Sunday, March 24, 2024

SADHAN –AN ARTISTE

 SADHAN –AN ARTISTE 

சதன் என்ற கலைஞன்

இவர் பட்டம் சதன் என்று அறியப்பட்டவர். திருவனந்தபுரம் பட்டம் பகுதி இவரது ஊர் , எனவே பெயருடன் பட்டம் ஒட்டிக்கொண்டது.

இசை குறித்து பல தகவல்களை நினைவு கூர்ந்து ரசிக்கும் நாம் , திரு சதன் அவர்களின் பங்களிப்பை மறக்க இயலாது. பல பாடல்களில் தோன்றும் பல்வேறு விலங்கின / பிற வகை ஒலிகளை பிசகாமல் வழங்கினார் . சொல்லப்போனால் திரு எம் எஸ் வியின் இசைக்குழுவில் இருந்த சில செல்லப்பிள்ளைகளில் சதன் முதன்மையானவர்.

ஆம் பாடல் பதிவின் போது எப்போது  என்ன ஒலி  வேண்டும் என்று இறுதி நேரத்தில் கூட முடிவு செய்யப்படும்.எனவே எப்போதும் சதன் எம் எஸ் வி யுடனேயே இருப்பார். இது தவிர அவ்வப்போது படங்களில் பாடல் காட்சிகளில் நடிப்பார். சொல்லப்போனால் மலையாளத்திரையில் படங்களில் பிரபலம் இவர். பாடலிலும் பங்கேற்பார். அவருடைய திறமையை சில சொற்களில் அடக்க முடியாது. நல்ல கூர்ந்த கவனிப்பும், எதையும் திரும்பி ஒலிக்கும் திறமையும் அவரின் தனிச்சிறப்புகள். இவை ஒரு புறம் இருந்தாலும், எம் எஸ் விஸ்வநாதன் பாடல்களில் ஒலிக்கும் விசேஷ ஒலிகள் நேர்த்தியாக இருந்தமைக்கு காரணம், சதன் ; சில பாடல்களில் சாய்பாபாவும் ,முருகேஷும் உதவியுள்ளனர்.. ஆனாலும் சதன் அவர்களின் பங்களிப்பு எளிதில் புறக்கணிக்க இயலாது. அவர் பங்களிப்பில் மிளிர்ந்த பாடல்களை கேட்டு மகிழுங்கள்  

1 போனால் போகட்டும் போடா [பாலும் பழமும்- 1961] கண்ணதாசன் , வி-ரா, டி எம் எஸ்   இப்பாடல் விரக்தியில் எழுந்த மனக்குமுறல் , துணையை இழந்தவன் மயான பூமியில் அரற்றிக்கொண்டு போவதாக அமைந்த பாடல். பாடலின் ஓலம் எம் எஸ் வியின் குரலில் ஓ ஓ என்று துவங்க, ஓநாயும், நரியும் ஊளையிட்டு மயான பூமியை குரல் வழியே காட்டிய சதன். ஆந்தை கூகை , கழுகு வகை ஒலிகள் அங்கங்கே படரவிட்டு சதன். குரலில் பாடலின் தாக்கம் வலிமையானது. பார்த்து உணர இணைப்பு

https://www.google.com/search?q=ponal+pogattum+poda+video+song+download&newwindow=1&sca_esv=289933ce561edd87&sxsrf=ACQVn0-j1Q_nzlMzBuVV1gAMUa6vD2RNeA%3A1710751559414&ei=R_

2 எங்கிருந்தாலும் வாழ்க [நெஞ்சில் ஓர் ஆலயம்-1962 ] கண்ணதாசன் வி-ரா , அழ ராகவன் , சதன் ஒரு உன்னத மனத்தின் உயர்ந்த எண்ணமாக ஒலித்த பாடல் -ஹை கிளாஸ் காதலன் வேறென்ன நிலைப்பாடு கொள்வான்?

https://www.google.com/search?q=ENGIRUNDHAALUM+VAAZHGA+VIDEO+SONG&oq=ENGIRUNDHAALUM+VAAZHGA+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIGCAEQRRhAMgYIAhBFGDvSA

பாடலில் துவக்கத்திலும் இறுதியிலும் ஒலிக்கும் தவளையின் குரல் சதன் அவர்கள் வழங்கியதே . நன்றாக கேளுங்கள்

3 பறக்கும் பந்து பறக்கும்  [பணக்கார குடும்பம் -1964  ] பாடல் கண்ணதாசன், வி-ரா, டி எம் எஸ், பி சுசீலா

பந்தாடிக்கொண்டே காதல் பேசும் இருவர் மன உரையாடல். பந்தின் ஒலியாக ப்ளக் ப்ளக் என்று உரிய இடத்தில் பந்தாக ஒலித்தவர் திரு சதன் , வாய்க்குள் நடுவிரலை செலுத்தி கன்னத்தை வருடியபடி விரலை வெளியே இழுத்து பந்து போல் ஒலிக்க வைத்து பாடலுக்கு உயிர் தந்தவர் , கன்னம் வீங்கி 3 நாள் அவதியுற்றாராம் சதன் எம் எஸ் வி நினைவுகூர்ந்து தெரிவித்தார்.

https://www.google.com/search?q=PARAKKUM+PANDHU+PARAKKUM+VIDEO+SING+&newwindow=1&sca_esv=289933ce561edd87&sxsrf=ACQVn09zxt-jp5OCOEXbU22B7iJzeaGhTg%3A1710750365536&ei=nfr3ZZa

4 தத்தை நெஞ்சம் [ சர்வர் சுந்தரம் -1964] கண்ணதாசன் , வி-ரா ,பி.சுசீலா சதன்

மிகவும் ரம்மியமான பாடல், நாயகி கிளியுடன் உறவாடி ப்பாடும் பாடல், பாடலில் பெரும் பகுதியில் கிளியாக மாறிய சதன் ;அற்புத மான கிளியின் குரல், கொத்தும் கிளி என்றதும் கீச்கீச் என்று ஒலித்த நேர்த்தி என்ன/. பாடலுக்கு உயிர் கிளியின் பங்களிப்பும் கொண்டது எனில் மிகை அல்ல . கேட்டு மகிழுங்கள்                                          

2 comments:

  1. கிளி, தவளை இவைகளின் ஒலியை த்த்ரூபமாக்க் காட்டிய சதன் ஓரு ஒலி மன்னன் தான்

    ReplyDelete
  2. So nice of you to bring out the talents of Sadan in MSV MSV troupe.

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...