Monday, April 29, 2024

SALEM SUNDARI -9

 SALEM SUNDARI -9

சேலம் சுந்தரி -9

சொல்லும்மா என்று ஆரம்பித்தார் மாடசாமி .              சார் " கொஞ்சங்கூட யோசிக்காம HR அதிகாரிகிட்ட நீங்க 10.45 மணிக்குக்கூட வேலைக்கு வரல்லன்னு போய் அவசரப்பட்டு சொல்லி அசிங்கப்பட்டுட்டேன் சார். அப்புறம் தான் நீங்க ட்யூட்டி முடியாம ட்ரைன்ல வாரீங்கனு தெரிஞ்சுது சார். எனக்கே ரொம்ப அசிங்கமா இருக்கு சார் .ஏன் இப்பிடி நடந்துக்கிட்டேன் னு என்னால நியாயமான காரணம் னு எதுவுமே சொல்ல முடியல்ல சார். என் மனசே என்னைக்கொன்னுடும் போல வாட்டுது சார் ,என்று ஓ வென்று வந்த அழுகையை அடக்க முயன்று சிறுபிள்ளைபோல் அழுதாள்.

சரி அதுக்கு இப்ப ஏன் அழுவறீங்க ? அதுக்கு நான் என்ன செய்யணும்? என்றார் மாடசாமி. .

நீங்க என்ன மன்னிச்சு தான் சார் என் அமைதியை நீங்க மீட்டு தரணும். தயவுசெய்து என்ன மன்னிச்சுருங்கசார் என்று கெஞ்சினாள். நான் உங்களை கோபிக்கவே இல்லையே ,என்ன சொல்லி மன்னிக்க இயலும். உங்க செயல் தவறுன்னா கோயில் ல போய் ஆண்டவன் கிட்ட அழுது  மன்னிப்பு கேளுங்க ;நான் சாதாரண மனிசன் நான் யாரு அடுத்தவங்களை மன்னிக்க ? . நானே ஏதாவதுன்னா சமயபுரம் மாரியம்மா வை தான் கும்பிட்டு மன்னிப்பு கேப்பேன் . அது மாதிரி உங்க சாமி கிட்ட நீங்க பரிகாரம் தேடுங்க. இதுக்கா 10 நிமிஷம் பேசணும் னு கேட்டீங்க? என்றார் மாடசாமி

மேலும் தொடர்ந்தார் மாடசாமி

ஒன்னு நல்லா புரியுது சீட்டுல ஆள் இல்லன்னா வேலைக்கு வரல்லன்னு நெனச்சுக்கறீங்க. கம்ப்ளெய்ண்ட்பண்ணனும் னு முடிவு எடுக்கறீங்க. அப்பிடி பாத்தீங்கன்னா நைட் ட்ரெயின் ல ட்யூட்டின்னா தூங்கவே முடியாது; அடுத்த பகல் ல தூங்கி மீண்டும் நைட் ட்யூட்டி பாத்திட்டு வருவோம்;  3 நாளா ஊர் சுத்திக்கிட்டு இருக்கான் னு கம்ப்ளெயிண்ட்  குடுத்திடுவீங்க போல இருக்கு.. ஆனா நான் வேலைக்கு வராததாக நீங்க புகார் கொடுத்தா , பாக்கி எல்லாரும் சரியா வேலைக்கு வந்திட்டதா ஒரு தோற்றம் உருவாகி -மாடசாமி ஒரு திருடன் ஊரை ஏமாத்தறான் னு பலர் நினைக்க வழி  ஏற்படுத்தீட்டங்களே னு தான் வருத்தப்படறேன். உங்கள மாதிரி படிச்சிருந்தா நானும் 10 --5.00 FAN கீழ உக்காந்து வேலை பாத்திருப்பேன் படிப்பு அதிகம் இல்ல, அதுதான் நாய் மாதிரி அலைய வேண்டியிருக்கு தென் இந்தியாவுல..

ஆனா .ஒண்ணே ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்க விரும்பறேன். இத்தனை பேர்ல ஏன் மாடசாமியை தேர்ந்தெடுத்து புகார் தெரிவிச்சீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா , இத்தனை நீண்ட சர்வீஸுக்கு அப்புறமும் அப்பழுக்கு இல்லாம எப்படி வேலை செய்யமுடியும் னு தெரிஞ்சுக்குவேன் என்றார் மாடசாமி   . .

மாடசாமியின் பணிவு சுந்தரியின் மீது சாட்டை அடியாக பளிச் பளிச் என்று விழுந்தது. எப்படி கோபம் தொனிக்காமல் கேவலப்படுத்துகிறார் என்று கூனி குறுகிப்போனாள் சுந்தரி. மீண்டும் அழுதபடியே கையைக்கூப்பிக்கொண்டு விசும்பிக்கொண்டிருந்தாள் சுந்தரி.

 சற்று நிதானத்தை வரவழைத்துக்கொண்டு பேசினாள் . "உங்களைப்புகார் சொல்லவேண்டும் என்று நான் நினைக்கவில்லை . ஆயினும் ஒரு தடுமாற்றத்தினால் இது போல பேதலித்துவிட்டேன்" என்றாள் .

"சற்று புரியும்படி சொல்லுங்கம்மா" என்றார் மாடசாமி.

"அன்று நான் உங்களை சந்தித்து ஒரு முக்கியமான முடிவெடுக்க எண்ணி இருந்தேன்.. என்னுடைய துரதிர்ஷ்டம் நேரம் போய்க்கொண்டே இருந்ததே ஒழிய நீங்கள் வந்தபாடில்லை.. ஒருகட்டத்தில் பொறுமை இழந்து என்ன இவர் ஆபிசுக்குக்கூட வராமல் ஊர் சுற்றுகிறார் என்று ஒரு கண்ணோட்டத்தில் HR அதிகாரியிடம் நேரே சென்று பேசினேன்". அவர் என்னைக்கடிந்து கொண்டார். சுப்புரெத்தினம் சாரும் நீ செய்வது  அளவுக்கு மீறிய செயல் "என்று கண்டித்தார். பின்னர் தான் சுயநலம் கண்ணை மறைக்க நான் நடந்து கொண்டதை இப்போது நினைத்தாலும் கூனிக்குறுகிப்போகிறேன் .தயவு செய்து  என்னை மன்னித்தேன் என்று சொல்லுங்கள்" என்றழுதாள்.

"மன்னிப்பது இருக்கட்டும் .ஏதோ சுயநலம் னு சொன்னீ ங்களே  .   -அதை புரியும்படி சொன்னால் , என் தவறு என்ன என்று புரிந்து கொள்வேன்" என்றார் மாடசாமி.

தொடரும்

அன்பன் ராமன்

 

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...