IS LEARNING BITTER?- 4
கல்வி கற்றல் கசப்பானதா? -4
ஆம் என்போர் அதிகம், இல்லை என்போர் சொற்பம் . இதுவே நாம் களத்தைப்புரிந்துகொள்ள , சரியான துவக்கப்புள்ளி. இது ஏன் துவக்கப்புள்ளி என்று
பார்க்கிறோம்? ஒன்றுமறியாத
நிலையில் தான் கல்வியை பயில துவங்குகிறோம். ஆம் ஒரு மாணவர் பி எஸ் சி கெமிஸ்ட்ரி
முதல் ஆண்டில் சேரும் போது -உண்மையிலேயே அவருக்கு செயல்வினைகள் [REACTIONS
] குறித்த ஆழ்ந்த புரிதல் இருக்காது . ஒரு
சில குறியீடுகள் [SYMBOLS ], FORMULAE என்னும் சூத்திரங்கள் , சமன்பாடுகள் [EQUATIONS ] அறிந்திருப்பார். . எனக்கு கெமிஸ்ட்ரி நன்கு தெரியும் நான்
ப்ளஸ் 2 வில் கெமிஸ்ட்ரியில் 196/200 என்று பேருவகை கொள்வார். இவ்வளவு இருந்தாலும் கெமிஸ்ட்ரி
கல்வியில் பட்டப்படிப்புக்கு சேர்ந்துள்ள கட்டத்தில் அவர் கெமிஸ்ட்ரியில் LKG
என்ற புரிதலே முதலில் ஏற்பட வேண்டும். அது ஏற்படுவதில்லை.
ஒருசில பள்ளிச்சூழல்களில் வளர்ந்த 17-18 வயதினர் தாங்கள் +2 வில் பெற்ற மார்க் என்ற போதையில் இருந்து மீளாமல் மனதளவில்
சிறகடித்து வகுப்புகளை சரியாக கவனிப்பதில்லை. ஒரு சிலர் தாங்கள் கரைகண்டவர் போல்
வகுப்பு நடைபெறும் தருணங்களில் கேள்விகேட்டு குறுக்கீடு செய்து தங்களை
முன்னிலைப்படுத்திக்கொள்வர். இதனால் EGO என்னும் [தன் முனைப்பு ]அவர்களை
ஆட்கொள்ளுகிறது அதுவே நாளடைவில் ஆட்கொல்லி ஆகிறது. இதுபோன்ற கற்பனை பெருமைகளை
முளையிலேயே கிள்ளி எறிதல் மன வக்கிரங்களை தடுக்கும். இதை வளரவிட்டால் மனவக்கிரம்
வளரும்,
மனிதன் வளர்வது தடைபடும். இதுபோன்ற சில செயல்களுக்கு மாணவர்களின்
ஆங்கில புலமை ஒரு பெரும் காரணி என்பது வருத்தத்திற்குரியது. ஆங்கிலம் சரியாக பேச
த்தெரியும் என்பதால் கல்லூரிவகுப்புகளில் சிலர் கேள்விகளை எழுப்புவர்.
இங்கே தான் ஆசிரியன் விஸ்வரூம் எடுக்கவேண்டும் ;அந்த நிலைக்கு ஆசிரியன் நொடிப்பொழுதில் 300அடி உயரத்தினுச்சியைத்தொட்டு ,
தம்பி இந்த த்தகவலைப்பார் என்பதாக ஒருஉயர்மட்ட கோட்பாடுதனை
சுட்டிக்காட்ட , அதையும்
சண்டமாருதம் போல படபட என்று விரைந்து பொரிந்து தள்ள ,
அக்கணமே, மாணவனின் பிம்பமும் , அவனது அகம்பாவமும் தவிடுபொடியாகி பலர் முன்னிலையில் அம்மண
நிலைக்கு தள்ளப்படுவான். பல ஆசிரியர்கள் இதை செய்யாமல் சிறுவன் போகிறான் போகட்டும்
என்று மென்போக்கு [SOFT APPROACH ] கொள்ள மேலும் சிலர் இதே வேலையை வேவ்வேறு வகுப்புகளில்
பின்பற்ற , வகுப்புகளில் எனோ
தானோ என்று போதிக்கும் சூழல் மெல்ல விஸ்வரூபம் கொள்கிறது. இதனால் தான்
ஆசிரியப்பணிக்கு வரவிரும்புவோர் மொழி ஆளுமைகளை சிறப்பாக வளர்த்துக்கொண்டால்,
சிறுவர்களின் கிண்டலுக்கு உட்படத்தேவை இல்லை .
