Sunday, March 24, 2024

SALEM SUNDARI

SALEM SUNDARI 26-03

சேலம் சுந்தரி

எங்களை அமைதியாக இருக்க விட மாட்டாய் போலிருக்கிறதே. மீண்டும் சேலம் சுந்தரி என்று சஞ்சலப்படுத்திகிறாயே என்று சிலர் பூபாளக்கோபம் கொண்டு விழிக்க/ வெறிக்க நான் என்ன செய்ய? சுந்தரி சிறிது நாட்கள் முன்பே கேள்வி வடிவில் வந்தாள் , இன்று வேறுவடிவில்.

மணி காலை 10. இரண்டு நிமிடத்திற்கொரு முறை எட்டிப்பார்க்கிறாள் ஊஹூம் வந்தபாடில்லை ;மீண்டும் எட்டிப்பார்க்கிறாள் அதே வெற்று வாசல் படி தான் .--இன்னும் வரவில்லை .மணி 10.12 இன்னும் வரவில்லை இவர்களுக்கெல்லாம் ஆபீஸ் நேரம் தெரியுமா தெரியாதா , மேலிடத்தில் புகார் செய்து விடலாமா என்று ஒரு வேகம். உள் மனம் எச்சரிக்கிறது வேகம் விவேகம் அல்ல. மணி 10.14 மீண்டும் வாசல் படி ஆள் வந்தபாடில்லை பொறுமை எல்லை கடந்து சுந்தரி எழுந்து நேரே செக்ஷன் அதிகாரி சுப்புரத்தினம் இருக்கை அருகே  . நின்று க்கூம் என்று கனைத்தாள் ;சுப்புரத்தினம் இவளை பார்க்காமலேயே அடி போடி பைத்தியக்காரி  என்பது போல வெற்றிலைக்கு ஸ்னோ --அதுதான் [3 வது என்னும்] சுண்ணாம்பை வாஞ்சையாக நடு விரலின் பக்கவாட்டு பகுதியால் வெற்றிலையின் வெள்ளை முதுகுகுப்பகுதியில் சொரிந்து விடுவது போல் முன்னும்    பின்னும் அசைத்து மேக்-அப் போட்டார் வெற்றிலைக்கு. இப்படி நான்கு வெற்றிலை தயாரானதும் அவற்றை தையல் இலை தைப்பவர் போல் வட்டமாக வைத்து பாக்குப்பொடியை மெல்லத்தூவினார், அது என்ன பாக்குப்பொடி ? சுப்புரத்தினம் [52] ஆண்டுக்கொன்றாக இது வரை 4 பற்கள் விடைபெற்று போய்விட கடை வாயில் தாடை தான் மிச்சம் .பாக்கு போட்டுகொண்டால் ஆபீசுக்கு லீவுதான் எடுக்கவேண்டி வரும். அதனால் Mrs சுப்புரத்தினம் [ஆனந்த கௌரி] நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாக்கை இடித்து தூள் செய்து நுண்பொடியாக ஆக்கி டப்பாவில் நிரப்பி வைப்பார். ARR சுண்ணாம்பு டப்பிகள் காலி ஆனதும் கழுவி காயவைத்து துடைத்து பாக்குப்பொடி அடைப்பது அவரின் கடமை.,நல்ல வேளை  வெற்றிலையும் பாக்கும் சுப்புரத்தினம் பொறுப்பு. யார் வாங்கினாலும் ஏதாவது குறை சொல்வார் அதனால் யாரும் அந்த வேலை செய்வதில்லை குடும்ப அமைதி காத்திடவேண்டும் அல்லவா?

மணி 10.20 இன்னும் வந்தபாடில்லை . பொறுமை கரைந்து கொண்டே இருக்கிறது சுந்தரிக்கு. வெற்றிலை சாற்றை ஜிவ் என்று உறிஞ்சியதும் தான்  சுப்புரத்தினத்திற்கு சுய நினைவே வந்தது. திரும்பிப்பார்த்தார் பக்கவாட்டில் ஹோட்டல் தோசை நிறத்தில் சற்று பருத்த அடிவயிறு [நன்கு சாப்பிட்ட வயிறு]

சுப்புரத்தினம் என்ன MATERNITY லீவா ? என்று கேட்டார் பின்னர் தான்-- யார் என்று பார்த்து, சுந்தரி என உணர்ந்தார். அவளுக்கு கோபம்-- .வயிற்றை பார்த்து கேட்டுவிட்டாரரே  என்று. மேலதிகாரியை முறைத்துக்கொண்டால் நிஜம் MATERNITY வந்தால் லீவு கொடுக்க காலம் தாழ்த்துவார் என்ற பயம்.சரி பேச்சை மாற்றினாள் சார் HR ஆபீஸ் போயிட்டு வந்துடறேன் என்றாள்.   சரி இந்த FILE --DAVID இடம் கொடுத்துவிட்டு வா சீக்கிரம் என்றார்.

சீக்கிரம் வரணுமாம் சீக்கிரம். மணி 1042 ஆவுது இன்னும் அந்தாள் வரவே இல்லை, எவனாவது கேக்கறானா , நான் மட்டும் சீக்கிரம் வரணும் என்று உள்ளூர கோபம் கொண்டாள்.

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...