SALEM SUNDARI -8
சேலம் சுந்தரி -8
தம்பீ , “இந்த சுந்தரிதான் சும்மா இல்லாம HR ல போயி மாடசாமி இன்னும் டூட்டிக்கு வரல னு போன வாரம் போட்டுக்குடுத்து , அவரு டேவிட் நல்ல திட்டி துரத்திப்புட்டு எனக்கும் போன்ல சொல்லிட்டாரு அந்தம்மாவை ஒழுங்கா இருக்க சொல்லி அட்வைஸ் பண்ணுங்க” , ‘மாடசாமிகிட்ட மாட்டுனா ,கொசுமாதிரி கொன்னு போட்டுருவாரு ,கவனமா நடந்துக்க சொல்லுங்க’ னு சொன்னார்; நான் சொல்றதுக்குள்ள நீங்களே வந்து அந்தம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போய் வந்துட்டீங்க .
டாக்டர் என்ன சொன்னாரு, ஏன் மயக்கம் வந்துச்சாம்? -‘ப்ரெக்னன்சி’னு ஏதாவது சொன்னாரா? என்றார் சுப்புரத்தினம்.
சுப்புரத்தின் ஒரே கவலை தனது செக்ஷனில் எந்தப்பெண்மணியும் மெட்டர்னிட்டி லீவு
போடக்கூடாது . ஏன் என்றால் 3, 4 மாசத்துக்கு ஆள் இல்லாமலே எல்லா வேலையையும் கவனிக்க வேண்டி
வரும் என்ற பய உணர்வு.
கோபத்தின் விளிம்பில் மாடசாமி
"ஏன் சார் இந்த சுந்தரிக்கு இன்னும் கல்யாணமே ஆவல்ல அதுக்குள்ள ML அது இதுனு ஆரம்பிக்காதீங்க. "
சுப்புரெத்தினம்-"அந்தம்மா வகுரு பொடச்சு
[வயிறு வீங்கி ], சும்மா
‘கும்’ னு இருக்கவும் எனக்கொரு சின்ன சந்தேகம்
,
அதனால நீங்க பாவப்பட்டு சாத்தாம விட்டுட்டீங்களோ னு
தோணிச்சு -அதான் கேட்டேன்"
. மாடசாமி "நான் எதுக்கு சாத்தறேன், சீ பாவம் பொம்பள பிள்ளையை அடிச்சு என்னா ஆவப்போவுது? ஏதோ கம்ப்ளெயிண்ட் சொல்லுச்சு சொல்லட்டும் ;இப்படியெல்லாம் குடுகுடுன்னு ஓடிப்போய் சொல்லக்கூடாது பெரிய சிக்கல் வந்துரும் னு 4 நாள் கழிச்சு சுந்தரி கிட்ட நானே சொல்லுவேன் -நான் பாத்துக்கறேன் விடுங்க சார்.
கோபமாக
உரத்த குரலில் “எவளுக்கு எங்க
பொடச்சுக்கிட்டு இருந்தா நமக்கு என்ன?” என்று மாடசாமி முழங்க
சுப்புரத்தினம் கதி கலங்கி மௌனியானார்.
மாடசாமி மனதில் இப்போது கௌரியின் ஸ்தானத்தில் சுந்தரி.
ஏதோ
அவசரக்குடுக்கையாக புகார் சொல்லிவிட்டால் , ஒட்டு மொத்தமாக ஒருவரை வெறுக்க முடியுமா. எத்தனையோ பேர்
மொட்டை கடுதாசியில் புகார் சொல்ல தயார், அவங்களை என்ன செய்ய முடிகிறது என்பது மாடசாமியின்
நிலைப்பாடு..
நம்ம ஆபிஸ் அமைதிய இந்தப்பொண்ணு கெடுத்துருமோனு ஒரு பயம் இருக்குது அதுக்கு தான் கவனமா இருங்க னு சொல்ல வந்தேன் என்று சமாளித்தார் சுப்புரெத்தினம்.
கோபமுற்ற
அய்யனார் போல் கண் சிவந்த மாடசாமியை எதிர்கொள்ள திராணி அற்றவராக வெற்றிலைபோட
கிளம்பினார் சுப்பு ரெத்தினம்..
மாடசாமி சொன்னார்
இருங்க , நம்ம தெளிவா
ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டம்னா யார் என்ன செய்ய முடியும்? அப்பிடியே ஏதாச்சு வேணும்னா நம்ம பாத்துக்கலாம் -நீங்க
பெரியவங்க உங்களுக்கு தெரியாததா? என்று சுப்புரெத்தினத்தின் வாயில் முழு தேங்காயை திணித்ததுபோல் , வாயை அடைத்தார் மாடசாமி.
சுப்புரெத்தினம் உள்ளூர நொந்து போனார் நமக்கு நேரம் சரியில்லை என் பேச்சு
எடுபடவே இல்லை அரே தேவுடா என்று வெங்கடாசலபதியை நினைத்து கும்பிடு போட்டார்.
சுப்புராத்தினம் அகன்றதும் ஓடி வந்த சுந்தரி "சார் ஒரு 10 நிமிஷம் உங்களோட பேசணும் ,இல்லாட்டி என் மண்டை வெடிச்சிடும் போல இருக்கு"
என்றாள்.
"இப்ப மணி என்ன னு பாருங்க மதியம் 2.45 மணிக்கு கான்டீன்ல இருப்பேன் அந்த சமயம் பாத்து வாங்க கான்டீன்லயே பேசலாம் வேறெங்கேயும் போய் ஒளிஞ்சுக்கிட்டு பேச நான் வரமாட்டேன்" என்று கறாராக சொல்லிவிட்டார் மாடசாமி.
'சரிசார், தேங்க்ஸ் சார்' என்று
இருப்பிடத்துக்குப்போனாள் சுந்தரி
சொன்னபடியே கேன்டீனில் மாடசாமி 2.45 க்கு ஆஜர். அவர் கேன்டீன் போகட்டும் என்று ஓரக்கண்ணால்
பார்த்துக்கொண்டிருந்த சுந்தரி மெல்ல போய் மெதுவாக கேன்டீன் வளாகத்தை அடைந்தாள்.
அங்கே கேப்ரியல் , ராமசாமி, இன்னொரு போஸ்டல் ஊழியர் இருக்க ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா என்று
கேபிரியேல் அதிர்ந்து கொண்டிருக்க , பூனை போல சுந்தரி உள்ளே வர , சரி உங்க staff வந்திருக்காங்க , நாங்க கிளம்பறோம் என்று பிறர் அகல, சரி என்று மாடசாமி கையசைத்து விடைகொடுத்தார்.
தொடரும்
அன்பன் ராமன்
பொம்பளை வயிறு புடைச்சா ப்ரக்னண்டுதானா?
ReplyDeleteஐயங்கார் ஸ்வாமி ,
ReplyDeleteசுப்புரெத்தினம் ஒரு கவலைல வகிரு பொடச்சு வகிரு பொடச்சு னு புலம்பி [ப்ரெக்னன் சி யா ] னு சொல்றார் . நீங்க என்ன நெனைக்கறேள்?