DIGNITY OF LABOUR FEB 24
உழைப்பின் கௌவரம்
இதை குழந்தைகளுக்கு விளக்கி சொல்ல வேண்டியுள்ளது,
உழைப்பு எவருக்கும் பெருமையை உயர்த்தும் ஏனெனில் உழைப்பின்
பலனாகப்பெறும் எந்த நன்மைக்கும் வேறு எவரும் உரிமையோ சொந்தமோ கொண்டாட முகாந்திரம்
இல்லை . இதுவே தனிமனித முயற்சிக்கு அஸ்திவாரம் இதையே வள்ளுவர் குறளி ல் .
குறிப்பிடுகிறார் "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக்கூலி தரும் " அதாவது எந்த
உழைப்புக்கும் உரிய பலனை தெய்வம் கூட தடுக்க முடியாது என்று உணர்த்துகின்றார்
வள்ளுவன் கூற்று "உழைப்பிற்கு ஊதியம் [பலன்] நிச்சயம் உண்டு என்ற உன்னத
செயல் ஊக்கம் தரும் அருமருந்து. எனவே உழைப்பு நிறைவேற நிறைவேற நமது நியாயமான
கோரிக்கைகளும் தேவைகளும் இயல்பாகவே
ஈடேறும்.. எனவே, மாணவப்பருவத்தில் நாம் உணர வேண்டிய உண்மை உழைப்பே மூலதனம்
அதற்கான வெகுமதியே மேம்பாடு அடைதல் என்பது. இந்த ஒற்றைப்புள்ளியில் நின்று கொண்டு
நமது செயல்களை வகுத்துக்கொண்டால் "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக்கூலி தரும்" என்ற வாக்கு, 100/100 சத்திய வாக்கு என்பதை காலம் உணர்த்தும் .
மாணவ நிலையில் உழைப்பு என்பது மனமும் அறிவு நுட்பமும் சார்ந்தது. எனவே இது
உடல் உழைப்பை விட கடினமானது. அதனால் தான் பள்ளி, கல்லூரிகளில் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. குளிர் பிரதேச
பகுதிகளில் குளிர்கால விடுமுறை சுமார் 70 நாட்கள் விடுவது நடைமுறை. தகிக்கும் வெயில் மற்றும்
உறையும் பனி இரண்டிலும் சுறுசுறுப்பும் தெளிவும் சற்று மழுங்கும்;
எனவே மனமும் அறிவும் தெளிவின்றி உழலும்போது கற்றல் மிகக்கடினம்.
இந்த உண்மைகளை இப்போது ஏன் பேசுகிறேன் என்றால், ஆண்டு தேர்வு பெரும்பாலும் மார்ச்-ஏப்ரல் [வெயில் காலம்]
பகுதியில் நிகழ்வது. அதற்கான தயாரிப்புகளை [preparation] ஒரு 25 நாட்களுக்கு முன்னமே நிறைவு செய்து வைத்துக்கொண்டு
அவ்வப்போது 'நினைவுபடுத்துதல் '[brushing
-up] என்று அமைத்துக்கொண்டால் பலமுறை
திருப்புதல் [multiple revisions ]செய்ய எதுவாக அமையும்..
இதை எல்லாம் சொல்வது எளிது , இவன் ஏதோ சொல்கிறான் இவனுக்கு என்ன தெரியும் என்று உதாசீனம்
வேண்டாம் . இதை நடைமுறைப்படுத்தல் என்பது கல்வி ஆண்டின் துவக்கம் முதலே நமது
முயற்சியும் துவங்குதல். நன்று, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி/கல்லூரி
துவக்க நாளிலிருந்தே மெல்ல மெல்ல படிப்பதை கைக்கொண்டால் எந்த பாடப்பகுதியும்
மலைப்பு தராது. நான் அதனால் தான் மனப்பாடம் செய்வதை முற்றாக தவிர்க்க சொல்கிறேன்.
புரிந்துகொள்வதே கல்வி என்பதை நன்றாகப் புரிந்து
கொள்ளுங்கள்.
மனதில் இருத்துவதே கற்றலின் பலன். .
புரிந்துகொள்ளப்படாத எதுவும் மனதில் தங்காது. .மனப்பாடம்
செய்வது சுமைகளை ஏற்றுவதற்கு ஒப்பானது. மென் மேலும் மனப்பாடம் செய்தால் நினைவும்
மனமும் தாங்காது. மனதில் தங்குவதும் , நினைவில் தங்குவதும் நினைவாற்றல் அவற்றை தாங்குவதும் ஒன்றை
ஒன்று ஆதரித்து செயல் படும் நிலை.. எப்படி உடல் பயிற்சி பலம் தருகிறதோ அது போன்றே
மனம்,
நினைவாற்றல், உரிய நேரத்தில் நினைவு கூர்தல்,
இவையும் தொடர் பயிற்சியின் நற்பலன்கள் தான் என்பதை
எடுத்துரைப்பார் இன்மையால், பலரும் தவறான அணுகுமுறையில் மனப்பாடம் செய்வதே பயில்வது என்ற படுகுழியில்
வீழ்ந்து மீள்வதறியாமல் அதிலேயே உழன்று வேலை தேடும் எல்லை வரை வந்து விடுகின்றனர்.
காம்பஸ் இன்டர்வ்யூ என்று தேர்வு
செய்யப்படுபவர்கள் வெகு சிலரே. ஏனையோர் சிறிய சிறிய வேலை கிடைத்தாலும் போதும் என்ற
நிலையை அடைகின்றனர். ஏன்? மனப்பாடம் செய்து படித்த மனங்களால்,
குறைதீர்க்கும் வழிமுறைகளை [TROUBLE SHOOTING] செயல் படுத்த இயலாது. நிறுவனங்கள் வேண்டுவது குறைதீர்
வித்தகர்களையே . எனவே தான் புரிந்து படித்தல் என்பது சொந்த கால்களில் நடப்பது
போன்றது.. மீண்டும் நினைவு கொள்ளுங்கள் எதையும் பற்றிட மற்றும் கைப்பற்றிட உழைப்பே
நம்பகமான வழி..
முயற்சியில் தளர்ச்சி வேண்டாம்.
நன்றி
அன்பன் ராமன்
தெய்வத்தான் ஆகாதாதெனினும்
ReplyDeleteமுயற்சி தன் மெய் வருத்தக. கூலி தரும்