BIOTECHNOLOGY- PLANT TISSUE CULTURE TECHNOLOGY -2
பயோடெக்னாலஜி- தாவரத் திசு வளர்ப்பு தொழில் நுட்பம் -2
தாவர/ விலங்கு --இரண்டு வகை உயிரின திசுக்களையும் வளர்க்கலாம் எனினும்
தாவரங்களின் திசுவை வளர்ப்பது சற்று எளிதானது, ஏனெனில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப்பின்
தாவரத்திசுக்கள் தாங்களே தங்களை பராமரிக்கும் செயல்களை துவங்கும் ஆற்றல் கொண்டவை.
இவ்விடத்தில் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். விலங்கு திசுக்கள்முறையாக வளர்க்க கிட்டத்தட்ட கரு வளர்ச்சிக்கு நிகரான கவனமும்
ஊட்டமும் பராமரிப்பும் அவ்வப்போது முறையாக கிடைக்க வேண்டும் இல்லையேல் கருச்சிதைவு
போன்ற குளறுபடிகள் ஏற்பட ஏராளமான வாய்ப்புகள் உண்டு. அப்படியாவது இன்னல்பட்டு திசு
வளர்க்கவேண்டுமா ? என்போருக்கு
இதுவே பதில். எந்த இன்னலும் நமக்கானது அல்ல [வீட்டில் நாம் படும் இன்னல் உட்பட]
அவை வருங்கால பிரஜைகளின் நலன் கருதி.என்பதை ஒருநாளும் நிராகரிக்க இயலாது.
எனவே பல அறிவியல் முன்னேற்றங்கள் விளம்பரமின்றி அரங்கேறிக்கொண்டே வருகின்றன. விண்வெளி ராக்கெட்டினால் என்ன பயன் என்று அரசியல் வாதி கேட்பான் -அவனுக்கும் விஞ்ஞானத்துக்கும் சாரி ஞானத்துக்கும் வெகு தூரம். அப்படித்தான் பேசிக்கொண்டு ஏழைபங்காளன் என வேஷம் போடுவான். ஆமாம் தேர்தல் நேரத்தில் ஏழையின் கூழையும் இவனே குடித்து போட்டோ போஸ் கொடுத்து ஒட்டு அள்ளுபவன் வேறென்ன பேசுவான்? இவன் மணல் திருடுவதை தேவலோகத்திலிருந்து சாட்டலைட் படம் பிடித்துவிட்டது என்று.தெரிந்தால் அந்த திட்டத்துக்கே அடிக்கல் நாட்டு விழாவைக்கூட தடை செய்வான். . சரி நமது இலக்குக்கு வருவோம் . திசுக்களை ஏன் வளர்க்க வேண்டும் ?
இது ஒரு நுணுக்கமான பகுதி. மனிதனின் இயல்பான 'தேடல்' பல திசைகளிலும் பயணிக்க , விலங்கு/ தாவர
அமைப்புகளில் நிகழும் அடிப்படை செயல்களை புரிந்து கொண்டால், உயிரின இயக்கத்தின் நுணுக்கங்களை
புரிந்துகொள்ளலாம் என்று துவங்கிய நடைமுறையே பயாலஜியில் செய்முறையை அறிமுகப்படுத்தியது. . அதே சமயம் வேதியல்
பொருட்கள் ஒன்றோடொன்று இயங்கும்போது தோன்றும் மாற்றம் உணரப்பட, மெல்ல மெல்ல பயோகெமிஸ்ட்ரி என்ற கல்வி முறை
தோன்றியது. பயோகெமிஸ்ட்ரியின் உதவியுடன் செல் செயல்களை சோதித்தபோது மூலக்கூறு
உயிரியல் [மாலிக்குலர் பயாலஜி ] தோன்றியது.
. இத்துணை தகவல்களையும் பிரயோகித்தால் , நமது தேவைக்கேற்ப செல்களை உந்தி செயல் பட
வைக்கலாம் என்று புரிந்தது. இதுபோன்ற பயன்பாடுகள் மிகுந்த [ richly அப்ளிகேஷ ன்-oriented ]கல்வி திட்டம் பயோடெக்னாலஜி யாக
பரிணமித்தது. .இப்போது மந்திர வாதிகள் போல
செல்லை [செல்] இப்படிச்செய் அப்படிச்செய் என்று ஆட்டிப்படைத்து அரிய மருந்து
வகைகளை எந்த உயிரையும் கொல்லாமல்
வெகுவிரைவாக உற்பத்திசெய்ய முடியும்.
பலகோடி மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு வாக்சின் எவ்வளவு விரைந்து பலகோடி
குப்பிகள் [ billions of vials ] தயாரித்தோம் என்று நினைத்துப்பாருங்கள். இது
போன்ற செயல்பாடுகளின் உள்நுணுக்கம் அறிந்து குறிப்பிட்ட மருந்துகள். வாக்சின்கள்,
ப்ரோடீன்கள் , என்சைம்கள் போன்ற தனித்த விளைவுகள் [specific products] உருவாக்கும் நுண்கலை, பயோடெக்னாலஜியின் உபாயம் /உபயம் தான்.
இது எப்படி நினைத்ததை சாதிக்க முடிகிறது ? என்றால் எந்த ஜீன் எந்த வேலைக்கு என்பதும் அதை உரக்க பேச வைக்கவும் , உறங்க வைக்கவும் உள்ள கண்ட்ரோல் முழுவதையும் கையில் வைத்துக்கொண்டு செயல் பட வைக்கிறோம்.
இவ்வனைத்தையும் பல தரப்பட்ட செல் வகைகளை தூண்டி விட்டு அணுகுமுறைகளை புரிந்து
கொள்ள, முழு தாவரமோ, விலங்கோ தரும் தகவலை விட அவற்றின் செல்களை
நேரடியாகக்கண்காணித்தால் எண்ணற்ற தகவல்களை விரைந்து பெறவும், அணுகுமுறைகளை சரியாக உருவாக்கிக்கொள்ளவும் வழி
பிறக்கும் .எனவே திசு வளர்ப்பு எளிய ஆனால் நம்பகமான கருவியாக பயன் படுகிறது. இதை
எவ்வாறு செய்கின்றனர், என்னென்ன பலன்கள்
கிட்டியுள்ளன என்பனவற்றை காண்போம்.
இப்போதெல்லாம் முக்கியமான என்சைம் வகைகளை தேர்ந்தேடுத்த நுண் உயிரி
[பாக்டீரியா] வகைகளைக்கொண்டு பெருமளவில் BIO REACTOR வழியாக உற்பத்தி
செய்கின்றனர்
முதல் வகை நீரழிவு [ TYPE -I DIABETES ] நோய்க்கான இன்சுலின், E .coli வகை பாக்டீரியாவின் ஜீன்களில் மனித இன்சுலின் ஜீனை பிணைத்து [re-combinant DNA Technology மூலம்] மாற்று DNA ஏற்படுத்தி, அதன் வாயிலாக இன்சுலின் தயாரித்தல் 1978 முதல் இயங்கி வருகிறது. பின்னாளில் ஈஸ்ட் வகை [Saccharomyces cerevisiae ] நுண்ணியிரி களைக்கொண்டும் இன்னும் பிற வகை Saccharomyces நுண்ணியிரிகள் கொண்டும் இதே வகையில் இன்சுலின், ஏராளமாக உற்பத்தி செய்யப்படுகிறது. ஜீன் மாற்றமைப்பு [ re-combinant gene ] பெரும் செயல் உத்தியாக உருவெடுத்தது, மருத்துவத்துறைக்கு பயோடெக்னாலஜி வழங்கிய வரப்பிரசாதம் எனில் மிகை அல்ல. பிற வகை பயன்பாடுகளை எதிர் வரும் பதிவுகளில் காண்போம்.
நன்றி அன்பன் ராமன்
No comments:
Post a Comment