இதை சொன்னால் தமிழகத்தில் பலருக்கும் உடல் எரிகிறது ;அவர்களின் குறையை பட்டியலிடுவதாக நினைக்கின்றனர். உண்மை
என்னவெனில், அவர்களின்
உண்மையான உயரம் பல்ருய்க்கும் புலப்பட மொழி ஆளு மை ஒரு வலுவான கருவி.. விளக்கம்
வேண்டுவோர் இந்த பெயர் கொண்ட மனிதர்களை பற்றி சிந்தியுங்கள்,
1 தமிழருவி மணியன்,
2 இந்திய பாராளுமன்ற உறுப்பினர்/ அமைச்சர்
திருமதி ஸ்ம்ருதி இரானி ,
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா -இவர்களின்
பிம்பங்களுக்கே அடித்தளம் அவர்களின் மொழியின் துல்லியம் மற்றும் நுணுக்கமான
சொல்லாட்சி.. இதை [மொழியை] புறக்கணித்த
எவரும் உச்சம் தொட முடியாது. அல்லது
எவ்வளவு ஆழ்ந்த புலமை இருப்பினும் அவருடன் மொழிவளமும் சேரும்போது ,
அவருயரமும் பிம்பமும் அதிகப்படும். ஒருவகையில் சில அரசியல்
தலைவர்களின் 'உயரமான '
தோற்றம் கூட மொழியின்
கொடையே . எனவே எனக்கெதற்கு அது என்பவர்கள் எளிதில் கைப்பற்ற வேண்டிய
பொக்கிஷங்களை பற்றிக்கொள்ள தவறிய தடுமாறிகள் என்பதை காலம் உணர்த்தும்..
குறிப்பாக ஆசிரியப்பணியில்
உயரம் தொட்டு ஆசான் நிலையை அடைய , தொடர்ந்து தகவல் திரட்டலும் , அவற்றை முறையாகத்தொகுத்தலும், சிறப்பாக
வெளிப்படுத்த உரிய மொழியாளுமையும் மிகமிக வலு சேர்ப்பன. எவ்வளவு தகவல் இருப்பினும்
அதை எளிமையாக இனிமையாக தெளிவாகச்சொல்ல மொழியின் உதவி புறக்கணிக்கத்தக்கதல்ல.
இதுதான் கல்வியில் கசப்பை விதைக்கவோ, அகற்றவோ உதவும்.
மொழியின் திறன் குன்றி
சொதப்பும் ஆசிரியன் வெறுக்கப்படுவதும் , முறையாக தெளிவுபடுத்திய ஆசிரியன் ஏற்கப்படுவதும் போற்றி
வணங்கப்படுவதும் -மொழியினால் கிடைத்த பலனே. ஏன் இந்த வேற்றுமை? இருவரும்
கல்வித்தகுதிகளால் சமமானவர்களே , செயல் திறன்
மாறுபாட்டினால் விளையும் வேற்றுமை என்பது தெளிவாகிறது.
இவ்விடத்தில் ஒரு கேள்வி ?
எந்த ஆசிரியராவது மோசமான
ஆசிரியர் என்ற பட்டத்தை விரும்பி ஏற்பாரா? மாட்டார் ஆனாலும்
தன ஒரு திறமையாளன் என வெளிப்படுத்தவே விரும்புவார், முயல்வார். என்ன
முயன்றாலும் இங்கே மொழி எனும் ஆதார அஸ்திவாரம் வலுவின்றி இருப்பதனால் எந்த புது
முயற்சியையும் முன்னெடுக்காமல் 10ம் வகுப்பு ஆங்கிலம் போதும் என்று செயல்
படுகிறார். நல்ல பயிற்சி தரும் பள்ளியில் இருந்து வந்த மாணவர்கள் , இது போன்ற
ஆசிரியர்களை விரும்புவதில்லை மாறாக கேலிப்பொருளாக ப்பார்க்க தலைப்படுகின்றனர்.
இவரிடம் பயில வந்தவன் இவரை துச்சமாகப்பார்க்க பெருமை அந்த ஆசிரியரையே சாரும் .
எந்தக்கூட்டத்திலும்
கேட்பவன், ஏதுமறியாதவன்
என்பது தவறான கண்ணோட்டம். கேட்பவனுக்கும் தெரிந்திருக்கக்கூடும் என்ற எச்சரிக்கை
உணர்வோடு செயல் படுதல் நன்மை தரும்.
தெளிவாகப்பேசும், ஆர்வம், திறன், அக்கறை
இல்லாதவர்கள் ஆசிரியப்பணியை விட்டு விலகுதல் அனைவர்க்கும் பயன் தரும். கற்பிக்கும்
உத்திகளை கைக்கொள்ளாமல் ,
கேட்போரை
வசைபாடுதல் நேரவீணடிப்பு என்பது தான் உண்மை. செய்ய வேண்டியது என்ன ? வரும் பதிவில்
காண்போம்
வளரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment