Wednesday, April 24, 2024

T M SOUNDARARAJAN

 T M SOUNDARARAJAN

டி எம் சௌந்தரராஜன்

மதுரை தந்தகொடை  இவர்.      தாய் மொழி : சௌராட்டிரம் , ஆனால் தமிழின் தனிச்சிறப்பை பிறழாது பாடி களித்து , கேட்பவரை கட்டிப்போடும் பாவம் , வசமான ஆண்  குரல் படைத்தவர்.

பின்னணிப்பாடகர்களில் முன்னணி வகித்தவர் கம்பீரமானகுரல் பிழையில்லா  உச்சரிப்பு , தமிழின் வல்லின மெல்லின ழகர ஒலிகள் மிகத்துல்லியம். அந்நாளைய கதாநாயகர்களின் தொடர் வெற்றிக்கு டி எம் எஸ் அவர்களின் பங்களிப்பு சிறப்பானது.  இத்துணை சிறப்புகள் இருப்பினும் சினிமாவில் குரல் பதிக்க சற்று போராடத்தான் வேண்டியிருந்தது.. டி எம் எஸ் முதன் முதலில் பாடியது எஸ் எம் சுப்பையா நாயுடு வின் இசையில் கிருஷ்ண விஜயம் படத்தில் தான் சொல்லப்போனால் சிவாஜி யுடனேயே பயணத்தைத் துவங்கி யிருக்க வேண்டும்  ; சிறிது காலம் போன பிறகே அந்த நடிகர் திலகத்திற்கு பின்னணி பாட சந்தர்ப்பம் வாய்த்தது அதுவும் ஏகப்பட்ட பரீட்சார்த்த குரல் டெஸ்ட் போன்ற மதிப்பீடுகளுக்கு பின்னரே. இதில் செண்டிமெண்ட் விவகாரம் வேறுபுகுந்து கொண்டது.

 “One man’s sentiment can turn out tobe another man’s predicament”.                                                                 என்று சொல்ல தோன்றுகிறது. அதுவரை சிவாஜிக்கு சி எஸ் ஜெயராமன் பின்னணி பாடிவந்தார் அவரே பாடட்டும் என்று பலர் செண்டிமெண்ட் கொண்டு வாதிட, ஜி. ராமநாதன் -தன்னிகரில்லா இசை அமைப்பாளர் , துணிந்து எடுத்து முயற்சி டி எம் எஸ்.  ஒரு பாடல் பாடியதும் [பெண்களை நம்பாதே -படம் தூக்கு தூக்கி] , எல்லா பாடல்களையும் டி எம் எஸ் அவர்களே பாடட்டும் என்று வழிவிட நேர்ந்தது முருகன் செயல் இதை பல இடங்களில் டி எம் எஸ் அவர்களே தெரிவித்துள்ளார். . டி எம் எஸ் அவர்களின் ஆழ்ந்த கர்னாடக இசை ஞானம் , எந்த வகை இசைநுணுக்கங்களையும் எளிதில் கிரகிக்கும் என்று உணர்ந்த  ஜி ராமநாதன் டி எம் எஸ் அவர்களுக்கு ஏராளமான பாடல்களை தொடர்ந்து பாடும் வாய்ப்பினை தந்தார்.

இதோ அவரது பயணத்தில் இருந்து சில

தூக்கு தூக்கி [1954] சுந்தரி சௌந்தரி நிரந்தரியே பாடல் மருதகாசி, இசை ஜி ராமநாதன், குரல்கள் பி லீலா ம் ஏ பி கோமளா, டி எம் சௌந்தரராஜன் பெண்கள் பாடப்பாட, தொடர்ந்து சிவாஜி கணேசன் பாடுவதாக அமைந்த 'இறை வணக்கப்பாடல் ' அந்த நாளிலேயே சிவாஜியின் மிடுக்கான நடிப்பு + இசை இரண்டும் கண்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=SUNDARI+SOUNDARI+NIRANDHARIYE+VIDEO+SONG&oq=SUNDARI+SOUNDARI+NIRANDHARIYE+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIR  pl , ap k , tms marudhakasi, gr

தூக்கு தூக்கி [1954]  'குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்' பாடல்உடுமலை நாராயண கவி, இசை ஜி ஆர், குரல்கள் பி லீலா , ஏ பி கோமளா , டி எம் எஸ் , வி என் சுந்தரம் .டி எம் எஸ்ஸின் சுறுசுறுப்பான பாட்டும் சிவாஜியின் அபிநயமும் இனைந்து சிறப்பாக பயணித்த பாடல் . கேட்டு மகிழ இணைப்பு 

https://www.youtube.com/watch?v=7H4eZNkCWe0 KURANGILIRUNDHU PIRANDHAVAN

அம்பிகாபதி [1957] வானம் இங்கே பூமி இங்கே , இசை ஜி ராமநாதன் குரல்கள்  டி எம் எஸ், பி பானுமதி,

மிகவும் சிறிய ஆனால் ரம்மியமான பாடல் மற்றும் குரல்கள் ஜி ஆரின் ஆளுமை பேசுகிறதை கவனியுங்கள். ராகத்தை குழைத்து பாடவைத்துள்ளார்  பாடலுக்கு இணைப்பு

https://www.youtube.com/watch?v=PNCxR_KL97U VANAM ENGE BOOMI ENGE  AMBIKAPATHI

gr tms p baanu

அம்பிகாபதி [1957]  வாடா மலரே தமிழ்த்தேனே கண்ணதாசன்  இசை ஜி ஆர், குரல்கள் டி எம் எஸ், பி.பானுமதி மிக நேர்த்தியான ராகபாவம் தவழும் அற்புதம். கேட்டு மகிழ இணைப்பு

https://www.youtube.com/watch?v=bWkLSLFrZgk VADA MALARE THAMI8ZH THENE AMBIKAPATHI kd  gr tms p baanumathi

அம்பிகாபதி [1957] "மாசிலா நிலவே நம் காதலை "  இசை ஜி ராமநாதன், குரல்கள் டி எம் எஸ், பி பானுமதி. பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய பாடல்; அனைவருக்கும் பிடித்த மற்றும் பீடித்த ஒரு அற்புதம் , நெளிவு சுளிவுகள் , ஏற்ற இறக்கங்கள் வளைந்து திரும்பும் நடைகள் நிறைந்த தெவிட்டாத பாடல் , ஜி ஆர் இசையா , கவியா காட்சியா என்று வியப்பை தரும் பாடல். கேட்டு மகிழ இணைப்பு .

https://www.youtube.com/watch?v=Z4L_qMbsF4g MAASILAA NILAVE  AMBIKAPATHI

தொடரும்

அன்பன் ராமன்

 

 

1 comment:

  1. அம்பிகாபதியில் எல்லா பாட்டுகளும் பிரமாதம். சிந்தனை செய் மனமே பாட்டு மிக மிக அருமை

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...