Tuesday, April 23, 2024

COLLECTIVE SURVIVAL

 COLLECTIVE SURVIVAL

கூட்டு செயல் பாடு [கூடிப்பிழைத்தல்] 

இதென்ன கூட்டு செயல் என்கிறீர்களா?

இதுதான் இப்போது பல நிறுவனங்களில் இருக்கும் பணியாளர்கள் கைக்கொள்ளும் வாழ்வியல் உத்தி. அதாவது தனது நிலைப்பாடு என்ன என்று கருதாமல், பிறர் என்ன நினைக்கிறார்கள் என்று பார்த்து அதன் படி தானும் இருக்கவோ இயங்கவோ போவதாக முடிவெடுக்கும் மனோநிலை தான் கூட்டு செயல்பாடு எனும் Collective survival   என்பது. 

இந்த வகை செயலுக்கு ஒரு ஆழமான அடித்தளம் உண்டு . அது என்னவெனில் Pros அண்ட் cons எனப்படும் நன்மை /இடையூறுகள் யாவை என்று சுயமாக யோசித்து கூட்டி கழித்து முடிவெடுப்பதை விடுத்து , 4 பேர் செய்வதை நாமும்  செய்வோம் என்பதே . 

இதில் "அடுத்தவர் நிலைப்பாடு நமக்கு உகந்ததாக " இருக்குமா என்ற கேள்வியே கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மாறாக பிறர்போல் செய்வோமே என்ற முடிவு [இறுதியாக அல்ல] ஆரம்பத்திலேயே எடுக்கப்பட்டு விடுவது தான். 

இதுதான் மந்தை உணர்வு [sheepish OR HERD mentality ]என்று அறியப்படுகிறது.

இன்னதற்கு தான் என்றில்லை , எதற்கும்/ எல்லாவற்றிற்கும் இதுவே தீர்வு என்றே பெரும்பாலானோர் கருதுகின்றனர். இதன் ஆதாரப்புள்ளி 'யோசித்து செய்வது எளிதல்ல "என்ற தயக்கம் தரும் தாக்கம் . 

இதற்கு பல உதாரணங்களை காட்ட இயலும்.

அவற்றில் பல .  அச்சிட்ட கேள்விகளுக்கு விடை தருதல் " வகையான கணிப்புகளே .

அவை ஏதேனும் அரசியல் பற்றியோ, சமூக செயல் பாடுகள் குறித்தோ, பயனீட்டாளர் விரும்பி வாங்கும் பொருள்கள் பற்றியோ இருக்கும். இவற்றில் கூட அண்டை அயலார் என்ன சொல்லுகிறார்கள்  என்று ஆய்வு செய்வார்களே தவிர எனக்கு என்ன தேவை /விருப்பம் என்பதை எழுதிக்கொடுப்பதில் அவ்வளவு தயக்கம்.

இது ஏதோ இல்லத்தரசிகளின் தயக்கம்/கூச்சம் என்றெண்ண வேண்டாம். இல்லத்தரசன் கள் நிலை இன்னும் மோசம் . இதை நான் பல தருணங்களில் கண்கூடாக பார்த்து [சிரித்து] ரசித்தது உண்டு.

" கொஸ்டின் எல்லாமே இங்கிலீஸ்ல இருக்குது அதுனால சரியா விளங்க மாட்டேங்குது". என்பது யாரோ பொது ஜனம் அல்ல , இன்றைய தமிழகத்தில் பல கல்லூரி ஆசிரியர்களின் நிலை இது தான்

இப்போது அதிர்ச்சி கொள்ளவேண்டாம் . இவர்களில் பலர் முனைவர் பட்டம் மற்றும் ஆராய்ச்சி தொகை    எனும்       

 [Research Grant] 8-10 lakhs பெற்று தங்களை இளம் விஞ்ஞானிகள் என்று பெரும் உவகை கொள்வோர் உள்பட பலர் அடக்கம். 

மகளிர் பலரும் இதே ரகம் மற்றும்  ராகம் தான். இரு பாலரிலும் எப்போதேனும் விதிவிலக்காக ஓரிருவர் தென் பட்டால்  ,நாம் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும் . இது இப்போது பல படி நிலைகளைக்கடந்து கூட்டங்கூட்டமாக பல கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், கல்லூரிகள் பல்கலை கழகங்கள் எங்கணும்  வியாபித்துள்ளது.

https://www.youtube.com/watch?v=KAOzu2o38bE  

ஒரு காலத்தில் 1950 -- 2000 கள் வரையிலும் கூட ஆணித்தரமாக செயல்பட்ட ஆசிரியக்கூட்டங்கள் காலப்போக்கில் ஓய்வு பெற்று விட , இப்போது பேராசிரியர்கள் பேருக்கு ஆசிரியர்கள் என்றால் மிகை அல்ல.

இந்த நிலை ஒரு நீண்ட நெடிய கொடிய வியாதியின் நீட்சியாகவே நான் உணருகிறேன். 

அது என்ன எனில் நல்ல ஆசிரியர்கள் அவர்களிடம் பயின்றோர் சிறப்பாக பயன் பெரும் வகையில் தங்கள் செயல்பாடுகளைக் கட்டமைத்துக்கொள்வர்.  எனவே நல்லாசிரியர்கள் வழிகாட்டுதலில் பயின்று வந்தோர் 'ஏனோதானோ' என்று செயல்பட நினைக்கவோ முனையவோ விரும்பக்கூட மாட்டார்கள். 

மாறாக 'அந்த' ஆசிரியர்போல் நானும் கற்றுத்தருவேன் என்று ஒரு ஆரோக்கிய நிலைப்பாடுநோக்கி விழைந்துவிரைவார்கள். இது போன்ற லெகசி  [legacy ]எனும் பாரம்பரியம் சிதைந்து விட்டது. 

ஆசிரிய கம்பீரத்தை வீழ்ச்சி நோக்கி நகர்த்தியதற்கு இது ஒரு பெரும் காரணி என்றே உணருகிறேன். ஆசிரிய கம்பீரத்தை -அதன் செயல் திறன்களை மாட்சிமைகளை முன்பின் பார்த்தறியாதோர் ஆசிரியப்பணியில் சேர்ந்து அமர்ந்தனர். அனைவரும் கல்வித்தகுதி உடையோர் தான் ;

எனினும் அதையும் கடந்து போதிக்கும் உத்திகளையும் நுணுக்கங்களையும் வேறொரு ஆசானிடம் பெற்றோர் களம் ஆடுவதற்கும் , ஏட்டளவு தகுதியுடன் மாணவர்களை சந்திப்போருக்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.. 

முதல் வகை யினரை விட பின்னவர் பல்கிப்பெருகிவிட இப்போது கருத்துகளை நீர்வீழ்ச்சி போல் பொழிந்து பிரமிப்பையும் ஆர்வத்தையும் தூண்டவல்ல விரிவுரையாளர்களைப்பார்க்கவே முடியவில்லை.

தன்னம்பிக்கை மற்றும் செயல்  திறன், மொழி ஆளுமை குன்றியோர் எந்த சூழலிலும் கூட்டமாக இயங்குவதைக்காணலாம். 

ஏனெனில் அவர்களின் செயல் மீது அவர்களுக்கே இருக்கவேண்டிய நம்பிக்கை அற்றுப்போய் விட்டது. 

அவர்கள் முளைப்பாரி எடுக்கும் பெண்கள் போல 10-15 பேராக போவதையும் வருவதையும் பார்த்தாலே எளிதில் புரியும் இவர்களுக்கு எது குறித்தும் ஒரு  தெளிவு இல்லை என்பது .

இவர்களால் சுதந்திரமாக செயல் பட இயலாது. பரத நாட்டியம் பயில்பவன் அடுத்தவனைப் பார்த்து அபிநயிப்பதைப்போல அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே இயங்குவார்கள். இதுதான் கூடிப்பிழைத்தலின் அடிப்படை.

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...