Monday, April 22, 2024

SALEM SUNDARI 7

 SALEM SUNDARI 7

சேலம் சுந்தரி-7 

 

மாடசாமி சுந்தரி தன்  மீது சாய்ந்து சரிந்ததை தான் 'தெரியாம தப்புபண்ணிட்டேன்' என்று சொல்வதாக நினைத்துக்கொண்டு , விடும் மா , மயக்கத்துல சாய்ஞ்சதுக்கா இப்பிடி அழுவறீங்க ?எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா தாங்கிப்பிடிச்சிருக்கமாட்டேனா ? அது போல தாம்மா என்றார் மாடசாமி.. இல்ல அண்ணே  நீங்க  பெரிய மனசுக்காரவங்க ஈஸியா சொல்லிட்டீங்க ஆனாலும் நான் கொஞ்சம்கூட யோசிக்காம செஞ்ச செயலை எப்படி வெளியில சொல்வேன் -என் புத்தி ஏன் இப்படிப்போச்சு? என்று அழுதாள்..

சாய்ந்து சரிந்த சுந்தரியை தாங்கிய நொடியில் மாடசாமி திடீர் என்று ஏதோ நிலைக்கு போய் விட்டார்.

உடனே இங்கே கற்பனை சிறகை விரிக்காதீர்கக்ள்.

சுந்தரியை தாங்கிய மாடசாமி ஒருகணம் தாய் மாமன் ஸ்தானத்தில் மிதந்து கௌரி மயக்கம்கொண்டு சாய்ந்தது போல் பாவித்து பரபரத்தார். வேறொன்றுமில்லை எத்துணை காலம் கௌரியைதோளில்போட்டு வளர்த்த மாமன் , குழந்தையாய், சிறுமியாய் , இளம் பெண்ணாய் , நங்கையாய், இன்று ஜெர்மன் கவுன்சிலில் அதிகாரியாய் என்று நொடிப்பொழுதில் கௌரியின் நினைவில் மூழ்கி, சுந்தரியே , கௌரி என்பதாக பாவித்தார் மாடசாமி.

கௌரிக்கெனவே தகப்பனாய் வடிவெடுத்த மாடசாமி, வேறொரு பெண்ணின் ஸ்பரிசத்தில் மானஸீகமாக கௌரியை மனக்கண்ணில் பார்த்த நிலை , சுந்தரிக்கு எப்படிப்புரியும்.? நமக்கே புரியவில்லையே. இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கம் எழுதி விளக்குதல் எளிதன்று. அந்த நிலையில் இருந்து மீண்டாலும் , சுந்தரியின் உருவில் கௌரிதான் தெரிகிறாள் மாடசாமிக்கு.

இது  சுந்தரி செய்த புண்ணியம்---- வேறென்ன.? . .    ஆனாலும் சுந்தரி இன்னும் மனதளவில் புழுவாய் துடிக்கிறாள்.

போ போ உன்னை மன்னித்தேன் என்று மாடசாமி சொன்னால் ஒழிய சுந்தரி அமைதி கொள்வது கடினம். அன்று ஒரு வேகத்தில் செய்த செயல் இன்று அவளை பாடாய்ப்படுத்துகிறது.

சார் என்று ஆரம்பித்தாள் சுந்தரி.

சட்டென்று மாடசாமி மனதில் கௌரி விலகி சுந்தரி தெரிய, மாடசாமி சொன்னார் "இதோ பாரும்மா கொஞ்சம் BP இருக்குனு டக்டர் சொல்றார் . உடம்பு நல்லா ஆனப்புறம் பாக்கி எல்லாம் பேசிக்கலாம் . எனக்கும் ஒரு 10 நாள் லைன் ட்யூட்டி கிடையாது ஆபீஸ் தான் மெதுவா பேசிக்கலாம். போய் நிழல் ல ரெஸ்ட் எடுத்து சாப்பிடுங்க ஒண்ணும் குடிமுழுகிப்போகாது மேல மேல டென்சன் வளர்த்துக்காம அமைதியா இருங்க என்று சுந்தரியின் வாயை அடைத்தார் மாடசாமி.

இன்னும் இந்த மனச்சுமையோடு இருக்கணுமா, நாமக்கல் ஆஞ்சநேயா என்று உள்ளூர அழுதாள். இருவரும் ஆபீஸ் திரும்பினர்.

சுப்புரெத்தினத்திற்கு இருப்புகொள்ளவில்லை. அவ்வப்போது பைலை தேடும் சாக்கில் சுந்தரியின் டேபிளை நாலா பக்கம் சுற்றிச்சுற்றி வந்தார் சுப்புரத்தினம்.   . எதற்கு ?

மெல்ல ஒரு 11/2 அடி  அருகில் பார்த்தார் எங்காவது அறை வாங்கிய அடையாளம் தெரிகிறதா? கன்னத்தில், முதுகில், பிடரியில் என்று forensic expert போல நுணுக்கமாய் பார்த்தார். வெய்யிலில் சென்று வந்தவளுக்கு கழுத்து, இடுப்பு, கன்னம் எங்கும் வியர்வை வேறெந்த சிவந்த அடையாளங்களும் இல்லை. ஒருவேளை இவள் தொப்பையை தப்பாக புரிந்துகொண்டு அறையாமல் விட்டு விட்டாரோ    மா சா ? நைசா சொல்லிடனும் அது வெறும் சோத்து தொப்பைதான் னு என்று நினைத்தார் சுப்புரெத்தினம். மனிதர்கள் வினோத பிறவிகள் யாரையோ யாரோ அறைந்தால் இவர்கள் இன்புறுவது  எதற்கு? --புரியவில்லை..

மாடசாமி எளிதாக சொல்லி விட்டார் மெதுவா பேசிக்கலாம் னு, எத்தனை நாளக்கி இப்பிடியே சுமக்கறது; அவரை வீட்டுக்கு போய் பேசிட்டு வரலாம்னா அவங்க வீட்டு லேடீஸ் அவரை ஏதாவது தப்பா  நெனச்சுக்கிட்டாங்கன்னா ? பாவம் நம்மால அவருக்கு எதுக்கு தொல்லை என்று பல்லைக்கடித்துக்கொண்டிருந்தாள்  சுந்தரி என்னும் சேலத்து சுந்தரி

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...