Thursday, April 25, 2024

DIRECTOR P MADHAVAN-3

 DIRECTOR P MADHAVAN-3

இயக்குனர்  பி மாதவன் -3  

தேனும் பாலும் [1971] கண்ணதாசன் , எம் எஸ் வி, குரல்கள் ஜானகி    ஜிக்கி  அந்நாளைய இரு பெண் குரல் வகை பாடல்களில் பரிமளிக்க பாடல்களில் இப்பாடலுக்கு ஒரு தனி இடம், உண்டு . அதுவும் நீண்ட இடை வெளிக்குப்பின்னர் , ஜிக்கி மீண்டும் பாடிய தருணம். நேர்த்தியான கௌரவ நடையில் அமைந்த நன்றி/ பக் தி கலந்த பாடல். இப்போதெல்லாம் இது போன்ற பாடல்களை பார்க்கவே முடிவதில்லை. அவ்வளவு வலிமையையும் நேர்த்தியை யும் குழைத்து கவிதை தரும் பாடலாசிரியர்களை எங்கே தேடுவது? கேட்டு மகிழ இணைப்பு

thenum paalum 1971 https://www.youtube.com/watch?v=7glaIZGNSrE jikki jaanaki kd msv

பட்டிக்காடா பட்டணமா [1972] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ்

இது அன்றைய பிளாக் பஸ்டர் படம். வசூலிலும் சாதனை படைத்த படம். மிகச்சிறந்த பாடல்கள் நிறைந்த படம். இதில் மேல் நாட்டு பண்பு பீடித்த பெண்ணை நையாண்டி செய்யும் பாடல்.. மேல் தட்டவகை இசை, நடன ம்  , உடை என்று மாறுபட்ட தோற்றத்தில் சிவாஜி அபிநயித்துப்பாடிய பாட;ல்  அக்காலத்தில் திரையில் பஜனை போன்ற அமைப்பில் பாடுவது [ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் தாக்கம் ] ஒரு உத்தி. இப்பாடலும் அவ்வகையினதே.  கண்டு மகிழ

https://www.google.com/search?q=NAL+VAAZHTHTHU+NAAN+SOLVEN+video+song&newwindow=1&sca_esv=df9114d5be7f4ca8&sca_upv=1&sxsrf=ACQVn09ogLZAMncoyckPDy3sBdvnHoFYBw%3A 1972 PATTIKAADAPATTANAMA KD MSV TMS

ஞான ஒளி [1972] மண மேடை , கண்ணதாசன், எம் எஸ் வி, பி.சுசீலா

ஒரு மென்மையான காதல் உணர்வு சுமந்த பாடல். பாடுபவள் ஒரு கிருத்துவப்பெண் ;இசை அதை நன்றாகவே வெளிப்படசுத்தும் வகையில் ராக அமைப்பு, கருவிகளில் தொகுப்பு மற்றும் அவ்வப்போது சூழலை நினைவூட்டும் வகை ஏற்ற இறக்கங்கள். அற்புதமான பாடல். கேட்டு மகிழ இணைப்பு 

https://www.youtube.com/watch?v=8TTMY9u0rTY 1972 gnaana oli mana media kd msv ps

தங்கப்பதக்கம் [1974]  தத்திச்செல்லும் முத்து கண்ணன் , கண்ணதாசன், எம் எஸ் வி, வாணிஜெயராம்  சாய்பாபா

 

வெகு சுவையான காட்சியில் சிறுவனைக்கொஞ்சி களிக்கும் பாடல்.

வாணி ஜெயராம் அதியற்புத நெளிவுகளை குழைத்துள்ளார். ஆங்காங்கே வரும் ஆங்கில ரைம் சாய்பாபாவின் குரலில். பாடல் ஒரு நாள் முழுவதும் நம்மை சுற்றி சுற்றி வரும் ஒரு வினோதம்

எளிதில் மறக்கவொண்ணா இசை அமைப்பு. கண்டு மகிழ இணைப்பு

https://www.youtube.com/watch?v=MH9R7V7O910 thangapadhakkam 1974 kd msv vj saibaaba

வளரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...