப்படும் அந்நாளைய
இலங்கை- குத்து ;எம் எஸ் வி
இசையில். கேட்டு மகிழ இணைப்பு
https://www.youtube.com/watch?v=dkwdXk5S6Ac azhagi oruththi
5 ‘கவிதை அரங்கேறும்
நேரம்’ - அந்த 7 நாட்கள் [1981] பாடல் ;குருவிக்கரம்பை ஷண்முகம் , இசை எம் எஸ் வி குரல்கள் ஜெயச்சந்திரன்
ஜானகி
பாக்கியராஜின் அந்த 7 நாட்கள்
வெற்றியில் பாடல்களுக்கு சிறப்பான பங்கு உண்டு. இந்தப்பாடல் மிக எளிதாக வெற்றி
ஈட்டி பேசப்பட்ட பாடல். இது தமிழில் ஒலிக்க ,
இதற்கு அடித்தளம் இட்ட பாடல் இதே படத்தில் ஒலித்த மலையாள பாடல்
"சப்தஸ்வரதேவியுணரு '
என்ற ஜெயச்சந்திரன் குரலிலேயே ஒலித்த பாடல் . இரண்டிற்கும் இணைப்புகள் உள்ளன
இதோ:
https://www.google.com/search?q=kavidhai+arangerum+neram++songs+video+download&newwindow=1&sca_esv=de3b8b35270c999b&sxsrf=ACQVn09F1z_WdZPSR_-RRQq0uEF4j0CBqw%3A170786786919 ANDHA 7 NAATKAL KD MSV PJ
6
saptha swaradeviunaru
இது போல் பல வெற்றிப்பாடல்கள் அவர் குரலில் வந்துள்ளன.
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment