DIRECTOR-- A C TIRULOKCHANDER -2 FEB 23
இயக்குனர் ஏ
சி திருலோகச்சந்தர் -2
4 லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் [அன்பே வா-1966] வாலி, விஸ்வநாதன் -பி. சுசீலா
பாடல் எழுத எல்லோரும் கூடி விட்டார்கள், காட்சி
யை விளக்கியாயிற்று. ஊஹூம் வாலிக்கு பாடலுக்கு பல்லவியே கிடைக்கவில்லை யோசித்துக்கொண்டே இருக்கிறார் -சரியான ஆரம்பம் கிடைக்க வில்லை.
எம் எஸ் வி –“சார் வெத்தல போடுவீங்களே போடுங்க ஏதாவது கற்பனை வரும்” என்று சொல்லிப்பார்க்கிறார் . வாலி - "போடலாம் வெத்திலையை குதப்பி துப்பறதுக்கு எழுந்து போகணுமே அதான் யோசிக்கிறேன்” என்றார் . பரவால்ல சார் அந்த ஜன்னல் வழியா துப்புங்க என்று ஏ வி எம் குமரன் சொல்ல , ஆரம்பித்தாயிற்று--- வெற்றிலை போட;
நன்றாக குதப்பி வாய்கொள்ளாமல் எச்சில் + வெற்றிலை
சாறு, எழுந்து ஜன்னலில் போய் துப்பிவிட்டு எட்டிப்பார்க்க மரத்தில் கிளிகள் /குருவிகள் கீச்சிட -சார் தமிழ்லதான் எழுதணுமா ?-- வாலி ; “எதுலயாவது
எழுதுங்க நேரம் ஆச்சு”
என்றார் குமரன் . உடனே வாலி எழுதிய துவக்கம் தான் love birds love birds . ஆஹ் fine என்று மகிழ்ச்சி எல்லோருக்கும். அடுத்த பத்து நிமிடத்தில் எல்லா சரணங்களும் தயார். அடுத்த 5 நிமிடங்களில் ட்யூன் சேர்த்துவிட்டார் எம் எஸ் வி. சிறிது நேரத்தில் ஆர்க்கெஸ்ட்ரஷன் முடிவாகிவிட்டது. சுசீலாவும் சதனும் மைக்கில் , சுசீலா துவங்கியதும் உடனேயே அந்தக்குருவிகள் போல் சதன் குரல் எழுப்ப நல்ல துவக்கம். பின்னர் அவ்வப்போது உரிய இடங்களில் குருவிகள் ஒலி பாடலில் சதன் வழங்க, ஒரு இனிமையான பாடல் கிடைத்தது. பாடலுக்கு இணைப்பு இதோ https://www.google.com/search?q=you+tube+tamil+song+%27love+birds%27+video+song&newwindow=1&sca_esv=5cded6f1e83ac200&sxsrf=ACQVn09asC49de-RkApKIDt6J8WOapqW3w%3A17072284135
1966 anbe vaa vaali msv ps.
5 கேட்டவரெல்லாம் பாடலாம் [தங்கை -1967] கண்ணதாசன்
எம் எஸ் வி- டி எம்
எஸ்
அந்தக்காலத்தில்
மிகவும் பிரபலமான பாடல், உள்ளூர இழையும் நகைச்சுவை, விறுவிறுப்பான பாடலின் பயணம் மற்றும் இடையிசையின் கம்பீரம் என புகழ் அடைந்தபாடல். அன்றைய வழக்கப்படி தயாரிப்பாளர், கவிஞர், இசை அமைப்பாளர் ஏனைய முக்கியஸ்தர்கள் ஓரிடத்தில் அமர்ந்து பேசி உருவாக்கிய பாடல். எம் எஸ் வி -எப்போதும் மள மள என்று 7-8 ட்யூன்களை ஆர்மோனியத்தில் வாசித்து , பொதுக்கருத்துப்படி ட்யூன் தேர்வாகும் இந்தப்பாடலுக்கு ஒருமித்த கருத்து வரவில்லை ; இறுதியில் ஆளாளுக்கு வெவ்வேறு கருத்துச்சொல்ல ஒரே டென்ஷன். இந்தக்களேபரத்தில்,
அங்கே வந்திருந்த தபால் காரர் “சார் அந்த 3 வது ட்யூனையும் 6 வதையும் சேத்துப்பாருங்க--
நல்லாருக்கும் சார் என்றாராம். 3+6 இணைத்து எம் எஸ் வி பாட ட்யூன் ok
ஆனதாம்
. பின்னர்
எப்போதாவது ட்யூன் குறித்து வேற்றுமை கருத்து இருந்தால் கண்ணதாசன் விசுவிடம் சொல்வாராம் டேய் யாரவது போஸ்ட் மேன் வராறா
பாரு என்பாராம்
கிண்டலாக. . இது போல், மீண்டும் ஒரு நிகழ்வு ராஜபார்ட் ரங்கதுரை பாடலிலும் நடந்ததாக கேள்விப்பட்டதுண்டு. பொதுஜனங்கள் சொல்வதை எம் எஸ் வி புறக்கணித்ததில்லை என்ற தகவல் உண்மை தான். பாடலுக்கு இணைப்பு இதோ
A] https://www.youtube.com/watch?v=KblelQwERhc 1967THANGAI
6 கடவுள் தந்த இரு மலர்கள் [இருமலர்கள் 19668] வாலி - எம் எஸ் வி- பிசுசீலா-எல்
ஆர் ஈஸ்வரி
இரு பெண்கள் தத்தம் நிலையை வெளிப்படுத்திப்பாடுவதாக அமைந்த காட்சி. சோகம் இழையோடும் மனநிலையில் -வாலி யின் அற்புதமான சொல்லாட்சி. இவ்வகை காட்சிகள் அன்றைய சினிமாவில் பல படங்களில் உண்டு, ஆயினும் சில நீண்ட ஆயுளும் வரவேற்பும் பெற்று மக்கள் மனதில் அமர்வதுண்டு.அவ்வகையில் இதுவும் ஒரு சிறப்பான பாடல் ;கேட்டு உணர இணைப்பு
VAALI MSV
7 'மகராஜா ஒரு மஹராணி' இருமலர்கள் வாலி , விஸ்வநாதன் டி எம் எஸ் , ஷோபா, சதன்
இது ஒரு குதர்க்க வகைப்பாடல் குழந்தைக்கு ஷோபா குரல் [ஷோபா நடிகர் விஜய்
அவர்களின் தாய், பொம்மைக்கு குரல்
- சதன் கேலியும் கிணடலும் பின்னிப்படர்ந்த பாடல் .ரசிக்க இணைப்பு இதோ.
https://www.google.com/search?q=YOU+TUBE+MAHARAJA+ORU+MAHARANI+TAMIL+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=be7ea59267233eb7&sxsrf=ACQVn0_90JmVkJQFSZ4g39rsCpEuwXfxEQ%3A170
IRUMALARGAL VAALI MSV
8 மாதவிப்பொன்
மயிலாள் [இரு மலர்கள் 1967 ] வாலி,
விஸ்வநாதன் டி எம் எஸ்
பாடலின் சொற்கட்டு அமைப்பைக்கண்ட பலர் இது கே வி எம் இசையில் கண்ணதாசனின்
பாடல் என்றெண்ணி இருக்க பின்னர் தெளிவாயிற்று பாடல் வாலியின் யாப்பு,
இசை விசுவின் பங்களிப்பு என்று. வெகுசிறப்பான கம்பீரம்
இப்பாடலின் தனிச்சிறப்பு ,சாஸ்திரிய நடனம் தமிழ் நடனத்தில்
செண்டை மேளம் ஒரு புது அணுகுமுறை
அன்று. மிகுந்த துள்ளல் நிறைந்த நடைஜதிகள்
பொங்கிப்பிராவாகமெனென ப்பா ய செண்டையின் நர்த்தனமும் நடனமும் இனைய வெகு அற்புதமாய்
மிளிர்ந்த பாடல் . . கேட்டு மகிழ இணைப்புக்கு
https://www.youtube.com/watch?v=664XFPDoJD8
9 சொர்கம்
பக்கத்தில் 'எங்க மாமா -1970
கண்ணதாசன் எம் எஸ் வி டி எம் எஸ் ,
எல் ஆர் ஈஸ்வரி
இது ஒரு மேற்கத்திய நடன வகைப்பாடல், இசைக்கருவிகளின் களி நடனம் மிகவும் விறுவிறுப்பு நிறைந்தது.
எல் ஆர் ஈஸ்வரியின் குரல் வெளிப்படுத்தும் உணர்வுகள் பாடலுக்கு வேகமும் மெருகும்
ஏற்றுவது கேட்டு ரசிக்க தக்கது. நிர்மலாவின் நடனம் மற்றும் இறுதி இசை யின் பொரி
பறக்கும் வேகமும் சொல்லி விளக்க வொண்ணாதவை கேட்டும் பார்த்தும் மகிழ இணைப்பு இதோ
sorgam pakkaththil https://www.youtube.com/watch?v=qM76VnvYPQI
1970m tms lre
இவ்வாறு பல வெற்றிப்படங்களை இயக்கிய பெருமை A C திருலோகசந்தர் அவர்களுக்கு உண்டு.
நன்றி
அன்பன் ராமன்
பதிவு அருமை. இது போன்ற எத்தனையோ பாடல் பிறந்த கதைகள் நமக்கு தெரியாமலேயே போய் விட்டன. வாழ்க MSV புகழ்
ReplyDelete